சுட சுட செய்திகள்

Wednesday, August 15, 2012

சட்டத்தின் படி

 சட்டத்தின் படி (10)

சென்ற வாரம்  
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.

என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.

திவாகரன் வருவதற்கு பவ்யமாக கதவைத் திறந்து விட்டு ஏசியை ஆன்  செய்தான் ஆபீஸ் பியூ ன்.

கோட்டை கழட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்டர்காமில் மேனேசரை அழைத்து பேக்டரி விசயங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்ட பின் மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் மற்றும் புதிதாக கிடைத்து இருக்கிற ஆடர்களை பற்றியும் இருவரும் விவாதித்தார்கள்.

நிட்டிங் சூப்பர்வைசர் வந்தாரா?

இல்லைங்க சார்…வேலைக்கு இனிமேல் வரமாட்டார் என்றார் மேனேசர்.

திவாகரன் கண்களாலேயே ஏன் என்றார்

நமக்கு வர வேண்டிய நூல் பண்டல்களை வேறு கம்பெனிக்கு அவர் அனுப்பி வைத்து கமிசன் பெற்ற அந்த விவகாரம் நிருபணமாகி விட்டது. அதை நான் தட்டிக் கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார். என்று தயக்கத்துடன் சொன்னார் அந்த மேனேசர்.

வெரி குட். கேள்விப்பட்டேன். நானும் அதைப்பத்தி கேட்கலாமுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் என்ன செய்யனுமுன்னு நினைச்சேனோ அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க. உடனே அவருடைய ரூமை காலி பண்ணிடுங்க.

நிட்டிங், கட்டிங,; ஓவர்லாக், பேட்லாக், பிரிண்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து செக்சன் சூப்பர் வைசர்களுடன் சென்று ஆய்வு நடத்திவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்குள் நுழைந்தார்.

டேபிளின் மீது இருந்த பைல்களை எடுத்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு, இண்டர்காமில் மேனேசரிடம் ஏதோ பேசிவிட்டு டையிங் பேக்டரிக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றார்.

அவர் போன சிறிது நேரத்தில் ஆபிஸ்க்கு வெளியே பவ்யமாக “என்ன நினைத்தாரோ முதலாளி” என்ற குழப்பத்துடன் தன் மகனுடன் நின்றுக் கொண்டிருந்த வேலுவை அழைத்தார் அந்த மேனேஜர்.

இந்தாப்பா பையனும் நீயும் அந்த கேண்டினுக்கு சென்று சாப்பிட்டு இங்கே வாங்க… கேண்டீனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் போங்க என்றார்.

வேலு மகனுடன் கேண்டீனில் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மேனேசர் ரூம் அருகே வந்து நின்றான்.

டையிங் பேக்டரியிலிருந்து திவாகரன் "என்ன ரெண்டு ஜெனரேட்டர்களும் ரிப்பேரா? இன்சார்ஜ் எங்கே போனார்?" என்றபடி படு கோபமாக அங்கிருந்த ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார்.

சார் இன்சார்ஜ் எங்கயோ வெளியில போறதா சொல்லிட்டு போனாரு…

உடனே மேனேஜருக்கு போன் செய்தார் திவாகரன்.

என்னய்யா வேலைப் பாக்குறீங்க? காலையில சேம்பல் கொடுத்தாகனும் என்ன செய்வீங்களோ ஏது செயிவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துக்குள் ஜெனரேட்டர் ஓடியாகனும் என்று மிரட்டியபடி போனைக் கட் செய்தார்.

டையிங் இன்சார்ஜ்க்கும் மெக்கானிக்குக்கும் எத்தனை தடவைசொன்னாலும் மண்டையில ஏறாது இப்போ என் தலையிலதான் கட்டிட்டு போயிட்டாரு முதலாளி. அவனுங்க வரட்டும் நாளைக்கு பார்த்துக்கிறேன்  என்றபடி அந்த மேனேசர் புலம்பிக்கொண்டிருந்தார்.

“அங்கு நின்றுக் கொண்டிருந்த வேலு மிகவும் பணிவாக அய்;யா எனக்கு ஜெனரேட்டரெல்லாம் ரிப்பேர் பாக்கத் தெரியுமுங்க..மெக்கானிக்கிடம் 5 வருசம் ஹெல்பரா வேலை பாத்திருக்கேன்”;.

வேலுவை ஏற இறங்க பார்த்த மேனேசர் “உனக்கு மெக்கானிக் வொர்க் தெரியுமா? ஓட வைச்சுருவியா?”

“ஐயா ஜெனரேட்டரை பார்த்தபின்தான் என்ன போயிருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதை பார்த்து பின் கண்டிப்பாக ஓட வைத்து விட முடியும”; என்றான் வேலு.

உடனே திவாகரனுக்கு போனில் தகவல் சொன்னார் மேனேசர்.

உடனே வேலுவையும் அவர் மகனையும் கூட்டிக்கொண்டு மேனேசர் காரில் டையிங் பேக்டரியை அடைந்தார்.

ஜெனரேட்டர் அருகில் நின்றிருந்த திவாகரனை வேலு கும்பிட்டபடி “ஐயா” என்றான்

“போப்பா போய் என்னென்னு பாரு”

ஜெனரேட்டரை ஆன் செய்தான் வேலு. கர் கர் என்ற சப்தம் மட்டும் வந்தது



உடனே ஏதோ யோசித்தவனாய் அருகிலுள்ள டூல் பாக்ஸிலிருந்து ஸ்பேனரை எடுத்து டீசல் டியூபை கழற்றி விட்டான். பிறகு உள்ளிருந்த பில்டரை அனைத்தையும் கழட்டினான். அவன் நினைத்தபடியே டீசல் அடைத்துக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் சுத்தம் செய்துக் கொண்டிருக்கையில்…

அங்குள்ள பணியாட்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.

திவாகரன் “நிறுத்துங்க..உங்களைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒரு பானை சோத்துக்கு”… என்று திவாகரன் முடிப்பதற்குள்

வேலுவின் மகன் “ஒரு குண்டா சாம்பார் ”; என்றான்.

திவாகரன் உட்பட அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

அவனுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தான் வேலு.

எல்லாவற்றையும் சரியாக பொருத்தியபின் ஜெனரேட்டரை ஸ்ட்டார்ட் செய்தான் வேலு. ஜெனரேட்டர் ஓடத் துவங்கியது. அனைவரின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது.

“இந்தாப்பா ம்ம் வேலு நீ இங்கேயேயிருந்து ஜெனரேட்டரை பார்த்துக்கோ.! என்றபடி மானேசரிடம் பையனை தன்னுடைய ஆபிஸ் ரூமில் தங்க வைக்கும் படி சொல்லிவிட்டு பேக்டரிக்கு காரில் சென்றார்

ஒரு மணி நேரத்திற்குபின் தன்  மகனை காண வேலு MD ரூம்மிற்கு சென்றார். 

மகனை காணவில்லை  

ஒவ்வொரு இடமாக தேடினான் எங்கும் பையனில்லை. 

RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

எங்காவது தொலைந்து போய் விட்டானா வேலுவின் மகன்?

அடுத்தவாரம் பார்ப்போமா?


திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: