சுட சுட செய்திகள்

Monday, February 13, 2012

ஒரு மனிதனை உருவாக்குவது பிறப்பா? வளர்ப்பா?




 இந்தக் கேள்வி 1874-லிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். டார்வினின் உறவுக்கார ரான கால்டன் என்பவர்தான் Nature of Nature  கேள்வியை முதலில் எழுப்பியவர் (இந்தச் சொற்`றாடர் ஷேக்ஸ்பியரில் இருக்கிறதாம்). தமிழில் சௌகரியமாக பிறப்பா வளர்ப்பா என்று வடிவு பெறுகிறது. ஒரு மனிதனின் சுபாவம் அவன் பிறப்பைப் பொறுத்தது... அது அவன் ஜீன்களில் உள்ளது என்கிற வாதம் சென்ற நூற்றாண்டில் வலுப்பெற்றது. இதன் முக்கிய ஆதரவாளர்கள் இமான்யுவெல் காண்ட், ஃப்ரான்சிஸ் கால்டன், நவம் சாம்ஸ்கி போன்றவர்கள். மனிதனின் சுபாவத்தை வளர்ப்பினால், சூழ்நிலையால் மாற்ற முடியும் என்ற நம்பியவர்கள் ஜான் லாக், பாவ்லாவ், சிக்மண்ட் ஃப்ராய்டு போன்றவர்கள்.

இரண்டு கட்சியும் மாறி மாறி முதலிடத்துக்குப் போட்டி போடுகின்றன. 40/60, 30/70, 70/30 என்று பிறப்பு-வளர்ப்பு விகிதாசாரத்துக்கான மதிப்பீடுகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
ஒரு கட்டத்தில் எல்லாமே ஜீன் சமாசாரம். நீங்கள் முதுகு சொறிவது கூட உங்கள் ஜீனில் உள்ளது என்றார்கள்.
சமீபத்திய டி.என்.ஏ. ஆராய்ச்சிகளில் கண்டிருப்பதை 'டைம்' பத்திரிகை ஒரு
அட்டைக்கட்டுரையில் வெளியிட்டுள்ளது. இக்கட்டுரை சிந்தனைகளை ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது. பிறப்பின்போதே டி.என்.ஏ-விலேயே நம் சுபாவம் எழுதப்பட்டுவிட்டது என்கிற biological determinism தற்போது மவுசு குறைந்து வருகிறது. டி.என்.ஏ-யில் நம் சுபாவம் எழுதியிருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், அந்த டி.என்.ஏ-யைச் செயல்படுத்தும் மெக்கானிஸம் என்பது ஒரு மனிதன் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தது
என்று தெரிகிறது. நம் வாழ்நாள் முழுதும் பிறப்பும் வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகின்றன.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஓரினச் சேர்க்கையை விரும்பும் ஆண்கள் பெரும்பாலும் இளைய சகோதரர்களாகத்தான் இருக்கிறார்கள் (மூத்தது ஆணாக இருந்தால்).
தந்தையில்லாமல் வளர்ந்த பெண்கள் சீக்கிரமே பூப்படைகிறார்கள் (குடும்பத்தைக் காப்பாற்ற அப்பா இல்லாத அவசரம்). ஓரினச்சேர்க்கையோ பூப்படைவதோ ஜீன் சம்பந்தப்பட்டதுதான்.
ஆனால், அதைத் துவக்கி வைக்கும் செயல் அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதேபோல் மொழித் திறமை, காதல் போன்றவைகளும் ஜீனில் இருந்தாலும் இவற்றைக் கூட்டவும் குறைக்கவும் ஸ்விட்ச் போட வேண்டியிருக்கிறது.

ஆம்! நம் ஜீன்களில் பலவற்றில் ஒரு ஸ்விட்ச் இருக்கிறதாம். அதனை 'ப்ரோமோட்டர்' என்கிறார்கள். இதனுடன் 'என்ஹான்ஸர்' என்று மற்றொரு ஊக்கப்படுத்தும் சங்கதியும் சேர்ந்து ஸ்விட்ச் எப்போது போடப் படுகிறது எப்போது அணைக்கப்படுகிறது அல்லது போடாமலேயே அடக்கி வைக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகிறதாம்.

ப்ரோமோட்டரில் உள்ள லேசான வித்தியாசங்கள்தான் ஓர் உயிரினத்தின் அமைப்பைத் தீர்மானிக்கின்றனவாம்.

உதாரணமாக Hoxc8 என்னும் ஜீன் ஓர் உயிரினத்தின் மார்புக் கூடான தோராக்ஸை நிர்ணயிக்கிறது. நாம் உள்பட எல்லா உயிர்களுக்கும் இந்த ஏச்ஸ்ஷ8 இருக்கிறது. இதன் ப்ரோமோட்டர்களில் உள்ள வேறுபாடுகள்தாம் உயிரினம் கோழியா, எலியா, மலைப்பாம்பா என்று தீர்மானிக்கிறது. இதில் ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் எலிக்கு மலைப்பாம்பு போல உடல் முழுதும் மார்புக்கூடாகி விடும்.
ஒரு மண்புழுவுக்கும் நமக்கும் ஐம்பது சதவிகிதம் ஜீன்கள் ஒரே வகையே! சுருங்கச் சொன்னால் தற்போது பிறப்பினால் மட்டும் மனிதன் உருவாவதில்லை. அவன் சருமத்தின் நிறம், சுருட்டை முடி போன்ற ஆதார விஷயங்கள் மட்டும் பிறப்புக் காரணங்களால் தீர்மானிக்கப்படலாம். ஆனால், பல பிறப்புக்காரணங்கள் வளர்ப்பினால் திருத்த, திருந்தக்கூடியவை என்பது தெரிகிறது.

மொத்தத்தில் மாலிக்யுலர் பயாலஜி தற்போது ஒரு புதிய மனுதர்ம சாஸ்திரத்தை அமைத்துக்கொண்டிருக்கிறது.

'குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்' என்று ஆதங்கப்படும் திருமழிசை ஆழ்வார், அற்புதமான சந்தத்துடன் விருத்தம் எழுதும் திறமை படைத்திருந்தார். கவிதை எழுதும் திறமை ஜீன் சமாசாரம். அந்த ஸ்விட்சு போடப்படுவது வளர்ப்பினால்தான். யாராவது உங்களிடம் இதெல்லாம் உனக்கு வராது... இதுக்கெல்லாம் பிறந்து வரணும் என்று அலட்டிக்கொண்டால்
'ஹ!' என்று சொல்லுங்கள்.

No comments: