சுட சுட செய்திகள்

Wednesday, August 29, 2012

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர்

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர் 



வடக்கேயிருந்து எள்ளி நகையாடி எகத்தாளமாக நம் தாய்மொழித் தமிழை கேவலமாக பேசியதன் விளைவு, சிலிர்த்த சிங்கமென வடக்கே சென்று கனகவிசயனை வென்று அவன் தலையில் கல்லை சுமக்க வைத்தவன் நமது சேர மன்னன் .  (சேரன் ஆண்ட காரணத்தால் சேர நாடு)

நம்மொழி தமிழ்க்கு மட்டும் கடவுளுண்டு. அது முருக பெருமான்.

தன் தாய் தந்தையிடம் சண்டையிட்டு எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று மக்கள் எனக்கென ஓர் மொழி என்று இருந்தவன் முருகன்.

அவன் அமர்ந்த இடம் கொங்கு மண். இந்த மண் குமரனால் ஆசிர்வதிக்கப்பட்டது.

சோழ வள நாட்டின் வளமைக்கு காவேரியை பரிவோடு வழி அனுபபி வைக்கும் நம் ஈரோடு.

பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஊர்.

மங்களகரமான மஞ்சள் சந்தை,  ஏழை பாழைகளுக்கு மலிவுவிலையில் துணி வகை. அணை மின்சார உற்பத்தி இப்படி பல சிறப்புகளோடு அமர்க்களப்படுத்தும் நமது ஈரோடு

பகுத்தறிவை பாமரனின் நெஞ்சினில் பதிக்க வைத்த வெண்தாடி வேந்தன் பிறந்த இடம்  இந்த ஈரோடு .

மேற்கு தொடர்ச்சி மலையில் பழநி, நீலகிரி கோடைவாசஸ்தலமாகிறது.

அங்கு பயிரிடப்படும் தேயிலை ரப்பர் காபி ஏலக்காய் குருமிளகு வாசனை திரவியம் முதலியவை அந்நிய நாட்டுப் பணத்தை அள்ளித்தருகிறது.

வந்தவர்க்கெல்லாம் வேலை காலியில்லை என்று சொல்வதற்கே வழியில்லாமல் கோயமுத்தூர் விளங்குகிறது.

ஜின்னிங் பேக்டரி மிக்சி கிரைண்டர் மோட்டார் பம்பு செட் என அனைத்து துறையிலும் வீறு நடை போடுகிறது நம் கோவை.

உலகிலேயே சிறந்த வேளாண்மை பல்கலைக்கழகம இங்குத்தான்.

கொஞ்சம் பயணம் செய்தால் அட நம்ம திருப்பூர் . எங்குப் பார்த்தாலும் துரும்பிலும், தூணிலும் ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஆங்காங்கே தொங்குகிறது.

பனியன் ஏற்றுமதியில் திருப்பூ ர் தான் முதலிடம்

தலைசிறந்த முறையில் நெய்யப்பட்ட போர்வைகள் தயாரிக்குமிடம் கரூர். போர்வைகள் இங்கு மிகவும் பிரசித்தம்.


இக்கொங்கு மண்ணை பற்றி இன்னும் இதுவரை வெளிவராத  தகவல்கள் ஏராளம் ஏராளம். அதை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

புதிய புதிய செய்திகள், ஆச்சர்யபடுத்தும் பல உண்மை நிகழ்வுகள் கொங்கு மக்களை மட்டுமல்லாமல், அத்தனை தமிழர்களையும் வியக்க வைக்கப் போகிறது.

இந்த மண்ணை தன் உயிராக நேசித்த தமிழர்கள் இருந்தார்கள். கொங்கு மண் வளம் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்த உத்தமர்கள் இருந்தார்கள். 

இன்றைக்கு கொங்கு என்ற பெயரைத்தாங்கி தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கட்சி கூட, இன்றைக்குத்தான் கொங்கு என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் போன நூற்றாண்டிலேயே தன் பெயருக்கு முன்னால் கொங்கு என்று பெருமையுடன் சூட்டிக்கொண்ட ஒரு உயர்ந்த தமிழரைப் பற்றி உங்களுக்குத தெரியுமா?

காத்திருங்கள். அடுத்த வாரம் காண்போம்.

இந்த வார காமெடி 

மலையாளி: ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

தமிழன்: ஈரோட்டுக்கு

அதில்லா ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

ஈரோட்டுக்குஎ ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

ஆ…அதில்லா சேட்டா நா சோதிச்சது ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

யோவ….என்னைய்யா நீ…ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

(தலைதெறிக்க ஓடினான் தமிழன்)


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

தமிழ் பையன் said...

நல்ல தகவல்கள். உங்கள் பக்கத் தலைப்பு (Page Header - the header that shows up in browser) ஒட்டக்கூத்தன் என்று வருவதை கவனிக்கவும்.

ramya prakash said...

Most of people in coimbatore business, so we expecting business relate news next edition. sametime ungaludaya ability fantastic. how to use tamil fond sentence kindly convey thro mail.
Warm reagrds
Ramya
Amman Polymers.