சுட சுட செய்திகள்

Sunday, March 27, 2011

வாக்காள பெருங்குடி மக்களே ....





வந்துருசில்ல...வந்துருசில்ல......தேர்தல் ௨௦௧௧ வந்துருசில்ல...

என்னமோ..போங்க.. தேர்தல் அறிக்கை தான் சூப்பரோ சூப்பர்,. எவன பாத்தாலும்..அதை தருவேன்..இதை தருவேன் கிரான். மக்களே உட்றாதிங்க.. கடையில போயோ..இல்ல நம்ம பிச்சகார நண்பர்கள் கிட்டயோ போய் ஒரு நல்ல திருவோடை வாங்கிட்டு வந்து உக்காதிங்கன்ன , நம்ம கட்சி தலைவர்கள் கொடுக்குற இலவச பிச்சைகளை தராளமா வாங்கி வாங்கி போடலாம். அட போங்க சார்..
என்ன சார் நாடு இது. ஒருத்தன் என்னன்னா கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும் கிரான். ஒரு தனி மனிதனின் வருமானம் குறைந்த பட்சம் கூட உயரவில்லை கிற அடையாளம் தான ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுறது? . டி வி தரது. ? அப்படின்னா நாமெல்லாம் ஏழை யாவே இருக்கணும்னு இவன் நினைக்கிறான் இல்லையா?.
ஆனால் இவன் மட்டும் கோடி கோடியா ஊழல் பண்ணி நாட்டை சுரண்டிகிட்டு இருப்பன். நாமெல்லாம் மேலே பறக்குற கொக்கு எப்படா வாயில இருக்குற தீனிய கிழே போடும்னு வாய பொளந்து பாத்துக்கிட்டு இருக்கணும் இல்ல?
கொள்கைகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்த இந்த தமிழ் தேசத்தில் , இன்றைக்கு இலவசங்களை அறிக்கைகளாக கொடுக்கிற தலைவர்களை உருவாக்கி விட்டோமே தோழர்களே...சிந்தித்து பாருங்கள்.