சட்டத்தின்படி 8
சென்ற வாரம்
கதவை திறந்துக் கொண்டு நிறைமாத
கர்ப்பிணி ஒருவள் வெளியேவந்தாள். அப்போது ராசாத்தியைப் பார்த்து பானுவும்,
பானுவைப்பார்த்து ராசாத்தியும் திகைத்து நின்றார்கள்.
எதற்காக…..இந்த திகைப்பு?
வேலுவையும் அவன் குழந்தையையும் பேக்டரிக்கு வெளியே நிற்க வைத்துவிட்டு மேனேசரிடம் பனியன் பண்டலை நல்லமுறையில் சேர்த்ததை பெற்றுக்கொண்டவரின் கையப்பமுள்ள நகல்களை சமர்பித்துவிட்டு திரும்பிய பொழுது,
என்னப்பா இப்பத்தான் வந்தியா? சரி சரி ரொம்ப களைப்பாயிருப்ப.. போய் ரெஸ்ட் எடு.. என்றார் கம்பெனி முதலாளி திவாகரன்.
டீரைவர் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் திவாகரின் செல் அலறியது.
'மனேஜர் டிரைவர் மணி எங்கே?'
'சார் நீங்கத்தான் அவருக்கு லீவு கொடுத்து அனுப்பி வைச்சிட்டீங்க' என்றார் பவ்யமாக…
லாரி டிரைவரைப்பார்த்து 'நீ ரொம்ப டயர்டா இருக்கிறீயா? வண்டி ஓட்டுவியா?'
'முதலாளி எனக்கு தெரிந்த ஆள் ஒருத்தர் இருக்கிறார்.. அவரு கார் ஓட்டுவார்'
என்று ஆபீஜ் ருமின் ஜன்னல் வழியே வேலுவைக்காட்டினான்;.
'அவரைக் கூப்பிடுய்யா…'
'வேலு இங்க வாப்பா'…அழைத்தவன் லாரி டிரைவர்.
தன் குழந்தையுடன் முதலாளியின் அறைக்குள் பவ்யமாக வந்து நின்றான் வேலு.
'ஏப்பா கார் ஓட்டுவியா?'
'ஓட்டுவேன் முதலாளி ஆனால் லைசன்ஸ் இல்லை'
'ம்ம்ம…சரி அது பரவாயில்லை..இது யார் உன் குழந்தையா?'
'ஆமாங்க…'
'மேனேசர் நாங்க வர்ர வரைக்கும் குழந்தையை வாட்ச் மேனிடம் பார்த்துக்க சொல்லு.'
லாரி டிரைவரைப் பார்த்து 'சரிப்பா வேலைப் போட்டு கொடுத்துடலாம் நாளை காலை என்னை வந்து பார்.'
வேலு பின் சீட்டுக் கதவை திறந்து விட்டான் திவாகரன் அமர்ந்தபடி
'திருப்பூர்ல உனக்கு எல்லா இடமும் தெரியுமா?' ஏன்றார்.
'தெரியுமுங்க..'
'சரி ஹோட்டல் வேலனுக்கு போ…Buyer வெயிட் பண்ணீட்டு இருப்பார்.'
வேலுவினுடைய டிரைவிங்கில் இருந்த நிதானம், சாலை விதிமுறைகளை அனுசரித்தல், மொத்தத்தில் அனுபவமுள்ள ஓட்டுனரின் திறமை யிருந்ததை கண்டு மனதுக்குள்ளேயே பராட்டினார் திவாகரன்.
'உனக்கு பனியன் கம்பனியில் என்ன வேலை தெரியும்?'
'முதலாளி நான் ஏழு வயசிலிருந்தே பனியன் கம்பனிகளில் வேலை செய்யறேன.கை மடிக்கறதுலயிருந்து கட்டிங், டெய்லரிங், அயன், பரிண்டிங், டையிங்ன்னு எல்லா செக்சனிலும் வேலை செஞ்சிருக்கேன் '.
'உன் குடும்பம் எல்லாம் எங்கே யிருக்காங்க?''
இந்த கேள்வியை வேலு சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையைச்சொன்னால் வேலை கொடுப்பாரா? இல்லை ஒரு குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாத உனக்கு எத்தனை வேலை தெரிந்தாலும் ஒழுங்காக வேலை செய்ய முடியாது என்று எண்ணி வேலைக் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள்ளேயே நீண்டநேரம் யோசித்தான் வேலு.
அதற்குள் ஹோட்டலையடைந்தது கார்.
தன்னை சுதாரித்துக் கொண்ட வேலு காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டு பின்கதவை பவ்யமாக திறந்தான் திவாகரன் முன்னே செல்ல பின்னாலேயே ஓடிவந்தான் வேலு.
"முதலாளி சூட்கேஜ் மறந்துட்டீங்க".
திவாகரன் வேலுவை மேலும் கீழும் பார்த்தபடி சூட்கேஸை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்குள் சென்றான்.
உள்ளுர் ஏஜென்ட் Buyer யை அறிமுகப்படுத்தினார்.
Glad to meet you Mr Diwagaran என்றார் அந்த வெளிநாட்டு Buyer
Thank you very much Sir என்றபடி இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
"Mr. we want XXL size black and blue color T shirt with must be picture
of our President of America."
"Oh..Sure sir…I am bring this cloth material for show you as a sample and
Also this is our documents where we doing business with some other good
companies in America.. .Please see.."
"Good Diwakaran it is surprising. I am so happy to see this you are
having business connection with our Nation..this cloth is very nice…it may be
suitable for that T shirt. Ok…well…we need 1,50000 pieces next October…ok? Can
you do this?"
"Sure sir…no problem."
என்றபடி அவர்களது பிஸினஸ் பேச்சுவார்த்தைகள் இனிதாக முடிந்தது.'
இந்த சிறிய இடைவெளியில் காரை சுத்தமாக துடைத்து வைத்திருந்தான் வேலு.
முதலாளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி|ருந்தான்.
திவாகரன் பேச்சுவார்த்தையை முடித்தபடி மகிழ்ச்சியாக வெளியே வந்தான்…
.
வேலு கார் கதவை திறந்து விட, ஏறி அமர்ந்தான் திவாகரன்.
வேலு கார் கதவை திறந்து விட, ஏறி அமர்ந்தான் திவாகரன்.
'பேக்டரிக்கு போப்பா…ஆமா நான் குடும்பத்தைப் பற்றிக் கேட்டதற்கு ஒண்ணும் பதிலேக் காணோம்?' ஏன்று பழையதை ஞாபகப் படுத்தினர் திவாகரன்
'ஒரு முடிவுக்கு வந்தவனாக உண்மையை சொல்லுவோம்.. பொய்க்கும,; குடிக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைப்போம் என்ற முடிவுடன்
முதலாளி சின்ன வயசிலே அம்மா இறந்துட்டாங்க எனக்கு அம்மாங்கற பேர்ல வந்த ஒருத்தியால சரியான சாப்பாடு, படிப்பு. எதுவுமே கிடைக்காம போச்சு. ஏழு வயசிலிருந்தே உழைக்க ஆரம்பிச்சுட்டேன்.கூட்டாளிகளுடன் சேர்ந்து குடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.
சொல்றதுக்கு இருந்த அம்மாவும் அப்பாவும் போயிட்டாங்க ஆனால் சொந்தக் காரங்களாப் பார்த்து தூரத்து உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணி வைச்சாங்க..அவளை செய்யாத சித்ரவரையெல்லாம் செஞ்சேன். மூணு வருசமா அத்தணையையும் பொறுத்தவ…( சற்று நிறுத்தி;) போன மாசத்துல ஒருநாள் கோவிச்சுக்கிட்டு பையனைக் கூட்டிட்டு சென்னைக்கு போயிட்டா..அப்புறம் அதை கேள்விப்பட்டு நானும் சென்னைக்கு போயி அவளை தேடி தேடி அலைஞ்சேன்…கடைசியில அவளை பார்க்கவே முடியல…என் பையன் மட்டும்தான் கிடைச்சான்"..என்று தேம்பி தேம்பி அழுதபடி சொல்லி முடித்தான் வேலு.
கார் பேக்டரியை வந்தடைந்தது.
வேலு இறங்கி திவாகருக்காக காரின் பின்பக்க கதவை திறந்துவிட முயலுவதற்குள்,
ஏதோ பதற்றத்தில் இருப்பவனாக திவாகரே கதவை திறந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டு விறு விறு என்று ஆபீஸ் அறைக்குள் நுழைந்தான்.
வேலு தன்னை தவறாக முதலாளி நினைத்து விட்டாரோ என்று செய்வதறியாது நின்றான்.
அடிமேல் அடி என்பது இதுதானோ?
என்னதான் நடக்கும் என்பதை அறிய அடுத்தவாரம் வரை காத்திருங்களேன்.
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
9952827529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment