ஈசனும் சித்தனும்.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்று நமது முப்பாட்டன் கடவுளுக்கு இணையாகச் சொல்லியிருக்கிறான். இங்கே திருவள்ளுவர் கடவுள் என்று சொல்லியிருப்பது அந்த கதிரவனைத்தான் என்பது தான் வியப்பு.
இந்த உலகம் தோன்றியதும் சூர்pயனால். இருப்பதும் இந்த சூரியனால் என்று அந்த கதிரவனே எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாவாக இருப்பதால்தான் வள்ளுவர் கதிரவனை கடவுள் என்று சுட்டிக்காட்டுகிறார்.
காலையில் எழுந்தவுடன் சூரியனைப்பார்த்து வணங்கிவிட்டு அந்த நாளைத் தொடங்கும் வழக்கம் இன்றைக்கும் நமது நாட்டில் இருக்கிறது.
புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் ஈசானி மூலையில் ப+ஜைப் போடுகிறோம்.
கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி வாசலை அமைக்கிறோம் இப்படி எல்லா வகையிலும் அந்த கதிpரவனை நாம் முதன்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறறோம்.
நாம் கொண்டாடும் பொங்கள் தினப் பண்டிகைக்கூட சூரியக் கடவுளை வணங்கிடத்தான்.
அப்படிப்பட்ட சூரியனுக்குத்தான் எத்தனைஎத்தனை பெயர்கள்.
கதிரவன், ஞாயிறு, வல்லாள், பரிதி, ஆதவன், இதுமட்டுமில்லை இன்னொரு முக்கியமான யாரும் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர் ஒன்று உண்டு.
அது ஈசன் என்பதாகும்.
என்னது ஈசனா? அது அந்த சிவனின் இன்னொரு பெயராச்சே! என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
ஆனால் அதுதான் உண்மை. ஈசன் என்பது கதிரவனின் இன்னொரு பெயர்.அப்படியென்றால் சிவன்தான் கடவுள். இந்த உலகை உருவாக்கிய இயற்கை என்பது உண்மையாகிறது அல்லவா?
ஆங்கிலேயர்கள் சூரியனை சன் என்கிறார்கள். அது இந்த ஈசனிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.
இப்படி எல்லாவகையிலும் கடவுளாக இருப்பதற்கு எல்;லாதகுதியும் உடைய ஈசனை வணங்கித்தான் நம் நாட்டில் மட்டுமே வாழ்ந்த மாய புருசர்கள் பலவிதமான ஆச்சிரியங்களோடு கூடிய மருத்துவத்தை, மூலிகைகளை, சித்துக்களை, மாயங்களை எல்லாம் செய்துக் காட்டினார்கள் என்பது வியப்படைய வைக்கக் கூடிய ஒன்று.
அந்த வகையில் சித்தபுருசர்களான 18 மாய மனிதர்களைப் பற்றி தனித்தனியாக இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.
வணங்குதற்குரிய அந்த ஈசனின் தொண்டர்களைப்பற்றியும், அவர்கள் சொல்லும் மந்திர, தந்திர, மருத்துவங்கள் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
சுந்தரர் என்பவர் ஈசன் மீது அதிகத் தேடலைக் கொண்ட ஒரு திருத்தொண்டர் இருந்தார்.
பல நாட்களாக தவமிருந்து காடுகளிலும் மலைகளிலும் சுற்றித்திரிந்து இந்த உலகத்தின் ஆசாபாசங்களை துறந்து சித்தர் என்கிற நிலையையடைந்தார்.
சித்துக்களை முறையாக கற்ற சுந்தரர் இன்பத்துன்பங்களை பகுத்தறியத் தெரியாத சித்தராய் இந்த நாட்டில் வலம் வந்தார்.
கூடுவிட்டு கூடுபாயும் அற்புத சித்து ஒன்றை தனக்கென அடையாளமாய் வைத்திருந்த சுந்தரர், ஒரு மன்னர் இறந்தவுடன் அந்த நாட்டின் நலம் கருதி தன் உடலைவிட்டுவிட்டு அவர் உடலின் குடியேறினார்.
மன்னரின் மனைவி அவருடன் நெருக்கமாக இருந்தபோது, இது மன்னன் உடல் இல்லையே ! அவனுக்கு துரோகம் செய்யலாமா என்கிற கவலையோடு மீண்டும் தன் உடலுக்குள் புகுந்தார்.
அங்கு மூலன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தார். அவனும் ஈசனின் மேல் அதிகப் பற்றுக் கொண்டவர். அவனுக்கு இந்த சுந்தரரைப்பற்றி நன்குத் தெரியும். இந்த நாட்டையும், நாட்டு மக்களின் பிணியகற்;றும் மருத்துவங்கள் பற்றியறிந்திருக்கிற சுந்தரரை தன் உடம்பிற்குள் வைத்து பிறகு தன் மூலம் அவர் வாழ்ந்து சேவையாற்ற வேண்டும் என விரும்பினார்.

அதன் படியே சுந்தரரிடம் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தன் உடலில் குடியேறி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனவும், வேலை முடிந்தவுடன் மீண்டும் தன்னைவிட்டு விலகிச் செல்லலாம் எனவும் அனுமதிவாங்கி அதன்படி அவர் உயிர் இவனுக்குள்ளும், இவன் உயிர் அவர் உடம்பிலும் சென்றது.
நாட்கள் கடந்தன. வந்த வேலை முடிந்தவுடன் சுந்தரர் தன் உடம்பைத் தேடி(மூலனை) தேடியலைந்தார். அதற்குள் மூலன் இறந்து போன் செய்திமட்டும்தான் கிடைத்தது.
இதனால் அந்த மூலனது உடம்பிலேயே வாழ வேண்டிய நிர்பந்தம் சுந்தரருக்கு ஏற்பட்டது. அதன்பிறகே சுந்தரது பெயர் திருமூலர் என ஆகியது.
திருமூலர் வருடத்திற்கு ஒருமுறைதான் பாட்டெழுதுவார். அப்படி அவர் 3000 பாடல்களை எழுதியுள்ளார். இதன்மூலம் திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுரவாசல் எனத் தொடங்கும் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment