சுட சுட செய்திகள்

Sunday, June 24, 2012

சட்டத்தின் படி ....(2)

சென்ற வாரம்
 ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
          
ராசாத்தி ராசாததி கதவைத திற. யேய் கதவைத் திற. ஏன படபடவென கதவைத் தட்டினான் வேலு.
ஏய் வேலு என்ன இன்னும் தெளியலையா? ச்சி இந்தாட சாவி. உன் பொண்டாட்டி குழந்தையை தூக்கிட்டு போயிட்டா..என்று வெறுப்புடன் சாவியை கொடுத்தார் பக்கத்து வீட்டு பார்வதி.

புதறி போன வேலு, அக்கா எங்கக்க போனா..? நாக்கு குழறியது.

“போடா…உன்னால அவளுக்கு நிம்மதியேப் போச்சுடா…ஒரு தடவையா ரெண்டு தடவையா? தினம் தினம் இப்படி பண்ணினா எவதாண்டா பொறுத்துக்குவா? அவளுக்கு என்னடா குறைச்சல் பாவம்டா அவ…”

அக்கா…இனிமேல் நான் சத்தியமா…என்று வேலு சொல்லுவதற்கு முன்..
“ஆமாண்டா நீயும் உன் சத்தியமும்…”

வேலு அழுகையுடன்” அக்கா சொல்லுக்கா..அவ எங்க போறன்னு சொன்னா?”

“ச் சீ…அழுகாதே.என் தம்பியா இருந்தா வெட்டியே போட்டிருப்பேன். ஏவ்வளவோ எடுத்துச சொன்னேன். இந்த குழந்தையையும், இனி வர குழந்தையையும் காப்பாத்தனும்னா நான் போயிதான்கா ஆகணும்ன்னு போயிட்டா”
ஏதோ நினைவு வந்தவளாக..”ஆங்…மெட்ராஸ்ல அவங்க ஒண்ணுவிட்ட அண்ணன்..அது ஓரு கடலுக்கு பக்கத்திலே கடை வெச்சிருக்கானாம்..அங்கே போறேன்னு சொன்னாள்”

ஆடி போன வேலு கதவை திறந்து..பையில் வேட்டி சட்டையை திணித்து, சாமி அலமாரியில் இருந்த கவரில் 200 ருபாய் குறைய 800 ருபாய் இருந்தது. ருhசாததி 200ருபாய் எடுத்து கொண்டதை நினைத்து தலையில் இடித்து கொண்டு இழுதான்.

கதவை சாத்திவிட்டு சாவியை பக்கத்து வீட்டு பார்வதியிடம் கொடுத்தான்.
“போடா போய் அவளை தேடி கூட்டிட்டு வர்ர வழியைப்பாரு”

ஓட்டமும் நடையுமாக திருப்பூர்   ரயில் ;நிலையத்தை அடைந்தான்.
“சார் மெடராஸ் ரயில் எப்ப வரும்?”
“யோவ் மணி என்ன? அது போய் அரைமணி நேரமாகுது.”
தலையில் இடிவிழுந்தது  போல் விக்கித்து நின்றவனைப் பார்த்து “என்ன பேய் அறைஞ்ச மாதிரி நிக்கற?
சுதாரித்து கொண்ட வேலு..”சார் மெட்ராஸ் எத்தனை மணிக்கு போய் சேரும்?”
“யோவ்..இது நம்ம நாட்டு ரயில். நுpச்சயமா சரியான நேரத்திற்கு போகாது. சுமாhர் 5.30 லிருந்து 6 மணிக்குள் போய் சேரும்.”

“நன்றிய்யா” என்று வொல்லிக் கொண்டே லாரி ஸ்டேண்டை நோக்கி ஓடினான்.

சென்னை துறைமுகம் செல்ல பனியன் லோடுடன் லாரியின் டிரைவர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

“அண்ணே மெட்ராஸ் போகுமான்னே? “
“இல்லை லண்டன் போகுது வர்ரியா?” ஏன்றார் எரிச்சலுடன்..
அப்போது அங்கு வந்தார் ஒருவர்..
“யோவ் இன்னுமா நீ கிளம்பல?”
சாh ;கிளினர் இன்னும் வரல..வந்ததும் கிளம்ப வேண்டியதுதான் “

வேற டிரைவர் கிளினர போடச்சொல்லி இந்த மேனேசரை எத்தன தடைவ சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான். யோவ் இப்ப நீ கிளம்பறயா இல்ல வேற சிப்ட் ஆளுகள வர்ற சொல்லட்டா?


இதோ சார் கிளினர் வந்துட்டான். நாங்க கிளம்பறோம்.

“சார்…..”
வேலுவை பார்த்து எனைய்யா என்றார் டிரைவர்.

ஏன்னையும் ஏத்திட்டு போங்க சார்…தயவு செய்து…

சென்னையை நோக்கி லாரி புறப்பட்டது.

தன்னோட சொந்த கதையை டிரைவரிடம்   புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.

தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.

மனைவி கிடைத்தாளா, இல்லையா?
தொடரும்….


-பிரபல கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: