பாவம் இந்த பூமி ..பாரம் தாங்காமல் ஒருநாள் தடுமாற போகிறது..!
மில்லியனாய் மக்கள் , நெருக்கடியில் வாழ்க்கை., பற்றாக்குறையில் உலகம்..!
பிறந்தவர்களை பற்றி நான் குறை கூறவில்லை...இனி பிறக்க போகிறவர்களை கட்டு படுத்த கூடாதா? என கேள்வி எழுப்புகிறேன்.
இப்போதே தண்ணீருக்கு அடிதடி என்றால் வருகின்ற காலத்தில் உமிழ் நீர் மட்டுமே வாய் நனைக்கும்.
உணவுக்கு பஞ்சம் என்ற நிலை மாறி, பஞ்சமே உணவு என்ற நிலை வரும்.
விவசாய நிலங்கள் , குடியிருப்புக்காய் இரும்பு தரைகளாய், உருவாக்கப் படும்.
மரம், செடி, கோடி என அனைத்தும் தன் ஆயுளை முடித்து கொள்ளும்.
நதிகள் காயும். வறண்ட மலையில் பாறைகள் உருளும்.
கதிரவன் இனிமேல் அதிகமாய் சிரிப்பான். அந்த கோர சிரிப்பில் பனிமலை உருகும்.
பனிமலை நீரால் கடல் மட்டம் உயரும்.நிலமே ஓர்நாள் நீரால் மூழ்கும். இந்த நிலைமை நடந்தே தீரும்.
வின்ஜானத்தின் விசங்கள் வான கூரையை நனைத்த படியால் ...பாவம் அங்கே விழுந்தது ஓட்டை.
அகச் சிவப்பு அரக்கன் அதன் வழியேத் தான் தலை நுழைத்து எட்டி பார்க்கிறான். மனித தொலை பற்றிக்கொண்டு புற்றாக மாறுகிறான். அறிவியல் நல்லதை உருவாக்க வேண்டுமே தவிர , உருக்குலைக்க கூடாது.அதுவல்ல நிலைமை இங்கே...
அணுகுண்டால் அழிந்தது...ஹிரோசமா, நாகசாகி மட்டுமல்ல ...நமது மனித நேயமும் தான்.
அறிவு முதன் முதலில் அங்கே தான் தன் கோரப் பல் காட்டி சிரித்தது.
அறிவு... உலகை அழிக்க கிளம்பும் முன் .....கொஞ்சம் இதயத்தின் மிருக தோலை கொஞ்சம் உரித்து எறிந்து வாருங்கள்.
No comments:
Post a Comment