சுட சுட செய்திகள்
Saturday, April 6, 2013
தாய்
தாய் மரத்தை புறக்கணித்த எந்த விழுதுகளும் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை.
குழந்தையில் தாயின் மார்பகத்தை மட்டுமே பார்த்த கண்கள்
இளைன்ஜெனாகிய பிறகு அவள் கண்களின் படிந்துள்ள சோகத்தை பார்க்க
மறுக்கிறது. ஒரு தாய் எழுதுகிறாள். தன மகன் தங்களை தவிக்கவிட்டு போனதை எண்ணி வருந்தி...
"மகனே நீ பிறந்த போது, வீட்டுக்கு ஒரு தென்னையும் நட்டோம்.
உனக்கு பாலூர்றினேன்
தென்னைக்கு நீருற்றினேன் ,
நீ இடம் மாறி எங்கேயோ
கண் காணாத இடத்திற்கு சென்று விட்டாய்.
ஆனால் அது இன்று வரை என் கூடவே இருக்கிறது.
நீ ஒருநாள் உல்லாசத்தில் இருக்கும்
வேளையில் ஒரு கடிதம் வரும்.
உன் தாய் இறந்து விட்டால் என்ற செய்தியை அது தரும்.
நீ ஒரு வேலை வர தாமதமானாலும்
இதோ இந்த தென்னைதான் எனக்கு
பாடையாக பாசத்தை காட்டும். "
இது கவிதை மட்டுமல்ல பல தாய் மார்களின் கண்ணீர் துயரம் சோகம் எல்லாமே.
ரத்தத்தை கேட்கின்ற பிள்ளைகள் உண்டு.
இன்றைக்கு அவர்கள் இதயத்தையே அறுத்து தா என்கிறார்கள்.
இருபது வயது வரை தாயோடு அவனிருந்த பாசவலை அதன் பிறகு அறுபட்டு போகிறது.
உணர்வுகளை வேட்டையாடும் ஓநாய்களாக இன்றைக்கு பிள்ளைகள் மாறி கொண்டிருகிறார்கள்.
வள்ளலாரும், ஆதி சங்கரரும் தாய் விட்டு பிரிந்த தனயர்கள் தான். என்றாலும் தாயின் உருவத்தை மனதிலே வரைந்து கொண்டவர்கள். அதனால் தான் தாயின் முடிவு காலம் தெரிந்து, முன்னமே தாயிடம் சென்றவர்கள். பற்று அற்ற துறவிகள் எந்த பாசத்தையும் உறவையும் துண்டித்து விட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், அவர்களால் தாயின் உறவை துண்டிக்க முடியவில்லை. ஆனால் நாம் தாம் இப்போது துறவிகளாகி கொண்டு இருக்கிறோம்.
தன குழந்தையுடன் தாய் உறங்கி கொண்டு இருக்கிறாள். கணவன் மனைவியை எழுப்ப அருகே வருகிறான். குழந்தை நல்ல தூக்கத்தில் இருக்கிறது. மனைவியை அதிர்ந்து கூப்பிட்டால் ஒருவேளை குழந்தையின் தூக்கம் களைந்து விடுமென்று எண்ணி, அவை மெல்லிய பூவை கொண்டு எழுப்ப முயற்சிக்கிறான். இரண்டு முறை பூ அவள் மீது எறியப்பட்ட போது அது தெரியாமல் தன்னிலை மறந்து அவள் தூங்கினால். அவளை எழுப்ப முடியவில்லை. மீண்டும் ஒரு பூவை எறிகிறான். ஆனால் அது குழந்தை மீது படுகிறது. உடனே தாயின் கரங்கள் தன குழந்தை மீது விழுந்த பூவை தன்னிலை மறந்து அகற்றுகிறாள். அது தான் தாய்க்கே உரித்தான பெருமை.
இன்னொரு கதை கூட உண்டு.
கட்டில் பூ ஒருத்தி தன கட்டுக்குள் இருந்தவனை
எட்டி காயாக்கி போட்டதுடன்
எனக்கொரு காணிக்கை தர வேண்டுமென்றால்.
என்ன வென்று கேட்டான். வெட்டி வந்து உன் தாயின் இதயத்தை
என் கையில் வைத்திடுக என்றாள். அவனும் சென்றான்.
பெட்டிக்குள் மணி போல வைத்து மகனை காப்பாற்றும் மாதாவை,
குட்டி குடிலன் போல அம்மகனே கொன்றழிக்கும் காலமிது.
நெட்டி போல் நுரைபோல் தலை நரைத்த தாயின் இதயத்தை ரொட்டி போல் கொத்தியே கொண்டோடி வந்தான்.
எட்டி வைத்த அடி சறுக்கி கிழே விழுந்தான்.
பட்ட அடி பலமோ மகனே? ஐயோ என்று வெட்டுண்ட தாயாரின் இதயம் வெட்டவெளியில் கிடந்து அலறியதாம் .
இப்படி ஒரு கதை உண்டு.
அதுதானே தாயன்பு?
அதனால் தான் இலட்ச கணக்கில் யூதர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட , சாகும் நேரத்தில் தாயின் புகை படத்தை தன மார்பில் வைத்து பார்த்து கொண்டே தன நெற்றியில் துப்பாக்கி வைத்து தற்கொலை செய்து கொண்டான். அந்த நிகழ்ச்சித்தான் அவனும் மனிதன் தான் என்பதை நமக்கு காட்டியது.
ஆயிரம் கிளைகளாக பல உறவுகள் தோன்றினாலும், அடி மூலம் என்னவோ அது தாயின் உறவு மட்டும் தான்.
தாயை மறந்த பல தனயர்களால்தான் பல முதியோர் இல்லங்கள் இந்த பாவப்பட்ட இந்தியாவில் முளைத்தன.
என்னை பாத்தித்த கவிதை ஒன்று உண்டு.
'ஒரு முதியோர் இல்லத்தில் இப்படி எழுதபட்டிருந்ததாம்
"இது ஒரு மனித காட்சி சாலை...எப்போதாவது சில மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகும்"
அன்பையும், பாசத்தையும் போதித்த இந்த இந்திய தேசத்தில் பாவம் பல தாய்மார்கள் முதியோர் இல்லத்தில்.
இருக்கும் ஒரே ஒரு தாயின், புன்னகையை கூட நாம் பறித்து விடுகிறோமே ! இதை விட ஒரு பாவ செயல் வேறு எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.
தாயால் பல பேர் கோடி நாட்டி வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் உண்டே தவிர , வீழ்ந்ததாய் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.
கெட்ட மகன்கள் உண்டே தவிர கேட்ட தாய் என்று இதுவரை யாருமே இருந்ததில்லை.
ஒரு தாய் வாங்கிய சபதம் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது.
ஒரு தாய் ஊட்டிய வீரம் தான் ஒரு சிவாஜியை உருவாகியது,
ஒரு தாய் ஊட்டிய இசைதான் ஒரு இளையராஜாவை உருவாகியது. பல வரலாற்று நாயகர்கள் உருவாகியது இப்படித்தான்.
நேற்றைக்கு வந்து, இன்றைக்கு முடிவதில்லை தாய் பாசம். தொப்புள் கோடி அறுப்பட உடனேயே தாய் வேறு, குழந்தை வேறு தான் ஆனாலும் பாசக்கொடி அறுபட்டு போவதில்லை.
எனக்கு மட்டும் தாயின் கருப்பைகுள்ளேயே என் வாழ்நாள் முழுவதும் இருக்க வரம் கிடைத்திருந்தால், ஒரு ஆயுள் கைதி போலவே அந்த கருப்பு சிறையில் சுதந்திரமாய் இருந்திருப்பேன்.
வெறும் துன்பங்களும் கனவுகளையும் மட்டும் சுமந்து வாழும் மனித பிறவிக்கு தாயன்பு மட்டுமே ஆறுதல் தரும்.
அதற்காக அவளுக்கு விருந்து வைத்து விழா எடுக்க வேண்டியதில்லை. அம்மா என்கின்ற வார்த்தையை கேட்டாலே அவள் பேரின்பத்தை அடைந்திடுவாள்.
அவள் தலையில் நரை விழும் போதாவது அன்பெனும் அஸ்திரத்தை அவளிடம் காட்டுங்கள். ஏனென்றால் அது அவள் அஸ்தியை மோட்சமாக்கும் வலிமையை கொண்டிருக்கும்..
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இருக்கும்போது தெரிவதில்லை யாருடைய அருமையும்.
Post a Comment