சுட சுட செய்திகள்

Tuesday, March 19, 2013

சட்டத்தின் படி (23)

 கல்லூரியில் பிரின்ஸ்பால் தியாகுவிடம்….
“தியாகு காம்பஸில் பெரிய நிர்வாகம் உன்னை தேர்ந்தெடுத்ததில் எனககு சந்தோசம் தான். இருந்தாலும் உன் அறிவுக்கு IAS, IPS ன்றவற்றில் முயற்சி செய்தால் நிச்சயம் உன்னால் முடியும் என்ற எண்ணம் உண்டு படிப்பு விளையாடடு ஒழுக்கம் அத்தனையும் உன்னிடம்…”….

May I Come in Sir என்று குரலைக் கேட்ட பிரின்ஸ்பால் “வா தமயந்தி உங்க குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்.. இருந்தாலும் தியாகுவின் எதிர்காலம் IAS ஆக யிருந்தாலும்,”…

முடிப்பதற்குள் தமயந்தி “சார் என்னுடைய விருப்பமும்  அதுதான்”;

“வெரி குட் அக்டமெயில் சேர நான் ஏற்பாடு செய்கிறேன். லைப்ரரியில் வேண்டிய புக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். all the best.

தியாகு குழப்பத்துடனும், தமயந்தி மகிழ்ச்சியுடனும் வெளியே வந்தார்கள்.

இந்த நல்ல செய்தியை சொல்ல தியாகுவும், தமயந்தியும், பரின்ஸ்பால் அனுமதியுடன் முத்துவையும் ராசாத்திiயையும் பார்க்க ஊருக்கு வந்தார்கள்.
முத்துவின் வீட்டு கதவை தியாகு “அத்தே அத்தே” என்று தட்டினான்.

ராசாத்தி ஓடி வந்து கதவை திறந்து துக்கத்தை மறைத்துக் கொண்டு “வா தியாகு வாம்மா என்ன ஆஸ்டல்ல லீவா’? என்றபடி உள்ளே சென்றாள்.
அம்மா மாமா எங்கம்மா,?

ராசாத்தி மௌனமாகயிருந்தாள்.

“அத்தே அப்பா வேலைக்கு போயிட்டு இன்னும் வரலியா,?”

இந்த சப்தத்தைக் கேட்டு முத்து லேசாக இருமினார்

தமயந்தியும் தியாகுவும் உள்ளே சென்றார்கள்.

முத்துவின் நிலையைக் கண்ட இருவரும் கதிகலங்கி “என்ன மாமா ஆச்சு, அம்மா மாமாவுக்கு எப்படியம்மா இப்படியாச்சு..? சொல்லுங்கம்மா?”

“அப்பா என்னப்பா இது?”எப்படியப்பா ஆச்சு” என்று அழுதபடி கேட்டான் தியாகு.
“அம்மா மாமாவுக்கு இவ்வளவு ஆயிருக்கு. ஏம்மா எங்களுக்கு தெரியப்படுத்தல, ?”

“தமயந்தி உங்க அம்மா மேல குத்தமில்ல. நான் தான். உங்களுக்கு தெரிய வேண்டாம் படிப்பு கெட்டுடும்ன்னு சொல்லிட்டேன். இதொன்னும் பெரிய முறிவெல்லாம் இல்ல. ஒரு மாசத்தில் சரியாகிடும். அப்புறம் நடக்கலாம். நீங்க கவலைப் படாம படிக்க மட்டும் செய்யுங்க.”

“எப்படிப்பா முடியும். இந்த நிலைமையில் உங்கள விட்டுட்டு’? என்றான் தியாகு.

“ஆமா மாமா இனி நான் காலேஜ் போறதில்லை”.

“என்னம்மா சொல்லறே?”.

“சொல்லறதுக்கு ஒண்ணுமில்ல. மாமா. அம்மா நீ வீட்டு வேலைக்குப் போ. நான் பக்கத்திலே யிருந்து மாமாவை பாhத்துக்கிறேன்.”
“தமயந்தி உனக்கொன்ன பைத்தியமா, நான் கேம்பஸ்லே செலக்ட் ஆயிருக்கேன். நான் வேலைக்குப் போய் குடும்பத்தை நான் பாத்துக்கிறேன.; நீ காலேஜ் போ அத்தே நீங்க வேலைக்கு போக வேண்டாம்.’

உரிமையுடன் தமயந்தி தியாகுவைப்பார்த்து, “தியாகு தன் பிரின்ஸ்பால் சொன்னதை மறந்திட்டாயா? ஆகடாமி கோச்சிங்க்கு போ. கலெக்டர் கனவை மறந்துடாதே…நான் சார்ட் ஹேண்ட், கம்பியுட்டர்ன்னு ஏதாவது ஒரு கோர்ஸ் ஒரு மணி நேரம் போய் படிக்கிறேன். வேணுமின்னா கரஸ்ல டிகிரி முடிக்கிறேன். இதிலே எந்த மாற்றமுமில்லை. இந்த முடிவே மாற்ற நீங்க எல்லாம் நினைச்சாலும் முடியவே முடியாது. என்று சொல்லி முடித்த தமயந்தியைப் பார்த்து விக்கித்து நின்றனர் மூவரும்.

விறுவிறுப்புத்  தொடரும் .....

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: