சுட சுட செய்திகள்

Wednesday, November 25, 2009

திசை திருப்பும் கல்வி வேண்டாம்







சொன்னதைத் திருப்பிச் சொல்கிற கல்வியும், மனப்பாடம் செய்து ஒப்பிக்கிற வீட்டுப்பாடமும், வரிகள் பிறழாமல் அப்படியே எழுதுகிற தேர்வும், நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆட்டம் காண்கின்றன. கடைவீதிகளில் கிடைக்கிற வழிகாட்டி நூல்களும், தினசரி நடக்கும் தனிவகுப்புகளும், திரும்பத் திரும்ப மூளையில் விஷயங்களைத் திணிக்கிற திருப்புதல் தேர்வுகளும் உண்மையான கல்வியிலிருந்து நம்மை திசை திருப்பி விடுகின்றன.




குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பப்படும் போதே மிரட்டலுடன் அனுப்பப்படுகின்றனர். கல்வி, பாரமாக அவர்கள் மீது கவிழ்கிறது. கற்றல் என்பது மகிழ்வுடனும், நிறைவுடனும் நடக்க வேண்டிய பேரனுபவமாகவும், உள்ளுக்குள் நடக்கும் இனிய பரிமாற்றமாகவும் இருக்க வேண்டும்.




இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற உந்துதலையும், தீவிரமான அர்ப்பணிப்பையும் உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும். புதிய முன்னேற்றங்களையும், அதுகுறித்து கூடுதலான விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை மாணவர்களுக்கும் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.




இன்றைய கல்வி முறையில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பாட திட்டங்களில் உள்ளவாறு, சாமானிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் புகுத்த வேண்டும். மேல்மட்ட பாடத்திட்டங்கள் என்று சொல்லப்படுகிற சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் கல்வித் திட்டத்தில், ஐந்தாவது படிக்கும் மாணவன், அரசு பள்ளியில் 12வது படிக்கும் மாணவனின் அறிவை பெற்று விடுகிறான். அப்படியென்றால், தற்போதிருக்கும் அரசின் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளது என்று பாருங்கள்.




நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாடத்திட்டங்களை, சரிவர பயிற்றுவிப்பதற்கு முயற்சி எடுப்பரா என்ற வருத்தம் ஒருபுறம் எழத்தான் செய்கிறது என்றாலும், அதற்கான புதிய யுக்திகளை அரசாங்கமே, கல்வியியல் அறிஞர்களை வைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுக்க வேண்டும்.




புதிய பாடத்திட்டத்தில், சட்டம் சார்ந்த விழிப்புணர்வும், நவீன அறிவியல், முக்கிய வரலாறுகள், எளிய ஆங்கிலம், எளிய மற்றும் தேவையான கணிதம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த பாடங்கள் புகுத்தப்பட்டால், மாணவர்களுக்கு பாடங்கள் சுமையாக இல்லாமல் அமையும்.






Thursday, June 4, 2009

அங்கே ஒரு கருணா .... இங்கே ஒரு கருணா..நிதி.


அங்கே ஒரு கருணா .... இங்கே ஒரு கருணா..நிதி.


எவன் செத்தா நமக்கென்ன? புணம்காசு வந்தா போதும் என்பது போல் மிஸ்டர் தமிழன தலைவர் (யாருக்கு தெரியும்? எல்லாம் தலை விதி) டெல்லிக்கு போய்ட்டுவந்துட்டார். பையன் அழகிரி உரம் அமைச்சரா வும் ஆயிட்டார். நாமளும் எப்பவும் போல நாசமா போயிட்டோம். பதவி வாங்க ணும்னு ஆசை வந்துட்டா முதுகு வலியெல்லாம் பறந்து போகுது பாத்திங்களா..?

வாழ்க ஜன நாயகம்....வாழ்க தமிழின தலைவர் குடும்பம்...வாழ்க அவர் கொள்ளு பேரன்.

Thursday, May 21, 2009

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

கண் திறந்து பார் தமிழகமே!
ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசுஅறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!
இலங்கை அரசின் வெற்றிக்களிப்புசிங்கள வெறியின் கோரநடனம்!
முல்லைத்தீவின் கடறகரையெங்கும்இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!
முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறதுமுகம் சிதைந்த ஈழத்தமிழினம்!
படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் - டில்லியில்பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!
பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்குபத்தாதாம் மந்திரிப் பதவி!
படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோபாரதத்தின் நாளைய பிரதமராம்!
“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோபடுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!
எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?
உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,நீ வழங்கிய அதிகாரம்..
நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?
அமைதி காப்பது அவமானம்அலட்சியம் காட்டுவது அநீதிஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!

Monday, May 18, 2009

பிரபாகரன் மறைய வில்லை...

பிரபாகரன் மறைய வில்லை...
தமிழின சொந்தங்களே....பொறுமையோடிருங்கள். ஈழ மண்ணில் வீர மரணம் அடைந்த மற்ற தோழர்களது உடலை வைத்து தான் .....பிரபாகரனாக இருக்கலாம்..என்று வதந்தியை கிளப்புகிறார்கள். பயபடாதிர்கள் !
தனி தமிழீழத்தை அமைத்து கொடுக்காமல் அந்த வீர தலைவனின் உயிர் போகாது.

Saturday, May 2, 2009

கண்ணீர் புகைப்படம் இது...


இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்
கரையான் புற்றெடுக்க பாம்பு வந்து உள்ளே புகுந்து பேயாட்சி நடத்துவதை எந்த மனசாட்சி உள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை. புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது??

Tuesday, March 24, 2009

Wednesday, February 4, 2009

இரட்டை நாக்கு ....கத்திரி இருக்கா..?

தொண்டர் : தலைவரே ஈழமக்கள் இன்னமும் உங்களை நம்பிக்கிட்டிருக்காங்களே? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க?தலைவர் : உடன்பிறப்புகளே! உங்களுக்கெல்லாம் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறேன்?தொண்டர் : ஒண்ணுமே செய்யலீயே தலைவா..தலைவர் : அதுதான் அவங்களுக்கும்(கருணாநிதி ன்னு நான் சொல்லலப்பா...!!!)

மண்ணெண்ணெய் வாங்கரேஷன்கடை தனை அடைந்தேன்.மண்ணெண்ணெய் தருகிறேன்எதற்காகவும் என்மண் அன்னையை மட்டும்விட்டுத்தர மாட்டேன் என்றான் கடைக்காரன்.அவன் உணர்வு வாழ்க.. வாழ்க..” - 80களின் இறுதியில் கலைஞர் குரலில் அவரை கேலி செய்து மிமிக்ரி கலைஞர்கள் இவ்வாறாக மேடைதோறும் நிகழ்ச்சி நடத்துவார்கள். பாருங்கள் கலைஞரை கிண்டல் செய்யும்போது கூட தமிழன் அவரது தமிழுணர்வை சந்தேகித்ததில்லை. இன்றைய கலைஞருக்கு தமிழுணர்வு கிஞ்சித்தேனும் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் நிலை.......
"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்....என்று மடயும் எங்கள் அடிமையின் மோகம்...'?

Monday, January 5, 2009

நான் யார்...?

நான்...மாடமாளிகை..கூட கோபுரங்களை பிரதிபலிப்பவன் இல்லை.நான் எந்த மக்களில் இருந்து தோன்றினேனோ...அந்த மக்களைத் தான் பிரதிபலிக்கிறேன்...உச்சத்திலும், உயரத்திலும் பறப்பதல்ல என் நோக்கம்..சமூக இருட்டின் கடைக் கோடி விளிம்பில் இருந்து கிளம்பும் முனகலில் இருந்து துவங்குகிறது என் வாழ் நாளுக்கான சிந்தனை....என்னை நீங்கள் எங்கும் சந்திக்கலாம்....இந்நேரம்...உங்கள் சாலைகளின் முடுக்குகளில்....உங்களின் ஏதேனும் ஒரு காரணத்திற்காக...வியர்வை வடிய ,கழுத்து நரம்பு புடைக்க போராடும் தோழர்களுக்கு நடுவில் நானும் காணக் கிடைப்பேன்...என்னால் கணிணி திரைக்கு முன்னால் மட்டும் கருத்தும்,கொள்கையும் பேச இயலாது.வாருங்கள் கவிஞர்களே...வீதிக்கு போவோம் என அழைத்த அறிவுமதியின் தம்பி நான்...வாழ்வின் தங்கச் சிறகுகளில்உல்லாச உலகை சுற்றிப்பார்க்கபடைக்கப் பட்டவன் நானில்லைஎன்பதை மீண்டும் மீண்டும்எனக்குள் அழுந்திக் கூறிக் கொள்கிறேன்...என் கூட்டம் பெரிது.அழுக்கும்,வேர்வையும், சாதியும் ,சேரியும் என இழிக்குழிக்குள் சிக்கிக் கொண்டுள்ள என் கூட்டம் பெரிது...திருவிழாவில் பழம் விற்றவளின் பேரன்...ஒரே தலைமுறைக்குள் கணிணியில் இணையம் இசைக்க முடிந்ததைஎன்னால் அதிசயம் என ஆனந்தப் பட முடியாது....நான் மட்டுமல்ல சமூகம்...இன்னும் சாக்கடைக் குழிக்குள் மலம் அள்ளும் உறவுகள் எனக்குண்டு......என்னால் உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என கீதம் இசைக்க முடியாது....நானும் இவ்வுலகின் பிறரை போல வாழ முயல்கிறேன்...ஆனால்.... என் கால் இடுக்கில் ஊர்கிறது எம் மக்களின் நூற்றாண்டு கண்ணீர்...அதன்ஈரத்தின் சுவட்டினால் என் இரவுகள் கூட இன்னும் உறங்கா விழிகளோடு...