சுட சுட செய்திகள்

Friday, August 24, 2012

சட்டத்தின் படி ....11


சென்ற வாரம் 

 RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

(11)
அரைமணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார் அவரின் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது.

டாக்டர்…..என்றழைத்தபடி முத்துவும,; ராசாத்தியும் அவரை நெருங்கினார்கள.;
கருப்பை ரொம்ப பலவீனமா இருந்ததாலே வலி தாங்க முடியாம ரத்தப் போக்கு அதிகமாகிப் போச்சு. ரத்த அழுத்தமும் கம்மியாயிட்டே இருக்கு. என்னால் முடிந்த அளவுக்கு சிகிச்சையளித்துவிட்டேன். இனி கடவுளின் கையில்தான,;; உள்ளேபோய் பாருங்கள் என்று விரக்தியுடன் கூறியபடி சென்றார்.

அய்யோ என்று அலறியபடி, இருவரும் மிகுந்த சோகத்துடன் கண்களில் கவலை ததும்பும் கண்ணீரை துடைத்தபடி லேபர் வார்டுக்குள் சென்றார்கள்;.

அங்கே…அருகில் குழந்தையுடன் படுத்துக் கிடந்த பானு,  தன் உயிர் போனாலும் உன்னை உயிரோடு பெற்|றுவிட்டேன், உன்னை பிரியப் போகிறேனே என்று கண்கலங்க அரை மயக்கத்தில் வலியோடு அந்த சின்னக் குழந்தையைப் பார்த்தபடி கிடந்தாள்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். அழக்கூட முடியாமல் தயங்கி தயங்கி, அருகில் வந்த ராசாத்தியிடம் சன்னமான குரலில்,

“அண்ணி இனி நான் …..”

“இல்லை அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது.” வந்த துக்கத்தை நெஞ்சிலே அடக்கியபடி ஆறுதல் சொன்னாள் ராசாத்தி.

முத்து, தன் தோளிலிருந்த துண்டை வாயில் வைத்தபடி….“பானு பயப்படாதே என்னை விட்டு போகவிடமாட்டேன்” பானுமதி கரத்தைப் பற்றியவாறு முத்து கதறினான். அவனையறியாமல் ஆண்மையையும் மீறி, கண்களிலிருந்து  கண்ணீர் வந்தது. 

இதுதான் தாம்பத்யத்தின்; உண்மையான உறவோ?

பானு…குழந்தையை கையில் எடுக்கும் படி கண் ஜாடையில் கூற, ராசாத்தி குழந்தையை எடுத்து பானுமதியின் கழுத்தருகே காண்பித்தாள்.

பலமுறை அந்த பிஞ்சுவை முத்தமிட்டபடி, “அண்ணி இனி நான் பிழைக்க மாட்டேன. இந்த குழந்தைக்கு இனி நீங்கள்தான் தாயும் , அத்தையும்.கடவுளா பார்த்துத்தான் உங்களை எங்களுக்கு கொடுத்துள்ளார்.’ என்று கண்கலங்க அழுதாள் பானு.

என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற முத்துவைப் பார்த்து, “என்னங்க எந்த காலத்திலும் உங்க தங்கையை கைவிட்டுடாதீங்க” என்று தன் கணவரை  பார்த்து கூறியபடி விக்கித்து சொன்ன பானுவின்  கண்ணுக்கு தெரியாத உயிர் பிரிந்தது.

 ராசாத்தி கையிலுள்ள குழந்தையை அணைத்தப்படி கதறினாள்..

தலைதலையாக அடித்துக் கொண்டு முத்து அழுது புரண்டான்.

என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும், மாண்டார் வருவதில்லை.

வந்த உயிரை பானுமதி தந்த உயிரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் ராசாத்தி மிகவும் அக்கறை செலுத்தினாள்.

காலத்தின் சக்கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா?  ஒரு நிமிடம் என்பது                      எவ்வளவு  உயர்நதது  என்பது  சோம்பேறிக்கும்  உழைக்கத் தெரியாதவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லை

ஊன் உறக்கமில்லாமல் உழைத்தவர்களின் கணடுபிடிப்பால் இன்றைக்கு இரவினில் இருளில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணமே நேரத்தை நேசித்ததன் விளைவுதான். அதன் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுயிருக்கிறோம்.

மாதங்கள் கடந்தன.

நிறைமாத கர்ப்பிணி ராசாத்தி, நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது பிரசவலி எடுததது.

பல்லைக் கடித்துக் கொண்டு, குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு, அவளையும் அறியாமல் அம்மா என்று கத்தினாள்

அந்த சப்தம் எட்டு வீடு தாண்டியும் கேட்டது. 

இதே சப்தம் பணக்காரர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கேட்டிருந்தால் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டடார்கள.

ஆனால் அந்த பகுதி ஏழைகள் வாழும்;  என்பதால், போட்டது போட்டபடி பெண்களும் ஆண்களும் முத்துவின் வீட்டிற்கு ஓடி வந்தார்கள்.

நிலமையுணர்ந்த பெண்கள், ஆண்களை வெளியேபோக சொல்லிவிட்டு, ஆறுதலாக “கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று படி, வயதில் முதிர்ந்த தாய்மார்கள்.. பிரசவ ஏற்பாட்டினைச் செய்தனர்  மணிகணக்கில் இல்லை... சில நிமிடத்ததில் குழந்தையின் அழுகை சப்தம்…. அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள்.

எங்கேயோ சென்றுவிட்டு வந்த முத்துவிடம் “இந்தாட முத்து…. உன் தங்கைக்கு  பெண்குழந்தை பொறந்திருக்கு, போய் பேறுகால செலவு வாங்கிட்டு வா” (பேறுகால செலவு  என்றால் குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க கூடியவை துவையளாகசும் கசாயமாகசும் கொடுப்பார்கள் இன்று மருத்துவமனையில் நடப்பது வேறு.)

முகமெல்லாம் பூ ரிப்பான முத்து “இதோ ஒரு நிமிடம்” என்று கடைக்கு ஓடினான்.

செலவுடன் வந்த முத்து, குழந்தையை எடுத்து மகிழ்ந்தாள். சில நாட்கள் பக்கத்து வீட்டுத்தாய்மார்கள் முத்துவினுடைய குழந்தையையும் பச்ச ஒடம்புக்காரியான ராசாத்தியைகவனித்துக் கொண்டார்கள்.

உடல் தேறிய ராசாத்தி, தன் குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலையையும,; முத்துவினுடைய குழந்தைக்கு புட்டிபாலையையும் தன் மடியில் படுக்க வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது முத்துவின் குழந்தையினுடைய பிஞ்சு விரல், ராசாத்தியின் மார்பை வருடியது.

திகைத்துப் போன ராசாத்தி பக்க வீட்டு பாட்டியிடம், முத்துவினுடைய குழந்தையைப் பார்க்க சொல்லிவிட்டு, பூ க்கடைக்கு சென்றாள்.

பூ க் கடையில் மலராத மல்லிகையும், காய்கறிக்கடைக்கு சென்று ஒரு கோஸ்(காய்) வாங்கி வந்து மார்பு மீது மல்லிகை பூ வை வைத்து, அதன் மீது கோஸ் இலையை வைத்துக் கட்டினாள்.

முத்துவின் குழந்தையை எடுத்து வந்த பாட்டி, ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு

“உனக்கொன்ன பைத்தயமா? அப்படி செய்யாதே பால் வற்றி போகும்.”

“இல்லைம்மா குழந்தைக்கு ஏம்மார்பு பால் குடிக்கனும் ஆசை”.

“கொடுக்க வேண்டியதுதானே ?”

“அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”

“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

என்ன முடிவு என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?
 
திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529




 நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்... நன்றி...