நீதி தேவதையே உன் கண்கள் கருப்புத் துணிக் கொண்டு ஏன் கட்டப்பட்டு இருக்கிறது தெரியுமா?
இங்கே நடக்கின்ற அவலங்களை காணமலிருக்கத்தான்.
பட்டபகலில் பத்துப்பேருக்கு முன்னால் இளம்பெண் ரவுடிகளால் காரில் கடத்தப்படுகிறாள் பொது மக்களிடம் பிடிப்பட்ட ரௌடி அரசியல் தலைவனின் கட்டளைக்கு பயந்து FIR கூட போடாமல் வெளியுலக நாயகனாக நகர்வலம் வருகிறான் அதையும் மீறி மனித உரிமை மகளிர் போராட்டத் போன்றவற்றால் கைதாகி சரியான சாட்சி யில்லையென்று விடுதலையாகிறான்.
பகலிலே நடமாட முடியாத பெண் இரவில் எப்படி நடமாட முடியும். இது காந்தி கனவில் மண்.
லட்சோப லட்சம் இளைஞர்கள் வேலை வேண்டும் என்பதற்காக வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு படித்துக் கொண்டு தேர்வுக்கு செல்லும் போது நம்பிக்கையெல்லாம் பாழாகும் விதமாக சில கருப்பு ஆடுகள் முந்தைய நாளே கேள்விகளை மோப்பம் பிடித்து விடுகின்றன…என்ன செய்யப் போகிறாய்…தேவதையே அந்த சமூக முட்களை….
இதோ இந்த குடிசைகுள்ளிருந்து வரும் பேச்சை கேள் தண்டனை வழங்குவது பற்றி பின்னர் யோசி.
ஏப்பா மணி 12 ஆகுது. போய் தூங்குப்பா
இல்லைய்யா நாளைக்கு TNPSC பரிட்சைம்மா இன்னும் கொஞச நேரம் படிச்சுட்டு அப்புறமா துங்குறேன். இன்னைக்கு தாம்மா என் நண்பன் நம்ம நிலமையறிந்து இந்த கைடு தந்தான் நீ போய் தூங்கும்மா.
எனனமோபப்பா கடவுள் புண்ணியத்துல இந்த வேலையாவது கிடைச்சால் உன் தங்கச்சயை ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திரலாம் அந்த மனுசன் உயிரோடு இருந்தா உன்னை இதுமேல படிக்க வைச்சிருப்பாரு. பாலா போன பஸ்…..இவரு மேலே ஏறி……ம்மம்… பஸ்சுக்கு சொந்தக்காரர் ஆடுயு வெறும் 10 ஆயிரம், கொடுத்து வாயை அடைச்சுட்டான்…..
ஏம்மா அப்பவே நீ போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்கலியா?
புகார் கொடுக்க சின்ன சிறிசான உன்னையும் தங்கச்சியும் தூக்கிட்டு போனப்பா அந்த SI
“இந்தாம்மா இவரு MLA இவரு சொன்ன சட்டமே கேக்கும். பேசாம அவரு பெரிய மனசு வைச்சு கொடுக்கிற பணத்தை வாங்கிக்கோ” ன்னார்.
உடனே பணத்தை வாங்கி யிட்டயாம்மா?
இல்லைப்பா எம்புருசன் உயிருக்கு வெறும் பத்தாயிரம் தானா… நான் முடியாதுன்னேன்
அந்த இன்ஸ்பெக்டர் “இந்தாம்மா நான் தான் கேஸ் எழுதறவன் குஐசு அதை வைச்சு தான் கோர்ட் தீர்மானிக்கும் உன்புருசன் நிதானமில்லாம சாராயம் குடிச்சுட்டு ஓடர பஸ்லல யிருந்து கீழே குதிச்சிட்டான். என்று எழுதி விடுவேன் என்று பயமுறித்தி அப்போ ஒரு போலிஸ்காரர் தனியாக அழைத்து ஏம்மா அவனுகிட்ட உங்களால மோத முடியாது கேஸ் சீஸன்னு அலைய முடியாது பேசாமே கொடுக்கிறத வாங்கிக்கோ என்றார்
எனக்கும் சரின்னு பட்டுச்சு வாங்கிட்டேன..; என்னமோப்பா கூலி வேலைச் செஞ்சு உங்க ரெண்டு பேரயும் என்னால முடிஞ்ச வரைக்கும் படிக்க வைச்சுட்டேன்.
அடுத்தநாள்…..
எப்படிப்பா எழுதியிருக்கிற?
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறேன்மா கட்டாயம் எனக்கு வேலை கிடைச்சிடும் நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்து விடும் கவலைப்படாதேம்மா.
வேலை கெடச்சுடுச்சுன்னா யார் கிட்டேயும் லஞ்சம் வாங்காதப்பா நம்ம போல ஏழை பாளைங்க என்ன கஷ்டம் படராங்க.
இதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல…என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போது…
மணியின் தங்கை “அதுதான் லஞ்சம் கொடுத்து வாங்கிட்டுhனுங்களே”
தாயும் மகனும் ஒன்று சேர “என்னடி சொல்ற?”
“என்ன சொல்ல நியூ சை நீயே பாரு’
மணி கண்கலங்கி “ போச்சும்மா எல்லாம் போச்சு .. லட்சம் கொடுத்து கேள்விதாளை வாங்கி அதிக விலைக்கு வித்துயிருக்கானுங்கம்மா”
“அடபாவிகளா சோறு தண்ணி யில்லாம ராவும் பகலும் லைப்ரரி அங்கே யிங்கேயின்னு படிச்சவனுக்கு இந்த கதியா” எனறு தலைதலையாய் அடித்துக் கொண்டாள் அவன் தாய்.
கேட்டாயா நீதி தேவதையே அங்கே பார் அந்த அவலநிலையை,
பாரதத்தில் ஒரு தாய் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறாள்.
என்ன செய்யப் போகிறாய்? இந்த சணடாளக் கூட்டத்தை.
உன் கையிலுள்ள வாள் வெண்ணை வெட்டவா? சொல் தேவதையே சொல். இல்லை நீதியை காக்க சுழற்று உன் கத்தியை.
திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
99528 27529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1 comment:
கொடுமை...
மனித நேயம் எப்போதோ செத்து விட்டது...
Post a Comment