சுட சுட செய்திகள்

Monday, February 13, 2012

ஜீவன் என்றால் என்ன ?


உடலின் உள்ளே உயிர்; சக்தியானது வெட்ட வெளியிலே உள்ள ஆற்றல்களை பிராணவாயுவின் மூலம் மூச்சுக் காற்றhல் உடலின் உள்ளே இழுத்து கோடிக்கணக்கான நமது உடல் அணுக்களுக்கு ஆற்றலைக் கொடுத்து உடலை இயக்க வைக்கிறது.

இப்படிப்பட்ட அணுத்திரள்களாளான இப்பிரபஞ்சத்தில் இருந்து மனித ஜீவன் உற்பத்தி ஆகிறது. ஆதியிலே இப்பிரபஞ்சப் படைப்புக்கு மூலமானது இரண்டு சக்திதான். அதைத்தான் சிவசக்தி என்கிறோம் . இதுவே பரமாணுவாகும். அதே போல மனித ஜPவன் உருவாவதற்கு இரண்டு மூல அணுக்கள் காரணமாக விளங்குகின்றன. சிவம் என்கின்ற ஆண் சுக்கிலப்புழுவும் சக்தி என்கிற பெண்
சுரோணிதப் புழுவும் இரண்டின் கலப்பினால் ஜீவன் உற்பத்தியாகிறது.

இப்படி இயக்குகின்ற அந்த சக்தியைத்தான் சுருக்கமாக உயிர்; சக்தி அல்லது ஜீவன்; என்கிறோம். இந்த இரண்டும் அதாவது உடலும உயிரும் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு பொருளைத்தான் ஜீவன் என்கிறோம்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தனது ஜீவன் சாத்திரத்தைக் கண்டு கொண்டால்; உலகில் எல்லாம் இன்பம்தான். இவ்வுலகில் எதுவும் நல்லதும்
இல்லை. நண்பன் பகைவன் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் தன் சுய தூய அறிவை அறிந்து விட்டால் எல்லாம் சமம், எல்லாம் இன்பமயம் ஆகும். அதுவே ஆத்மஞானம் பெறுவது, இன்றிமையாதது.

ஜீவன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நடைபெறும் தொடாபயணமே வாழ்க்கையாகும். வாழத் தெரிந்து  வாழ்பவர்களான ஞானிகளை நம்பி அவர்களைப் பின்பற்றியும் வாழ்வதே ஞான வாழ்வு அல்லது ஞான வாழ்க்கையாகும் . அதுவே இன்ப வாழ்க்கையாகும் ,


No comments: