சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி (24)

மெல்ல மெல்ல தேறிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கும் மாமாவின் முன்னேற்றத்தில், தமயந்தியின் பங்கும் இருந்தது. ஓய்வில்லாமல் உழைத்து, மருந்து மாத்திரை மற்றும் உணவுக்கும் இல்லையென்ற நிலை யில்லாமல் உழைத்த ராசாத்தியையும் தமயந்தியையும்; நினைத்து முத்து ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் கவலையும் பட்ட முத்துவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

இதை கவனித்த தமயந்தி “மாமா என்ன ஆச்சு ஏன் அழறீங்க?”

“அண்ணா என்ன இது இப்பத்தான் உடம்பு தேறி வருகிறது. எதுக்கு அழணும்? தமயந்தியும் ராசாத்தியும் மாறி மாறி கேள்விக் கேட்டார்கள்.

முத்து அமைதியாக “அழவில்லையம்மா..அனாதையாக நிற்க வேண்டிய எனக்கும் என் மகனுக்கும் வேண்டி எவ்வளவு கஸ்டப்படுகிறீர்கள். தமயந்தி படிப்பு போச்சு ராசாத்தி எப்படி இளைச்சுப் போயிட்டா?”

“மாமா என் படிப்பு ஒண்ணும் கெட்டு போகல. டைப்ரைட்டிங் சார்ட் ஹேண்ட் ரைட்டிங் இப்படி எல்லா கிளாஸ_ம் போயிட்டுத்தான் இருக்கேன். அது மட்டுமில்லாமல் கரஸல டிகிரியை கண்டினிu பண்ணீட்டுத்தான் இருக்கேன். ஏன் நீங்க கவலைப்;படறீங்க.”?

“அண்ணா நீங்க மட்டும் அன்னைக்கு என்னை காப்பாத்தியிருக்கலேனா கருவோடு கடலிலே செத்துப் போயிருப்போம். எங்களை காப்பாற்ற நீங்கள் பட்ட கஸடத்தை விடவா..?” என்றாள் ராசாத்தி.
“அது …அது” என்று முத்து முடிப்பதற்குள்…

“இது..இது இதுவும் எங்கள் கடமைதான் மாமா” என்று தமயந்தி சொல்ல, முத்து தன்னையும் அறியாமல் சிரித்தான்.

முத்துவின் மகன் பார்ட் டைம் வேலை செய்து தன் செலவை சரி செய்துக் கொண்டான்.அதே சமயம் அகடாமியிலும் சேர்ந்து அதிகம் கவனம் செய்து படித்ததன் விளைவாக..இன்று IPS யாக தேர்வாகியிருக்கிறான்.

இந்த மகிழ்ச்சியை தந்தை முத்து, அத்தை ராசாத்தி, தங்கை தமயந்தி ஆகியோருடன்,பகிர்ந்து கொண்டிருந்தான்.

தியாகு அத்தையின் காலில் விழ, தடுத்த ராசாத்தி “முதலில் அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குப்பா” என்றாள்.

“இல்ல ராசாத்தி உன் ஆசீர்வாதமும் உன் வளர்ப்பும்தான் தியாகுவை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. உன் காலில் விழட்டும்.”

“அடடே என்ன இது? அப்பா காலில் விழு, அவரு அத்தை காலில் விழுன்னுட்டு. நான் ஒருத்தி இங்கே குத்துக் கல்லாட்டம் இருக்கேன் ஏன் என் காலில்  விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டியதுதான,?”

தியாகு தமயந்தியை அடிக்க ஒட, வீடே கலகலப்பானது,

“அத்தே நான் ஐ ஏ எஸ் ஆகனும்தான் நினைச்சேன். ஆனால் ஐ பி எஸ் ஆகத்தான் முடிஞ்சது. அப்பா, தமயந்தி உங்களுக்கெல்லாம் இதுல ஏதாவது வருத்தம் இருக்கா?”

உடனே தமயந்தி “தியாகு அப்துல்கலாம் கூட ஏரொனேட்டிக்கல் படிச்சிட்டு வேலைக்கு போகணும்தான் ஆசைப்பட்டார். ஆனால் சயின்டிஸ்ட் ஆகததான் முடிஞ்சது. அதுதானே அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்தது. எந்த தொழிலையும் விரும்பி செய்தால் முன்னேற்றம் தானே வரும் என்பதற்கு அவரே சாட்சி;.”

ஆர்டர் வந்தது. தியாகு பயிற்சிக்கு சென்றுவிட்டான்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு.,

தமயந்தி ஒரு கடிதத்துடன் வந்து முத்துவிடமும் ராசாத்தியிடமும் காண்பித்து ஒரு நிபத்தனையைப் போட்டாள்.

“மாமா அம்மா நீங்க ரெண்டு பேரும் இந்த கடிதத்தில் வந்த செய்தியை செனான்னா எவ்வித மறுப்புமில்லாமல் தடை சொல்லாமல் என்னை வாழ்த்தணும். அப்படின்னா இதைப் படிக்கிறேன்.”

“என்னடீ புதிர் போடற, ? விசயத்தை சொல்லுடி வயித்தில நெருப்பைக் கொட்டாத..”

“ராசாத்தி என் மருமக சொக்கதங்கமாச்சே. எல்லாமே நல்ல விசயமாத்தான் இருக்கும். மறுப்பே சொல்ல மாட்டோம் விசயத்திற்கு வாம்மா..”

“மாமான்னா மாமாதான். திருப்ப+ர்ல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில நேர்முக உதவியாளர் தேவைன்னு விளம்பரம் வந்திருந்து நான் அப்ளிகேசன் போட்டேனே.? அதுக்கு நேர்முகத்தேர்வுக்கு என்னை கூப்பிட்டு இருக்காங்க. நல்ல சம்பளம், வேலை கிடைச்சா நாமெல்லாம் அங்கேயே போயிடலாம். தியாகுக்கு நான் போன்ல சொல்லிட்டேன். முதல்ல வேணாம்னான். நிலைமையை புரிஞ்சுட்டு சரின்னு சொல்லிட்டான்.”

“என்னடி திருப்புரா,?” திகைத்தாள் ராசாத்தி.

“டிரைனிங் முடிஞ்சவுடன் தியாகு சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்புறம் என்னம்மா? இல்லை மாமா? அம்மாவுக்கும் முதல்மாதிரி உடம்பு இப்போ யில்ல. வேலைக் கிடைத்து நான் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னால் அம்மா வேலைக்கு போக வேண்டாம். தியாகுக்கு டிரைனிங் முடிந்து போஸ்டிங் போடும்வரை நான் வேலைக்கு போறது தான் சரின்னுபடுது,”

சற்று நேரம் நிதானமாக யோசித்த முத்து “இண்டர்வியு தானே..இன்டர்வியுல்ல கட்டாயம் உனக்கு வேலை கிடைக்கும்…இருந்தாலும்…”..

“மாமா தயவுசெய்து என்னை தடுக்காதீங்க. உங்க மருமகள் எப்போது தடம்புரள மாட்டாள். இது சத்தியம் மாமா.

“என்னம்மா பெரிய வார்த்தை… சரியம்மா உன் இஸ்டம்” என்று முத்துவும் ராசாத்தியும் விருப்பம் இல்லாமல் சொன்னார்கள்.

“ஏண்டி நான் உன் கூட வரட்டா?:” என்றாள் தாய் ராசாத்தி.

“அப்போ மாமவை யார் பாத்துக்கிறது. நான் சின்ன குழந்தையா? கவலைப்படாதேம்மா”….என்றபடி  திருப்புர்க்கு பயணமானாள் தமயந்தி.

விறுவிறுப்புத்  தொடரும் .....
 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: