சுட சுட செய்திகள்

Thursday, May 10, 2012

குழந்தை பாக்கியம் அருளுகிறாள் கர்ப்பரட்சாம்பிகை அன்னை

(இந்த கட்டுரை அமானுஷ்யம் வலை பூவிலிருந்து எடுக்கப்பட்டது.
இன்றைக்கு பலருக்கும் தேவையான செய்திகள் இந்த கட்டுரையில் இருப்பதால் ,  என் வலைப்பூவில் பகிர்ந்துகொள்ள படுகிறது..)
நன்றி : amaanushyam .blogspot .in 

திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்

 திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்


ஸ்தல வரலாறு:
 
தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில்  திருக்கருகாவூர்  உள்ளது.   திருக்கருகாவூரில் அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் உள்ளது. முல்லைவனநாதர் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவர் தாமே தோன்றியவர். இவர் மணல் லிங்க வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை.
 
புனுகுச்சட்டம் என்ற வாசனைப் பொருள் இவர் மீது பூசப்படுகிறது. இந்த புனுகுச்சட்டம் இக்கோயில் அலுவலகத்தில் விலைக்குக் கிடைக்கும். இதை விலைக்கு வாங்கும் பக்தர்களின் முன்னிலையில் வளர்பிறை பிரதோஷம் அன்று இந்த புனுகுச்சட்டம்  இந்த இறைவன் மீது பூசப்படுகிறது.
 
இதன் மூலம் சரும வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் இந்த இறைவன் மீது சந்திரன் ஒளிபடுகிறது. இக்கோயிலின் தலமரமான முல்லைக்கொடி படர்ந்த அடையாளம் இந்த இறைவன் மீது காணப்படுகிறது.
 
கோவிலின் அமைப்பு:
 
கர்ப்பரட்சாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு கருக்காத்த நாயகி என்ற பெயரும் உள்ளது. குழந்தை பாக்கியம் அளிப்பதற்கும், கரு கலையாமல் இருப்பதற்கும் இவரே காரணமாக இருக்கிறார்.
 
இக்கோயிலின் தல விநாயகருக்கு கற்பக விநாயகர் என்று பெயர்.  இறைவன் சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையில் சோமஸ்கந்தர் வடிவில் ஆறுமுகர் சன்னதி அமைந்துள்ளது.இக்கோயிலில் உள்ள நந்தி தாமே தோன்றியவர்.
 
பாற்குளம்:
 
இக்கோயிலின் முன்புறம் உள்ள திருத்தலத்திற்கு பாற்குளம் என்று பெயர். தெய்வீக பசுவாகிய காமதேனுவின் காலால் இக்குளம் உருவாக்கப்பட்டது.  
 
கோயில்  நடை திறந்திருக்கும் நேரம்:
 
காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில்,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில்.
 
கோயில் முகவரி:
 
செயல் அலுவலர் (executive officer),
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்,
திருக்கருகாவூர்  – 614 302.
பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி எண் -  04374 – 273423
 
குழந்தை பாக்கியத்தை அளிக்கும் கர்ப்பரட்சாம்பிகை வழிபடும் முறைகள்:
 
யாருக்கு இதுவரையில் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லையோ அல்லது யாருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறதோ அந்த பெண் தன்னுடைய கணவருடன் இக்கோயிலுக்கு ஒரு “வியாழக்கிழமையன்று” வரவேண்டும். இக்கோயிலில் அலுவலகத்தில் உரிய பணம் செலுத்தி, கீழ்கண்ட பொருட்களை வாங்கவேண்டும்.
 
11 நெய் விளக்குகள்(அகல் விளக்கு),
சுத்தமான பசு நெய் உள்ள பாட்டில் – 2,
குழந்தை பாக்கிய அர்ச்சனை டிக்கெட்,
 
இக்கோயிலுக்கு வெளியே விற்கப்படும் தேங்காய், பழம், பூ உள்ள அர்ச்சனை தட்டு ஒன்றையும் விலைக்கு வாங்கவேண்டும். இந்த 11 நெய் விளக்குகளில் ஒன்றை கற்பக விநாயகர் சன்னதியிலும், ஒன்றை முல்லைநாதர் சன்னதியிலும், மற்ற விளக்குகளை கர்ப்பரட்சாம்பிகை சன்னதியிலும் கிழக்கு நோக்கி ஏற்றவேண்டும்.
 
மேற்கண்டவற்றை தம்பதிகள் இருவரும் இறைவி கர்ப்பரட்சாம்பிகை சன்னதிக்கு எடுத்துச் செல்லவேண்டும். இவ்வாறு 11 நெய் விளக்குகளை மேற்கண்ட முறையில் மூன்று சன்னதிகளிலும் ஏற்றுவதால் வம்ச தோஷம் நீங்கும்.
 
பிறகு கர்ப்பரட்சாம்பிகை சன்னதியில் உள்ள அர்ச்சகரிடம் பசு நெய் பாட்டில் – 2, அர்ச்சனை டிக்கட், அர்ச்சனை தட்டு ஆகியவற்றை கொடுத்து தம்பதிகள் இருவரும் தங்கள் பெயர், பிறந்த நட்சத்திரம் முதலியவற்றை அந்த அர்ச்சகர்களிடம் சொல்லவேண்டும். அந்த பசு நெய்யை இறைவி கர்ப்பரட்சாம்பிகையின் பாதத்தில் வைத்து அர்ச்சகர் அர்ச்சனை செய்வார்.
 
அர்ச்சனை செய்யப்பட்ட அந்த பசு நெய்யை அந்த தம்பதிகள் வீட்டுக்கு எடுத்து வந்து அத்துடன் சுத்தமான பசு நெய்யை கலந்து தம்பதிகள் இருவரும் இரவில் மட்டும் 48 நாட்களுக்கு சாப்பிடவேண்டும். வீட்டு தூரம் உள்ள அந்த நாட்களில் இந்த நெய்யை அந்த தம்பதிகள் சாப்பிடக்கூடாது. இந்த பரிகாரம் மூலமாக இந்த தம்பதிகளுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
 
ஒரு  வேலை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்தால், அன்று மேற்கண்டவாறு இக்கோயிலில் பரிகாரம் செய்வதுடன், இனி வர இருக்கும் ஒரு வியாழக்கிழமையில் கர்ப்பரட்சாம்பிகயின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதற்குரிய தொகையை இக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி, தங்கள் வீட்டு முகவரியை தெரிவித்தால் இக்கோயில் நிர்வாகத்தினர், வர இருக்கும் வியாழக்கிழமையில் கர்ப்பரட்சாம்பிகையின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, பணம் செலுத்தியவரின் வீட்டு முகவரிக்கு குன்னுமம் மற்றும் விபூதி பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள்.
 
ஒரு வேளை அந்த தம்பதிகளுக்கு ஜாதகப்படி சயன தோஷம் இருந்தால்  ஒரு வியாழக்கிழமையில் திருக்கருகாவூரில் பரிகாரம் செய்வதுடன், ஒரு வெள்ளிக்கிழமையில் அந்த தம்பதிகள் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கத்திற்கு சென்று, அங்குள்ள ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீரங்கநாதர், ரங்கநாச்சியார், மகான் ராமானுஜர் சன்னதிகளில் மூலஸ்தானத்தில் எரியும் விளக்கில் அங்குள்ள அர்ச்சகர் மூலம் அவர்கள் கொண்டு செல்லும் நெய்யை சேர்க்கலாம்.
 
120 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி. 1137 -ல் முக்தி பெற்று பல நூறு ஆண்டுகள் ஆகியும் மாகான் ராமானுஜரின் உடல் அழியாமல் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அதிசயத்தை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிர்பக்கத்தில் உள்ள மகான் ராமானுஜருடைய சன்னதியில் காணலாம்.
 
சுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம்:
 
கர்ப்பமாக இருக்கும் அந்த பெண் மேலே உள்ள முகவரிக்கு மணியார்டர் மூலம் ருபாய். 100/- அனுப்பி, அந்த மணியார்டர் படிவத்தின் கீழே காலியாக உள்ள பகுதியில் தன்னுடைய பெயர், பிறந்த நட்சத்திரம், வீட்டு முகவரி குறிப்பிட்டு, இறைவி கர்ப்பரட்சாம்பிகையின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்ட விளக்கெண்ணெய் பாட்டிலை தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு குறிப்பிடவேண்டும். 
 
கோயிலிருந்து தபால் மூலம் விளக்கெண்ணெய் பாட்டில் வந்தவுடன் அந்த பெண், கர்ப்பமான ஒன்பதாவது மாதம் முதல் பிரசவ வலி ஏற்படும் நாள் வரையில் தினமும் தன்னுடைய வயிற்றின் மீது லேசாக அந்த விளக்கெண்ணெய்யை பூசி வரவேண்டும். இதன் மூலம் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். மேலே உள்ள முகவரிக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்ப வேண்டும்.
 
பிரசவ நேரத்தில் செய்ய வேண்டியது:
 
கர்ப்பமான பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெறும் வரையிலும் வீட்டின் பூஜை அறையில் உள்ள விளக்கில் கிழக்கு நோக்கி நெய் தீபம் தொடர்ந்து எரிந்து வேண்டும். இவ்வாறு செய்தால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் அவர்கள் பிரசவ காலம் வரையில் தினமும் சுந்தரகாண்டத்தில் ஒரு அத்தியாயத்தை படித்தால் நல்லது.
 
போக்குவரத்து வசதி:
 
தஞ்சாவூரிலிருந்து திட்டை, மெலட்டூர் என்னும் ஊர்கள் வழியாக  திருக்கருகாவூர்  செல்ல பஸ் வசதிகள் உள்ளன. தஞ்சாவூரிலிருந்து 23 கி.மீ. தூரத்தில்  திருக்கருகாவூர்  உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்லலாம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.
 


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: