தமிழ் கிராமத்தைச் சேர்ந்தவன்
நுனிநாக்கு ஆங்கிலமில்லை என்றாலும் படிக்க, சொல்வதை புரிந்துக் கொள்ள, தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பிழையின்றி ஆங்கிலம் பேசுவான்.
விடுதியில் தங்தி படித்கும் மாணவர். ஆடம்பரத்தை விரும்பாதவன். காரணம் வசதிக்குறைவு.
கௌதம் ஒரு தொழிலதிபரின் வாரிசு. கையிலும் பையிலும் பணமே காசோ இருக்காது.எல்லாமே கிரடிட் கார்டு தான்.
இவனைச் சுற்றி (தூங்கும் நேரம் தவிர) எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
எப்போதும் ஜால்ரா போட்டுக் கொண்டு, தங்கள் தேவைகளை முடித்துக் கொள்வார்கள்.
அகிலன் தேவைக்கு மேலும் கொஞ்சம் பணம் கையில் எப்;பொழுதுமேயிருக்கும் கல்லூரி மாணவர்களுக்குள்ளே கிண்டல் கேலி நக்கல் நையாண்டி அத்தனை குணாதிசியங்களும் அந்த மூணு பேருக்கும் உண்டு.
“ஏண்டா கௌதம் தமிழ் எங்கே?”
“எங்கே லைப்ரரியில தான்… செல்லை கொடு” என்றான் அகிலன்
“டேய் அவன் கோயிலுக்கு போனானே”
“என்னடா புது பைக்கெல்லாம்…. என்கிட்ட நீ சொல்லவே இல்லை?”
புதிய மாடல்; 500CC புல்லட்டை வாஞ்சையோடு தடவி பார்த்து “என்னடா கௌதம் அப்ப இன்னிக்கு எந்த ஸ்டார் ஓட்டலில்…” என்று கேட்பதற்குள் தமிழ் வந்தான்
“டேய் தமிழ் மாப்ளே.புது பைக் வாங்கி இருக்காண்டா” என்றான் அகிலன்
“நான் வாங்கலைடா என்னுடைய பெர்த் டேக்கு அப்பா வாங்கி கொடுத்தார்” என்றான் கௌதம்
‘சரி தமிழ் ஏறுடா.. இன்னைக்கு பார்ட்டி தா… நாங்க நான்வெச் அதான் மதுவும் மாமிசமும்” என்று அவசரப்படுத்தினான் அகிலன்.
“மூன்று பேரும் ஒரே பைக்கிலா?”
“வேண்டாண்டா தப்பாயிரும்..”
“ஏண்டா என்ன போலிஸ் புடிச்சுடுமேன்னு பயமா?” என்றான் கௌதம்
“தெரியும் ..பெரிய இடம் நமக்கு எதற்கு வம்பு என விட்டுடுவாங்க. இருந்தாலும் நான் வரலை . எனது வாழ்த்துக்கள். அதோ அந்த முருக பெருமாள் போயிலுக்கு பொடி நடையாhய் நடந்து ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அப்புறம் எங்கே வேணுமின்னாலும் போங்க” என்றான் தமிழ்.
“டேய்..பஞ்சாங்கம்…ஸடார் ஓட்டலிலும் கோயிலிருக்கு நாங்க அங்க பாத்துக்கறோம். இவ உருப்பட மாட்டான்டா… டேய் அகில் ஒரு ஆயிரமிருந்தா கொடு” எனறான் கௌதம்.
“பின் பாக்கட்டிலிருந்து பர்சை எடுத்து 700 ரூபாய் தாண்டா இருக்கு”. என்றான் அகிலன்.
அதை வாங்கி தமிழிடம் கொடுத்தான் கௌதம்.
“வேண்டாண்டா” தமிழ் மறுத்தும் அவனுடைய பாக்கொட்டில் திணித்தான்.
டேய் ஹெல்மெட் எங்கடா? என்று கேட்டான் தமிழ்
பின்னாலே தொங்கறது தெரியலையா ? என்றான் கௌதம்.
தலையிலே போடுடா என்றான் தமிழ்.
ஆனால் இருவரும் தமிழின் பேச்சை காதில் வாங்கவில்லை
அகிலன் காதில் ஒயரை சொருகி… “என்ன பாட்டுடா?”
“சலிக்காத நம்ம தனுஸ் பாட்டுத்தான் மாப்பிளே”
“புதுபைக்ககை கௌப்புடா” என்றான் அகிலன்.
பைக் 40, 50, 60 ஐ தாண்டி 100 யையும் தாண்டி போய்கொண்டிருந்தது.
கௌதம் செல் அலற கையிலெடுத்து ஹலோ என்பதற்குள் ஸ்பீடு பிரேக்கில் மோதி இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.
பெரிய அதிகாரிகள் பல கம்பெனி முதலாளிகள் அனைவரும் கௌதம் தந்தை சக்ரவர்த்திற்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஒரே வாரிசு கோடி கணக்காண சொத்து இனி இனி இனி…. என பூமாலைக்கு நடுவில் முகம் மட்டுமே தெரிகிற கௌதமை பார்த்துத் தேம்பி தேம்பி யழுதார் அவர் அப்பா.
“டேய் பாவி கேட்டீங்களாடா ஹெல்மெட் போடுங்கடா பார்த்து போங்கடான்னு சொன்னேனே…கேட்டீங்களாடா… இனி; எனக்கு யாருடா உங்களைப் போல நண்பர்கள் கிடைப்பார்கள்… என கத்தி அழுதான் தமிழ்.
மயங்கி விழுந்தவனை; தண்ணீர் தெளித்து சகச நிலமைக்கு கொண்டுவந்த பின்னரும் கண்ணீர் நின்றபாடில்லை.
ICU விலிருந்து வெளியே வந்த டாக்டர் பதைபதைப்பு துக்கம் தாளாமல் நின்றிருந்த அகிலின் தந்தையைப் பார்த்து “உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை ஆனால”; என்று டாக்டர் நிறுத்த
“ஐயா எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை பையனை காப்பாத்துங்க” என்று கதறினாள் அகிலன் தாய்.
செய்வதறியாது துக்கத்தினனை உள்ளடக்கிய அகிலன் தந்தை “சொல்லுங்க டாக்டா”; என்றார்.
CNS அதாவது மத்திய நரம்பு மண்டலத்தை துண்டித்து விட்டதால் உங்கள் மகன் சுய நினைவை இழந்து விட்டான் . இனி; உயிருடன் இருப்பான் ஆனால் நினைவு திரும்புவதற்கு சாத்தியமில்லை போய் பாருங்க என்றார் டாக்டர்
துக்கம் கலந்த செய்தியினை தாங்க முடியாத தாயும் தந்தையும் கதறியழுதனர்.
அகிலனை நெஞசோடு சாய்த்து பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுப்பதை போன்று அழுது அழுது வீங்கிய கணகளுடன் ஸ்பூனில் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் தமிழ் .
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவுடு நொண்டியில்லாமல் பிறப்பது அதனினும் அரிது.
சாலை விதிகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாமல் செல்லில் பாட்டு பேச்சு என்றும், மது அருந்தி ஓட்டுவதும், கவனமின்மையும், அதிவேகமும்
இவையனைத்தும் கால தேவனின் உறவுக்காரர்கள். நம்மை அழைத்துச்செல்ல கண்டிப்பாக வந்துவிடுவார்கள்.
தாய் தந்தை உடன்பிறப்பு உறவு இணைப்பிரியா நண்பர்களையும் இழப்பது மட்டுமல்லாமல் இயற்கையான மரணத்தை செயற்கையாக மாற்ற வேண்டுமா?
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
மறக்காமல்
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
9952827529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment