சட்டத்தின் படி (21)
என்னதான் பெருங்காயம் போட்ட பானையை கடல் நீரில் டெட்டால் போட்டு கழுவினாலும் அந்த பெருங்காயம் மணம் போகாது என்று சொல்லுவார்களே…அதைப்போல் தான் திவாகரனின் கண்டிப்பு வேலுவின் படிப்பை மட்டுமே சீர் செய்ய முடிந்ததே தவிர அவனது ஒழுக்கத்தை சரி செய்ய முடியவில்லை.
இப்போது திவாகரன் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியை நிறுத்தியதன் விளைவு அவருடைய கம்பெனியில் வேலை செய்து, அதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தான்.
அதுவும் திவாகரனுடைய மகன் மேற்பார்வையில் உள்ள கம்பெனியில் அரவிந்த் வேலை செய்தான்.
திவாகரனின் மகன் பிறந்த ஒரு வருடத்தில் அவன் மனைவி காலமாகிவிட்டாள். அதன் பிறகு தன் கம்பெனியை அமெரிக்காவில் ஆரம்பித்த நேரத்தில் அவன் மகனும் அமெரிக்காவில் குடியேறிவிட்டான். நல்ல பண்பாட்டை கட்டிக்காக்கும் தனயனாக, திவாகரனின் பிள்ளை வளர்ந்தான்.
தன் மகனைப் போலத்தான் வேலுவின் மகனையும் உருவாக்க நினைத்தார். ஆனால் அது முடியவில்லை.
எப்படியோ இருக்கட்டும் எப்படியோ நடக்கட்டும் என்றிருக்க திவாகரனுக்கு மனமில்லை. தப்படியை திருத்தாமல் தள்ளி வைக்க மனமுமில்லாமல் இவர் மனதில் ஒரு உறுதி எடுத்தார்.
அரவிந்தனுடைய அறையில் நுழைந்த திவாகரன் தற்செயலாக பார்வையை மேஜை மீதுள்ள கடிதத்தை பார்த்தார். காலடி சப்தம் கேட்டு அவசரமாக ஒடி வந்த அரவிந்த கடிதத்தை எடுக்க முயற்சிக்கையில்
“என்ன முக்கியமானதா,? இல்லை ரகசியம் நிறைந்ததா,? ஆனால் நிச்சயமா பாட சம்பந்தப்பட்டதோ வாழ்க்கைக்கு தேவையான விசயமோ இருக்காது…ம்?”
அரவிந்த திருட்டு முழி விழிக்க ..
“கொண்டா நான் படிக்கக் கூடாதுன்ன வேண்டாம்..என்னன்னு மட்டும் தெரிஞ்சுக்கலாமா, ?”
நெஞ்சு படபடக்க முத்து முத்தாய் வியர்க்க அரவிந்த்…
“என்னப்பா படிக்கவா?”
அரவிந்த் தன்னையும் அறியாமல் தலையை அசைத்தான்.
அழகான ஆங்கிலத்தில் தவறான கவிதை…பெண்ணை வர்ணித்து எழுதியிருந்தான் அரவிந்த்.
“இன்னும் ஒரு வருசத்தில உன் படிப்பு முடிஞ்சுடும். அதுவரைக்கும் இதெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வை. உங்கப்பாக்கிட்ட கொஞ்சம் பேசணும். லைன் போட்டுக் கொடு.”
அரவிந்த் வெலவெலத்து போனான்.
“ம்…சீக்கிரம்.” என அவசரப்படுத்தினான் திவாகரன்.
தொடரும்
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment