சுட சுட செய்திகள்

Friday, June 29, 2012

tnpsc தேர்வுக்கான study materials


இந்திய அரசியலமைப்பு 

 நவீன கால இந்திய வரலாறு 


வேதியியல் 

பௌதிகம் 






நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, June 28, 2012

தாய்மை


பத்து மாத பாச சுமையில்
தன் ரத்தத்தையே சோறாக்கி 
ஒவ்வொரு மூச்சையும் உயிர் மூச்சாக்கி
மறுபிறவி எடுத்தே உன்னை பெற்றவள்
பத்தியம் பலவிருந்து தட்டிக் கழித்து
பாவி உன்னை வளர்த்தாள்
தன் தங்கமகன் வியர்வை சிந்தாமல் வாழ
தன் ரத்தத்தையே வியர்வையாக்கி உனை வளர்த்தாள்.
கடைசியில்
அலுமினிய தட்டும்
கிழிந்த பாயும்
கிழமே சும்மா கிட செத்து தொலை என்றா நீ மிரட்டுகிறாய்….
அட சண்டாளா உன்னை பெற்றெடுத்ததற்கு
அவள் ….
மலடியாகவே இருந்திருக்கலாம்.
   
திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, June 26, 2012

சட்டத்தின் படி ....(3)

சென்ற வாரம்
தன்னோட சொந்த கதையை டிரைவரிடம்   புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.
தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.

          

            அருகில் நெருங்கிய ரயில்வே ஊழியர் கதவை பலமாகத்தட்டி “என்ன ஓசி பயணமா? டிக்கட் வாங்கலியா? திடுக்கிட்டு எழுந்த ராசாத்தி…

இல்லை டிக்கெட் இருக்கு என்று படபடப்புடன் கூறினாள் ராசாத்தி.
“தோடா..எறங்கு வண்டி கூட்ஸு க்கு போகுது..”

“பீச்சுக்கு எப்படி போகணும்?

இதோடா…இன்னா மெட்ராசுக்கு புச்சா கொயந்தைபையனை கூட்டிகினு.. தோம்மா மெட்ராஸ் நல்லவிங்களும் கெட்டவிங்களும் கலந்த ஊரு. பீச்சுல யார பாக்கணும்?

எங்க அண்ணன் பீச்சுல கடை வெச்சிருக்காரு என்றாள் ராசாத்தி.
“அட்ரஸ் இருக்கா?

“இல்ல..காந்தி சிலைக்கு பக்கத்திலே”…..என்று பயம் கலந்த நடுக்கத்தோடு சொன்னாள் ராசாத்தி.

தன் மகன் அரவிந்தையையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்டரல் ஸ்டேசனை விட்டு வெளியே வந்தாள்.
இனம் புரியா கலக்கத்தோடு கண்களில் கண்ணீரோடு மகன் அரவிந்தை பார்த்தாள்.

‘அம்மா வலிக்குது ம்மா..அப்பா போட்ட சூடு ரொம்ப வலிக்குதம்மா”…என்றான் குழந்தை அரவிந்த்.

ராசாத்தி அழுதபடி மகனை முத்தமிட்டு ரோட்டோர கடையில் பையனுக்கு 4 இட்லி வாங்கி கொடுத்தாள்.

“அம்மா..உனக்கு…”
“பசியில்லை ப்பா.. நீ சாப்பிடு”..

கடைக்காரனிடம் “ஐயா ஆஸ்பத்திரி எங்க இருக்குது?”
எதிர்புறமுள்ள அரசு மருத்துவமனையைக் காட்டினான் அந்த கடைக்காரன்.

சீட்டு பெற்றுக்கொண்டு, ஞானி MD DCH    என்ற பெயர் தாங்கிய அறைக்குள் மகனை அழைத்தபடி சென்றாள்

டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்தபின் “என்னம்மா இப்படி சூடு வைச்சுருக்கீங்க? குழந்தையின்னா குறும்பு பண்ணத்தான் செய்யும்..அதுக்குப்போயி இப்படியா பண்றது? ஆமா எந்த ஊரு?”

“திருப்பூ ரு ங்க..”
“திருப்பூ ரா?” என்று கேட்டபடி டாக்டர் ராசாத்தியை நிமிர்ந்து பார்த்தார் .
“நானும் திருப்பூ ர்க்காரன் தான் ..திருப்பூ ரில் எந்த பக்கம்?”
“தென்னம்பாளையமுங்க…”

“இங்கே எதற்கு வந்தீங்க?..” என டாக்டர் முடிப்பதற்குள்,
“எங்க அண்ணன் பீச்சுல கடைவெச்சுருக்காரு….”

“ஓ அவர பாக்கவா? பையன் காலையிலே ஏதாவது சாப்பிட்டானா? ஊசி போடணும்..”
“களிம்பு மருந்து மாத்திரை எல்லாம் எழுதியிருக்கேன் போய் வாங்கிக்க..கவலைப்படாதே” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.

ஆஸபத்திரியிலிருந்து வெளியே வந்தாள் ராசாத்தி…
பலரிடம் அண்ணன் இருக்கும் இடத்தைப் பற்றிய விசாரிப்பிற்குப் பின், டவுன்பஸ் ஏறினாள்.

“பீச்செல்லாம் எறங்கு”…கண்டக்டர் விசிலடித்தார்.

“அம்மா காந்தி தாத்தாம்மா…”
ம..; என்றாள்.


வருடத்தில் 3 முறை மட்டுமே நமக்கு காந்தியை தெரியும்.
அதோ உழைப்பாளர் சிலை…உழைப்பாளர்களுக்காக குரல் கொடுத்த ஏழையின் சிகரம் ஜீ வா .

அங்கே இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த ஜீவானந்தம் இருக்காரே..ஒரே ஒரு வேட்டி சட்டையை துவைத்துப் போட்டு, அது காயும் வரை  இடுப்பில் துண்டுடன் இருந்தவரைக் கண்ட கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ஜீவாவுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கிக் கொடுத்தார்.அந்த எளிமையான தலைவனின் கல்லறை அன்று சிதிலமடைந்து காலி மது பாட்டில் கழிபிடமாக மாறிக் கிடக்கிறது.                கம்யூ னிஸட் காரர்கள் இதை கண்டுகொள்வது போல் இல்லை. மேடையில் உரக்க பேசினால் மட்டும் போதாது..வளர்த்;த தலைவனை தலைமுறைக்கு நினைவு படுத்த வேண்டாமா? என்று வேதனையுடன் சொல்லி;க் கொண்டிருந்தார்.”

ஒவ்வொரு கடையாக விசாரித்தாள் ராசாத்தி, 

அனுதாபத்தில் பதில், அனுசரனையாக பதில், மேலும கீழும் பார்த்து பதில், நையாண்டி நக்கல் பதில்,

கடைசியில் வந்த பதில்…
‘தெரியாதே..அவர் இல்லை..”

இந்த பதிலுக்காக மாலை 6 மணிவரை கால் கடுக்க குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள்.

உழைப்பாளர் சிலை அடியே அமர்ந்து தேம்;பி தேம்பி அழுதாள்.
பித்துபிடித்தவள் போல் குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள்.

அப்பொழுது ராசாத்தி அருகே ஒரு சொகுசுக் கார் வந்து நின்றது.
“என்னம்மா ஏன் என்னாச்சு? ஏன் அழுவுற?” என்று மிடுக்காக இருந்த 50 வயது மதிக்கத்தகக ஒருவர் கேட்டார்.

தலைநிமிர்ந்த ராசாத்தி நிலைமையைச் சொன்னாள்.
“ஓ..அந்த ஆளா? அவன் என்கிட்டத்தான் வாட்ச் மேனா இருக்கான்.. காரில் ஏறு”  என்று பின்கதவை திறந்து விட்டார்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நினைத்த ராசாத்தி..அவரை கையெடுத்துக் கும்பிட்டாள்.

பையனுடன் காரில் ஏறினாள்.
“டேய் தம்பி..முன் சீட்டுக்கு வா..அப்படியே மெட்ராசை வேடிக்கைப்பாரு..”

எதார்த்தமாக ராசாத்தி மகனை முன்சீட்டுக்கு அனுப்பினாள்.

அந்த ஆள் பையன் ஏறுவதற்கு வசதியாக முன் கதவைதிறந்துவிட்டு, அதே சமயம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார்.

திடீரென்று கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட் கதவைத் திறக்கும் நேரத்தில், தவறி விழுந்தது.

“அடடே..பிஸ்கட் விழுந்திருச்சே…தம்பி.. கீழே குனிஞ்சு அதை எடு…”
குழந்தை பிஸ்கட் எடுக்க சென்ற போது, கார் கதவு மூடியபடி விர்ரென்று புறப்பட்டது…

“அய்யா என் குழந்தை..வண்டியை நிறுத்துங்க..என்ற கத்தினாள் ராசாத்தி….அவளால் அந்த கார் ஜன்னலையையும் திறக்க முடியவில்லை.”
“அய்யா….காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன்….தயவுசெஞ்சு என்னை இறக்கி விடுங்கள் பெத்த வயிறு பற்றி எரியுது”…என்று வெறிப் பிடித்தவள் போல் கதறினாள் ராசாத்தி.

அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
“உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.

குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது.

ராசாத்தி மற்றும் அந்த குழந்தைக்கு என்ன ஆனது?
காத்திருங்கள்.

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

முள்வேலி -சிறுகதை


                 தாய் தந்தை உற்றார் உறவினர் அத்தனைக்கும் சொந்தமான அன்பு இல்லத்தின் நிர்வாகி முகிலன். பல பட்டங்களை பெற்றவர்.

பெற்றவர் யார் என்று தெரியாதவர். அன்பு நிறைந்த சாலையோர இட்லிக்கடை அம்மாவால் வளர்க்கப்பட்டவர்.

பெரிய பதவியில் பல வருடம் இருந்தார். வளர்ப்பு தாய் இறப்புக்குப்பின் சேமித்த தொகையுடன், யாசித்த தொகையும் அது மட்டுமல்லரமல் எழுத்து மூலம் சேர்த்த தொகையும் சேர்ந்து, பத்து அனாதை குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அன்பு இல்லம் இன்று 50 குழந்தைகளுடன் படிப்பு, பண்பு, அன்பு, ஒழுக்கம் என முறையே வாழும் இல்லத்தை கவனித்துக்கொண்டு வருகிறார்.

“யோவ் தோட்டக்காரா…எங்கய்;யா உங்க முதலாளி.” அங்கு வந்தவர் தோட்ட வேலை செய்துக் கொண்டிருந்த முகிலனை பார்த்துக் கேட்டார்.

“ஐயா..நான்தாய்யா முகிலன்…இந்த இல்லத்தை நடத்திக் கொண்டிருப்பவன்.. தோட்டக்காரன் இன்னிக்கு லீவுங்கறதுனால நானே களத்துல இறங்கி வேலை செஞ்சுட்டு இருக்கேன். இந்த சின்ன சின்ன நெருஞ்சிமுள்ளெல்லாம், இந்த குழந்தைகள் விளையாடும் போது பாவம் குத்தி விடுது…அதான் எல்லாத்தையும் வெட்டிட்டு இருக்கேன்…சொல்லுங்கையா…என்ன வேணும்? உள்ளே வாங்க…”

“ஓ…நீ தானா அது…யோவ்..என்னை என்ன மடையன்னு நினைச்சியா…”

“ஐயா மன்னிக்கணும் இம்மண்ணில் பிறந்தவர் யாருமே மடையனோ, அறிவில்லாதவனோ இல்லை. வளர்ப்பு முறையில் தவறு நடக்காத பட்சத்தில்.அமைதியாக சொன்னார் முகிலன்.

“பேசுவய்யா பேசுவ.. ஏன்னா படிச்சவனாச்சே.. ஏய்யா இவ்வளவு பேசறயே என் நிலத்தின் வெளிப்பக்கம் ஒட்டி காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கிறியே? எனக்கு அறையடி அகலம் 45 அடி நீளம் போச்சு, கணக்கு போட்டு பார் எனக்கு எவ்வளவு நஸ்டமுன்னு?” கோபத்துடன் கேட்டார் கோடீஸவரன்.

“ஐயா மன்னிக்கணும் இந்த பூமியை நீங்கள் வாங்குவதற்கு முன,; இந்த இடத்துக்காரர் இது பொது காம்பவுண்ட் சுவர்.. நீங்களே கல்லை ஒட்டி வெளிப்புறமா கட்டிக்குங்க.. எந்த வில்லங்கமும் வராதுன்னு எழுதிக் கொடுத்திருக்காங்க என்றார் முகிலன்.

யோவ்..இந்த அறையடிக்கு சேர்த்துதாய்யா பணம் கொடுத்திருக்கேன்;. இது 6 மாடி கட்டிடம். பெரிய பெரிய பணக்காரனெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு வீடு வாங்கறான். வீட்டு விலை என்ன தெரியுமா? 50 லட்சம். ச்சீ பக்கத்திலே வேற அனாதை இல்லம். யோவ் மேஸ்திரி ஆளை விட்டு சுவரை இடிச்சித் தள்ளு. அதோ அந்தாளுடைய ப+மியில் முள்வேலி போடு” என்றார் அந்த கோடீஸ்வரன்.

“ஐயா வேண்டாங்கய்யா..குழந்தைகள் முள் வேலிப்பக்கமா போனா கம்பிமுள் குத்தி ஏதாவது ஆயிடும் பாவம் குழந்தைகள”; என்று பணிவாக கேட்டார் முகிலன்.

“யோவ் அதை பத்தி எனக்கு கவலை யில்லை.. யோவ் மேஸ்திரி” என்றவுடன் ஆட்கள் கடப்பாறையுடன் வந்து நின்றனர்.செய்வதறியாது திகைத்து நின்றான் முகிலன்.

நகராட்சி ஜீப், மற்றும் போலிஸ் வண்டி கோடீஸ்வரன் முன் நின்றது. நகராட்சி ஊழியர், அவரிடம் கவர் ஒன்றைக் கொடுத்தார்.

பிரித்து படித்து பார்த்த கோடீஸ்வரன் வியர்க்க விறுவிறுக்க…
யாருக்கோ போன் செய்தார்…

“யோவ் வக்கில்…என்னய்யா இது? ஒண்ணு ஸ்டே வாங்கு ..இல்ல..அப்பீல் பண்ணு…”

மன்னிக்கணும் சார்…சுப்ரீம் கோர்ட்டே  போனாலும் ஒண்ணும் பண்ண முடியாது. முதலிலேயே சொன்னேன். 4 மாடி தான் அப்ரூவர் ஆயிருக்குன்னு. கண்டவனுக்கெல்லாம் காசை குடுத்து, அப்போ காரியத்தை சரி பண்ணுனீங்க.. இப்போ அரசே ஆளை அனுப்பியிருக்கு. பேசாம நீங்களே ரெண்டு மாடியை இடுச்சிடுங்க.. இல்லை நகராட்சி இடுச்சிடுச்சினா…அஸ்திவாரத்திற்கே ஆபத்தாய்டும்.
அந்த நேரத்தில் முகிலன் பக்கத்திலிருந்தவரின் செல்போன் ஒலித்தது….
“ ஆடி அடங்கும் வாழ்க்கையடா…ஆறடி நிலமே சொந்தமடா…” ரிங் டோனாக…..

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529

 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, June 25, 2012

மழலை -- சிறுகதை

 மழலை -- சிறுகதை 

பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் கண்ணீர் மல்க மனமுருகி கணவனும் மனைவியும் மனதார ஆண்டவனை வேண்டினார்கள்.அமைதியான சூழலில் ஆள் அரவமற்று கோவில் பளிச்சென்றிந்தது.
ஒன்றாக பின்னி பிணைந்து விருட்சமாக வளர்ந்திருந்த ஆலமரமும் வேப்பமரமும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.
ஆந்த கணவனும் மனைவியும் மனதில் சோகமே உருவாக அந்த மரத்தடியில் போடப்பட்டிருந்த படிக்கட்டில் வந்து அமர்ந்தார்கள்.
“ஏங்க இந்த அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் எத்தனை வருசம் வந்து சுத்தியிருப்பேன். போகாத கோயிலுண்டா? குளிக்காத குளமுண்டா? இந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? கல்லுங்கறது சரியா தான் இருக்கு”
“தெய்வானை..தெய்வத்தை நொந்து பயனில்லை. எ ல்லாம் நம்ம விதி”
“நாம என்ன வீடு வாசல் நகை நட்டு காசு பணம் பட்டம் பதவி வேணும்னாக் கேட்டோம்”ஒரே ஒரு குழந்தைதான கேட்டோம்?. கடைசிகாலத்தியே நம்மை அநாதை பொணம்ன்னு ஒதுக்காம கொள்ளி வைக்க ஒரு குழந்தையைத்தானே கேட்டோம்.அதை கொடுக்க மனசில்லாத கடவுளை கல்லுங்காங்காம வேறு எப்படி சொல்றது?”
கணவன் மாரிமுத்து கண்ணீரைத் துடைத்தபடி “எல்லாம் நம்ம விதி”
இவர்களுடைய பேச்சை அமைதியாக எதிர்புறம் அமர்ந்திருந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபன் கேட்டுக் கொண்டிருந்தான்.
மெல்ல அமைதியாக அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஐயா மன்னிக்கனும். உங்களுடைய பிரச்சனையில் தலையிடுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்..”
கணவனும் மனைவியும் வாலிபனை ஏற இறங்க பார்த்தாhகள்.அகன்ற நெற்றியில் சிறிதளவு விபூதி .நடுவே குங்குமம். தெளிந்த முகம். தெளிவான பார்வை.மீண்டும் கணவன்  மனைவியை பார்க்க, மனைவி கணவனை பார்க்க,
“ம். சொல்லு தம்பி”
“இந்த அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் கோயிலில் நம் முன்னோர் வளர்த்தது ஏன் தெரியுமா?”
கோயிலுக்கு ஆயிரம் பேர் வருவாங்க போவாங்க. நல்லவன் கெட்டவன் அத்தனை பேரும் விடுகின்ற மூச்சில் கிருமிகள் வெளிப்படும் .இந்த வேப்பமரம் காற்றுக்கும் சரி , நிழலுக்கும் சரி கிருமியை அழிக்கின்;ற ஆற்றல் உள்ளது.
அதே போல் தான் இந்த அரசமரமும், கோயிலின் இருக்கும் தேவையற்ற சப்தங்களை தன்னிடம் இழுத்து அடக்கி கொள்ளும் ஆற்றல் இந்த அரசமரத்துக்கு உண்டு.”
ஆமாம் தம்பி. நீ சொல்றது சரிதான்.
“ஏம்பா புள்ளை உண்டாகனும்மின்னா புள்ளையார் இருக்கிற அரசமரம் வேப்ப மரத்தை சுததனுமின்னு, பெரியவங்க தானே சொல்லியிருக்காங்க? எனக் கேட்டாள் தெய்வானை.
உண்மை தானம்மா..சும்மா முணு சுத்து, ஒன்பது சுத்துன்னு சுத்தி பயனில்லை.ஒடம்பில் வியர்வை வெளியே வரணும்.அந்த அளவுக்கு நிறைய தடைவ மனது ஒன்றுபப்ட்டு இரண்டு மரத்தையும் சுத்தனும்.பின் மரத்தடியில் உட்கார்ந்து ரெண்டு மரத்தின் காற்றையும் குறைந்தது கால் மணி நேரம் சுவாசிக்கனும்.கற்ப பையிலுள்ள கிருமிகள் அழியும்.இதுதான் இந்த இரண்டு மரத்தோடு பெருமை.
எதுக்கும் நீங்க ஒருநல்ல மருத்துவரை கலந்து அவர்; சொல்றபடி செய்வது நல்லது என்றான் அந்த வாலிபன்.
தம்பி நாட்டு வைத்தியம்,சித்த வைத்தியம் எல்லாம் பார்த்தும் எந்தவித பயனுமில்லை. பணம் தான் தண்டமாச்சு. என்று சலித்தபடி சொன்னார் தெய்வானையின் கணவர்.
“அய்யா இப்போ எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்திருச்சு. அறிவியல் முறையில் குழந்தை பெற வசதி வந்துவிட்டது. M D  DGO  போன்ற மேல் படிப்பு படித்த டாக்டரை பாருங்கள்…கட்டாயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்”
கணவனும் மனைவியும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இருவரும் தலையை குனிந்துக் கொண்டார்கள்.தெய்வானை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
வாலிபனுக்கு ஏதோ போலாகியது.
கணவன் மனைவியை அணைத்தபடி கண்களை துடைத்துவிட்டு,
தாழ்ந்த குரலில் அதற்கு வழியுமில்லை தம்பி.
ஐயா…நீங்க சொல்றது…”
ஆமாதம்பி …நாட்டு வைத்தியர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதால என் மனைவியின் கற்பப்பை புண்ணாகி கடைசியில் கற்ப்பபையை எடுத்துவிட்டோம் என கண்ணீர் பொங்க சோகமாகானார்.
அரச மரத்திலிருந்து படபடவென றெக்கையை அடித்துக்கொண்டு  நிறைய பறவைகள் பறந்தன.
ஐயா கவலைப் படாதீங்க. எத்தனையோ அனாதை மடங்கள்   உள்ளது. ஆதில் ஏதேனும் ஒரு குழந்தையை சட்டபடி எடுத்து வளருங்களேன். ஏன்று வாலிபன் சொன்ன பின்பு கணவனும் மனைவியுமு; ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டனர்.
வாலிபனின் கையைப் பிடித்தபடி தம்பி இந்த யோசனையும  இருந்துச்சு. ஆனா அந்த குழந்தை ஏழையாவும்ஈ அதே சமயம் தாய் தகப்பன் இல்லாத அனாதையாவும இருக்கணும் . அப்பதான் அது எங்களை உண்மையான தாய் தகப்பனா நினைச்சு வளரும்.ஆனா அந்த மாதிரி கிடைக்கலயே..”
கண்டிப்பா இந்த உலகத்தில் நீங்க சொல்கிற மாதிரி ஒரு குழந்தை கிடைக்கும் அய்யா…கவலை படாதீர்கள். ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழி காட்டுவான்.என்று சொல்லியபடி விடை பெற்றான் அந்த வாலிப்ன். சில பறவைகள் அந்த வேப்பமரத்தில் வந்து ஒய்யாரமாக அமர்ந்தன.

ஒரு மாதம் கழித்து, கோவை வீரபாண்டி பிரிவில்…
பச்ச ஒடம்புக்காரின்னு கூட பாக்காம…நீ  பண்ணுனது கடவுளுக்கே பொறுக்காது டீ” இன்னும் கெட்ட வார்த்தைகளால் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.

சு;சீ…ஓடுகாளி அவுசாரி…கூடப்பிறந்தவ மாதிரி உன்னை பார்த்துக் கொண்டு, பிரசவத்துக்கெல்லாம் செலவுச் செஞ்சு பாத்துக்pட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.” இது அந்த சுப்பம்மா.

இன்றைக்கு பொது கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆள் சேர்க்கிற நிலையில,; காசு வாங்காமலேயே அவர்களை சுற்றி ஒரு பெரும் கூட்டம் சேர்ந்தது.

முன்னால் நாம் சந்தித்த அதே வாலிபன் போலிசுக்கு போன் செய்தான். சுற்று நேரத்தில் போலிஸ் இரு பெண்களையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றது.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாலதி விசாரணையை துவக்கினார்.
“அம்மா நான் கூலி வேலை செய்த போது மேஸ்திரியை காதலித்து கல்யானம் பண்ணிட்டேன்.புருசன் குடிகாரன்.தினம் தினம் அடி உதைதான். பொறுக்க முடியாமல் சித்தி வீட்டுக்கு ஓடி போனேன்.
அவர்கள் என்னை ஏற்கவில்லை. எங்க போறதுன்னு தெரியலே..அப்ப தான் இந்த சண்டாளி எனககு அறிமுகமானா…”

அதற்குள் அந்த பெண்…
“அம்மா இவ என்னை சந்திச்சப்ப இவ நாலு மாசம் உண்டாயிருக்கறதாவும், கருவை கலைக்கணுமின்னும் சொன்னா.

நான் தான் வேண்டாம்..உனக்கு நல்லபடி பிரசவம் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.ன்னு சொல்லி 7 மாசத்திற்க்கு அப்புறம் நான்தாம்மா அவளுக்கு வேண்டியதை நானே செஞ்சு அவ பிரசவத்தையும் பாத்துக்கிட்டேன்.”
ஆவேசாம்மா பேசிக் கொண்டிருந்த சுப்பம்மாவை..கோபத்துடன் இடைமறித்தாள் அந்த பெண்.

“புள்ளை பிறந்தது. ஆதை நல்ல விலைக்கு வித்துடுலாம். ஆஸ்ப்பிட்டல் செலவு போக ஆளுக்கு பாதிழன்னு சொல்லி நான் பெத்த ரெண்டு குழந்தைகளையும் எனக்கு தெரியாமல் பெத்த நாளே வித்துட்டாம்மா…எனக்கு பணமும் தரல..வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாம்மா..”
இல்லைம்மா…அவ…என்று சுப்பம்மாள் சொல்ல வருவதற்குள்…
மாலதி தன் கையில் லத்தியை எடுத்து நாலு போடு போட்டார்…உண்மையை சொல்லுடி… குழந்தைகள் எங்கே? யார் கிட்ட வித்த?”

அய்யோ..அடிக்காதீங்க..உண்மையை சொல்லிடறேன்.

“ரைட்டர் இந்த மூதேவி சொல்றதை வாக்குமூலமா எழுதுங்க…”
அடுத்த 1 மணி நேரத்தில் ஆய்வாளர் 7 பேர் கொண்ட கும்பலை அள்ளிக் கொண்டு வந்தது.

அதில் நாம் முதலில் சந்தித்த அந்த கணவன் மனைவியும் இருந்தார்கள்.
“ஏய்..இங்க வா…உன் பேரு என்ன..ஃ”
“தெய்வானை ங்கம்மா”
என்ன நடந்ததுன்னு உணைமையைச்  சொல்லு. பொய் கிய்யுன்னு சொன்ன..மவளே  தெரியுமில்லை என்ன நடக்குமின்னு?

“அம்மா எனக்கு ஒரு அனாதை கொழந்த வேணும்ன்னு கேட்டிருந்தேன்..அதோ அந்த பொம்பளதான் என் தங்கச்சி பிரசவத்துல குழந்தையை பெத்துப் போட்டுட்டு அனாதையை எங்களையும் இந்த குழந்தைகளையும் விட்டுட்டு போயிட்டா…இதுகளை வேணும்ன்னா நீங்க எடுத்துக் கோங்க…ன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு குழந்தையை ஒரு மாசததிற்கு முன்னாடி எங்கிட்ட கொடுத்தாம்மா…வேற எதுவும் எனக்கு தெரியாதும்மா..”என்று ஆய்வாளர் காலில் விழுந்த தெய்வானை “அம்மா தயவுசெஞ்சு இந்த குழந்தையை என்னிடமிருந்து பிரிச்சிராதிங்கம்மா..” என்று கதறினாள்.

போலிஸ் குழு கவனித்த கவனிப்பில், அந்த கும்பல் ஒரு சமூக விரோத செயல்களை நீண்ட காலமாக செய்து வந்தது தெரிய வந்தது.
தடமாறி வந்தவர்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததும், குழந்தை பிறந்தால் அதை விற்று விடுவதுமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அங்கு வந்த அந்த வாலிபன், ஆய்வாளர் மாலதியை பார்த்து,
அம்மா நான்தான்மா உங்களுக்கு போன் பண்ணினேன். இந்த பிரச்சனைக்கு நான்தான்மா காரணம்.”

என்ன சொல்ற?’
“ஆமாம்மா..இந்த பெண்தான் என்னோட பொஞ்சாதி..ஒரு காலத்தி;ல் மனசு சரியில்லாம குடிப் பழக்கதிற்கு அடிமையானேன். நூன் ஒரு மேஸத்திரியாய் இருந்ததனாலே..கிடைத்த் பணத்;தையெல்லாம் தண்ணியடிக்கவே செலவு செஞ்சேன், பொண்டாட்டி என்னய்ய விட்டுட்டு ஓடீட்டா.. அப்புறம் கொஞ்ச நாளுக்கு பிறகு மனம் திரும்;பி வந்து பார்த்தால் மனைவியைக் காணோம்.”
சொல்லி முடிப்பதற்க்குள்..அவன் மனைவி ஓடி வந்து அவனைக் கட்டி பிடித்தாள்..”என்னைய மன்னிச்சிருங்க…”

“இந்தாப்பா உன் மனைவிய சந்தோசமா கூட்டிட்டு போ..ஆனா கோர்ட் கேசுன்னு விசாரணைக்கு கூப்பிட்டா வரணும் தெரிஞ்சதா? இந்தா உன் குழந்தைகள்”

“அம்மா…,இதுல ஒரு குழந்தைய அந்த தம்பதிகளிடமே கொடுக்க விருப்பப்படறேன். ஏனக்கு அவங்களை முன்னமே தெரியும். புhவம் கோயிலில் அவர்கள் அழுத அழுகை இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. அவர்களே என்னுடைய இந்த ஒரு குழந்தையை வளர்க்கட்டும். இந்த குழந்தை அவர்களுக்கே சொந்தம். நாங்க எக்காலத்திலேயும்
சொந்தம் கொண்டாடமாடடோம்ன்னு எழுதி தர்றோம் ம்மா”

கண்கள் குளமாக அந்த வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…..தெய்வானை.

- பிரபல கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, June 24, 2012

சட்டத்தின் படி ....(2)

சென்ற வாரம்
 ஒவ்வொரு பெட்டியாக கதவு ஜென்னலை அடைத்து வந்த ஊழியர் , கதவோரத்தில் ஒரு பெண்ணும், குழந்தையும் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.
          
ராசாத்தி ராசாததி கதவைத திற. யேய் கதவைத் திற. ஏன படபடவென கதவைத் தட்டினான் வேலு.
ஏய் வேலு என்ன இன்னும் தெளியலையா? ச்சி இந்தாட சாவி. உன் பொண்டாட்டி குழந்தையை தூக்கிட்டு போயிட்டா..என்று வெறுப்புடன் சாவியை கொடுத்தார் பக்கத்து வீட்டு பார்வதி.

புதறி போன வேலு, அக்கா எங்கக்க போனா..? நாக்கு குழறியது.

“போடா…உன்னால அவளுக்கு நிம்மதியேப் போச்சுடா…ஒரு தடவையா ரெண்டு தடவையா? தினம் தினம் இப்படி பண்ணினா எவதாண்டா பொறுத்துக்குவா? அவளுக்கு என்னடா குறைச்சல் பாவம்டா அவ…”

அக்கா…இனிமேல் நான் சத்தியமா…என்று வேலு சொல்லுவதற்கு முன்..
“ஆமாண்டா நீயும் உன் சத்தியமும்…”

வேலு அழுகையுடன்” அக்கா சொல்லுக்கா..அவ எங்க போறன்னு சொன்னா?”

“ச் சீ…அழுகாதே.என் தம்பியா இருந்தா வெட்டியே போட்டிருப்பேன். ஏவ்வளவோ எடுத்துச சொன்னேன். இந்த குழந்தையையும், இனி வர குழந்தையையும் காப்பாத்தனும்னா நான் போயிதான்கா ஆகணும்ன்னு போயிட்டா”
ஏதோ நினைவு வந்தவளாக..”ஆங்…மெட்ராஸ்ல அவங்க ஒண்ணுவிட்ட அண்ணன்..அது ஓரு கடலுக்கு பக்கத்திலே கடை வெச்சிருக்கானாம்..அங்கே போறேன்னு சொன்னாள்”

ஆடி போன வேலு கதவை திறந்து..பையில் வேட்டி சட்டையை திணித்து, சாமி அலமாரியில் இருந்த கவரில் 200 ருபாய் குறைய 800 ருபாய் இருந்தது. ருhசாததி 200ருபாய் எடுத்து கொண்டதை நினைத்து தலையில் இடித்து கொண்டு இழுதான்.

கதவை சாத்திவிட்டு சாவியை பக்கத்து வீட்டு பார்வதியிடம் கொடுத்தான்.
“போடா போய் அவளை தேடி கூட்டிட்டு வர்ர வழியைப்பாரு”

ஓட்டமும் நடையுமாக திருப்பூர்   ரயில் ;நிலையத்தை அடைந்தான்.
“சார் மெடராஸ் ரயில் எப்ப வரும்?”
“யோவ் மணி என்ன? அது போய் அரைமணி நேரமாகுது.”
தலையில் இடிவிழுந்தது  போல் விக்கித்து நின்றவனைப் பார்த்து “என்ன பேய் அறைஞ்ச மாதிரி நிக்கற?
சுதாரித்து கொண்ட வேலு..”சார் மெட்ராஸ் எத்தனை மணிக்கு போய் சேரும்?”
“யோவ்..இது நம்ம நாட்டு ரயில். நுpச்சயமா சரியான நேரத்திற்கு போகாது. சுமாhர் 5.30 லிருந்து 6 மணிக்குள் போய் சேரும்.”

“நன்றிய்யா” என்று வொல்லிக் கொண்டே லாரி ஸ்டேண்டை நோக்கி ஓடினான்.

சென்னை துறைமுகம் செல்ல பனியன் லோடுடன் லாரியின் டிரைவர் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

“அண்ணே மெட்ராஸ் போகுமான்னே? “
“இல்லை லண்டன் போகுது வர்ரியா?” ஏன்றார் எரிச்சலுடன்..
அப்போது அங்கு வந்தார் ஒருவர்..
“யோவ் இன்னுமா நீ கிளம்பல?”
சாh ;கிளினர் இன்னும் வரல..வந்ததும் கிளம்ப வேண்டியதுதான் “

வேற டிரைவர் கிளினர போடச்சொல்லி இந்த மேனேசரை எத்தன தடைவ சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான். யோவ் இப்ப நீ கிளம்பறயா இல்ல வேற சிப்ட் ஆளுகள வர்ற சொல்லட்டா?


இதோ சார் கிளினர் வந்துட்டான். நாங்க கிளம்பறோம்.

“சார்…..”
வேலுவை பார்த்து எனைய்யா என்றார் டிரைவர்.

ஏன்னையும் ஏத்திட்டு போங்க சார்…தயவு செய்து…

சென்னையை நோக்கி லாரி புறப்பட்டது.

தன்னோட சொந்த கதையை டிரைவரிடம்   புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம் கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க. அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி வேணும்னா கேளு”.

தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.

மனைவி கிடைத்தாளா, இல்லையா?
தொடரும்….


-பிரபல கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, June 13, 2012

JUVI & NAKEERAN -THIS WEEK-EBOOK DOWNLOAD

இந்த வாரம் ஜூ. வி யும், நக்கீரனும்.

JUNIOR VIKADAN



NAKKEERAN



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.