ஜன்னலைத் திற…….. சிறுகதை
கட்டிலில் தூங்கயபடி படுத்திருந்த வாசுகியைச் சுற்றி பல ஞானிகளும், சித்தர்களும், மகான்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆன்மீக புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. திடீரென்று எழுந்தாள் வாசுகி.
கட்டிலில் தூங்கயபடி படுத்திருந்த வாசுகியைச் சுற்றி பல ஞானிகளும், சித்தர்களும், மகான்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆன்மீக புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. திடீரென்று எழுந்தாள் வாசுகி.
வாஸ்பேசனில் முகம் கழுவிக் கொண்டு மென்மையான டர்க்கி டவலினால் முகத்திலிருந்த ஈரத்ததை துடைத்துக் கொண்டாள்.
வாசுகி ஒரு நடிகையைப் போல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பவள். கிட்டத்தட்ட வயது 25யை தாண்டாது. நல்ல சிவப்பு நிறம். காண்போரைக் கொள்ளைக் கொள்ளும் அழகிய உடலமைப்பு அவளுக்கு.
“அம்மா டீ” என டீ கொண்டு வந்தாள் வள்ளியம்மா..
வள்ளியம்மா அவள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி. நினைவு தெரிந்து 5 ஆண்டுகளாக வீட்டின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்ளும் பாசமுள்ள வேலைக்காரி.
வள்ளியம்மா முதலில் பேனைப் போடு…
பேன் ஓடத்துவங்கியது.
பேன் சுத்த சுத்த…வாசுகியின் கடந்த கால நிகழ்வுகள் அத்துணையும் மனதில் மையம் கொண்டு சுத்த தொடங்கின.
“வாசுகி நீ படிச்சவ..கை நிறையா நானும் நீயும் சம்பாதிக்கிறோம் நமக்குன்னு ரெண்டு குழந்தைகள். அவர்கள் தான் நமக்கு முக்கியம்” என்றார் கணவர் சம்பத்.
“அப்போ கடவுள் பக்தி, ஆன்மீகம் இவையெல்லாம் வாழ்க்கைக்கு முக்கியமில்லையா? ஒழுக்கத்தின் பிறப்பிடமே ஆன்மீகம்தான் உங்களுக்குத் தெரியாதா என்று சப்தமாகச் சொன்னாள்” வாசுகி.
“கடவுள் நம்பிக்கை தேவையில்லைன்னு நான் சொல்லல…அதுக்காகவேண்டி நிறைய படிக்கலாம். கட்டாயம் அந்த சாமியாரிடம் தான் போய் ஆன்மீகம் கத்துக்கணும் அப்படீன்னு அவசியமில்லை” என்றான் சம்பத்
“உங்களுக்கு என்ன தெரியும்? அந்த சாமியாருடைய மகிமை என்னான்னு.கண்களில் தெய்வீக ஒளி, முகத்தில் சாந்தம், கம்பீரமான குரலில் அவர் ஆற்றும் அற்புதமான ஆன்மீக உரை. உலகம் மொத்தமும் அவரை தரிசிக்க காத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என பெருமை பொங்க அந்த சாமியாரைப் பற்றி சொன்னாள் வாசுகி.
“தத்துவம் பேசறவனெல்லாம் தத்துவஞானியாக முடியாது. ஒழுக்கத்தைப் பற்றி ஓயாமல் பேசறவனெல்லாம் ஒழுக்க சீலனாக இருக்கவும் முடியாது. ஒழுக்கத்தை உலகுக்கே சொன்ன திருவள்ளுவர் எந்த மடத்தை வைத்து தன்னுடைய கருத்துக்களை பரப்பினார்? எந்த ஜால்ராக் கூட்டத்தை அவர் வைத்திருந்தார்? ஆனா அவருடைய கருத்துக்களை இந்த உலகம் ஏத்துக்கல?”என்று அமைதியாகச் சொன்னான் சம்பத்.
சற்று உரத்தக் குரலில் “ உங்களுக்கு பொறாமை எத்தனை பேர் அவர் பார்வை தன் பக்கம் திரும்பாதா? அவர் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கி தவம் கிடக்கிறாங்க? ஆனா லாட்டரி சீட்டில் கிடைச்ச அதிர்ஸ்டத்தை போன்று என்னை அவரு சிசியையா ஏத்துகிட்டாரு நான் செய்த பெரும் பாக்கியம்” என்றாள் வாசுகி.
“அப்போ நாங்க வேண்டாம் குடும்பம் வேண்டாம் இல்ல?”
“எனக்கு எல்லாமே சுவாமிஜீ தான்”.
‘இதுதான் உன் முடிவா”
“தீர்க்கமான முடிவு”
“அப்படியானால் நம் குடும்பம்….?”
“முதலில் சுவாமி பிறகுதான் குடும்பம்.”
மடத்திற்கு செல்ல புறப்பட்டவளை தடுத்துப்பார்த்தான் சம்பத்…ஆனால் கண்டுக்கொள்ளாமல் நடந்தாள் வாசுகி…
“நீ ஒருநாள் திரும்பி வருவே…”
“ஒருகாலுமில்லை மடிந்தாலும் அவர் காலடியில தான்”
இது நடந்தது ஆறு மாதத்திற்கு முன்.
திடீரென்று நினைவுக்கு வந்தவள…தலையை சிலுப்பிக் கொண்டாள்….பசுந்தோல் போத்திய புலியிடம் மாட்டிய மானாக, துடிதுடிக்க வக்ரமனம் கொண்ட வஞ்சகனிடம் எத்தனை முறை எத்தனை முறை என்று தலையில் அடித்து கொண்டாள்.
“வள்ளியம்மா கொஞ்சம் ஜன்னலை திறந்து வையி. ஒரே புளுக்கமா இருக்கு…பேனை போட்டாலும் சூடு குறைய மாட்டீங்கிது..”
சரிம்மா…
தெளிந்த நிலையில் பேப்பரை எடுத்து மளமளவென்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொண்டு “வள்ளியம்மா நான் கோர்ட் வரைக்கும் போயிட்டு வர்ரேன்”..
“அந்த போலிசாமியாரை சும்மா விடாதீங்கம்மா.. கட்டாயம் அவனுக்கு தண்டனையை வாங்கிக் கொடுத்துருங்க.”
வாசுகியின் நிலையில் இன்னும் எத்தனை பேர் ஆசிரமத்திலும் மடத்திலும்
…….
ஜன்னல் திறந்து விட்டது அசுத்தக் காற்று வெளியேறி விட்டது….
ஜன்னல் திறந்து விட்டது அசுத்தக் காற்று வெளியேறி விட்டது….
வாசக பெருமக்களே பூரண ஆயுசு நித்திய கண்டம் அப்படி யென்றால் என்ன……
இது எப்படி யிருக்கு??
எழுத்தாளர் திரு சுந்தரகனகு
மறக்காமல்
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
99 528 27 529 - நான் காத்திருப்பேன் .
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1 comment:
supera irukkuthu
Post a Comment