பகுதி (1)
சதுரகிரின் மகத்துவம் உங்களுக்கு தெரியாததல்ல.இணையத்தில் சதுரகிரி என்று நீங்கள் டைப் செய்தால் பல கோடி தகவல்கள் அங்கே கொட்டி கிடக்கும்.
என்றாலும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்பவர் சதுரகிரி பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கிருக்கும் அரிய மூலிகைகளை கண்டு கொள்வது எப்படி என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தன ஏடுகளில் அழுத்தி இருக்கிறார்.
நமது வலைப்பூவை வாசிக்கும் பக்தர்கள், மற்ற எல்லோரும் பயணம் மேற்கொள்ளும் சாதாரண வழியை மேற்கொள்ளாமல், கோரக்கர் சொல்லிய வழியில் பயணம் மேற்கொண்டால் பல அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும் அங்கே அமையும் என்பது எனது நம்பிக்கை. அந்த பேரொளியில் கலந்த சித்தர்களையும் காண முடியும் என்பதே இந்த வழியின் மகத்துவமே.
அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது , கோரக்கர் சொல்லிய வழியில் சென்று நாம் முயற்சித்து பார்க்கலாமே.
ஆதாரம் : தோழி யின் வளைபூவிலிருந்து
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.
காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.
கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும், தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப் பட்ட தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகி இருக்கிறது.
இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...
தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் “குதிரை குத்தி பாறை”யும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் “படிவெட்டி பாறை” என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும் என்கிறார்.
இந்த ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.
சித்தர்கள் கூறிய இந்த வழியினை ஆவணப் படுத்துவதன் மூலம் பல அரிய மூலிகைகளின் இருப்பிடத்தை கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.கோரக்கர் அருளிய இந்த பாதையில் மலையேறியவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து விவரங்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.
ஒரு புதிரை மெல்ல கட்டவிழ்ப்பதைப் போல எத்தனை துல்லியமான விவரனைகள், இன்றைக்கும் இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மலையேற முடியுமென்றே தோன்றுகிறது.
அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த கோரக்கர் அடுத்து நம்மை மச்சமுனியின் ஆசிரமத்திற்கு வழி கூறி அழைத்துச் செல்கிறார்,
No comments:
Post a Comment