தவிச்ச வாய்க்கு..
வாங்க அண்ணா வாங்க… ஏங்க இங்கே யார் வந்திரக்காங்கன்னு வந்து பாருங்க என்றாள் பரிதியின் மனைவி.
வாங்க அண்ணா வாங்க… ஏங்க இங்கே யார் வந்திரக்காங்கன்னு வந்து பாருங்க என்றாள் பரிதியின் மனைவி.
ஓ வாங்க மாப்பிளே.. வாங்க
என்ன ஆடி காத்தடிச்சமாதிரி திடீரென்று? உக்காருங்க என்று சோபாவைக் காட்டினார் பரிதி.
ஏங்க ஒரு நிமிசம் உள்ள வாங்களேன்..
என்ன தெய்வம்? (தெய்வானையின் முழு பெயர்) என்றார் கணவர் பரிதி.
குடிக்க கொடுக்க தண்ணி இல்லை. தண்ணி கொண்டு வர்ற பையனும் வரல.
அதனாலென்ன? நான் போய் வாங்கிட்டு வர்றேன்.
மாப்பிளே பேசிட்டு இருங்க இப்ப வந்தர்றேன் என்றபடி கிளம்பினார் பரிதி.
என்னம்மா எப்படியிருக்கே பையன் என்ன பண்ணறான்?
தருண் Msc அக்ரி முடிச்சிட்டு கிராமத்துல இருக்கிற நெலத்திலே ஏதோ பயோ டெக், அப்புறம் இயற்கை சாகுபடி சொட்டு நீர் பாசனம,; இந்த முறையில விவசாயம் பண்ணீட்டு இருக்கான். அதோடு ஆடு மாடு கோழின்னு வளர்த்துக்கிட்டு இருக்கான் கவர் மெண்ட் வேலையே வேண்டான்னு சொல்லிட்டான் என்றாள் தெய்வானை.
கேக்கவே ரொம்ப சந்தோசமாக யிருக்குதும்மா! லட்சம் கொடுத்து வேலையிலே சேரதைவிட இது நல்ல முடிவும்மா என்றபடி..
குடும்ப உறவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்க்ள்.
கையில் ஒரு பாட்டில் தண்ணீருடன் வந்து குடிக்க கொடுத்தார் பரிதி.
என்ன மச்சான் இங்க குடிக்கக் கூட தண்ணீர் இல்லையா? வெளியில போய் வாங்கிட்டு வர்ரீங்க?
சற்று வெட்கத்துடன் 7 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருது அது இப்போ அரைமணி நேரம் வர்றது கால் மணி நேரம்தான் வருது. மாமுலா தண்ணீர் கொண்டு வர்ற பையனையும் காணோம். என்றான் பரிதி.
மூலிகை கலந்த தண்ணீர் ஆச்சே உங்க ஊர் தண்ணீர்.!
ம்க்கூம்…அதுக்கு ஆபத்து வர்ற மாதிரியாயிடுச்சே மாப்பிளே..!
என்ன சொல்லறீங்க மச்சான்?
கேரள அரசு அட்டபாடியில் அணைக்கட்டறாங்களாம் அப்புறம் எங்களது சிறுவானிக்கு ஏது மாப்பிளே தண்ணிர்? என்று வேதனையுடன் சொன்னார் பரிதி.
என்ன அநியாயம் இது? முல்லை பெரியார் அணை விவகாரத்துல நம்ம ஆம்பிளை பொம்பளைங்கள ஈவு இரக்கமில்லாம வெளியேத்துனாங்க. உங்க கோயமுத்தூருலேயும் சரி Thirupur லேயும் சரி எத்தனை மலையாளிகள் வேலை கொடுத்து காப்பாத்திக்கிட்டு இருக்கோம்? திருப்பூர்ல முக்கால் வாசி கடைகளையும் நடத்துறவங்க மலையாளத்துக்காரங்கத்தான். நம்ம ஊர்ல இருக்கிற எல்லா காலேஜ்லேயும் அவுங்க புள்ளைகளை கொண்டு வந்து படிக்க வைக்கிறாங்க. நீலகிரியிலிருந்து சென்னை வரை எத்தனை மலையாளிகள் கடை கண்ணி வைச்சு சுகமா வாழறாங்க? நாம எவ்ளோ கண்ணியமா நடந்துக்குறோம் என்றார் மைத்துனர்.
அது மட்டுமில்ல.. மாப்பிளே அங்க ஓரங்கட்டப்பட்ட நடிகைகளைம் பெரிய அளவில் கொண்டு வந்ததும் நம்ம ஆளுங்கத்தான்.ஆனால் ரொம்பவும்தான் சண்டித்தனம் செய்யறாங்க என்றார் பரிதி.
அதுசரி மாப்பிளே விவசாயம் எல்லாம் எப்படி போயிட்டுயிருக்குது?
அந்த வேதனையை எப்படி சொல்லறது? நாங்க காவேரிதான் நம்பியிருக்கோம். கர்நாடககாரனுக்கு கல் மனசு… கரையல.
உச்ச நீதி மன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் அவங்க மதிக்கறதா தெரியல..பச்சபுள்ள கணக்கா பயிறு வாடுது..ஆனா ஒண்ணு..மச்சான்..வளர்ற பயிரை தண்ணியில்லாம காய வைச்சு கொல்றதும், பச்ச குழந்தையை கழுத்தை நெறிச்சு கொல்லுறதும் சமம்.அந்த பாவம் சும்மா விடாது .
கபினி அணையைக் கட்;டியது நம்ம சோழ மன்னர்தான். நம்ம மண்ணு காயக் கூடாதுன்னு உலகத்துக்கே சோறு போடணும் ன்னு நினைச்சு அணையை கட்டினாரு..இப்போ கர்நாடகக் காரன்கிட்ட அய்யா சாமின்னு கையேந்தற நிலமையாயிடுச்சு…
ஆனால் ஒண்ணு மாப்பிளே..இந்த சண்டித்தனத்துக்கும் அடாவடி அக்கிரமத்துக்கும் ஒரே முடிவு நதி நீர் பங்கீடு ஒன்றுதான். ம்ம்…
அம்மா தண்ணி கொண்டு வந்திருக்கேன்…
உள்ளே கொண்டு வாப்பா நீ மகராசனா இருப்பே…
ஏங்க ரெண்டு பேரும் சாப்பிட வர்ரீங்களா….சாப்பாடு ரெடியாயிடுச்சு… இது தெய்வானை.
சாப்பிட்டுக் கொண்டே சரி மாப்பிளே..அனுசா என்ன பண்றா படிப்பு முடிஞ்சுருச்சுல்ல?
அதெல்லாம் Bsc அக்ரி முடிச்சுட்டு Msc பண்றேன்னு விடாப்பிடியா ஒத்தக் கால்ல நிக்குறா..
அண்ணே மோர் ஊத்திக்கோங்க…உப்பு போட்டுக்கோங்க.. என்றபடியே உப்பை ஒரு சிட்டிகை எடுத்து இலையில் வைத்தாள் தெய்வானை.
அண்ணா சுத்தி வளைச்சு பேச விரும்பல. ஒரு நாள் நல்ல நாள் பாத்து வர்றோம். என்று கணவனைப் பார்த்தாள். நீ எடுத்த எந்த முடிவுக்கு நான் குறுக்கே நின்னு இருக்கேன் தெய்;வானை? என்றார் கணவர்.
வந்த வேளை சுபமாக முடிந்ததை எண்ணி சந்தோசப்பட்டார் அந்த மைத்துனர்.
தருண் - அனுசா திருமணம் நடக்க இனிய வாசகர் சார்பாக வாழ்த்துக்கள்.
தவிச்ச வாய்க்கு தண்ணிர் என்ன, விருந்தே கிடைக்கும்.
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
9952827529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment