சுட சுட செய்திகள்

Tuesday, July 6, 2010

பிரியாத வரம் ஒன்று வேண்டும்

பிரியாத வரம் ஒன்று வேண்டும்

சிறு வயதில் சின்னஞ் சிறு கைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு
மாலை ஆனவுடன் மறக்காமல்
நான் சென்ற
என் ஊர் நதி கரையின் ஈரம்
இப்போதும் என் நெஞ்சில் உலர வில்லை.

நதிக்கரை ஓரம், அருகே நாவல் மரம்...
நாவல் மரம் ஓரத்தில் நின்றபடி,
பழம் ஒன்று கிடைக்காதா என தேடி தேடி
மண் படிந்த நாவலையும்,
மெய் மறந்து தின்று விட்டு,
ஊதா நிற நாக்கை தொட்டு தொட்டு
மகிழ்திருந்தேன்.

மாடு தினம் குளிக்கும்.
ஆடு முதல் குரங்கு வரை
அங்கே தான் சுற்றி திரியும்.
தண்ணிரில் இறங்கும்போதே
உச்சி எல்லாம் குளிர்ந்து விடும்.
மீன்கள் எல்லாம் சுற்றி வந்து கால் கடிக்கும்,
சில சமயம் நாகம் வந்து படகை போல் பயணம் செய்யும்,
உடலலெல்லாம் குளிரிருந்தும்
உவகையினால் உள்ளத்தில் சூடிருக்கும்,

இந்த நதி சத்தம் போடாது...
சிறு குழந்தை சிரிப்பது போல் சல சலத்து ஓடி வரும்..
சித்திரத்தில் வரைந்தது போல்,வளைந்து வளைந்து ஓடி வரும்..
மழை கொஞ்சம் பெருக்கெடுத்தால்
முதிய நடை இளைஞ்சனாகும்...

எனக்கு ரசனையை தந்த நதி...
வாழ்க்கையின் வாசனையை நுகர வைத்த மணக்கும் நதி....

இன்று....

காலம் கட்டிய விதி என்னும் வலையில் நதியும் தப்பவில்லை...
நீர் குறைந்தது...
கரையின் ஓரம் மெலிந்தது..
சில் என்ற தன்மை இல்லை...
கண்ணாடி போல் இருந்த நதி
ஆனால் கழிவு கலந்து..அதற்கான
அடையாளம் ஒன்றுமில்லை..

ஏதோ....
நடை பிணமாய் , வாழ்ந்து கேட்ட மனிதனை போல்...
கால்வாய் வடிவாக பாவமாய் நடந்து கொண்டிருக்கிறது.

என்றாலும்.....

அதே நாவல் மரம்....
அதன் ஓரம்...ஒரு பழம் ....
கிடைக்காதா என தேடி கொண்டே இருக்கிறேன்....
என் நதியே....
உன்னை பிரியாத வரம் ஒன்று வேண்டும்

No comments: