சுட சுட செய்திகள்

Saturday, October 7, 2017

பேய்மரம்

Nga;kuk;
இரவு 11 மணி..
அடர்ந்த இருட்டு எங்கும் பனிபோல் படர்ந்து இருந்தது.
வெறி நாய்களின் ஊளைச் சத்தம் காதுகளின் வழியே ஊசிபோல் பாய்ந்துக் கொண்டிருந்தது.
ஒற்றைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார் வேலப்பன்.
வேலப்பன்…50 வயதைத்தாண்டிய வாலிபன்.
இன்றைக்கும் அவரில்லாமல் கிராமத்தில் பஞ்சாயத்து நடக்காது.
யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் புதிர்கேள்வி கேட்டு ஆளை மடக்குவார்.
அந்த ஊரின் பூசாரிக்கும்ரூபவ் இவருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.
சாதியை உயர்த்தி பிடிக்கும் ஒசத்தியான சாதி இந்த பூசாரி.
உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த கருத்த தேவர் இந்த வேலப்பன். காதில் அணிந்திருக்கும் வைரக்கடுக்கன் அவர் கம்பீரத்தைச் சொல்லும். கைத் தேர்ந்த விவசாயி.
அம்மை நோயில் தொடங்கிரூபவ் மஞ்சள் காமாலை வரைக்கும் நோய்களை களையாடும் மூலிகைகள் அறிந்த அனுபவ சித்தன் இந்த வேலப்பன்.
ஆனால் வெறுங்கல் ஆட்டுக்கல்லில் ஆடுவதுபோல் சதாகாலமும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். நித்தம் புதுத் தத்துவத்தை உதிர்க்கும் பேராற்றல் இவருக்கு உண்டு.
“ஏண்டா இப்படி நனைச்சு சுமக்குற..?” வேண்டாத கவலையை மண்டையில் ஏற்றிக்கொண்டு திரிந்த சுப்புவிடம் இவர் இப்படித்தான் சொன்னார்.
நனைந்த துணியை சுமப்பதுபோல் தேவையில்லாத சுமையை சுமக்குறியாடா முட்டாள் என்பதுதான் அந்த தத்துவத்தின் அர்த்தம்.
இன்னும் அந்த நாய்கள் தன் ஊளை சத்தத்தை நிறுத்திய பாடில்லை.
புது வேட்டிரூபவ் மஞ்சள் நிற கறையோடு அவர் இடுப்பில் தூளியாடிக் கொண்டிருந்தது.
தூரத்தில் ஒற்றை ஆலமரம். தனியே தன் விழுதுகளோடு இளைப்பாறிக் கொண்டிருந்தது. மெல்லிய நிலவொளி. அந்த ஆலமரத்தின் இலைகளின் ஊடே யாரோ விட்ட
அங்கே தான் சில ஆண்டுகளுக்குமுன் அந்த ஊரிலிருந்த மத்தம்மா தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து போனாள். தூ}க்கு மாட்டிக்;கொள்ள அவள் பயன்படுத்திய அவள் கட்டிய புடவைரூபவ் இன்னமும் அங்கே அந்த மரத்தின் கிளைகளில் தான் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது.
பாவம் அந்த மத்தம்மா. கை கால் விளங்காத கணவனோடுரூபவ் இட்லி சுட்டு பிழைப்பை நடத்தி வாழ்ந்த முப்பது வயதைத்தாண்டிய பெண்.
அந்த ஆலமரம்ரூபவ் பேய்கள் உறங்கும் இடமாக இன்றைக்கும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
பல உயிர்கள் அந்த ஆலமரத்தைச்சுற்றித்தான் பலியாகி இருக்கின்றன. சுமார் 100 ஆண்டுகள் பழமையான அந்த மரத்தில் வெளவால்கள் கட்டிகட்டியாகத்தான் அடர்த்தியாக தொங்கும்.
அந்த பக்கத்தில் பகல் நேரத்தில் செல்லவே அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள்.
அன்றைக்கு ஒரு 10 மணி இருக்கும். இட்லிக்கடையை பூட்டிவிட்டுரூபவ் இயற்கையை கழிக்க ஆலமர புதரோரம் ஒதுங்கியிருக்கிறாள். அதற்கு பிறகு வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளது செய்கைகளே வித்தியாசமாக இருந்தது. தாதா தைதை என்றபடி பினாத்திக்கொண்டிருப்பாள்.கைகளை இணைத்தபடி தலையாட்டடியபடி அமர்ந்துக்கொண்டிருப்பாள்.
மத்தம்மா இப்போதெல்லாம் இட்லி சுடவதில்லை. தான் செய்வது என்வென்றே தெரியாமல்ரூபவ் நடக்கமுடியாத கணவனை துண்டு துண்டாக வெட்டிப்போட்ட முத்திப்போன பைத்தியம்.
பைத்தியமாக திரிந்து கொண்டிருந்தாள். இட்லிக்கடை வாசலில் அரைகுறை துணியோடுரூபவ் போற வர்ற மனிதர்களை திட்டிக் கொண்டும்ரூபவ் கல்லெடுத்து அடித்துக்கொண்டும் இருப்பாள் மத்தம்மா.
ஒருநாள் தன்னை யாரோ வந்து அழைப்பதாகவும்ரூபவ் தன் புருசனை பாக்கபோவதாகவும் சொல்லிக்கொண்டு ஆலமரம் கிளையில் தன் சேலையைக்கட்டி தூhக்குப்போட்டுக்கொண்டாள். அவள் ஏன் செத்தாள் என்பது இப்போது வரை மர்மம்தான்.
“யோவ்…நடுசாமத்துல நீ வேணும்னா போய்காட்டு அப்ப நம்புறோம்.. பூசாரி விடுவதாயில்லை”
வேலப்பன் முகத்தில் புத்திசுவாதீனம் மழுங்கி நடைபிணமாய் வாழுறாங்க.. அந்த இடத்துக்கு ராத்திரி 12 மணிக்கு போய் காட்டுன்னா எப்படி இருக்கும். ஆனாலும் இந்த கேடுகெட்ட முட்டாள்தனமான மக்களை முடக்கும் மூடநம்பிக்கைக்கு ஒரு பெரிய பூட்டா வாங்கி பூட்டிரனும் என்கிற யோசனையில் பெருமூச்சு விட்டபடி சபையைப்பார்த்தார்.
“சரிங்க…வாழுற உலகத்துல பேயும் இல்லை.. பிசாசும் இல்லை. நாம்தான் அப்படி மாறிக்கிறோம். உங்களுக்குச் சொன்னா புரியாது. நான் போகத்தயார்தான். ஆனால் ஒரு கண்டிசன்….”
மாறி மாறி பார்த்தார்கள் பஞ்சாயத்தில் அமர்ந்திருந்த 60 ஐ தாண்டிய பெருசுகள்.
“நான் போயிட்டு வந்த 5 நாட்களுக்குள் எனக்கு ஒன்னுமே ஆகலேன்னாரூபவ் இந்த பூசாரி என் வீட்டு வேலையையும்ரூபவ் காட்டு வேலையையும் எந்த நிபந்தனையும் இல்லாம 100 நாளைக்கு செய்யனும்”.
“என்னது..? நானா? யோவ்…என் குலம் கோத்திரம் என்னன்னு தெரியுமில்லை..? சாத்திரத்தை படிச்சவன்யா.. அந்த தெய்வத்துக்கூட நேரடியா பேசற அதிகாரம் படைச்சவன்யா நான். பிரம்மாவோட முகத்துல பிறந்துரூபவ் தெய்வகடாட்சமா பிறந்தவனைரூபவ் கடவுளுக்கு அடுத்தப்படியா நூ}ல் போட்டவனையா வம்புக்கிழுக்கிற.. வேண்டாம் வேலப்பா… வேற வினையாயிரும்… பூனுலோட கோபத்துக்கு ஆளாகிறாத..!!” கோபம் கொப்பளிக்கரூபவ் அருகிலிருந்த சொம்பில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“சாத்திர சம்பிரதாயத்தின்படி 100 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள் இறந்த ஆவிகளின் கூடாரமாகிவிடும். அதுவும் விழுதுகளை இறக்கும் ஆலமரம் எல்லாம்ரூபவ் கெட்ட ஆவிகளின் சொர்க்க பூமி. இதை நான் சொல்லல. கருட புராணத்தில் சொல்லியிருக்கு. ஆவிகள் எப்போதும் அங்கே அமர்ந்தபடி தன் ஜீவனை உள்; நுழைக்க ஏதாவது உடம்பு கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டே இருக்கும். யாராவது அந்தப்பக்கம் போனால் அந்த உடம்புக்குள் போய்ரூபவ் தன்னோட வேலையைக்காட்ட தொடங்கி விடும். இந்த ஊர்; நல்லா இருக்கணும்ங்கறக்காக நான் இதை சொல்றேன். அந்த பக்கம் யாரும் போகாதீங்கன்னு சொன்னா கேக்கணும். இந்த பேய்களை விரட்ட எனக்கு தெரிஞ்ச நடேச ஐயரைக் கூட்டி வந்துரூபவ் கொஞ்சம் ஆயிரம் செலவு செஞ்சு அதுக்கப்புறம் மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்ன்னு சொல்றேன். அதையும் மீறி கேக்கலைன்னா நான் என்ன பண்றது… இந்த மாதிரி பலபேர்த்த பலிகொடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லை. இந்த பேய்களை இன்னமும் விரட்டாமலிருந்தால்ரூபவ் அவையெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக நாம் குடியிருக்கும் பகுதிக்கு இடம்பெயர ஆரம்பித்துவிடும். ரத்தக்காவு கேக்கும். பரவால்லையா… நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க… சாத்திரத்தையும்ரூபவ் வேதத்தையும் படிச்சவன் நான். எங்க கோத்திரத்துக்குன்னு ஒரு தர்மம் இருக்கு. கடவுள் சொன்னபடி உங்களையெல்லாம் காப்பாத்தலாம்ன்னு நினைச்சா என்கிட்டயே வந்து விதண்டாவாதம் பேசறீங்க. இதெல்லாம் நடக்கும்ன்னு  சொன்னா…. எப்படி நடக்கும்ன்னு எதிர்கேள்வி கேக்கறீங்க… வேலப்பன் என்னடான்னா என்னையே சவாலுக்கு கூப்பிடறானே…என் குலம் கோத்திரம் தெரியாம…?”
வியர்க்க விறுவிறுக்க ஒரே மூச்சில் பேசிமுடித்தார் கோயில் பூசாரி.
அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் பீதியுடன் மாறிமாறி பார்த்துக்கொண்டார்கள்.
அப்போது வேகமாக துண்டை உதறியபடி எழுந்தான் தப்பு தாசாணி.
அந்த ஊரின் தப்பாட்டக்காரர். ஊராட்சி செய்தியை ஊருக்கெல்லாம் சொல்லும் பறை அறிப்பாளர்.
“வேலப்பன் சொன்னதில் என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியல. உயிரை பணயம் வைத்து அங்க என்னதான் இருக்குன்னு நமக்கெல்லாம் காட்டப்போறார். அவரை நம்பி ஒரு குடும்பமே இருக்கு. இதுவரைக்கும் இந்த ஊருல யாரும் அந்த ஆலமரம் பக்கம் போனதே இல்லை. ஏன்? பயம். அந்த பயத்தை போக்கறதுக்காக வேலப்பன் போறார். உண்மையாவே பூசாரி சொலற மாதிரி அங்க பேயும் பிசாசும் இருந்தாரூபவ் வேலப்பன் நாளைக்கு நம்மோட இருக்க மாட்டார்.
“யோவ் தாசாணி நீயெல்லாம் பேச வந்துட்ட… பறையடிக்கிற பைய.. நேருக்கு நேரா நின்னு கத்தரதுக்கு நீங்க இன்னும் வளரல… உக்காரு” பூசாரியின் வலதுசாரி முத்தையா அவனைப்பார்த்து மிரட்டும் தொணியில் சொன்னார்.
தாசாணி கூட இருந்த அவன் ஜாதியை சேர்ந்தவர்கள் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரிரூபவ் கோபத்தோடு எழுந்தார்கள்.
“என்னங்கையா இது… பேய் பத்திய பஞ்சாயத்துன்னு நினைச்சுட்டு வந்தாரூபவ் ஜாதி பிரச்சனையைக் கிளப்புறீங்க… ஏன் எங்களுக்கெல்லாம் மானம்ரூபவ் ரோசம் கிடையாதா..? என்னமோ நீங்கல்லாம் மட்டும்தான் இந்த உலகத்துல பிறந்து மாதிரிரூபவ் நாங்கெல்லாம் ஏதோ சும்மா பிறந்துட்ட மாதிரியும் இல்ல நீங்க பேசறீங்க..”
நிறுத்துங்கையா…ஐயரை திட்டுறதுக்கு இங்க யாருக்கும் உரிமை இல்லை. இந்த ஊரைக் காக்குறரூபவ் தெய்வத்தோட தினந்தோறும் பேசி நமக்காக நல்லது செய்யறவரு. அவரை சவாலுக்கு கூப்பிடறதெல்லாம் எனக்கு சரியாப் படல. வேலப்பன் கேட்கிற மாதிரியெல்லாம் இந்த பஞ்சாயத்து உடன்படாது. எந்த நிபந்தனையும் இல்லாம போறவன் போலாம். ஒருவேளை போறவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னாரூபவ் அவன் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் எழுதி வைக்கிறதுக்கு இந்த ஊர் நாட்டாமையான நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஐயரை வம்பிக்கிழுக்கிறதுரூபவ் ஜாதி பிரச்சனையை கிளப்புறதுன்னு பண்ணுனீங்கன்ன அதுக்கு நான் உடன்பட மாட்டேன்.
சாமிக்கண்ணு…இவர்தான் இந்த ஊரின் நாட்டாமை. பெரிய புத்திக்காரர். யாரையும் பகைச்சுக்க மாட்டார். ஆனால் கோபக்காரர். அந்த ஊரின் பெரும் பகுதிக்கு சொந்தக்காரர். செல்வந்தர். இல்லைன்னு வர்ற எல்லோருக்கும் ஏதாவது கொடுக்காம அனுப்ப மாட்டார். அவர் பேச்சை மீறி யாரும் எதுவும் செய்வதற்கு அங்கு யாருக்கும் தைரியம் கிடையாது.
ஐயா… நன்னா கேட்டுக்கோங்க…போறவன் யாருமே திரும்பபோறதில்ல… பகுத்தறிவு பேசாம நான் சொல்றத கேளுங்க… நடேச ஐயரை கூட்டியாந்து இந்த பிரச்சனைக்கெல்லாம் நான் தீர்வை சொல்றேன்.”
அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தரூபவ் வேலப்பன் மீசையை முறுக்கியபடிரூபவ் யாரு திரும்ப போறதில்லை…. எவனுக்கு நெஞ்சில மஞ்சாசோறு இல்லையோ அவன்தான் திரும்பபோறதில்லை. கடவுளே இல்லைங்கிறவன் பேயை ஏத்துக்குவனா… யோவ் ஐயரே… நீ பேய் விரட்டி சம்பாதிக்க எங்க ஊருதான் கிடைச்சுதா… மனுசன மனுசன் பயமுறுத்தி வாழறது ஒரு பொழப்பா… ஆவியாவது… பிசாசாவது…
இப்பவும் சொல்றேன்… நான் போறதுக்கு தயார்தான். நான் முன்னமே சொன்னமாதிரி ஐயருக்கு அதுல இஸ்டம் இல்லைன்னா அதாவது சவாலுக்கு ஒத்துக்கலைன்னா நான் ஒன்ணும் கவலைப்பட போறதில்லை. எனக்குத் தேவை இந்த கிராமத்தோட பயத்தை நீக்கனும். அந்த ஆலமரத்தின் நிழல்களில் நாமெல்லாம் அமர்ந்தபடி கதையளக்கனும் அப்படிங்கிறதுதான். அது மட்டுமில்லை. எனக்கு நாட்டாமை கொடுக்குறதா சொல்ற ஒரு ஏக்கர் நிலமும் தேவையில்லை. ஏன்னா திரும்பி உயிரோடு வரப்போறவனுக்கு எதுக்கு நெத்திக்காசு.? எதுவும் தேவையில்லை. இன்னைக்கு இராத்திரியே நான் போக தயார். ஏற்பாட்டை செய்யுங்க”
ஐயர் நெஞ்சிலே உறுத்திக்கொண்டிருந்த பூனூலை சரிப்படுத்திக்கொண்டார்.
வேலப்பா…உன் தைரியத்தை நான் பாராட்டுறேன். ஆனால் பகுத்தறிவு பேசிக்கிட்டு சாமியை பகைச்சுக்காதன்னு சொல்ல வர்றேன்.
அதெல்லாம் இருக்கட்டும் ஐயரே…போறவனை சும்மா தடுக்கப்பாக்காதீரு. என்ன ஏற்பாடு செய்யனுமோ செய்யுங்க முதல்ல… தாசாணிக்கு கிண்டல் தொனி கொஞ்சமும் குறையவில்லை.
“அமாவாசை அன்னிக்குத்தான் போகணும். ஆலமரத்தில் இருந்து கிழக்கால போற வேரை வெட்டியாந்துரூபவ் சாமியோட காலடில வைக்கணும். வேரை புடுங்குறதுக்கு முன்னாடிரூபவ் பர்லியாத்துல இருந்து 21 குடம் தண்ணீரை ஆலமரத்தோட வேர்ல பாய்ச்சிரூபவ் நான் குடுக்குற இந்த 9 ஆணியைரூபவ் நான் சொல்லிக்கொடுக்குற மந்திரத்தை 9 தடவ வார்த்தை மாறாம உச்சரிச்சுரூபவ்வடக்கால போற கிளையில அசைய முடியாத வகையில அடிக்கனும். அப்புறமா அந்த கிளையிலிருக்கும் புல்லருவி இலையை பறிச்சுரூபவ் அதுக்கு மேல கற்பூரம் ஏத்திரூபவ் அணையாம 5 நிமிசம் பாத்துக்கணும். அந்த நேரத்துல ஊதுபத்தி பத்தி பத்த வைச்சுரூபவ் 9 சுத்து அந்த ஆலமரத்தை சுத்தியாந்துரூபவ் கடைசியா நான் சொன்ன வேருக்குரூபவ் பாவ விமோசனம் மந்திரத்தை சொல்லி புடுங்கிவரணும்.”
பூசாரி சொன்னதைக்கேட்டுரூபவ் ஊரே வாயடைத்து நின்றது. வேலப்பன் காது திறந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான்.
“இதுல ஒண்ணு தப்பா  ஆனாலும்ரூபவ் அந்த பேய்கள் இந்த பூஜையை பண்ணுரவன்ன கொன்னுடும். அது மட்டுமில்லாமல் அந்த ஆவிகள் கொட்டம் இன்னும் அதிகரிச்சுரூபவ் மக்கள் நடமாட்டமுள்ள இந்த பகுதிக்கு இடம் பெயர்ந்துரூபவ் எல்லாத்துக்குள்ளேயும் புகுந்துக்கொள்ள ஆரம்பிச்சிரும். நம்மள காப்பாத்திக்கிட்டு இருக்க அந்த ஆத்தானாலையே ஒண்ணும் செய்ய முடியாது பாத்துக்கோங்க….” என்றபடி முகத்தை துடைத்துக்கொண்டார் பூசாரி.
காதுக்குள்ளே குச்சியை விட்டபடிரூபவ் தாசாணி மெல்ல வேலப்பனைப் பார்த்தான்.
வேலப்பனின் மெல்லிய புன்னகை அவனுக்கும் ஒட்டிக்கொண்டது.
என்ன வேலப்ப தேவரே… ஐயர் சொன்னதை நல்லா கேட்டுக்கிட்டீங்களா…? தப்பா பண்ணுனீங்க.. அவ்வளவுதான் சோலி முடிஞ்சிடும். பாத்துக்கோங்க… என்றபடி செல்லமாக எச்சரித்தான் தாசாணி.
இராத்திரி சரியா 10 மணிக்கு எல்லாம் இங்கே வந்துருங்க.
பொண்டு பொடுசுங்கரூபவ் நடக்க முடியாதவங்க யாரும் வரவேண்டாம். தீட்டுபட்டவங்க விளக்கெண்ணய் தீபம் வைச்சுரூபவ் விண்மீன் கோலம்போட்டுரூபவ் அடுத்த நாள் வைகறை வரைக்கும் தூங்காம இருக்கணும். எல்லோரும் சரியா இருந்தாத்தான் நாளைக்கு நம்மளால இந்த ஊர்ல நடமாட முடியும். ஒருத்தர் தப்பு பண்ணினாலும் ஆள காலி பண்ணிடும்.. ஜாக்கிரதையா இருங்க.. இப்ப எல்லோரும் கிளம்புங்க. என்றபடி பூசாரி எழுந்தார்.
எல்லோரும் ஒரு திகிலோடு துண்டை உதறியபடி கிளம்பினார்கள்.
“எத்தனை நாளைக்குத்தான் இந்த மக்களை இப்படியே அறியாமையில் வைத்திருப்பார்கள். இந்த காலத்திலேயும் பேய்ரூபவ் பிசாசுரூபவ் ஆவின்னு ஊரை ஏமாத்தி பயமுறுத்தி அந்த பயத்தில் வயிறை வளர்த்துக்கொண்டிருக்கும் இதை போன்ற பூசாரிகளை என்னதான் செய்வது. ம்ம்…சரி …நாமதான் இந்த ஊரை திருத்தணும் போல இருக்கு. போவோம். என்றபடி மௌனமாக பேசியபடியே நடந்துச் சென்றார் வேலப்பன்.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
விபூதித்தட்டை எடுத்துக்கொண்டு நாட்டாமை மற்றும் ஊர் பெரியவர்களை கூட்டிக்கொண்டு வேலப்பனின் வீட்டின் முன் வந்து நின்றார் பூசாரி.
வேலப்பா…குளிச்சி முடிச்சு இந்த புது வேட்டியைக் கட்டிட்டு வெளியே வா… வரும்போது ஆத்தாவை மனசார வேண்டிக்கிட்டு வீட்டுல யாருக்கிட்டயும் எதுவும் சொல்லாம வெளியே வா என்றபடி நாட்டாமை சொல்லிக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார் வேலப்பன். விபூதி தட்டிலிருந்துரூபவ் கை நிறைய விபூதியை அள்ளி அவர் நெற்றியில் பட்டையிட்டார் பூசாரி.
கொண்டு வந்த பையிலிருந்துரூபவ் ஒரு முற்றிய தேங்காயை வேலப்பன் கையில் கொடுத்துரூபவ் வீட்டின் முன்னிருந்த வட்டக்கல்லில் உடைக்கச்சொன்னார் நாட்டாமை. பிறகு ஊதுபத்தியையும்ரூபவ் கற்பூரத்தையும் கொடுத்து அவரை அழைத்துச்சென்றார்கள்.
ஜன்னலைத்தொறந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் மகள் இளவேணி.
போகிற அப்பா வருவாரா? மாட்டாரா? கண்களில் வந்த கண்ணீரை துடைத்தபடிரூபவ் அம்மாவை பார்த்தாள்.
சித்தபிரமை பிடித்தவள்போல் வருகின்ற அழுகையை அடக்கரூபவ் வாயில் தன் முந்தானையை விழுங்கியபடி அமர்ந்துக்கொண்டிருந்தாள் வேலப்பனின் மனைவி கருத்தம்மா.
திரும்பிப்பார்க்காமல் சென்றார் வேலப்பன்.
வேலப்பா சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல… பாத்து பத்திரம்… நாட்டாமை விடை கொடுத்தார்.
நேரம் சரியாக இரவு 11 மணி..
அடர்ந்த இருட்டு எங்கும் பனிபோல் படர்ந்து இருந்தது.
வெறி நாய்களின் ஊளைச் சத்தம் காதுகளின் வழியே ஊசிபோல் பாய்ந்துக் கொண்டிருந்தது.
ஒற்றைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தார் வேலப்பன்.
கையில் அவர்கள் கொடுத்தனுப்பிய ஒற்றைக் குடம்.
ஆலமரத்தை ஒட்டியபடி இருக்கும் பர்லியாறு சலசலவென்று கரையோடு பேசிக்கொண்டிருந்தது.
வேட்டியை தூக்கியபடி மெல்ல இறங்கிரூபவ் சில்லென்ற நீரை குடத்தில் அடைத்தார்.
அங்கிருந்து 20 அடியில் இருக்கும்ரூபவ் ஆலமர வேர்களுக்கு கொண்டு வந்து ஊற்றினார்.
நாய்களின் ஊளைச்சத்தத்தை தவிர ஒன்றும் கேட்கவில்லை.
21 குடம் தண்ணீரை வேர்களுக்கு ஊற்றியாயிற்று.
காற்று வேகமாக அடிக்க ஆரம்பித்தது. ஊ…….என்ற சத்ததோடுரூபவ்காது மடல்களை பயமுறித்தியது. மெல்ல சலங்கை சத்தம் போன்ற ஜில் ஜில் மெல்லிய ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தது. யாரோ குடுகுடுவென்று ஓடிவந்துரூபவ் நிற்பது போன்றும்ரூபவ் பெரிதாக மூச்சை இழுத்து விடுவது போன்றும் சத்தம் கேட்டுக்கொண்டே  இருந்தது. தாதா தைதை தாதா தைதை….எங்கேயோ கேட்ட இந்த குரல் மீண்டும் காது மடல்களில் வந்து அமர்ந்;தது. ஆமாம்.இது அந்த மத்தம்மா சொல்றதுதான்.
எப்போதும் பயப்படாத வேலப்பன் இந்த சத்தத்தைக்கேட்டு கொஞ்சம் பயந்துபோய் சுற்றியும் பார்த்தார்.
யாரும் இல்லை. வேகமாக கையிலிருந்த நெருப்பு பந்தத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டுரூபவ் பக்கமாக வளர்ந்து நின்ற கிளையை நெருங்கிரூபவ் அங்கு ஏதாவது புல்லருவி இருக்கிறதா என்று தேடினார்.கொஞ்ச நேரத்திற்கு பிறகுரூபவ்ஆலமர இலையை சாராத வேறு இலை அந்த கிளையின் வலதுபக்கத்தில் வளர்ந்திருந்தது. மெல்ல கிள்ளி எடுத்தார் வேலப்பன்.
கொண்டுவந்திருந்த சூடத்தை அந்த இலையின் மீது வைத்து ஏற்றிய பிறகுரூபவ் ஐயர் சொன்ன மந்திரத்தை பவ்யமாக கண்ணை திறந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி முணுமுணுத்தார்.
அப்போது பக்கத்திலிருந்த புதர்கள் யாரோ வந்து ஆட்டியதுபோல் அசைந்தன.
கீச் கீச் என்றபடி சுற்றிக்கொண்டிருந்த வெளவால்கள் வேலப்பனை உரசியபடி பறந்து சென்றன.
இதயம் வெளியே வந்து விழுந்தது போல்ரூபவ் படபடவென அந்த வெளவால்களின் இறக்கைகளை போலவே துடித்தன.
வேரை தேடுவதற்காக கீழே குனிந்தார் வேலப்பன்.
குனிந்த கணத்தில் தலை தனியே விழுந்தது.
ஊரில் இருந்த ஒற்றை தைரியம் வெட்டுப்பட்டது.
ரத்தம் பீறிட அலறுவதற்கு கூட வழியில்லாமல் முண்டமாய் கிடந்தது அந்த வேலப்பனின் உடல்.
பூசாரி சொன்னபடியே நடந்துவிட்டது. துர் ஆவிகளின் சொர்க்கபுரத்தில் பகுத்தறிவு என்ன செய்ய முடியும். இரவு கழிந்தது.
கண்கள் உறங்காமல் காத்துக்கொண்டிருந்த கூட்டம் வேலப்பனின் வருகையை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தது.
“வேலப்பன் மாதிரி தைரியசாலி நம்ம ஊருல கிடையாதப்பா…”
“சும்மாவா.. மனுசன்தான்யா எல்லாம்… கடவுளுமில்லை… பேய்களுமில்லை… எல்லாம் நாமதான் அப்படீன்னு அடிக்கடி சொல்லுவார்..”
இப்படியே அவரைப்பத்திய ஒவ்வொருவரின் பார்வையையும் பரிமாற்றிக்கொண்டிருந்தார்கள் அந்த பேதை மக்கள்.
“என்ன பூசாரி… இன்னுமா காணோம். பூஜையை முடிச்சு வரதுன்னா இந்நேரம் வந்திருக்கணுமே..”
“அதுதான் நாட்டாமை.. நானும் பாக்குறேன். இந்நேரம் வேலப்பன் வந்திருக்கணும்… ஒருவேளை அந்த புல்லருவி கிடைக்கலயோ என்னமோ..”
கடிகார முட்கள் வைகறையை தாண்டியது.
ம்….சரி வாங்க இனியும் காத்திருக்க முடியாது. பூசாரி சொல்ற மாதிரி பேய்ரூபவ் வேலப்பனை அடிச்சு போட்டிருக்குமோ என்னமோ.. போய் பாத்தாத்தான் தெரியும். வாங்க போலாம் என்றபடி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டு கிளம்பினார்.
வேலப்பன் சென்ற அதே பாதையில் அனைவரும் சென்றார்கள்.
எல்லோரும் ஓரமா வாங்க.. ஒரே முட்புதரா இருக்கு. கட்டளையிட்டபடி நாட்டாமையும்ரூபவ் பூசாரியும் முன்னே செல்லரூபவ் மற்ற அனைவரும் பின்னே சென்றார்கள்.
எங்கிருந்தோ ஓடிவந்த தாசாணி கூட்டத்தின் பின்னாடி சேர்ந்துக்கொண்டான்.
எதிர்திசையில் தலைதெறிக்க ஓடிவந்த நாய் கூட்டத்தின் நடுவே புகுந்துச் சென்றது.
“ஏம்பா.. எல்லோரும் காலுல செருப்பு போட்டு  இருக்கீங்களா..? எல்லோரும் இந்தா ஆத்தாவோட திருநீறை பூசிக்கிட்டுரூபவ் ஆலமரம் பக்கத்துல வாங்க என்றபடி பூசாரி விபூதிக் கொடுத்தார்.
“சீ…போ….ஏய்… போ…” என்றபடி கல்லை எடுத்து நாயை விரட்டினான் தாசாணி.
அந்த நாய் தாசாணியையே சுற்றிசுற்றி வந்தது.
ஆலமரம் விசுபரூயஅp;பம் எடுத்தபடி நின்றிருந்தது.
இரவு விழித்திருந்த எந்த வெளவால் பறவைகளும் இப்போது இல்லை.
விழுதுகள் தரையிறங்கி மண்ணில் முகம் புதைத்திருந்தது..
“ஐயோ…. நாட்டாமை..வேலப்பன் இறந்துக்கிடக்கிறான் என்றபடி அலறியடித்துக்கொண்டு வந்தார் பூசாரி.
அப்பவே சொன்னேனே…இந்த விசப்பரிட்சையெல்லாம் வேண்டாம்ன்னு. பேய் இருக்குன்னு சொன்ன போது யாரும் நம்பலையே.. அநியாயமா போய் சேந்துட்டானே வேலப்பன் என்றபடி பூசாரி ஓலமிட ஆரம்பித்தார்.
நாட்டாமை அந்த ஆலமரத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்னும்  எத்தனைப்பேரை காவுவாங்க காத்திருக்கையோரூபவ் அந்த கருத்தம்மாவிற்கும்ரூபவ் இளவேணிக்கும் நான் என்ன பதில் சொல்வேன் என்றபடி கண்ணில் வந்த கண்ணீரை தன் நுனி விரல்களால் துடைத்து விட்டபடி வேலப்பனின் துண்டாகிப்போன தலையைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
உடலை எடுத்துவந்து வீட்டின் முற்றத்தி;ல் கிடத்தினார்கள்.
கருத்தம்மா இப்போது அழுதபோது வாயில் துணியில்லை. இளவேணி அழக்கூட முடியாமல் மௌனமாகிவிட்டாள்.
“சரி..நடந்தது நடந்துபோச்சு. பூசாரி சொன்னபடி கேட்டிருந்தா வேலப்பனுக்கு இந்த கதி வந்திருக்காது. என்னதான் இருந்தாலும் பிராமணன் பிராமணன் தான்’
“பேயில்லை…பிசாசு இல்லைன்னு இன்னமும் நம்பாம இருக்க முடியுமா? அதுதான் நமக்கு புரிய வைச்சுட்டு போய்ட்டாரே வேலப்பன்”
“என்னங்க நாட்டாமை.. இந்த சாவுக்கு நாம போலிசுக்கும் போக முடியாது. பேய் அடிச்சு செத்தவனுக்கு எந்த எப்ஐஆர் போட முடியும். சீக்கிரமா ஆகுற வேலையை பார்ப்போம் என்றார் பூசாரி.
கருத்தம்மாவின் தலையை பிடித்தபடிரூபவ் கவலைப்படாதேம்மா…இந்த ஊர் சார்பில உன் புருசன் வேண்டாம்னு சொன்ன அந்த ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்தர்றோம். என்ன பண்றது? எல்லாம் அவன் விதி. யோவ்.. அந்த தாசாணியைக் கூப்பிட்டு இனிமேல் நம்ம ஊருக்காரங்க யாரும் அந்த ஆலமரம் இருக்குற பக்கத்துக்கு போகவே வேண்டாம்னு தண்டோரா போடச்சொல்லுங்க… என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தார் நாட்டாமை.
நாலைந்து பேர் தாசாணி வீட்டுக்கு ஓடினார்கள் தகவலை சொல்ல.
கதவு பூட்டியிருந்தது.
“அண்ணே..அவனைக் காணோம்ன்ணே”
சரி வா. வேறெங்கையாவது இருப்பான். தேடிப்பார்ப்போம் என்றபடி நகர்ந்தபோதுரூபவ் வீட்டைச்சுற்றி ஓடிவந்த நாய் குரைத்தது.
திரும்பிபார்த்தவர்கள்ரூபவ் வீட்டின் பின்னே சென்றார்கள்.
அங்கே தாசாணிக் கையில் வைரக்கல் பதித்த கடுக்கன். வேலப்பன் அணிந்திருந்த வைரக்கடுக்கன்.
வேலப்பனின் கம்பீரத்துக்கு காரணமான வைரக்கடுக்கன்.
“இது எப்படி உன் கையில் வந்தது? நான்கு பேரும் கிடுக்கி பிடி கேள்வி கேட்க.. பயந்தபடி உண்மையை உளறிக்கொட்டினான் தாசாணி.
“ஆமாங்க. வேலப்பனை கொலை செய்தது நான்தான். அந்த ஆலமரத்தில் பேயுமில்லை. ஆவியுமில்லை. அப்படி இருக்குன்னு சொன்னாத்தான் அங்க வர ஆளுகளை கொன்னுரூபவ் அவங்க வைத்திருக்கிற பொருள்களை எல்லாம் திருட முடியும். போலிசுக்கும் போக மாட்டீங்க”
விசயம் நாட்டாமையையும்ரூபவ் பூசாரியையும் சென்றடைந்தது.
ம்….தாசாணியா இப்படி என்றபடி நெஞ்சைப்பிடித்து சரிந்தார் நாட்டாமை.
உண்மைதான்….வேலப்பன் சொன்னது.

“மனுசன் தாப்பா…பேயாவும்ரூபவ் பிசாசாவும் மாறிக்கிறான்”


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

புதையல்


                                                                  Gijay;
புதிதாக நிலம் வாங்கிய கைலாசம்ரூபவ் மரத்தை நடுவதற்காக மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்தார்.
ஒரு மூன்று அடி தோண்டியிருப்பார். மண்ணுக்குள் இருந்து உடைந்த பானைகளின் சில்லுகள் கலந்திருந்தன.
பெரிதாக இருந்த அந்த ஒற்றை சில்லை கையிலெடுத்தார். அந்த பானை ஓட்டில் ஏதோ சில குறியீடுகள் எழுதப்பட்டிருந்தன. அதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த கைலாசத்திற்கு தலைச்சுற்றிக்கொண்டு வந்தது. கண்கள் இருண்டன. அப்படியே கீழே சாய்ந்தார். அவரது மண்டைக்குள் மின்னல் கீற்றுக்களாய் பலவித காட்சிகள்.
துரிதமா வேலையை செய்யுங்கோள்…..கட்டளையிட்டபடி அந்த தொழிற்சாலையை  சுற்றிசுற்றி வந்தார் சேந்தன் அவந்தி.
கரும்புகையைக்கக்கிக்கொண்டுரூபவ் பெருமூச்சு விட்டபடிரூபவ் தன் வேலையைப்பார்த்துக்கொண்டிருந்து அந்த 100 பேர் வேலை செய்யும் பிரமாண்ட தொழிற்சாலை.
உற்பத்தி செய்த வில்களை வளைத்துப்பார்த்தார் அவந்தி.
“இன்னும் கொஞ்சம் இரும்பை கலக்குங்கோள். அம்பை இன்னும் உசத்தியா சாணம் பிடியுங்கோள்..”
சேந்தன் அவந்தி…
கி.மு.100 ல் குந்தி மாநகரத்தில் வாழ்ந்த கொல்லன்.
இன்றைக்கு இருக்கும் திருப்பறங்குன்றத்தின் நேர் கிழக்கே அமைந்திருக்கும் கீழடிதான் அந்த ஊரின் பெயர்.
அந்த ஊரின் பெருமையேரூபவ் நகர்புறம் என்று அவர்கள் உருவாக்கிய அந்த கீழடி நகர் தான்.
சேந்தன்  அவந்தி கருத்த தேகமுடைய ஆஜானுபாகுவான ஆள்.
கொல்லன் என்பதோடு மட்டுமல்லாமல் வணிகம் தெரிந்த திறமைசாலி.
மன்னனின் அன்பை பெற்ற சேந்தன் என்றைக்குமே அந்த ஊருக்கு ஒரு பொக்கிசம்தான்.
கீழடியில் மொத்தமாக ஒரு 500 பேர் தான் இருப்பார்கள்.
உழைப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத கண்ணியவான்கள்.
புதிதாக சிந்திக்கும் புத்திசிகாமணிகள்.
“அவந்தி…. உன்னை மன்னர் அழைத்திருக்கிறார். உடனே வந்து சந்திக்கச் சொன்னார்” அந்த ஊரிலிருந்த
திண்ணையில் அமர்ந்தபடி மகளின் முடியைக் கோதிவிட்டுக்கொண்டிருந்த அவந்தி “ ஏன்.. ஏதாவது சிறப்புண்டோ? விருந்து ஏற்பாடு செய்திருக்கிறாரா என் அன்பு மன்னர்” என்றபடி எழுந்தான்.
“யாதென்று நான் அறியவில்லை. என்றாலும் கூட ஏதோ சிறப்பு இருந்தாலும் இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு வீரன் விடைக்கொடுத்தான்.
செம்மண் பூமியில் விளைந்த நெற்கதிரை தன் தலையில் சுமந்தபடி வந்தரூபவ் அவன் மனைவி அங்கை திண்ணையில் இறக்கிவைத்தாள்.
பேருக்கு ஏற்றபடி அழகான கைகளைரூபவ் செங்காந்தழ்மலர்களைப்போல் கொண்டவள் அவள்.
கருப்பு சிலையாய்; உழைத்து உருவேற்றிய தேகம்.
செந்தாமரை இதழ்களில் ஒன்றை பிய்த்து உதடுகளாய் ஒட்ட வைத்த முகம்.
“வீரன் வந்தானோ ? என்ன காரணம் என நான் அறியலாமோ?”
“மன்னவன் விளித்ததாகச்சொன்னான். காரணம் அறியலேன்”
‘நல்ல காரணமாகத்தான் இருக்கும். ஆமாம். மன்னவனை பார்த்துக்கொண்டு வரும்போது ஆவரை வாங்கியாங்;கோ”
“சாவார் யாருமில்லை எனும்போது எதற்கு ஆவாரை அங்கையே”
“காரணம் உண்டு என்மன்னவா… வாங்கியாருங்கோ”
“அப்பா பள்ளிக்குபோக ஓலை வேணும். அதையும் வாங்கியாருங்கோ”
வீட்டிற்கு வெளியே இருந்த கொப்பரை பானையில்ரூபவ் மண்ணால் ஆன குடுவையை உள்நுழைத்து நீரை நிரப்பி முகம் கழுவினான்.
“ஏன் அங்கை. கழிவறையில் நீர் தேங்கியிருக்கிறது. அடைப்பு உண்டாகிவிட்டதா? என்னவென்று பாரும்.”
“மூடிய கால்வாயில்தான் முட்டிக்கொண்டு நிற்கிறது. கல் ஏதோ சிக்கியிருக்கும். பார்த்துக்கொள்கிறேன்”
தங்ககாசு இரண்டை தன் சட்டைப்பையில் நிறைத்தப்படிரூபவ் சின்னக்குடுவையில் நீரை அள்ளிக்கொண்டுரூபவ் மதுரை நோக்கிப் புறப்பட்டான் அவந்தி.
சுற்றிலும் காடு. இங்கிருந்து மதுரை சென்றடைய எப்படியும் ஒருநாள் ஆகும். கள்ளர்கள் நடமாடும் பெரும்பாதையில் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். பக்கத்தில் வைகை நடந்து போகும் சலசலக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவந்தி கழுத்தில்ரூபவ் ரோமானியர்களிடமிருந்து பண்டமாற்றிக்கொண்ட ரத்தினமாலை அங்கும்இங்கும் அவன் நடக்கும் அசைவிற்கேற்ப நாட்டியமாடிக்கொண்டே வந்தன.
உச்சி வெயில் உச்சந்தலையில் அடித்தாலும்ரூபவ் வைகையில்
கீழடியை விட்டால்ரூபவ் மதுரை வரும்வரைக்கும் இடையில் எந்த ஊரும் இல்லை.
மக்கள் நடமாட்டமும் கண்ணிற்கு தென்படவில்லை.
என்றாலும் கூட கள்ளர்கள் வந்தால் என்ன செய்வது என்று அவன் உருவாக்கிய வேலைக் கையில் பிடித்தபடி வெகுவேகமாக நடந்துக் கொண்டிருந்தான் அவந்தி.
ஆ…அதோ பட்;டித் தெரிகிறது. குதிரைகள் அங்குமிங்கும் அலைந்தபடி மேய்ந்துக்கொண்டிருந்தன.
அவந்தி முகத்தில் ஆனந்த புன்னகை.
ஆமாம். குதிரை வாங்கவேண்டும் என்ற எண்ணம் சிலநாட்களாகவே அவன் மனதில் வந்து போயின.
எப்படியும் வாங்கிடணும் என்றபடி பட்டியருகே வந்து நின்றபடி இளைப்பாறினான்.
அப்போது குதிரையில் வந்த இரண்டு வீரர்கள் அவனை நோக்கி வந்தார்கள்.
“யார் நீ.. என்ன செய்கிறீர். இங்கே”
“நான்தான் அவந்தி. கொல்லன். கீழடியிலிருந்து வருகிறேன். மன்னர் என்னை அழைத்ததாக தகவல் வந்தது”
“ஓ.. மன்னிக்கனும் கொல்லரே. யாரோ என்று எண்ணிவிட்டேன். உங்கள் புண்ணியத்தில் தானே இந்த மாமதுரையே நிம்மதியாக தூங்குகிறது. தரமாக நீங்கள் உருவாக்கித்தரும் ஆயுதங்கள் தானே எங்களின் இரு கண்கள். வாருங்கள் உங்களை யாம் அழைத்துச்செல்லுகிறோம்”
போகின்ற வழியில் எங்குப்பார்த்தாலும் எழில்கொஞ்சும் வயல்வெளிகள்.
தலைப்பணிந்து கொல்லனை வரவேற்றன முற்றிய நெற்கதிர்கள்.
“கொல்லருக்கு புரவி யேற்றம் தெரியுமோ?”
“ம்…புரவி இருந்திருந்தால் யாம் ஏன் நடந்து வருகிறோம் ? கற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தோதான புரவி ஒன்று வாங்கித்தாரும் வீரரே”
“கொல்லர் நினைத்தால் ஆயிரம் புரவிகளை வாங்கமுடியும். மன்னவனுக்கு அடுத்தப்படியாக இருக்கிற செல்வந்தன் நீவிர் அல்லவா. என்றாலும் தங்களுக்கு நான் புரவி தருவது எனக்குப் பெருமை கொல்லரே”
பேசியபடியே வந்ததில் நேரம் குறைந்துபோனது. மாடமாளிகைகள் கண்ணில் தென்பட்டன.
பிரமாண்ட கற்களில் அமைக்கப்பட்டிருந்த கோட்டை கொத்தளம்ரூபவ் தென்பாண்டி அரசின் செல்வாக்கை சொல்லாமல் சொல்லியது.
எங்கும் மீன்கொடி. தூரத்திலிருந்துப் பார்த்;தால் வான நீலத்தில்ரூபவ் மீன் கடலில் நீந்திக்கொண்டிருப்பது போல் இருந்தது.
வழியெங்கும் வணிகத்தில்
கருப்பு சிவப்புப் பானைகள்ரூபவ் தந்தத்தினாலான பாசிகள்ரூபவ் தாயக்கட்டைகள்ரூபவ் தங்க சிலம்புகள்ரூபவ் பசும்பால் இனிப்புகள் என்று சந்தை பரபரப்பாக இருந்தது.
“மன்னவன் ஆட்சியில் என்ன குறை வீரர்களே. எங்குப்பார்த்தாலும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள். விதைத்த பயிர் செழிக்கிறது. புலவர்களால் மக்கள் ஏற்றமிகு கல்வியைக்கற்கிறார்கள். நிறைந்த அறிவை நம் இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். பயமறியா வீரர்கள் நீங்கள் இருக்கிறீர்கள். வாழ்க எம்மான் மன்னவன்” என்றபடி வாய்நிறை வார்த்தைகள் அள்ளிவிட்டபடி மகிழ்வோடும் மனநிறைவோடும் வீரர்களிடம் சொல்லிக்கொண்டுரூபவ் கொண்டு வந்த நீரை குடித்தபடி மாடமாளிகைளை நோட்டமிட்டபடி வந்தான் அவந்தி.
வாயிலை நெருங்கியது புரவி.
“கொல்லரே இறங்கி;க்கொள்ளுங்கள். யாம் மீண்டும் எல்லைகளுக்கு செல்லவேண்டியிருக்கிறது. வாயிற் காப்பாளனே இவர்தான் நமது படைக்கொல்லர். இவரை மன்னரிடம் அழைத்துச்செல்லுங்கள் என்றபடி அவந்தியை இறக்கிவிட்டபடி புழுதிபறக்க திரும்பிச்சென்றார்கள் அந்த இரு வீரர்களும்.
அவந்திக்கு வணக்கம் தெரிவித்துரூபவ் அவனை மன்னன் இருக்கும் அரசவை மண்டபத்திற்கு அழைத்துச்சென்றான் காப்பாளன்.
வண்ண வண்ண தூரிகையால் வரையப்பட்ட அழகான ஓவியங்களை கண்குளிரப் பார்த்தபடி கையிலிருந்த வேலை அங்கிருந்த ஒரு தூணில் சாய்த்துவிட்டு அரசவை மண்டபத்தை நெருங்கினான் அவந்தி.
“கொல்லரே… சற்று இங்கே இரும். யாம் மன்னரிடம் அனுமதி பெற்று பின்னர் வந்து  அழைத்துச்செல்கிறோம்”
உள்ளே சென்ற வீரன்ரூபவ் பரபரப்பாக இருந்த மண்டபத்திற்குள் புகுந்தான்.
மன்னர் தன் சக அமைச்சர்களோடுரூபவ் தீவிர ஆலோசனையை நடத்திக்கொண்டிருந்தார்.
மண்டபத்தில் அரசவை புலவர் நக்கீரனார் தன் நரைத்த தாடியை தடவியபடியும்ரூபவ் போர்தளபதி ஆதிமந்திரூபவ் பிரதான மந்திரி இளம்போதியார்ரூபவ் பொருளாதார மேதை செம்பியனார் என்று ஒரு பெரும் அறிஞர்கள் சபையே அங்கு கூடியிருந்தது.
“மன்னவா.. தங்களை காண கீழடியிலிருந்து பெருங்கொல்லர் சேந்தன் அவந்தி வந்திருக்கிறார்”
“இருங்கள். அவரே வந்து விட்டார். அவரையும் கலந்து ஆலோசி;த்த பிறகு நாம் நம் முடிவைச்சொல்லுவோம். அழைத்து வாருங்கள் கொல்லரை.” மன்;னர் உத்திரவிட அரசவை பெருங்கதவு திறந்தது.
உள்ளே நுழைந்தர் அவந்தி.
கூடியிருக்கும் பெரும்சபையை கண்டுரூபவ் வணங்கினார்.
“வணக்கம் மன்னவா. தென்பாண்டி தமிழ் பெற்ற கோவலனே. தமிழ் இனத்தின் காவலனே. நீவிர் அழைத்ததாக தகவல் பெற்றேன். மன்னவனைக் காண ஓடோடி வந்திருக்கிறேன்” தலைகுனிந்தவாறு கணீரென்ற குரலில் வந்த நோக்கத்தை சொன்னான் அவந்தி.
“வாரும் கொல்லரே. உமைத்தான் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இப்போது நம் நாடு மிகப்பெரிய பேராபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. நாட்டையும்ரூபவ் மக்களையும்ரூபவ் நம் செல்வங்களையும் உயிர் கொடுத்துக் காக்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு வந்திருக்கிறது. அதைப்பற்றி ஆலோசிக்கத்தான் யாம் உம்மை அழைத்திருந்தோம்”
“எஃகு கோட்டைக்குள் எறும்புகள் நுழைய முடியுமா அரசே? ஆணையிடுங்கள் ஆயிரமாயிரம் ஆயுதங்களை செய்து குவிக்கிறேன்.”
“ஆம். ஆதிமந்தியே உங்கள் திட்டத்தை கொல்லருக்குச் சொல்லுங்கள்”
உடைவாளை சரிபடுத்திக்கொண்டு எழுந்தார் போர்தளபதி ஆதிமந்தி.
“கொல்லரே. வடக்கிலிருந்து ஒரு பெரும்படை நம் பாண்டிய தேசத்தை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக ஒற்றன் மூலம் தகவலறிந்தோம். பல்லாயிரம் புரவிகளோடுரூபவ் பல லட்சம் காலாட்படையை கூட்டிக்கொண்டு ஆதிஇனமான நம்மை அழிக்க வந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் என்கின்ற நம்மை அழித்துவிட்டால் நாளை இந்த உலகை தாம் ஆண்டு விடலாம் என்கின்ற ஒற்றை எண்ணத்தில் அவர்கள் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகாரும் சிறுசிறு சண்டைகளை எதிர்கொண்ட நாம்ரூபவ் ஒரு பெரும்போருக்கு தயாராக வேண்டும். அவர்கள் அழைத்துவரும் பெரும்படையை சமாளிக்க நாம் புதுபுது போர் யுக்திகளையும்ரூபவ் ஆயுதங்களையும் உடனே தயார் செய்ய வேண்டும்”
திகைத்து நின்ற அவந்தியின் முன்ரூபவ் அமைச்சர் இளம்போதியார் வந்து நின்றார்.
“அவந்தி. முதல்மனிதன் என்ற பெருமை மிகுந்த இந்த தமிழ் சமூகத்தை காத்து நிற்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு வந்திருக்கிறது. மதிகூர்மையோடு நாம் ஆயுதங்களை படைக்க வேண்டும். அந்த பெரும்படையைரூபவ் நம் மண்ணை பிடிக்க நினைக்கும் கொடும்படையை மின்னல் மின்னும் நேரத்திற்குள்ளாக வெட்டி சாய்த்தாக வேண்டும். பொறுப்பை கையிலெடுங்கள்”
“என் இனத்திற்கு ஒரு இடர் என்றால் பொறுப்பேனா அமைச்சரே ?. இதோ தொடங்கி விடுகிறேன்.புதிய புதிய ஆயுதங்களை களமிறக்குகிறேன். எனக்கு ஒரு யோசனை. சொல்லலாமா?
“இந்த தேசத்தை காக்கும் எந்த யோசனையையும் நாம் ஏற்றுக்கொள்வோம். சொல்லுங்கள் கொல்லரே.”
“ஆயுதங்கள் செய்வதால் மட்டுமேரூபவ் நாம் வெற்றியடைந்துவிட முடியாது. அவர்கள் புரவிகளைக்கொண்டு போரில் ”
“ம்..நல்ல யோசனைதான். என்றாலும் கூட அதைப் பழக்கப்படுத்தி போரில் ”
“பொறுங்கள் தளபதி. மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகம் சிந்திக்கும் விலங்கு யானைதான். அந்த பெரிய கரிய விலங்குரூபவ் ஆயிரம் படைவீரர்களுக்கு சமம். சுலபமாக யானையை பழக்கப்படுத்தி விட முடியும்”
‘அப்படியென்றால் நமக்கு குறைந்தபட்சம் ஆயிரம் யானைகள் தேவைப்படும். பாண்டிநாடான நம் தேசத்தில் யானைகள் இல்லையே.. என்ன செய்வது.?’ முகத்தில் சோக ரேகையை ஓடவிட்டு கேள்வி எழுப்பினார் தளபதி.
“சேர நாடு இருக்கிறதே. அங்கு ஆட்சிசெய்யும் மன்னரிடம் கேட்கிறேன். முடிந்தால் அவர்களையும் இந்த தமிழ்மண்ணை காக்க அழைப்பு விடுக்கிறேன்” என்றபடி மன்னர் முகத்தாடையை தடவியபடி பதில் சொன்னார்.
“நல்லது. மன்னவனே. யானைகளின் தும்பிக்கையில் பொறுத்த ஒரு ஆயுதத்தை தயாரிக்கப்போகிறேன். அது ஒன்றே போதும். நாம் வெற்றிக்கொள்ள. புறப்படுகிறேன்” என்றபடி அரசவை மண்டபத்திலிருந்து புறப்பட்டார் அவந்தி.
புறாவின் கால்களில் மடல் ஒன்று கட்டப்பட்டது. சேரநாட்டு மன்னவன் சேரன் இரும்பொறைக்கு எழுதப்பட்ட மடல் அது.
தமிழுக்கு துயர் வந்தால் பொறுப்பானா இரும்பொறை? ஆயிரம் யானைகளை பத்தாயிரம் வீரர்களோடு அனுப்பி வைத்தான் அந்த சேரமன்னன்.
ஒரு பெரும் மலையே ஆடிவருவது போல் யானைகள் அசைந்து வந்தன. பெரும்பாதை வழியே வந்த யானைகளைப் பார்த்த மக்கள் குதூகலித்தனர்.
கீழடி சென்ற அவந்தி நேராக தன் தொழிற்சாலையில் நுழைந்தார்.
துரிதமா வேலையை செய்யுங்கோள்…..கட்டளையிட்டபடி அந்த தொழிற்சாலையை  சுற்றிசுற்றி வந்தார் சேந்தன் அவந்தி.
கரும்புகையைக்கக்கிக்கொண்டுரூபவ் பெருமூச்சு விட்டபடிரூபவ் தன் வேலையைப்பார்த்துக்கொண்டிருந்து அந்த 100 பேர் வேலை செய்யும் பிரமாண்ட தொழிற்சாலை.
உற்பத்தி செய்த வில்களை வளைத்துப்பார்த்தார் அவந்தி.
“இன்னும் கொஞ்சம் இரும்பை கலக்குங்கோள். அம்பை இன்னும் உசத்தியா சாணம் பிடியுங்கோள்.. இன்னும் நிறைய ஆயதங்களை செய்யவேணும். யானைகளின் தும்பிக்கையில் மாட்டும் கொடூர கத்தியை தயார் செய்யுங்கோள். அதன் கால்களில் பொருத்தும் நட்சத்திர கத்தியை எப்படி செய்வது என்பதை இங்கே பாருங்கோள் என்றபடி வேலைகளை துரிதப்படுத்தினார்.
இரண்டு மாதங்களில் அனைத்தும் தயார். இதுபோதும் என்பதுபோல் வந்திருந்த தளபதி  ஆதிமந்தி தலையசைத்தார்.
யானைகளின் முகத்திலும்ரூபவ் கால்களிலும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன.
வீரர்கள் அமரும் போர் அம்பாரிகள் பொருத்தப்பட்டன.
வேல்களும்ரூபவ் வில்களும்ரூபவ் எண்ணிலடங்காத அம்புகளும்ரூபவ் இரும்பு சாட்டைகளும்ரூபவ் சுழழும் வாட்களும் கோட்டையின் துருப்புகளில் வரிசைப்படுத்தப்பட்டன.
காலாட்படைக்கு பயிற்சி இரவுபகல் பாராமல் கொடுக்கப்பட்டது.
ஓர்நாள் இரவு.
இடிஇடித்தது. ஆனால் மழை வரவில்லை. இரும்புகளில் கொடூரச்சத்தம் தூங்கிக்கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பியது.
அலறியடித்தபடி மதுரை நகரமே எழுந்தரித்தது.
அதோ எதிரிப்படை கடலலைப்போல் அலையலையாய் வந்துக்கொண்டிருக்கிறது.
தகவல் போனது மன்னருக்கு. எதிரிப்படை கோட்டை வருவதற்குள் எல்லாம் தயார் செய்யப்பட்டது.
வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட காலாட்படை கவசங்களோடும்ரூபவ் கையில் வேல்களோடும் தயார்நிலையில் இருந்தது.
அதற்குப்பின்னே விற்போர் புரியும் மறவர் கூட்டம் கொத்தளங்களின் மேலும்ரூபவ் கீழுமாக அம்புகளோடு காத்திருந்தது.
புரவிகளும்ரூபவ் போர் நாய்களும்ரூபவ் எப்போது வேண்டுமானாலும் அவிழ்த்துவிடப்படலாம் என்கிற நிலையில் பாய்வதற்கு தயாராக இருந்தன.
மண் புழுதி விண்ணில் பறந்தது. புரிந்து கொண்டார்கள் பாண்டிதேசத்து மக்கள்.
குதிரைகளின் லாடச்சத்தம் காது மடல்களில் இடிஇடியாய் இடித்தது.
தூரத்தில் இருப்பதைப்பார்ப்பதற்காக வைத்திருந்த பூதக்கண்ணாடியில் ஆதிமந்தி கோட்டையின் மீதிருந்து பார்த்தார்.
இன்னும் சில நொடிகளில் அந்த எதிரிப்படை நம் கோட்டையை தாக்குவார்கள். எல்லாரும் தயார் நிலையில் இருங்கள் என்று அறிவிப்பைச்செய்தான்.
பெருத்த ஓசையோடுரூபவ் வடநாட்டுப்படை கோட்டைக்கு முன்னிருந்த மைதான பெருவெளியில் ஆக்ரோசமாக வந்து நின்றது.
“சங்கு முழங்கட்டும். நறுமண தோட்டத்தில் நரிகள் புகுந்துவிட்டன. செந்;தமிழர் வாழும் சொர்க்கபுரியை தொட்டுப்பார்க்கும் ஓநாய்களை ஓடஓட விரட்டுங்கள். அவர்கள் தலைகள் நம் மண்ணில் விழட்டும். அவர்கள் குருதிப்பட்டு கருத்த இந்த மண்ரூபவ் சிவப்பாகட்டும். தொடுங்கள் போரை” என்றபடி கட்டளையிட்டான் தளபதி ஆதிமந்தி.
கோட்டையின் முன்னிருந்த கால்வாயிலிருந்து முதலைகள் சீறி எழுந்தன.
காலாட்படை வீரர்கள் அசுர வேகத்தில் அவர்களை தாக்க வேல்கொண்டு ஓடினார்கள்.
மரண ஓலம். எங்கும் ஆக்ரோச கத்தல்கள்.
எதிரிப்படை தமிழ்வீரர்களை துவம்சம் செய்துக்கொண்டிருந்தது.
அவர்களின் குதிரைகளின் கால்பட்டுரூபவ் செத்து மடிந்தார்கள் பாண்டிதேசத்து வீரர்கள்.
அப்போதுதான் அது நடந்தது.
காலாட்படை பின்னால்ரூபவ் மறைந்திருந்த சிறுசிறு மலைகள்ரூபவ் கொஞ்சம்கொஞ்சமாக  வெளியே வந்தன.
அவந்தியின் புதுபுது ஆயுதங்களைத் தன் உடலில் தாங்கிய அந்த களரிகள்ரூபவ் தன்னை எதிர்த்துத்தாக்கிய எதிராளிகளை பந்தாக உருட்டியபடி முன்னேறிக்கொண்டிருந்தன. கண்ணில் அகப்பட்டவர்களின் வயிறை தன் தும்பிக்கை ஆயுதத்தால் குத்திரூபவ் குடலை உருவி வெளியே போட்டன.
அதிர்ச்சியிலிருந்து மீளாத எதிர்நாட்டு தளபதிரூபவ் நெருப்புப்பந்தை எறிந்துப்பார்த்தான்.
வாயில் கவ்விரூபவ் செரிமானம் செய்தன யானைகள்.
பாண்டிதேசத்து போர் நாய்கள்ரூபவ் அந்த குதிரைகளின் கால்களை துண்;டாக்கி சென்றன.
முடமாகிப்போன குதிரைகளால்ரூபவ் முன்னேற முடியாமல் படுத்தே விட்டன.
பலதேசத்தை சுலபமாக வென்ற அம்மன்னன்ரூபவ் புதுபுது ஆயுதங்களால் துவண்டு போனான்.
யாரோ ஒரு வீரன் விட்ட அம்புரூபவ் எதிரிநாட்டு மன்னனின் விலா எலும்பைத் துளைத்துரூபவ் இதயத்தை வெளியே கொண்டுவந்துப் போட்டது.
“வெற்றி. வெற்றி தமிழ்பேசும் நல்லுலகத்திற்கு வெற்றி” என எங்கும் ஒலித்தது.
வெற்றிக்கொண்டாடத்தில் மக்கள் எல்லாம் தேறல் சாற்றை பருகிக்கொண்டு களிப்படைந்துக் கொண்டிருந்த வேளையில்ரூபவ்
“மன்னவா.. கீழடியிலிருந்த ஒரு இழவு செய்தி வந்திருக்கிறது” என்று கனத்த குரலில் சொன்னான் ஒரு வீரன்.
“என்ன நடந்தது ? மன்னன் வினவினார்.
“சேந்தன் அவந்தி எதிரிநாட்டு தளபதியால் கொல்லப்பட்டார்..”
“ஐயோ.. இந்த வெற்றியை கொண்டாடும் தருணத்தில்  இப்படியா ஒரு பேரிடி விழ வேண்டும். ஆயுதம் செய்து கொடுக்கும்ரூபவ் ஒரு அறிவார்ந்த கொல்லனை இந்த தமிழ் சமூகம் இழந்துவிட்டது. அந்த பொன்னுடலை பார்க்க உடனே புறப்படுங்கள்.”
கீழடி…
எங்கும் இழவு ஓலம்.
அவந்தியோடு சேர்த்துரூபவ் பலபேர் கொல்லப்பட்டிருந்தனர். அவனது ஆயுதத் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டிருந்தது.
தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சேந்தன் அவந்தியை இரும்புத்தடியால் அடித்தே கொன்றிருக்கிறார்கள் அந்த எதிரிப்படை கயவர்கள். அவந்தி;க் குடித்த அந்த தண்ணீர் குவளையும் அவர்கள் வெறிக்குத் தப்பாமல் சுக்கு நூறாக உடைந்துபோயிருந்தது.
ஏன் அவனைத்தேடி போய் கொன்றிருக்க வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருந்த மன்னனுக்கு அவரின் ஆஸ்த்தான அமைச்சர் இளம்போதியார்ரூபவ் காரணத்தைச்சொன்னார்.
“மன்னாரூபவ் வந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. தன் மேல் விழுந்த அம்புகளை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதைச்செய்துக் கொடுத்த கொல்லனைத்தான் கணக்கெடுத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த தோல்வி நம் படையாலும்ரூபவ் வீரத்தாலும் அல்ல. புதிய ஆயுதங்களைச் செய்து கொடுத்த கொல்லனால் என்று. ஆகவேதான் அவந்தியைத் தேடிச்சென்று கடுங்கோபத்தில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.”
நொறுங்கிக் கிடந்த அந்த தண்ணீர் குவளையின் ஒரு ஓட்டை தன் கையில் எடுத்தப்படி கண்ணீர்மல்க பார்த்துக்கொண்டிருந்தார் மன்னர்.
அதில் “சேந்தன் அவந்தி கொல்லன்” என்று அவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
என்ன ஆச்சு? குழிப்பறிக்க போனபோது மயங்கி கிடந்தார். என்ன ஆனதுன்னு தெரியலையே  ? என்றபடி கைலாசத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்தபடி தட்டி எழுப்பினார்கள் சுற்றி இருந்தவர்கள்.
கைலாசம் கண்திறந்துச் கேட்டார்…. “சேந்தன் அவந்தி” எங்கே ?”

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.