என்ன தான் மனிதர்கள் உயரத்தில் இருந்தாலும், தாழ்ச்சி என்பது எப்போது
நடக்கும் என்று தெரிவதில்லை, இந்த திடீர் தாழ்விற்கு பூமியை ஆட்கொள்ளும்
ஒன்பது கிரகங்கள் தான் காரணம் என்று ஜோதிடம் சொல்கிறது. அது உண்மை என்பது
போல் பல உண்மை நிகழ்சிகளை நம்மால் கூறமுடியும்.
ஆனால் நவ கிரகங்களின் கொடூரமான பார்வையை நம் கனிவான பக்தியினால் குளிர வைத்து விட முடியும் என்பதும் உண்மை.
இந்த விசயத்தில் தமிழர்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள். எப்படி தெரியுமா? அந்த 9 நவக்கிரக தெய்வங்களும் குடியிருப்பது நம் தமிழ் நாட்டில் என்பது தான். ஒருநாள் போதும் நாம் அவர்களை பார்த்துவிட்டு வருவதற்கு.
இதோ அந்த சுலபமான வழி கிழே.....பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் நவ கிரகங்களின் கொடூரமான பார்வையை நம் கனிவான பக்தியினால் குளிர வைத்து விட முடியும் என்பதும் உண்மை.
இந்த விசயத்தில் தமிழர்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள். எப்படி தெரியுமா? அந்த 9 நவக்கிரக தெய்வங்களும் குடியிருப்பது நம் தமிழ் நாட்டில் என்பது தான். ஒருநாள் போதும் நாம் அவர்களை பார்த்துவிட்டு வருவதற்கு.
இதோ அந்த சுலபமான வழி கிழே.....பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
நவகிரகம் என்று அழைக்கப்படும்
ஒன்பது கோள்களைக் குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ்நாட்டில்
உள்ளன. அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60 கி.மீ. சுற்றளவில் உள்ளது.
1. சூரியன் – சூரியனார் கோவில்
இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனாரை தரிசித்தால் ஆரோக்கியம், வெற்றி, வாழ்வில் செழுமை ஆகியவற்றைப் பெறலாம்.
2. சந்திரன் – திங்களூர் கோவில்
சந்திர கடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சென்று வருவதால் நீண்ட
ஆயுளும் சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறுவர். சந்திரனால் துன்பங்களையும்,
துயர்களையும் துடைக்க வல்லவர்.
3. செவ்வாய் – வைதீஸ்வரன் கோவில்
இந்தக் கடவுளை வணங்குபவருக்கு தைரியம், வெற்றி, பலம் ஆகியவற்றைப் பெறலாம்.
4. புதன் – திருவெண்காடு
புதனின் அருள்பார்வையில் அறிவும், புத்தி சாதுர்யமும் கிட்டும்.
5. குரு – ஆலங்குடி
இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். 12 ராசிகளுக்கு குரு பகவான்
இடப்பெயர்ச்சி அடையும்பொழுது இத்தலத்தில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
6. சுக்கிரன் – கஞ்சனூர்
சிவன் பார்வதி திருமணக் காட்சியை பிரம்மா இத்தலத்திலிருந்து கண்டார்.
கணவன்மார்கள் தங்கள் மனைவியரின் நல்வாழ்விற்காக இங்கு வந்து தரிசனம்
செய்யலாம்.
7. சனி – திருநள்ளாறு
12 ராசிகளுக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி செய்யும்போது சிறப்புப்
பூசைகள் நடைபெறும். இங்குள்ள நளதீர்த்தத்தில் குளிப்பதால் தீமைகள்
விலகிவிடும் என்று நம்பப்படுகிறது.
8. கேது – கீழ்பெரும்பள்ளம்
தேவர்கள் பாற்கடலை கடைய உதவியாக இருந்த வாசுகி நாகத்திற்கு ராகுவும், கேதுவும் உதவினர்.
9. ராகு – திருநாகேஸ்வரம்
ஆதிசேஷன், தக்ஷ்ன், கார்கோடகன் எனும் சர்ப்பங்கள் (பாம்புகள்) சிவபெருமானை வழிபட்ட தலம்.
நவகிரக துதி
உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
ஓய்விலா வலம்வரும் செங்கதிரே
சூரியனே, நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.
தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே
வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு
அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.
வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக
வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே
வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே
கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண்திறப்பாய் கனிந்து.
ஓய்விலா வலம்வரும் செங்கதிரே
சூரியனே, நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.
தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.
என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே
வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு
அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.
வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக
வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே
வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே
கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண்திறப்பாய் கனிந்து.
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை
அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment