சுட சுட செய்திகள்

Sunday, January 18, 2015

பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை (4)





நான் சின்ன வயதில் வாழ்ந்த ஊர் நீலகிரி மாவட்டம் என்பதால், எங்கும் பசுமை போர்த்திய புல்வெளிகள், அடர்ந்த காடுகள், வித்தியாசமான விலங்குகள் என்று எப்போதும் கண்ணுக்கு குளிர்ச்சியான அதே சமயம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருக்கிறேன்.

என் வீட்டிற்கு மேற்கே ஒரு பெரிய காடு..கோக்கால் மலை என்று  அதை சொல்வாங்க... நிறைய வித்தியாசமான பழங்கள்,செடிகளை நான் அங்குதான் பார்த்திருக்கிறேன்.

ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் (எனது நண்பர்களையும் சேர்த்து) அந்தக் காட்டுக்குள் காலையிலேயே சென்று விடுவோம்.

இந்த கோசிதான் எங்க டீமோட ஹெட். அப்போ அவன் 8 ஆவது படிச்சிட்டு இருந்தான். நான்,பாபி அப்புறம் கோசியோட மாமா ன்னு காட்டுக்குள்ளே போய், துள்ளித் திரிந்த அந்த அனுபவத்தைத்தான் இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன் பாஸ்.

குhட்டுக்குள் போகும்போது, ஒவ்வொருத்தர் கையிலேயும் ஒரு ஆயுதம் இருக்கும். கோசி கையில வெட்டுக்கத்தி, பாபி கையில பெரிய தடி, மாமா கையில கொக்கி மாதிரி இருக்கும் பெரிய பெரிய வீச்சரிவாள், என் கையிலதான் ஒரு முக்கியமான ராம பாணம். ஆமாம் அதுதான் வில்.

ஏன்னது வில்லா ன்னு நீங்க ஆச்சரியப்படுவீங்க.....

ஆமாம் வில்தான். நானே உருவாக்கிய கொடைக்கம்பி வில்...

இந்த குடை இருக்கே....அது ஒரு சிறந்த மல்டிபர்பஸ் சாதனம்....மழை வந்தால் பிடிச்சுக்க்லாம்...வெயில் அடிச்சால் பிடிச்:சுக்கலாம். சினிமாவுல வர மாதிரி காத்தடிச்சா பாராசுட் மாதிரி பிடிச்சுட்டு குதிக்கலாம்......ஆனா அது மிகப்பெரிய ஆயுதமா செய்யலாம்ன்னு உங்களுக்குத் தெரியுமா???

நான் என்ன பண்ணுனேன் தெரியுமா....

பழைய ஒரு குடையை அக்குவேர், ஆணிவேரா பிச்சு, அதுல இருந்து ஒரு கம்பியை தனியா எடுத்து,வில்லு மாதிரி வளைச்சு, செட்டில் பேட்டுல இருக்கிற நெட்டுல ஒண்ணு எடுத்து, கட்டிருவேன். ஆப்புறம் என்ன வில்லு ரெடி...

ச ரி...அப்புறம் அம்பு....???

மிச்ச மீதி இருக்கிற கம்பிகளை நல்லா நேரா தட்டி, முன்பகுதியை கூர்மையாக்கி, பின்பகுதியை நெட்டுல வைக்கிறமாதிரி தட்டிதட்டி நல்லா பிளந்து பதமா பண்ணுனா...அம்பு ரெடி.

சும்மா சொல்லக்கூடாது நான் குறி வைக்கிற சின்னச்சின்ன மிருகங்கள் கண்டிப்பா அடிப்படும்.

முயல்,காடை,மாதிரியான மிருகங்கள்தான் என்னோட குறி.

எங்க டீம் காலையில 8 மணிக்கு கிளம்பும். போகும்போது உப்பு மிளகாய் பொடி, புளிச்சாதம் இதயெல்லாம் கட்டிக்குவோம்.

இந்த உப்பு மிளகாய் பொடி எதுக்குன்னா....அங்க நிறைய மாங்காய் மரம் இருக்கும்.அந்த மரத்தில ஏறி உக்காந்து மாங்காய பிச்சு,தொட்டு சாப்பிடுவோம். அது மட்டுமில்ல முள்ளுபழம், நாகற்பழம், குரங்கு பழம்,காட்டு ஸ்டராபெரி,இவற்றையெல்லாம் பறிச்சு தொட்டு சாப்பிட்டா அதோட சுகமே அலாதி.

காட்டுக்குள்ளே நிறைய பம்ளிமாஸ் மரங்கள் இருக்கும். அது வேற ஒண்ணுமில்ல...பெரிய சைஸ் ஆரஞ்சதான் பம்ளிமாஸ். அதை ஒண்ணு சாப்பிட்டா போதும், வயிறு நிரம்பிடும்.

நிறைய சின்னச்சின்ன நதிகள் ஓடிட்டிருக்கும். நல்ல ஈரமா இருக்கிற கரையில சின்ன ஓட்டைகள் இருக்கும். அங்க தான் ஓடை நண்டுகள் வசமா சிக்கும். கையிலயே பிடிப்போம். குடுகுடுன்னு ஓட முயற்சிக்கும் நண்டுகளை அந்த கோசி புடிக்க ஓடுவானே ஒரே சிரிப்பா இருக்கும்.

பிடிச்ச நண்டுகளை சுத்தம் பண்ணி, அப்படியே நெருப்பிலக்;காட்டி சுட்டுத்திண்ணா அடடா அதுதான் உண்மைலேயே அமுதம்.

கோசியோட மாமா ஒரு நல்ல வேட்டைக்காரர். அவர் தினமும் இந்தக் காட்டுக்கு வருவார். நாட்டு வெடிகுண்டு ஸபெசலிஸ்ட். இவர் வைக்கிற கண்ணிக்கு அந்த காட்டுப்பன்னி தினமும் சிக்கிரும். கருப்பா கசக்குன பாலித்தின் கவர் மாதிரி இருக்கும் இவரோட நாட்டுக்கன்னி.

அதை மரத்தின் அடியில இருக்கிற கேப்புல வைச்சுருவார்.

அந்த மரவாசனைக்கும், கண்ணிவாசனைக்கும் ஓடி வரும்; காட்டுப்பன்னி அதை கடிக்கும் போய் வாய்சிதறி இறந்து போகும். 

அதை அப்படியே அறுத்து, பார்ட் பார்ட்டா பேக்கப் பண்ணி, வீட்டிற்கு எடுத்துட்டு வந்துருவார்.

அப்புறம் இப்படியே சாயங்காலம் வரைக்கும் காட்டுக்குள்ளேயே இருந்து, நாகற்பழம் ன்னு எல்லா பழங்களையும் பறிச்சி வீட்டிற்கு  வந்தால் காட்டுக்குள் போய் வந்த இளவரசனாய் எனக்கு நானே பெரிமிதம் கொண்டதுண்டு.....


இனிமையான வாழ்க்கை....காட்டுகுள்ளே வாழும் வாழ்க்கை....வளர வளர தொலைந்து போனது......
(தொடரும்)




நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.