சுட சுட செய்திகள்

Sunday, July 17, 2011

ஜு ஜு ப்பிங்க வாழ்க்கை...


ஒருநாள் நள்ளிரவு காவலர் ஒருவரும் தலைமைக் காவலரும் ஒருவருமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஒருவன் இவர்களைக் கண்டு மறைந்து மறைந்து சென்றான். போலீஸஃ கண்களுக்குத் தப்ப முடியுமா? அவனைப்பின் தொடர்ந்தனர். சந்தேகமில்லை. பழைய திருடன்தான். பிடிக்கவிரைந்தனர். ஒரு சந்துக்குள் ஓடி விட்டால் தலைமைக் காவலர் சாதாரணக் காவலரை ஏவி விட்டார். “போய் அவனைப் பிடிச்சுட்டுவாய்யா”. ஆனை கேட்டு அவசரமாய் சந்துக்குள் சென்றார். அது தொடர்ந்து செல்கிற சந்தில்லை. ஒரு இடத்தில் அடைபட்டுவிடுகிறது. அதற்குமேல் போக முடியாது. திரும்பித்தான் வந்தாக வேண்டும். உள்ளே சென்ற காவலர் நெடுநேரமாகியும் வரவில்லை. சந்து முனையில் நின்ற தலைமைக் காவலர் சிந்து பாடினார். “என்னய்யா இன்னுமா பிடிக்கிறே? வா சீக்கிரம்”

காவலர் குரல் கொடுத்தார். “வரமாட்டேங்கிறான் சார்”

“லத்திக்கம்பாலே நூலு கொடுத்து இழுத்துக்கிட்டு வாய்யா” காவலருகுத் தலைமை ஆலோசனை கூறியது.

மேலும் அரைமணி நேரம் ஆயிற்று தலைமை குரல் கொடுத்தது. “என்னய்யா பண்றே இன்னும்?” இப்போது காவலர் குரல் பரிதாமாக ஒலித்தது. “விடமாட்டேங்கறான் சார்”.

தினமும் செய்தித்தாளில் இதுபோன்ற செய்திகள் ஏராளம் பிடிக்க வேண்டிய காவலரே பிடிபடுகிறார். அடிக்க வேண்டிய அலுவலர் அடிபடுகிறார்.

நம்மைப் பிடித்த பழக்கங்களும் கூட இது போலத்தான். முதலில் சிகரெட் புகைக்கக்கற்றுக் கொள்வதற்கு தம்பி எவ்வளவு சிரமப்படுகிறான்?

தொண்டைக்குச் சென்ற புகை கமறலை உண்டாக்கி, மூச்சு முட்டி, இருமலை ஏற்டுத்தி, கண்ணில் கண்ணீரைச் சிந்த வைத்து, பாவம் மிகவும் துன்பப்படுகிறான்.

நல்வழிகாட்ட வந்த நண்பனோ முதலில் அப்படித்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று நெஞ்சுரம் ஊட்டிப் பழக்கத்தை உண்டாக்குகிறான்.

L போர்டு திருட்டு தம்மில் ஆரம்பிக்கிறான். பிறரிடம் பேசும்போது வாயை மூடிக்கொண்டு பேசுகிறான், நாற்றம் தெரியாமல் இருக்க!

வீட்டில் படுத்தால் வாய் ஓயாத இருமல் அம்மாவுக்கு ஏதோ சாக்குபோக்கு சொல்கிறான். அம்மா பாவம். இவனுக்காக பனங்கறகண்டு சித்தரத்தை போட்டுப் பால் தருகிறாள். “திருடன்” அதையும் அருந்துகிறான். அப்புறமும் இருமல், சிகரெட்டு, தீக்குச்சி, பட்டை ஆகியவற்றைச் சட்டைப்பையில் பார்த்துவிட்ட தந்தை சீறிப்பாய்கிறார்.

எல்லாம் சரி, இப்போது அவன் வாலிபன். யாருக்கும் அஞ்சாது எவருக்கும் கவல்பைபடாது தெருவில் தைரியமாக தம் அடிக்கிறான். நண்பர்கள் பட்டாளம் துணை நிற்க புகைப்படலத்தில் மூழ்குகிறான். இன்னும் இன்னும் வயது கூடுகிறது. மனைவி மக்கள் என்றாகி விடுகிறது. நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி, டாக்டரின் எச்சரிக்கை. இனிமேல் புகைப்படிப்பதாக இருந்தால் இந்த மருத்துவமனையில் உனக்கு இடமில்லை.

இப்போது இவனுக்கு அப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறத. எண்ணம் வந்து என்ன செய்ய? பழக்கம் விடமாட்டேன் என்கிறதே! உதடு ஊறுகிறது. கை பரபகிறது. ஊதினால்தான் நமச்சல் அடங்கும் என்ற நிலை.

திருடன் வரமாட்டேன் என்று சொல்லும் முதல் நிலை. பிறகு விடமாட்டேன் என்கிறான் என்று தவிக்கும் மறுநிலை. வரமாட்டேன் என்ற பழக்கத்தை வருவித்துக்கொள்வானேன்? விட முடியவில்லையே என்று பிறகு வருந்து வானேன்?

புகைப்பழக்கத்தான் என்றில்லை. இது போன்ற ஏராளமான உடலைக் கெடுக்கும் மனத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்.
பழகிப் பழகி வருவிப்பதைப் பழக்கம் என்கிறோம். வந்து படிந்துவிட்டால் அதையே வழக்கம் என்கிறோம். இப்படி ஏதாவது ஒன்றைப் பழகிக் கொண்டு எவ்வளவு அல்லல் படுகிறோம்?

குடிப்பழக்கம் புகையிலை போடும் பழக்கம், கஞ்சாப் பழக்கம், காப்பிப் பழக்கம், தேநீர்ப் பழக்கம் என்று ஏராளமான வழக்கங்கள்.

கஷ்டப்படுப் பழகுகிறோம். அதற்காகச் செலவு செய்கிறோம். நல்ல நண்பர்களை இழக்கின்றோம். தீய நண்பர்களோடு பழகத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். கடைசியில் அப்பழகத்திலிருந்து விடுபட அரும்பாடு படுகிறோம். முடியாமல் துன்புகிறோம். ஏன் இப்படி?

நட்பு பற்றி நிறையப் பேசுகிறார் திருவள்ளுவர. நட்பு, நட்பாராய்தல்,பைமை, தநட்பு, கூடா நட்பு என 5 அதிகாரங்களில் 50 குறட்பாகால் நட்பு பற்றி விவரிக்கிறார். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுப்பதும் ஆலோசனை கூறுவதுமே திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை ஆகும்.

நண்பர்கள்தான் பழக்கத்தை உருவாக்குகிறார்கள்.

“இந்தத் தெருவிலே உள்ள பயலுங்க சேர்ந்து எம்புள்ளய கெடுத்தாட்டாங்க”

தாய்மார்களின் இப்புலம்பலில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
என்னிடம் ஒருபழக்கம் ஏற்பட்டது. பிறகு வழக்கமாகி நிலைபெற்றது. அது இதுதான். நான் ஆசிரியாயிற்றே! வகுப்பறையில் மாணவ்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டால், “டேய் நான் ஒருத்தன் இருக்கேண்டா” என்பேன்.

நான் இருக்கும்போதே பேசுகிறீர்களே என்று அங்கலாய்ப்பதுதான் இது.

மாணவர்களும் தற்காலிக அமைதியை அனுஷடிபார்கள். ஒருநாள் இப்படித்தான் கடைசி பெஞ்சில் ஒரு சலசலப்பு.

இரு மாணவர்கள் சற்று உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள். என் வழக்கப்படி “டேய் நான் ஒருத்தன் இருக்கேண்டாம என்றேன்.

அவ்வளவுதான் மாணவர்களிடையே ‘கொல்’ லேன்று சிரிப்பு.

‘ஏம்பா சிரிக்கிறீர்கள்’ என்று கேட்டேன்.

‘வேண்டாம் ஐயா, கேட்டால் வருத்தப்படுவீர்கள்’ என்றனர் மாணவர்.

‘இல்லை தெரிஞ்சுட்டாதான் நல்லது. இல்லேன்னாதான் மனசு தவிக்கும். என்னமோ ஏதோ என்று’ என்றேன் நான்.

“ஐயா இவன் நோட்டை அவன் கிழிச்சான். அவன் பேனாவை இவன் உடைச்சான். அவன் இவனை “மடப்பயலே” என்றான். இவன் அவனை “நீதாண்ஆ மடப்பயல்” என்றான். அப்பதான் நீங்க சும்மா இருக்காம நான ஒருத்தன் இருக்கேன்னு சொன்னீங்க. அவன் சொன்னார், “ஆமாம் ஐயா ஒருத்தர் இருக்காரு அவரையும் சேர்த்துக்கங்கன்”னு நாங்கள் அடக்க முடியாம சிரிச்சிட்டோம். ஐயா இந்த மடப்பயலுவ விஸ்டிலே நீங்கல்லாம் சேரக் கூடாதுய்யா”

அன்று முதல் நான் ஒருத்தன் இருக்கேன்னு சொல்வதை விட்டுவிட்டேன்.

காரண காரியம் அறிந்து எச்சரிக்கையும் பேச வேண்டும். இல்லையேல் என்னைப் போல அவமானப்பட வேண்டியதுதான். எது நல்ல பழக்கம்? எது கெட்ட பழக்கம்? என்பதற்கு நிரம்ப ஆராய்ச்சி செய்ய வேண்டுவதில்லை. எதை மறைவாகச் செய்ய முற்படுகின்றோமோ, எதைப் பிறருக்குத் தெரியாமல் செய்ய முற்படுகிறோ அது தீமை என்று பொருள்.

நேரு அவர்கள் தன் மகள் இந்திராவுக்கு எழுதும் கடித்த்தில் “எதையும் மறைவாகச் செய்ய எண்ணாதே. மறைவாகச் செய்ய நினைக்கும் போதே அது தவறான செயல் என்பதைப் புரிந்து கொள்” என்றார்.

‘அச்சம் தவிர்’ என்று பாரதியார் தன் புதிய ஆத்திச்சூடியைத தொடங்குகிறார். அச்சமின்றிச் செயல்பட வேண்டுமானால் நல்ல காரியங்களை மட்டும் செய்யப் பழகிட வேண்டும்.

இருட்டில் நுழையும் போது பயம் கவ்வும். வெளிச்சம் வர பயம் அகலும். இருட்டு அச்சம், ஒளி அஞ்சாமை பேய் பிசாசுகள் என்ற பொய்மை இரவில் கேட்கும் போது நம்மை அறியாமல் உடல் நடுங்குகிறது. அதையே பகலில் கேட்கும் போது சிரித்துச் சுவைத்து மகிழ்கிறோம். தீயபழக்கங்கள் இருள் கவ்வுவதைப் போல் நம்மைக் கவ்வும்போது, நல்லவர் சேர்க்கை என்ற ஒளியைப் பாய்ச்சி அவ்விருளை அகற்ற வேண்டும்.

ஒருமுறை மாணவர்களிடம் பேசிக்க கொண்டிருக்கும்போது, “இருட்டில் பயம் வரும் வெளிச்சத்தில் தைரியம் வரும்” என்றேன். ஒரு மாணவன் அதை ஒத்துக்கொள்ளவில்லை. அவன் வேறு விளக்கமளித்தான்.

“நல்லவர்களுக்கு இருட்டில் பயமும் வெளிச்சத்தில் தைரியமும் வரும். கெட்டவர்களுக்கோ இருட்டில் துணிவும் வெளிச்சத்தில் பயமும் வரும்” என்றான்.

“ஆகா, எவ்வளவு அருமையாகச் சிந்திக்கிறான்” என்று மெச்சிப் பாராட்டினேன்.

ஆம். திருடர்கள் இருட்டில் துணிந்து தொழில் செய்கிறார்கள். வெளிச்சம் வந்தால் ஒளிகிறார்கள்.

பட்டப் பகலில் நாலுபேர் அறிய செய்யும் எல்லாமே சமுதாய அங்கீகாரம் பெற்ற நல்ல செயல்களே.

இருளில் – யாரும் நம்மைப்பார்க்க வில்லை என்ற துணிவில் – செய்யப்படும் செயல்கள் – தனக்கோ சமுதாயத்துக்கோ தீமை பயக்கும் செயல்களே ஆகும்.

விலை மகளிர் இல்லம் போகிறவன் இருட்டில் யாரும் காணாமல் செல்கிறானே, ஏன்? அவனுக்கே தெரிகிறது. அது தகாத செயல் என்று.

காந்தியடிகள் “எந்தச் செலவையும் கணக்கெழுதிவிட்டுச் செய். கணக்கு எழுதாமல் பைசாவைக் கூடச் செலவிடாதே, கணக்கெழுதாமல் செலவிடப்படும் ஒவ்வொரு பைசாவும் திருட்டுப் பணமே” என்கிறார்.

மது பாட்டில் வாங்கினாயா, கணக்கில் எழுது.

சிரெட் வாங்கினாயா, கணக்கெழுது.

லஞ்சம் கொடுத்தாயா, கணக்கெழுது

சின்ன வீட்டுச் செலவா? எழுதிவை. கணக்கில் மறுநாள் அக்கணக்கு நோட்டை எடுத்துப் படித்துப் பார்க்கும்போது நமக்கே வெட்கமாக இருக்கிறதா, இல்லையா?

சிலருக்கு சில வினோத வழக்கங்கள் உண்டு. சிலருடைய அறியாமையை பலர் அறிய வெளிப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். அறியாமை அகற்ற முயலவேண்டுமே அன்றி அறியாமையை வெளிப்படுத்தி அறியாதவர்களை அவமானப்படுத்துவது ஆகாத செயல்.

விவரமில்லாமல் பதில் சொல்லி விழி பிதுங்கும் நண்பன் ஒருவன் இருந்தான். அவனுடைய விவரமின்மையை விலாசமிட்டுக் காட்டும் இன்னொரு நண்பனும் எனக்குக் கிடைத்திருந்தான். பத்துப்பேர் கூடியிருக்கும் சபையில் எடக்கு முடக்கான கேள்வி கேட்டு விழிபிதுங்க வைத்து விளையாட்டுக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று ஒருமுறை நடந்தது.

விவரமானவன் கேட்டான் “ஏம்பா உன் பொண்டாட்டி விதையாயிட்டா நீ என்ன செய்வே?”

விவரமில்லாதவன் சொன்னான் “அதனால என்ன? நானே ஆக்கித் தின்னுட்டுப் போறேன். இது என்ன பெரிய கஷ்டமோ”

சபையில் வெடிச் சிரிப்பு. விவரமில்லாதவன் பேந்தப் பேந்த விழிக்கிறான்.

நண்பனின் அறிவை நாலுபேர் அறியப் பாராட்டுவோம். நண்பனின் குறையைத் தனிமையில் சுட்டிக்காட்டித் திருத்துவோம்.
-நகைச்சுவைத் தென்றல்' இரா. சண்முக வடிவேல்

No comments: