அதுல எப்போ பார்த்தாலும் கார் ரேஸ்,பழைய காலத்து இந்திபபடம் ன்னு அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். மகாபாரதம்…ன்னு சங்கு சத்தம் ஆரம்பிச்சு, சும்மா நம்மளை ஒரு சரித்திர புலியா ஆக்கினது எல்லாமே அந்த டிவிதான். என்ன அப்ப இந்தி மொழில தான் மகாபாரதம் வந்தது. மகாபாரம் ஏதோ மழைகாலத்துல நடந்த மாதிரி தெரியும்.
ஆமாம் பாஸ் அவ்வளவு கிரைன்ஸ். ஆனாலும் காஞ்சு போன மாட்டுக்கு பழைய புல்லா இருந்தாலும் அது பிரியாணித்தானே பாஸ். வுpடாமல் பார்த்துக்கிட்டே யிருப்பேன்.
ஸகூல் விட்டு வந்த உடனே அம்மா நான் ரெனால்டு வீட்டுக்கு போயிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு,அம்மா என்ன சொல்ல போறாங்களோன்னு அவங்க பதிலக் கேட்கக்கூட நேரம் கொடுக்காம நான் பாட்டுக்கு விர்ருன்னு கிளம்பிருவேன். அவ்வளவு டிவி பைத்தியமா மாறிட்டேன்.
கிரிக்கெட்டைப் பத்தி தெரிஞ்சுகிட்டதே அந்த டிவியைப் பார்த்துதான். நான் ஒரு சுயம்பு பாஸ்.
கிரிக்கெட்டில் நான் பைத்தியமா திருஞ்சது ஒரு தனிக்கதை. அதை அப்புறமா சொல்றேன்.
சாயங்காலம் 5 மணிக்கு போனேன்னா, 7 மணி வரை டிவிதான். அட…இது நம்ம வீடு இல்லையே..பிரெண்டோட அம்மா என்ன நினைப்பாங்களோன்னு நான் கொஞ்சம் கூட வெக்கப்படல…வேதனைப்படல.
ஆனா பாருங்க பாஸ்..சரியா 7 மணி யானா போதும்….அவங்க அப்பா வந்துருவாரு. அவரு வந்த உடனே சரிப்பா நீ கிளம்பு ன்னு சொல்லி டிவியை ஆப் பண்ணிருவாரு.
எனக்கா…இந்த ஆளு ஏய்யா வந்து வந்து தொல்லை பண்றான்னு கோபமா இருக்கும். என்ன பண்றதுன்னு சொல்லி உடனே கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்.
எங்க அம்மா பாத்தாங்க….ஆகா இவனை இப்படியே விட்டுடோம்னா இவன் பிரெண்டு வீட்டுல மானம் கெட்டு,நம்ம மானத்தையும் கெடுத்துருவான்னு சரியா முடிவை எடுத்து, சரி நம்மளே ஒரு டிவியை வாங்கி வைச்சுருவோம் ன்னு அது சம்மந்தமா அப்பாக்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க.
அதை வாங்கலாம்…இதை வாங்கலாம் ன்னு எதை எதையோ டிஸ்கஸ் பண்ணி கடைசில ஒரு பிளாக் அண்டு வொயிட் போர்ட்டபிள் டிவியை வாங்கினாங்க…அன்னைக்கு பாவம் எங்க வீட்டுல அதுதான் முடிஞ்சது.
வீட்டுல டிவி வந்த உடனே நான் பட்ட சந்தோசம் இருக்கே…அப்பப்பா…
பக்கத்து வீட்டுல, பார்க்கிற பிரெண்ட்ஸ்கிட்டன்னு எல்லாத்துக்கிட்டயும் டேய்…எங்க வீட்டுல டிவி வாங்கிட்டோம்… டிவி வாங்கிட்டோம்…ன்னு பெருமை கிழிய சொல்லிக்கிட்டு இருந்தேன்.
இப்ப வீட்டுலயே டிவி வந்துட்டனால நான் ரெனால்டு வீட்டுக்கு போறதே இல்ல. அவன பாத்தாக்கூட பேசறது கூட இல்ல. அவனுக்கு புரிஞ்சு போச்சு…. ஆகா இவன் சரியான பச்சோந்தி பைய. டிவி வந்த உடனே இந்த பாவியை மறந்துட்டானே ன்னு…
அப்புறமா நான் இந்த டிவில கத்துக்கிட்டது ஏராளம். சும்மா டிவி முன்னாடியே உக்காந்துகிட்டு, பாசை புரியுதோ இல்லையோ…என்னமோ புரிஞ்சுக்கிட்ட மாதிரி தலையாட்டிக்கிட்டு,சிரிச்சுக்கிட்டு இருப்பேன்.
அப்படி ஒரு வாழ்க்கையை நாம எல்லோரும் மிஸ் பண்ணியிருக்க மாட்டோம் இல்லைங்களா பாஸ்….
சரி அடுத்ததா நான் கிரிக்கெட் கத்துக்கிட்ட சுவாரஸ்யமான விசயம் ஒண்ணு இருக்கு….நாளைக்குச் சொல்லவா…?
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment