சென்ற நூற்றாண்டில் 1939 வரை வாழ்ந்த 'சிக்மண்ட் ஃப்ராய்டு' முதலில் அறிவித்த சித்தாந்தம் இது. நவீன உளவியலின் தந்தை அவர். ஆஸ்திரியாவில் வியன்னா நகரத்தில் பொது மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராகத்தான் தன் வாழ்க்கையைத் துவக்கினார்.
1883-ல் அவருடன் பணிபுரிந்த 'ப்ராயர்' என்ற சக டாக்டர், தன் பேஷண்ட்டான ஒரு பெண்மணி திடீர் திடீர் என்று வலிப்பு வந்து கை கால் விளங்காமல் போய் தாய்மொழியே மறந்து போனதுபற்றி ஃப்ராய்டிடம் சொன்னார். இந்தப் பெண்மணியின் கேஸ்தான் உலகத்தின் முதல் சைக்கோ அனாலிசிஸ் என்னும் உளவியல் பகுப்பாய்வு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவளை ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி விசாரித்த ஃப்ராய்டு, 'அந்தப் பெண்
தன் தந்தை நோய்வாய்ப் பட்டிருக்கும்போது சரியாக கவனிக்காததில் ஏற்பட்ட உள்மனக் குற்ற உணர்ச்சிதான் வெளியில் அந்த ஹிஸ்டீரியாவாக பரிணமித்தது' என்ற காரணம் சொன்னார்.
நாளடைவில் ஃப்ராய்டிடம் உளவியல் சிகிச்சை பெற பலர் வந்தார்கள். தன்
கண்டுபிடிப்புகளை புத்தகங்களாக எழுதினார். தி Interprededition of Dreams' - 'கனவுகளின் விளக்கம்' என்று 1900-ல் அவர் எழுதிய நூல் உலகப் பிரசித்தி பெற்றது. நவீன உளவியலாளர்கள் ஃப்ராய்டு சொன்ன சில காரணங்களுடன் ஒத்துப் போவதில்லை.

உதாரணமாக அவர் நம் எல்லாச் செயல்களுக்கும் செக்ஸ்தான் அடிப்படை என்றார். நம் கனவுகளை தின வாழ்வில் நிறைவேற்ற முடியாத உள்மன இச்சைகள் என்றார். அவருடைய மிகப் புரட்சிகரமான சித்தாந்தம் இடீபஸ் காம்ப்ளெக்ஸ்.
கிரேக்க புராணக் கதை ஒன்றில் இடீபஸ் தவறாக தன் தந்தையைக் கொன்றுவிட்டு, தெரியாமல் தன் தாயையே மணந்து கொள்கிறான். ஃப்ராய்டு, எல்லா இளைஞர் களுக்கும் தகப்பனை துரத்திவிட்டு தாயை மணந்து கொள்ளும் இச்சையும் எல்லாப் பெண்களுக்கும் தாயைத் துரத்தி விட்டு தந்தையோடு படுத்துக்கொள்ளும் இச்சையும் உள்மனத்தில் உண்டு என்றார்.
இதைத்தான் 'இ.கா.' என்றார் ஃப்ராய்டு. சுத்த ஃப்ராடு என்று எல்லோரும் வலுவாக எதிர்த்தாலும் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத் தீற்று இன்றும் இருக்கிறது.
ஃப்ராய்டு சிகிச்சைக்கு உட்காரும்போது நிறைய டச்சு சுருட்டுகள் பிடித்தார். 1938-ல் ஹிட்லருக்குப் பயந்து இங்கிலாந்துக்குக் குடியேறினார். 1939-ல் இறந்து போனார். காரணம் கான்ஸர்!
No comments:
Post a Comment