சுட சுட செய்திகள்

Saturday, March 16, 2013

என்ன செய்யும் இந்த காலவரையற்ற விடுமுறை??



எது நினைத்தோமோ அது நடந்துவிட்டது.

போராட்டக் களத்தில் குதித்திருக்கும் மாணவர்களை திசைதிருப்ப இந்த அரசு காலவரையற்ற கல்லூரி விடுமுறையை அறிவித்திருக்கிறது.

அப்படித்தான் செய்ய முடியும். 3 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லையென்றால் கல்லூரி மறு அறிவிப்பு வரும்வரை மூடப்பட வேண்டும் என்பது சட்டம். என்பதும் ஒரு சிலர் சொல்லும் கருத்து.

எது எப்படியோ….நீங்களும் போராட்டத்தை ஒடுக்க,  அவர்களை விடுமுறை என்ற அற்ப நாட்களை அனுபவிக்க ஆசைக்காட்டி மாணவ தோழர்களை திசைதிருப்பச் செய்திருப்பது என்பது வேதனையளிக்கிறது.

ஆம். நீங்களும் இந்த இனத்திலே பிறந்தவர்கள்தான். எங்களுக்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஊட்டிய நம் முப்பாட்டன்கள்தான் உங்களுக்கும் ஊட்டியிருக்கிறார்கள்.

போராட்டத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து அதன் மூலம் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம்.
ஆனால் தேர்தலுக்காகவே ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு, அதன் மூலம் அப்போதைக்கு குளிர்க்காய்ந்து, அப்போதே மறந்துவிடும் ஈனப்பொழப்பை நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகள்தான் இதுவரைக்கும் இந்த தமிழகத்தில் இருந்துக் கொண்டிருக்கின்றன.

அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி;. வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெருமழையாக பொழியவிருக்கிற இந்த மாணவ சமுதாயத்தின் போராட்டத்தை ஒரு போதும் உங்கள் அரசியல் சிறு மழைத்தூரலாக சுருக்கிவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.

எப்போதாவது ஒரு தடவைத்தான் இது போன்ற அதியசயங்கள் நிகழ்கின்றன. ஆம்…1960 களுக்கு பிறகு மாணவர் கூட்டமைப்பு, இந்த அளவுக்கு மிக எழுச்சியோடு கூடியதில்லை.

சாதாரணமாக கூடி, பின் ஏதோ சந்தித்தோம். பிறகு பிரிந்தோம் என்றில்லாமல் ஏதாவது ஒரு தாக்கத்தை இந்த போராட்டத்தின் மூலம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற  கொள்கையோடு, உணர்ச்சி வசப்பட்டு இப்போது குழுமியிருக்கிறார்கள்.

தயவு செய்து போராட்டத்தை தண்ணீர் ஊற்றி அணைத்து விடலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள்.

இது நம் சகோதர சகோதரிகளுக்காக, நாம் பேசும் மொழியின் அடையாளத்தை தாங்கி நிற்கின்ற எம் இன மக்களுக்காக எந்த தன் நோக்கத்திற்காகவும் இல்லாமல், முற்றிலும் அவர்களுக்காக நடைபெறும் போராட்டம்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்….

உணவை மறுத்து, நீர் கூட அருந்தாமல், பசி தூக்கம் மறந்து, மாணவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன தோழர்களே..?

யாரோ அழிந்தார்கள். அது வேற நாடு…நாம் இங்கே சுகமாகத்தான் இருக்கிறோம். என்று மாணவர்கள் நினைக்கவில்லை.

 எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் மனித நேயத்திற்காகவும், இன பாசத்திற்காகவும் போராடுகிறார்கள்.

இன்றைக்கும் நடைபெறுகிறது. போராட்டம். 

பின்வாங்காமல் முழு மூச்சோடு இன்னும் எம் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். 

கால வரையற்ற விடுமுறையை போராட்டத்திற்கு எம் தங்கங்கள் மடைமாற்றியிருக்கிறார்கள்.

அரசுக்கு நன்றி.







நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

ப.கந்தசாமி said...

ஏட்டுச் சரைக்காய் கறிக்குதவாது.
மாணவர் போராட்டமும் அப்படித்தான்.

ADMIN said...

என்னவென்று சொல்வது?

DEVADAS said...

MANAVARKALUKU ENUDAYA MANAPOORVAMANA ITHAYAM KANINTHA NUNRIGAL. INTHA KEDUKETA ARASIYAL VATHIKALUKU NULLA PADAM PUHATAVENDUM INTHA MANAVARGAL. VALKA THAMIL. NASLAI NAMATHE. MMAHENDRAN.CANADA

RK.KALYAN said...

MY SINCERE THANKS FOR THE STUDENTS AS WELL AS THEIR PARENTS. DEFINITELY THEY WILL GET A SUCCESS.. CONGRATS..

Anonymous said...

i thank my brothers