சுட சுட செய்திகள்

Tuesday, August 14, 2012

சரித்திரம் வாய்ந்த நீலகிரி

சரித்திரம் வாய்ந்த நீலகிரி (நீல நிற மேகங்கள் சூழ்ந்த மலை)

அன்று சேரன் செங்குட்டுவனின் வேட்டையாடும் காடாகவும் கோட்டை கொத்தளங்களாகவும், போர் கருவிகள் செய்வதற்கும் பாதுகாப்பான மறைவிடமாகவும் இருந்து உள்ளது. அந்த அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு கருதி அருவங்காட்டில் (அரவன் என்றால் பாம்பு) பாம்புகள் நிறைந்த காடு) வெடிமருந்து தொழிற்சாலை நிறுவப்பட்டிருக்கலாம் 

பக்கத்தில் வெலிங்க்டன்னில் தலைசிறந்த ராணுவ பயிற்சி முகாமும் உள்ளது.

கேரள கர்நாடக என்ற இந்த இரண்டு மாநில மக்களும் ஏலக்காய் இஞ்சி மற்றும் விளைபொருளை வாங்க கூடுவதால் அந்த இடம் கூடலூர் ஆயிற்று.

ஒத்த கல் கொண்ட மண்டபம் இருந்த இடம் ஆங்கிலேயரின் ஆங்கிலத்தால் உதகமண்டலம் ஆயிற்று. இன்றைக்கு அதுவும் மருவி ஊட்டி ஆகி விட்டது.

சிகரத்தை தொட்டு விடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் தொட்டபெட்டா (பெரிய மலை) காட்சி முனை.

உலகத்தில் சிறந்த பொட்டானிக்கல் பூ ங்கா இந்த ஊட்டியில்தான் உள்ளது.
முதுமலையில் மிருகங்களின் சரணாலயம் உள்ளது.

குன்னூரில் (குன்றுகள் நிறைந்த ஊர்- குன்றூர்;) பல சின்ன மலைகளும், காட்சி முனைகளும் அதிகம்.

கோத்தகிரியின் அருகில் கோடநாடு என்பது (கொடார் என்பது அபாயகரமான பள்ளத்தாக்கு என்ற பொருள்) பாறைகள் நிறைந்த பகுதிதான. 
கோடநாடு வியூ பாயிண்ட் இங்கிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கில் பசுமையான வயல்வெளியும் தென்னை மரங்களும் காடு வீடுகளும் பவானி அணைக்கு போகும் கரைபுரண்டு ஓடும் ஆறுகள் தெரியும கோடார் என்ற இனம் வாழ்ந்த தாகவும் சொல்லப்படுகிறது அவவினம் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை.

அங்கிருக்கும் அந்த தேயிலைத் தோட்டங்கள் ரொம்பவும் விசேசம். மேலிருந்து பந்தை உருட்டி விட்டால் தங்கு தடையின்றி தேயிலை செடி மீது உருண்டே கீழே வந்து சேரும். அந்த அளவிற்கு தேயிலை செடியின் பராமரிப்பு மிகுந்த எஸ்டேட் கோடநாடு.

குன்னூர் அருகில் கொலக்கொம்மை அருகில் அருவியுடன் கூடிய ஒட்டக்கொடார் உள்ளது. இங்கு பலர் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படுகிறது.

அங்குள்ள இனங்கள்

சரி விசயத்திற்கு  வருவோம். சேரன் போர் செய்ய  வேண்டிய,  ஆயுதங்களை செய்தவர்கள் கோத்தர் என்ற பழங்குடி இனத்தவர் இன்றும் அவர்கள் தங்கள் கலை அழியாமல் காத்து வருகின்றனர் வெட்டுக்கத்தி(மரம் வெட்ட) கவாத்துக்கதத்தி  (தேயிலை செடியின் சிளைகளை சீவ) மூன்று அல்லது 5 ஆண்டுக்கு ஒருமுறை வெட்டி விட வேண்டும் இல்லையெனில் அது மரமாகி விடும். அப்புறம் ஏணி வைத்து இலைப்பறிக்க முடியாது. இந்த தேயிலைகளின் கிளைகளை  சீவ வேண்டுமே தவிர வெட்டக் கூடாது கவாத்துக்கத்தியின் இருமுனைகளும் கூர்மையானதாக இருக்கும். இன்றைக்கும் அவர்கள் மம்பட்டி போன்ற கருவிகளை செய்து கொண்டுயிருக்கின்றனர். அவர்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டயிருக்கிற கோத்தகிரி (கோத்தர் கிரி) 




இருண்ட அடர்த்தியான இருள் சூழ்ந்த காடுகில் (பள்ளத்தாக்கில்) வாழ்ந்தவர்கள் இருளர். குறுகிய பள்ளத்தாக்கில் உள் காடுகளில்; வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருப்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னேற இடம் பெயர்ந்து சமவெளியில் வாழ்ந்தவர்களும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் உண்டு. மொழி வேறுபாடும் உண்டு.



கூடலூரில் பகுதியில் பனியர் என்ற பழங்புகுடியினர்,  புலி கரடி பாம்புகள் அபாயகரமான மிருகங்கள் வசிக்கும் காட்டிலும்; வாழ்ந்துக் கொண்டியிருக்கிறார்கள் பயமே இல்லாதவாகள்.  மொழியில் மலையாள மொழியின் வாசம் தென்படும்.

பல வெற்றிகளை கண்ட அலக்ஸாண்டர் மேற்குமலை தொடர்ச்சி மலை நோக்கி பயணிக்கும் பொழுது சீதோஸ்ண நிலை காரணமாக பல வீரரர்கள் மடிந்தனர்.  


அதில் உயிர் தப்பியவர்கள் தொதவர் என்ற பழங்குடியினர் (பல மலைகளை  தொட்டு தொட்டு வந்தவர்கள) அவர்களுடைய தோற்றம் ஆசானுபானவாக இருக்கும.; நல்ல உயரம் கட்டுமஸ்த்தான உடல் வாகு, சிவப்ப நிறம,; பேச்சு மொழியுண்டு எழுத்து வடிவமில்லை.

வடகார் இவர்கள் லடக்கேயிருந்து வந்த வர்கள் இன்று படுகர் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்களுடைய மொழி படுகு மொழி.

இவர்களுடைய மொழி கன்னட மொழியின் அடிப்படையாகக் கொண்டது மிகக்குறுகிய காலத்தில்தான் தமிழ் எழுத்தின் துணைக்கொண்டு அவர் படுகு மொழியை எழுதி வருகிறார்கள். 

அவ்வெழுத்தை உருவாக்கியவர் ஒரு தமிழறிஞா. அவர் கொலக்கம்பையைச் சேர்ந்த அமரர் சி. டி. கிருஷ்ணய்யா என்பது குறுப்பிடத்தக்கது.

இவ்வினத்தில் நில சுவான்தார்களாகவும. தேயிலை தோட்ட அதிபர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

அரசியலிலும் மாவட்டம் வட்டம் என பல பதவிகளில் உலா வருகிறார்கள். இவர்களுடைய நம்பிக்கை தெய்வம் ஹெத்தையம்மன. தை மாதம் நடக்கும் இத்திருவிழாவிற்கு அனைதது பகுதி படுக சமுதாயத்தினரும் வருகைத்தருவார்கள்.

தெங்குமரஹடாவின் சிறப்பு மலை சூ;ழ்ந்த சமவெளி யானைகளின் நடமாட்டம் அதிகம் நெல் கரும்பு வாழை நிலக்கடலை என அனைத்து பயிர்களும் பயிரிடுகிறார்கள். படுகர், ஒக்கிலி கவுண்டர், கவுண்டர், முதலியார் மலையாளி தாழ்த்தப்பட்டவர்கள் என அமைத்து பிரிவினரும் ஒன்றுமைக்கு பங்கம் வரா வண்ணம் வாழ்ந்து வருகின்றார்கள்.. இது ஒர் கூட்டுறவுப் பண்ணையாகும். 


நீலகிரி மாவட்ட ஆட்சியாளரின் ஆளுமைக்கு உட்பட்டது. ஊராட்சி மன்றம் இங்குள்ளது. 2 ஏக்கர் வீதம் உறுப்பினர்களுக்கு விவசாய நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோலூர் மட்டத்திலுள்ள படுகர் சமுதாயத்தினர் பெரும்பாலும் உறுப்பினர்களாக உள்ளனர்..

இப்பேருராட்சி கல்லாபாளையம் அல்லிமாயார் கெஜல்பட்டி மற்றும் சில சிறிய கிராமங்களை கொண்ட பேருராட்சியாகும். பெரும் வெற்றி பெற்ற அன்னக்கிளி என்ற திரைப்படம் முழுவதுமாக இங்குதான் படமாக்கப்பட்டது.

மகாபாரத அர்ச்சுனனின் பல மனைவிகளில,; ஒரு மனைவி யான அல்லி மகாராணியினுடைய கோட்டை அல்லி மயாயாருக்கு சார்ந்த மலை பகுதியில்  உள்ளதாக கூறப்படுகிறது. (தொல்லியல் துறை கவனிக்க)

இந்த அழகிய கிராமததை  சென்றடைய வேண்டுமானால் பரிசலில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றைக் கடந்து செல்ல முடியும்.


இன்னும் ஏராளமான சிறப்பு உண்டு ஆனால் ஆண்டு ஆண்டுகாலமாக கல்லாபளையம் அல்லிமாயார் கெஜல்பட்டிகளில் உள்ள இருளர் என்ற பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பல பேர் மற்றவர்களிடம் குத்தகைககு விட்டு விட்டு அவர்களிடம் கூலி வேலை செய்யும் அவல நிலைமை உள்ளது.


கல்லாபாளையம் அல்லி மாயாரில்  உண்டு உறைவிடப் பள்ளியிருந்தாலும் கல்வி நிலை மந்தமாக இருக்கிறது.

தெங்குமரஹடாவிற்கு போகும் வழியில் மான்கள் கூட்டமாக துள்ளிச் செல்வதையும், தோகை விரித்தாடும் மயில்களையும் கடந்து போகும் காட்டு  எருமைகளையும், கழுதைப்புலிகளையும், சீறும் சிறுத்தைகளையும், பிளிரும் யானைக் கூட்டத்தையும் காண முடியும் 


வனத்|துறையினரின் சோதனைக்கு பின்னே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது .

கட்டுரை  : திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: