நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தேரையார்
முத்தமிழுக்கு சொந்தக்காரி மூவெழுத்து நாயகி
முருகனிடமும் அகத்தியனிடமும்
தெய்வ கனி பெற்றவள்
ஆத்திசூடியை அனைவருக்கும் தந்தவள். நடையிலே தளர் போக்க மூன்றாம் கோலூன்றிய மூபேரரசுக்கும் நமக்கும் சொந்தமான மூதாட்டி; ஒவையாரிடம்
உமைபிள்ளை ராம தேவனை அகத்தி;ய முனிவரிடம் இச்சிறுவனை சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்ட மறுநிமிடம் மறுப்Nபுதும் சொல்லாமல் ஊமை சிறுவனை தன் சீடனாக அகத்தியர் ஏற்றுக் கொண்டார்;. கண்ணும் கருத்துமாக அகத்திய முனிவரின போதனைகளையுமு; மூலிகை வகைகளையும்அதன் வைத்திய குணங்களையும் பக்குவப்படுத்துவரிரும் நோய் கண்டறிந்து நோய் தீர்ப்பதிரும் நிபுணத்துவம் பெற்றிருந்தான்.
பாண்டிய மன்னன் ஒருவன் கூன்முதுகாலும் வலியாலும் வேதனை பட்டுக் கொண்டிலுந்தான்.இந்த அகத்திய முனிவரிடம் தம் நிலைமையை எடுத்துihத்து கூனை அதன் வலியை போக்க வைத்தியம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.அகத்திய முனிவரும் ஒப்புக் கொண்டு ராம தேவனிடம் மூலிகை சேகரித்து சாறு பிழிந்து எடுக்க வேண்டியவற்றை எடுத்தார்.
ராம தேவா அனைத்தையுமு; ஒரு பாத்திரத்தில் சேர்த்து தைல எண்ணை ஊற்றி கொதிக்க வை. நான் மண்ணதை செய்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு: சென்றார்.
ராம தேவர் அடுப்பு மூட்டி கிழக்கே ஈசனை நோக்கி வணங்கி விட்டு அடுப்பை பற்ற வைத்தான். அந்ந இடத்தில் அரண்மனையின் பிற்பகுதியில் அரசனின் பல்லாக்கு மூங்கில் சில வளைந்து மூலிகை மருந்து காய்ச்சுமிடத்திற்கு மேலே யிருந்தது.
கண் கொத்தி பாம்பாக மூலிகையை பதம் பார்த்து கொண்டிருந்தான் ராம தேவன்.
மூலிகை பதம் வந்ததும் மேலே இருந்த வளைந்த மூங்கில் நிமிர தொடங்கியது.உடனே அடுப்பை அணைந்தான் ராம தேவன்.
அரசனை சிகிச்சைக்கு தயார் செய்து விட்டு வந்த அகத்தியர் அடுப்பு அணைந்திருந்ததை பார்த்து கோபப்பட்டார்.
அகத்தியனின் கோபப்பார்வையை புரிந்துக் கொண்ட வாய்பேச முடியாத ராமதேவன் மேலே இருக்கின்ற மூங்கிலை சைகை மூலம் காட்டினார்.
வளைந்த மூங்கில் நேராக இருப்பதை பார்த்த அகத்தியர் சரியாக பக்குவமாக மூலிகையை தயார் செய்ததை தன் மனதுக்குள் பாராட்டினார்.
வைத்தியத்திற்கு பின் பாண்டியன் கூன் முதுகு நிமிர்ந்தது. வலி காணமல் போய்விட்டது.
மன்னன் அகத்தியரை புகழ்ந்தார். அகத்தியர் சொன்னார் இந்த புகழ்ச்சி எனக்கல்ல. ராமதேவனுக்கே.
ஒப்பற்ற இலக்கிய நூல் தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியர். அவரது இன்னொரு பெயர் திரணாக்கியர்.
இவருக்கு தீராத தலைவலி இருந்தது. இவ்வலி தீர அகத்தியரை நாடினார். அகத்தியர் பரிசோதித்து பார்த்தார். தலையை ஆராயும்போது. திடுக்கிட்ட அகத்தியர்…திணாக்கியரே எப்படியோ ஒரு தேரைக்குஞ்சு உமது தலைக்குள் சென்று விட்டது. கபாலத்திற்குள் தங்கியுள்ளது. அத்தேரைதான் உங்களை படாத பாடு படுத்துகிறது என்றார்.
(சுனைகளில்; நீர் பருகும்போது தேரைக்குஞ்சு மூக்கு வழியாக கபாலத்திற்குள் எப்படியோ சென்றிருக்கிறது)
திணாக்கியருக்கு மயக்க மூலிகை சாறு தந்து மயக்கத்pல் ஆழ்த்தி அறுவை சிகிச்சை மூலம் கபாலத்தை திறந்தார். ஆனால் அந்த சிகிச்சை அவ்வளவு எளிதல்ல.
தேரை மூளையின் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தது. இடுக்கி மூலம் எடுத்தால் மூளையிலிருந்து மறுபக்கம் தாவி விடும். இப்படியே பல தடைவ நடந்தால் மூளை உருக்குலைந்து போகும். திகைத்து நின்றார் அகத்தியர்.
நிலமையை உணர்ந்த ராம தேவர் அகன்ற பாத்திரத்தில் நிறைந்த தண்ணீரைக் கொண்டு வந்து கபாலத்திலுள்ள தேரை காணும்படி தண்ணீரை சல சல பென சப்தம் வருமாறு செய்தார் உடனே தேரை தண்ணீருக்குள் தாவி குதித்தது.
இந்நிகழ்வுக்கு பின் அந்த ராம தேவர் தேரையர் என்றே அழைக்கப்பட்டார்..
இவர் குணபாடகம், மருத்துவ பாரதம் என்ற ஏராளமான ;புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும் மலையாள பிரதேசமான தோரண மலையில் ஜீவ சமாதியடைந்தார்..