சுட சுட செய்திகள்

Monday, December 27, 2010

படித்ததில் பிடித்தது !!

ஒரு ஐ.டி துறையை சார்ந்த ஒரு மனிதன் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டர வச்சுகிட்டு ஒரு ஆற்றின் ஓரமா தன்னோட வேலைய அதுல பாத்துட்டுருந்தான்.அப்பொழுது கைத்தவறி அந்த கணினி ஆத்துல விழுந்துருச்சு.அந்த சமயத்துல கடவுள பாத்து வேண்டுறான்,எப்படியாவது கிடைச்சுரனும்னு.அப்படியே வேண்டிட்டு இருக்கும்போது அந்த ஆத்துல இருந்து ஒரு தேவதை வந்து என்ன ஆச்சுனு கேட்டது.இவனும் நடந்த விவரங்கள் எல்லாத்தையும் கூறினான்.உடனே தேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு சின்ன வடிவத்தினால் ஆன ஒரு பென் ட்ரைவ்(pen drive) மாதிரி ஒன்ன எடுத்துட்டு வந்து இதுதானா? அப்படினு கேட்டது,இவன் அதற்கு"இது இல்ல"னு பதிலளித்தான்.உடனே அது திரும்பவும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு "கால்குலேட்டர்(calculator)" மாதிரியான பொருளை கொண்டு வந்து இடுதானா என வினவியது.இப்பவும் மனிதன் "இது இல்ல"னு சொன்னான்.தேவதை மூணாவது முறையும் மூழ்கி இவனுடைய லேப் டாப்(laptop) ப எடுத்துட்டு வந்தது.இந்த முறை மனிதன் இதுதான் என்னுடையதுனு சொன்னான்.நம்ம கதையில வர மனுஷ பய புள்ள இருக்கானே இந்த மாதிரியெல்லாம் நடந்த உடன் அவனோட சிறு வயது நியாபகம் வந்தது.உழவன் ஒருவன் இந்த மாதிரி கோடாரி ஒன்ன ஆத்துல தவற விட்ருவான்,அப்ப தேவதை என்ன பண்ணும்,வெள்ளி ல ஒன்னும்,தங்கத்துல ஒன்னுமா எடுத்துட்டு வந்து கேட்கும்.உழவன் அவனோட கோடாரிய மட்டும் என்னோடதுனு சொன்ன உடனே இவனோட நேர்மைய பாராட்டி அந்த மூன்று கோடாரியயும் அவனிடமே கொடுத்து விடும்.இப்ப இங்க வருவோம்.மனிதன் சொன்னானா,லேப் டாப் மட்டும்தான் என்னோடதுனு.அதற்கு தேவதை லேப்டாப் ப குடுத்துட்டு ஒரு சிரிப்பு சிரித்தது.மனிதன் கேட்டான் ஏன் சிரிக்கிற என்னைய பாத்துனு? தேவதை சொன்னது" நான் முதலாவதாகவும்,இரண்டாவதாகவும் காட்டினது பல மில்லியன்,ட்ரில்லியன் குடுத்து வாங்க வேண்டிய எதிர் காலத்துல வரக்கூடிய கம்ப்யூட்டர்"எதுவுமே நமக்குதான் தெரியும்னு இருக்காதனு சொல்லிட்டு மறைந்தது.மனிதனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தன் தவறு.

(2)


இரண்டாவது வருடம் தான் கல்லூரி வாழ்க்கையின் உச்சம்.
முதல் வருடத்தில் பாதிநாட்கள் பயத்திலும், குழப்பத்திலும் போய்விடும் என்றால் மூன்றாம் வருடம் பொறுப்புணர்ச்சி வந்து தொலைத்து விடும்.. ஆக, இரண்டாம் வருடம் தான்..
இரண்டாம் வருடம் எண்ட்ரி ஆனவுடன், கையில் ஒரே ஒரு நோட்.. எந்த சப்ஜெக்ட் என்றாலும் அதில் தான்.. அதுவும் லேமினேட் செய்யப்பட்ட டெண்டுல்கர், கொஞ்சம் விசயம் தெரிந்தவன் என்றால் மார்க் வாவோ, ப்ரைய்ன் லாராவோ.. அந்த நோட்டை சுருட்டி பிடிப்பதில் இருக்கும் லாவகத்தில் தெரியும் அந்தந்த மாணவர்களின் தெம்பு.

புரொஃபசர்களிடமும் சற்று தைரியமாக பேச வைக்கும். கலாய்ப்புகள் அரங்கேறுவதும் இரண்டாம் வருடம் தான்..

“ நீங்க தெய்வம் சார்..”

“ அப்படியெல்லாம் இல்லப்பா.. எங்க கடமய செய்யிறோம்..”

“அது இல்ல சார்.. தெய்வம் தான் நின்று கொல்லும்”
“ நினைச்சேன்ய்யா.. நீ எல்லாம் எங்க உருப்பட போற..இந்த ஹவர் உனக்கு ஆப்செண்ட்..”

இது இப்படி என்றால் இன்னொரு லெக்சரரிடம்,

“சார் ஒன்னும் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல எழுதுங்க சார்”

“இது ஓக்கேயாய்யா?”

“இல்ல சார் தெரியல.. இன்னும் கொஞ்சம் மேல..”

யோவ்.. நான் குட்டைனு எனக்குத் தெரியும்யா.. இதுக்கு மேல எழுத முடியாது” என சாக்பீஸை கொண்டு எறி(ரி)வார்.

இப்படி ஆசிரியர்களை கலாய்ப்பதோடு நின்று விடாமல் நன்றாக படிக்கும் மாணவர்களை அழுக விடுவதும் அப்பொழுதுதான்..

“ டேய் சங்கர், உன்னோட டெஸிகேட்டர் உடைஞ்சு போச்சுடா..”

“ இல்ல பாஸ்.. இதோ இருக்கே என்னோடது.. உன்னோடது தானே இப்ப உடைஞ்சது”

“ ஆனா உன் பேர்ல இல்லடி எடுத்தேன்”

அதாவது, Labல் இருந்து உபகரணங்களை எடுக்கும்பொழுது வேண்டும் என்றே அடுத்தவன் ரோல் நம்பரை கொடுத்து எடுப்பார்கள்.. உடைந்து விட்டால் fine அவன் தலையில்.

ப்ராக்டிக்கல் வகுப்புகளில் இப்படிப்பட்ட கலாய்ப்புகள் நடந்து கொண்டே இருக்கும்.. அதுவும் நல்லா படிப்பவர்கள் பொசுக் பொசுக் என்று answer கண்டுபிடித்துவிடுவார்கள்.. அதோடு நிறுத்திக் கொள்ளாமல் labக்குள் ஒரு நகர்வலம் வேறு வருவார்கள்.. யார் தப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என போட்டு கொடுப்பதற்கு..அதனால்தான் அந்த டெஸிகேட்டர் உடைப்பு பழிவாங்கல்..

‘ப்ராக்ஸி’.. இது ஒரு தேசியகீதம்.. அதாவது வகுப்புக்கு வராத நண்பனுக்காக “எஸ் சார்” என அட்டண்டெண்ஸ் குடுப்பது.. அவ்வளவு ஈஸியான மேட்டர் இல்லை இது.. ‘டைமிங்’ ரொம்ப முக்கியம்.. அவனுடைய ஒரிஜினல் நம்பரை சார் சொல்லும் பொழுது வேறு ஒரு டோனில் “எஸ் சார்” என்று சொல்ல வேண்டும்.. நண்பனின் ரோல் நம்பர் வரும் பொழுது சந்தேகம் வராமல் “ப்ரசண்ட் ஸார்” என்று சொல்ல வேண்டும்.. நம்ம நேரத்திற்கு என்று நிமிர்ந்து பார்த்தார் என்றால் அவ்வளவு தான் .. முதல் பெஞ்ச் ‘படிப்பிஸ்ட்டுகள்’ வேண்டும் என்றே திரும்பிப் பார்த்து மாட்டி விடுவார்கள்..

“லைட்டா டவுட் ஆகிப் பார்த்தான் மாப்ள.. தெளிவா நோட்ட கீழ போட்டு குனிஞ்சிட்டேன்.. நாங்கள்ளாம் எப்ப்பிடி..” இதில் பார்த்தான் என்பது ஆசிரியரைத்தான்.

“நம்ம செட்ல எல்லாப்பயளும் நாளைக்கு வேட்டி கட்டி வந்து அசத்துவம் மாப்ள”

“சூப்பர்டா.. காலேஜே தெறிக்க விடுவோம்.. வெள்ள சட்டையா மாப்ள?”

“ சட்ட எதுனாலும் ஓக்கே தான் மச்சி.. வேட்டில சும்மா நச்சுனு வருவோம்”

ஒரே ஒருவனை குறிவைத்து இந்த வலைவிரிப்பு நடக்கும். மற்றவர்கள் எப்பொழுதும் வரும் உடையில் தான் வருவார்கள்.

மறுநாள்,அந்த டார்கெட் செய்யப்பட்ட,கொஞ்சம் ஒல்லியாய் இருப்பவன் மட்டும் வேட்டியை கட்டிக்கொண்டு அது இடுப்பிலும் நிக்காமல் குச்சிக் கால்கள் என திருஷ்டி பொம்மையே அசிங்கமாய் இருப்பது போல வருவான்.. முதலிலேயே பேசி வைத்த மற்றவர்கள் சிரிப்பாய் சிரிப்பார்கள்..

“இதுக்குத்தாண்ட உங்க பேச்ச கேட்டக்கூடாதுன்றது.. இனி உங்க சங்காத்தமே வேணாம்.. சரியான இளிச்சவாயனாக்கிவிட்டீங்களேடா..ச்சே.. வர்ற வழியில எத்தன பேரு அசிங்கமா பார்த்தாங்க தெரியுமா..”

என புலம்புவனை.. “விடு மாப்ள.. இதுக்கு பேருதுதான் பட்டையகட்டி இறக்குறது.. வா ஒரு பீர போடுவோம்..”


குரூப்பாக எங்கு சென்றாலும் தெனாவட்டும் கூடவே செல்லும்.. செட்டு அப்படி..


“எல்லாருக்கும் இட்லிதானப்பா”
“என்னய்யா மெனுகார்டுல இட்லி இம்புட்டு வெல போட்டு இருக்கீங்க..”

“ நம்ம ஹோட்டல் சுத்தம் அப்பிடி தம்பி”


“உங்க ஹோட்டல்ல மட்டும் இட்லி மாவ என்ன ‘ரெய்மாண்ட்ஸ்’ துணிலயா வேக வக்கிறீங்க.. அதே பழைய வேட்டித்துணிதானய்யா..”


இப்படியான எகத்தாளம் எங்கும் பறக்கும்.

இப்படி சலனமில்லா நட்பின் குதூகுலத்திற்கு குறுக்கே வந்து விழும் கல்..காதல்..செட்டில் எவனுக்காவது,எவள் மேலாவது..

No comments: