எனக்குத் தெரிந்த என் நண்பரின் மகன் படு சுட்டி, அவன் அப்பாவை விட அவனுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். school க்கு ஆட்டோவில் போகும் போது இப்போதே புட்போர்ட் அடிப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
“யப்பா உள்ளே போய் ஒட்காருப்பா, விழுந்துரப்போற..’ என்று நண்பர் சொன்னால், “நீ முதல்ல உள்ளே போப்பா..எதுதாப்ல வண்டியில வர்றவன் இடிச்சுட்டு போய்ற போறான்.” என்று சொல்லக் கூடிய வாய் துடுக்கு.
தன் உடை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கின்ற கம்பீர எண்ணம்.
ளஉhழழட விட்டு வந்தவுடன், தன் ஷ வை, புத்தகப்பையை,சரியான இடத்தில் வைக்கும் ஒழுங்கு. இப்படி எத்தனையோ விஷயங்களில் அவன் என் மனதில் ஆக்ரமித்திருக்கிறான்.
வெட்கம், தாழ்வு மனப்பான்மை, பயம், இவை போன்ற எதிர்மறை பழக்கங்களை அவனிடம் பார்க்கவே முடியாது.
சின்ன வயசுதான். ஆனால் அவனுக்குள் ஒரு விவரம் தெரிந்தவருக்குள் இருக்கும் அசாதாரமாண தன்னம்பிக்கை எப்படி வந்தது..? அவன் வளர்க்கப்பட்ட விதம்தான் காரணம்.
அவன் அம்மா, அவனுக்கு ஊட்டிய தைரிய பண்புகள்தான் காரணம்.
குழந்தைகள் செய்யக்கூடாது என்று நாம் நினைக்கும் வேலையைக்கூட, “உனக்கு எது தேவையோ, அதை நீயேதான் செய்துக் கொள்ள வேண்டும்” என்று அவனை உறுதியுள்ளவனாய் மாற்றியிருக்கிறார்.
தன் சட்டையில் பட்டன் பிய்ந்து இருந்தால் கூட, அதை அவன்தான் தைத்துக் கொள்ள வேண்டு;ம். “ஐய்யோ..ஊசி குத்திடுச்சுனா..?” என்று நீங்கள் நினைப்பது போல் அவன் அம்மா நினைப்பதில்லை.
வாகன நெரிசல் இருக்கிற, சாலைகளை கடந்து போய், பொருட்களை வாங்கிவர அவனை அனுமதித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க, தைரியம் என்கிற உற்சாக மருந்தைத்தான், அவனுக்கு அந்த தாயும் சரி, குடும்பத்திலுள்;ளவர்களும் கொடுத்திருக்கிறார்கள்.
அதனுடைய reaction தான், அந்த குழந்தையின் தன்னம்பிக்கை.
smartboy என்று நாம் சொல்வோமே.! அதன் மொத்த உருவம் அந்த குழந்தைதான்.
தனக்கிருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவன் ஒரு போதும் தயங்கியதில்லை.பாடச் சொன்னால், பல பேர் கூடியிருக்கிற இடமானாலும் பாடுவான், ஆடுவான்.
ஆனால் தனக்கு இதெல்லாம் தெரியும் என்று தன்முனைப்பு அல்லது முந்திரிக் கொட்டை மாதிரி அலட்டிக்கொள்ள மாட்டான்.இது எதைக் காட்டுகிறது தெரியுமா? அவனுக்குள் எந்தவித தாழ்வு மனப்பான்மையோ, வெட்கமோ, பயமோ, கொஞ்சம் கூட அவனிடத்தில் தலைதூக்கவில்லை என்பதுதான். ஆம் நண்பர்களே…தைரியம்தான் தன்னம்பிக்கையின் ஆணி வேர். இது ஆழமாக வேறூன்றி விட்டால், எந்த எதிர்மறை சிந்தனைகளும், உள்ளுக்குள் ஊடுருவாது.
நம்மில் எத்தனைபேர், அப்படி குழந்தைகளை வளர்க்கிறோம்..? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பாட்டி பேய் கதையாய் சொல்லி பயமுறுத்துவாள். தாத்தா மீசையைக் காட்டி காட்டியே பயமுறுத்துவார். அப்பா நேரடியாகவே மிரட்டுவார். அம்மா பூச்சாண்டியை நினைவுபடுத்தாமல் சோறூட்ட மாட்டாள். போதாக்குறைக்கு பள்ளிகளும் நம் குழந்தைகளை அநியாயத்திற்கு பயமுறுத்துகின்றன. படிக்கின்ற ஆர்வத்தை நம் குழந்தைகளிடம் குறைத்ததே இந்த பயமுறுத்தல்தான்.
நன்றாக யோசித்துப் பாருங்கள்.
பள்ளிக்கு போக மறுக்கும் குழந்தையை, அப்பா மாட்டை விரட்டுவதுபோல் ஒரு மரத்திலிருந்து குச்சியை உடைத்து, போறியா? இல்லையா? என்று மிரட்டி மிரட்டியே வகுப்பறை வரை விரட்டி செல்வார். அதோடு அந்த மிரட்டலும், பயமுறுத்தலும் நின்று விடாது. “நீங்க விடுங்க சார்..இனி நான் பாத்துக்கிறேன்..” என்று தன் பங்குக்கு அந்த வகுப்பு வாத்தியாரும் சேர்ந்துக் கொள்ளுவார்.
தினமும் இதே வேளையாக இருந்தால் அந்த குழந்தைக்கு பள்ளி செல்லும் ஆர்வம் எப்படி வரும்.? தன்னம்பிக்கை எப்படி வளரும்.?
நண்பர்களே..நம் குழந்தைகளின் ஒவ்வொரு பண்பிற்கும் நாமும், நம் குடும்பத்தாரும் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம். நம் குழந்தையின் ஒவ்வொரு பார்வையும் நம்மீது மட்டும்தான் அதிகமாக பதிகிறது. நாம் எதை சொல்கிறோமோ..அதையே திருப்பி சொல்கிறது. கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடும் போது கூட, தன் பெற்றோர் எப்படி சண்டை போடுவார்களோ அதை போலவே திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்படியானால் அந்த குழந்தைளின் மனதில் உருவாகும் அனைத்து எண்ணங்களுக்கும் நாம்தான் மிக முக்கிய களமாக இருக்கிறோம். நாம் சொல்லிக் கொடுக்கும் விசயங்களைத்தான் அவர்கள், வேத வாக்காக நினைக்கிறார்கள். பயமுறுத்தியே வளர்க்கும் குழந்தை, கோழையாகி, தாழ்வு மனப்பான்மை நிறைந்து, மற்றவர்கள் துணையில்லாமல் எந்த வேலையையும் செய்ய துணிவில்லாமல், கடைசியில் சோர்ந்து போகிறது. கூட்டத்தை பார்த்தால் சில குழந்தைகளுக்கு வெட்கம் வந்து, வாய் பேசக் கூட கூசி நிற்கும் பரிதாப ஊமை குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்கள் இப்படியே வளர்ந்தால் எதிர்கால போட்டிகள் நிறைந்த உலகத்தில் சாதிக்கப் போவதுதான் என்ன..?
ஆகவே நாம் நமக்கென வந்துவிட்ட விழுதுகளை, சரியான உரமிட்டு வளர்ப்பது நம் முக்கிய கடமை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தையெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தன்னம்பிக்கையின் முதல் எதிரியான பயத்தை கொன்றுபோட, சூட்சுமங்களை கற்றுக் கொடுங்கள்.
No comments:
Post a Comment