சுட சுட செய்திகள்

Thursday, March 29, 2012

சிரியுங்கள்


சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.


இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூடஇல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.

காரணம், மன இறுக்கம், மன உளைச்சல்.

இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது.N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம்.
சில சிரிப்புகளை சிறிது அலசுவோம்.
வாய்விட்டு சிரிப்பது - நமட்டு சிரிப்பு - வாயை மூடிக்கொண்டு சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்க சிரிப்புது - விழுந்து, விழுந்து சிரிப்புது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிரிப்பு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கடைசியாக வருவதுதான்  கபட சிரிப்பு  [விடுப்பட்ட சிரிப்பு இருந்ததால் தெரிவிக்கலாம்.]


நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய,
கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிடதெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.
சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்
[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு
இருந்தால்.... மன்னிக்கவும்.]

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர்.

நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது.
நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை.

உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'ம்யூனோகுளோபுலின் ஏ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரித்து  பாக்டீயாக்கல், வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் இந்தப் பேராசிரியர்.
மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு -சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்துரை  செய்கிறார்கள்.

நேர்மன் கசின்ஸ்' என்னும் அமெரிக்க நாவலாசியாரியர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
''நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன். எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன்.
விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சரியம்  ? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது"

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது.


சிரிப்பு நம்மிடைய ரத்ததில் அதிகப்படியான ஆ க்ஸஜன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன. ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.
'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது . மன இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள்.

எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
"சிரிக்க தெரிந்த  சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சிஎன பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

''பெர்னாட்ஷ'' ஒரு சமயம். ''உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னணியிலேயே செயல்படுகிறது' என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது.

நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது. அமரர் 'கல்கி' யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான்.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பெரிய  பதவியிலுள்ளவர்கள் 'சிரித்துப் பேசக் கூடாது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது. சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு 'கவர்ந்திழுக்கக்' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள் தெரியாமல்  உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை.
 இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?

இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.
உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள்.  இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.

நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள், ''சாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும்.

ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்.

Wednesday, March 21, 2012

விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....


சிரிப்பு

என்ன பாக்குறிங்க? புரிஞ்சதா..?
சிப்பு சிப்பா வருதா ....ஐயோ...ஐயோ .....




 

நகைச்சுவைகள்!

விளையாட்டா இருந்தாலும் விளையாடாம பதில் சொல்லுங்க பாப்போம்!ஏன் ?..ஏன் ?...ஏன் ?


ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கு ஏன் ?

கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்ராங்க.,ஏன் ?

மாட்சுல 10 பேர் தான் Out ஆகி இருக்காங்க..ஆனா All Out-ன்னு சொல்லுராங்க.., ஏன் ?

Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப..,Wicket Keeper விக்கெட் விழாம தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் batsman ஐ Out பண்ணுறாரு..?

அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six..( லாஜிக் இடிக்குதே..!! )

------------------------------------------------------------------------------------------------------------
உயிர் நண்பர்கள் ரெண்டு பேர் காட்டு வழியா நடந்து போயிட்டு இருக்காங்க...,


அப்போ 300 மீட்டர் தூரத்தில ஒரு சிங்கம் நின்னுட்டு இருக்கு..,

இவங்க சிங்கத்தை பார்க்க., சிங்கம் இவங்களை பார்க்க.., ஒரே ஜாலிதான் - சிங்கத்துக்கு..

அப்புறம் என்ன..? Chasing தான்...,

இவங்க ரெண்டு பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுறாங்க..

திடீர்னு ஒருத்தன் மட்டும் உக்கார்ந்து Shoe Lace-ஐ நன்றாக இறுக்கமாக கட்டினான்..

இன்னொருத்தன் கடுப்பாயிட்டான்..

" இதை Correct பண்ணி.., சிங்கத்தை விட வேகமா ஓடப்போறியா..? "

" எதுக்கு..! உன்னை விட வேகமா ஓடுனா போதுமே..!!! "
------------------------------------------------------------------------------------------------------------
அது ஒரு விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தது..

நிறைய Professor-களுக்குஅது தான் முதல் விமான பயணம்.

அதனால் மிகுந்த கற்பனைகளுடன் அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருந்தாங்க

" Welcome to All..! " ( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு.(விஜயகாந்த் இல்லப்பா ).!! )

" உங்களுக்கெல்லாம் இந்த ட்ரிப் ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "

Professors :அப்படியா..?!!

கேப்டன் :" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..

அது என்னான்னா........ இந்த Plane............ முழுக்க முழுக்க...... உங்களிடம் படித்த மாணவர்களின் தயாரிப்பு..!! "

( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!!

அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க..

இவ்ளோ களோபரத்துலயும் ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சமும் அலட்டிக்கல.. தன் சீட்டை விட்டும் நகரல,,

அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..

" சார்.., நீங்க..? "

" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "

" உங்க Students தயாரிச்ச Plane-ல பறக்க உங்களுக்கு பயமா இல்லையா சார்..? "

" இல்லையே..!! "

" உங்க Students திறமை மேல அவ்ளோ Confident-ஆ சார்..?! "

" மண்ணாங்கட்டி..!! எங்க Students தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்ட்டே ஆகாதே..!! "

" ??!! "

Wow..

What a Principal..!!

What a Confidence..!!

Tuesday, March 20, 2012

இந்தக் காதல் எது வரை?


நீ தலை துவட்டுகையில்
மேகம் கருக்களிடுகிறது..
உன் மீசையின் வளைவுகள்
என் அந்தரங்க குடிசை பகுதிகள்...
உன் பரந்த மார்பு
நான் கோலம் போடும் முன் வாசல்..
உன் செல்ல கோபம் என் அசட்டு தீக்குளிப்பு...
உன் வருகை
என் சுக பிரசவம்...
உன் பத சுவடு
என் கண்ணீர் குளம்...
உன் எதிர்பார்ப்பு திருவிழாவின்
அம்மாவை தேடும்
பரிதாப குழந்தை...
உன் கண்ணீர்
நான் மூச்சு திணறி
சாகும் கிணறு...
உன்னுள் முளைத்த ஜுரம்
என் சுவாச குழாய் அடைப்பு...
உன் கசப்பு புன்னகை
என் இனிப்பு மரணம்...
உன் கடிதம்
தபால் காரனுக்கு பாலாபிசேகம்...
என்றெல்லாம்
எழுத நினைக்கையில்
மறைய மாறுகின்றன...
."உன் திருமண நிகழ்வும்....என் திருமண நிகழ்வும்.."

ஒரு கப் காப்பி சாப்பிடலாமா..?



காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும்
ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும்
விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றாற் போல உழைக்கவும் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.இதன் காரணமாக இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம்.

சக மனிதன் மீதான பரிவும். ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி,  சுயநலச்
சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது , இத்தகைய இறுக்கமான சூழல்கள்
உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம்,என எந்த ஒரு துறையை எடுத் துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது இந்த  மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.

மனிதனின் மன நலத்தில் மட்டுமல்ல, உடல் நலத்திலும் ஏற்படும் பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு அரம்ப புள்ளி இந்த மன உளைச்சல்தான்.
தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு,
நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலசிக்கல்....பெண்களாய்
இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்....புறவியல்
ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்
பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, மற்றும் சிந்தனைகளினால் வருவது. நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால்,  அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருப்பது. .இப்படியில்லாமல் "இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை' இது போன்ற எதிர்மறை சிந்தனைகள்  மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்கிறது.
சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …நம் நேர்மறை, எதிர்மறை
எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இதோடு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.

என்றோ படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி , இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து
தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.
சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது..வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது,  ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும்,  நல்ல வேலைப்பாடுகளுடனும்,  சிலவை சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன.

பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள்.
உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவை பட்டிருக்கின்றன. .
அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும்
மன அழுத்தத்திற்கும் காரணம். என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி தானே தவிர , கோப்பையல்ல.

ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க
முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை
எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.இப்பொழுது,  வாழ்க்கை
என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.என்று அவர் மன அழுத்தத்தின் காரணத்தை சொல்லி முடித்தார்.

“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,தம் சிறகுகளை நம்பியே
அமர்கின்றன”ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் …தன்னைத்தவிர!. இந்த கோப்பையில் காப்பியை ஊற்றிக் கொண்டால் காப்பி நல்ல இருக்கும் என்று கோப்பையின் மீது நம்பிக்கை கொண்டது மாதிரி.

ஆசை அவனை ஆட்டிவைக்கிறது. ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் இன்றைக்கு அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் பெரியவர்கள்.  மனிதன் எட்ட வேண்டிய குறிக்கோளை தான் இவர்கள் ஆசை என்று சொல்லுகிறார்கள். குறிக்கோளுக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குறிக்கோள் நேர்வழியில் நம்மை நெறிபடுத்தும். ஆசை,  குறுக்கு வழியில் செல்ல வழி காட்டும். மன அழுத்தத்திற்கு  ஆசையும் ஒரு முக்கிய காரணம் தான்.

“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை” ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.எதிர்கால சொர்கத்தை நினைத்துக் கொண்டே ,  இன்றைய நாளை நரகமாக உருவாக்கி கொள்கிறான் .
இன்றைய ஒவ்வொரு நாளையும், சுகமானதாக கருதி உழைத்தாலே போதும், எதிர்காலம் கண்டிப்பாக சொர்கமாகத்தான் இருக்கும்.

மனம் அமைதி யாயிருக்கும் நேரத்தில் , எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் சரியான முடிவினை எடுக்கும் தீர்க்கமான மன நிலை
சாத்தியமாகும். அழுத்தமில்லாத மனமே, சாதிக்கும் வன்மையை உடலுக்கு தருகிறது.
முடிவாக நான் சொல்ல வருவது இதைத்தான்... நீங்கள் இப்போது எந்த நிலையில் இருந்தாலும் சரி..வாழ்வது சுகம் என்று எண்ணுங்கள். மனம் ஆரோக்கியமாக இருக்கும். அதுவே உங்களை நல்வழி படுத்தும்.  இப்போது கையில் கோப்பையை எடுங்கள். கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்.

Thursday, March 1, 2012

மேஜிக் சீக்ரெட்

சீட்டுக்கட்டு!

தேவையானப் பொருள்: புதிய சீட்டுக்கட்டு

செய்முறை:
ஒரு புது சீட்டுக்கட்டை எடுத்து, அதை விரித்து உங்கள் நண்பனிடம் கொடுங்கள். பின்னர், நீங்கள் கண்ணை இறுக மூடிக்கொண்டு திரும்பிக்கொள்ளுங்கள். பிறகு, நண்பனிடம் இந்தச் சீட்டுகட்டிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்லுங்கள். அந்த சீட்டில் உங்கள் நண்பனின் பெயரை எழுதச் சொல்லுங்கள். அதை அப்படியே கண்களை மூடிக்கொண்டே வாங்கி, சீட்டுக்கட்டில் கலந்து விடுங்கள். பின்னர் நண்பனிடமே கொடுத்து நன்றாக கலக்கச் சொல்லுங்கள். அப்படி நன்றாக கலக்கி கொடுத்த சீட்டுக்கட்டை நீங்கள் வாங்கி, ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கொண்டே வாருங்கள். ஏதோ ஒரு சீட்டை எடுத்து, இது தான் நீ பெயர் எழுதிய சீட்டு என்று எடுத்துக்கொடுங்கள். சீட்டை திருப்பிப் பார்த்து நண்பர் அதில் அவர் போட்ட கையெழுத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்!
மேஜிக் சீக்ரெட்!
உங்கள் நண்பர் பெயர் எழுதி கொடுத்த சீட்டை வாங்கும் போதே கண் இமைக்கும் நேரத்தில் அந்தச் சீட்டில் மேல் புறத்தில் உங்கள் கட்டை விரல் நகத்தால் ஒரு அழுத்தம் கொடுங்கள். நீங்கள் கொடுத்த அழுத்தம் தழும்பாக அதில் பதிந்து விடும். பின்னர், சீட்டுக்கட்டை கலுக்கி ஒவ்வொன்றாக எடுக்கும் போது, அந்த தழும்பு உள்ள சீட்டு வரும் போது, அதை எடுத்து கொடுத்து நண்பரை அசத்துங்கள்!

 நீராவிக் கப்பல்!

தேவையானப் பொருட்கள்: காலி பல்பொடி டப்பா, சோப்பு பாக்ஸ் மேல் மூடி, மெழுகு வர்த்தி, நுõல், ஒரு அகல பாத்திரம்.
செய்முறை:
ஒரு அகல பாத்திரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு காலி சோப்பு டப்பாவின் மேல் மூடியில் ஒரு காலி பல்பொடி டப்பாவை இணைத்துக் கட்டி, அதை பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, சோப்பு டப்பா மூடியை மிதக்க விடுவும். இது தான் நீராவிக்கப்பல்.
பின்னர், பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த நீராவிக்கப்பல் இந்தப் பாத்திரத்தில் ரவுண்டு அடிக்க வைக்கிறேன் பாருங்கள்! ச்சூ ஜிகத் ஜகா! ஜாத் ஜகா ச்சூ!' என்று சொல்லி ஒரு தீக் குச்சியை கொளுத்தி சோப்பு டப்பாவில் போட்டு விட்டு,உங்கள் கையை கப்பலுக்கு மேலே வைத்துக்கொள்ளுங்கள்! சில நிமிடங்களில் அந்த சோப்பு டப்பா மூடி தண்ணீரில் வட்டமடிக்கும்! இதைப் பார்த்து, பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்! :
மேஜிக் செய்வதற்கு முன்பு, நீங்கள் சோப்பு டப்பாவில் ஒரு மெழுகுவர்த்தியை ஒட்டவைத்துக்கொள்ளவும். மெழுகு முனையில் கொஞ்சம் சூடத்தை திணித்துக்கொள்ளவும்.அடுத்ததாக, பவுடர் டப்பாவில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொண்டு சோப்பு டப்பா மூடியையும், பல்பொடி டப்பாவையும் இறுக கட்டிக்கொள்ளவும். நீங்கள் கொளுத்திப் போட்ட தீக்குச்சி சோப்பு டப்பாவில் விழுந்ததும், சூடத்தில் பற்றி, மெழுகு வர்த்தி எரியத் தொடங்கும். சூடு ஆக, ஆக தண்ணீர் ஆவியாகி அது வெளியேறும் போது அந்த சோப்பு டப்பா கப்பல் தண்ணீரில் வட்டமடிக்கும்!

 நகரும் புள்ளி!

தேவையானப் பொருட்கள்: நோட்டு, ஸ்கெட்ச் பென்
செய்முறை: ஒரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில் ஒரு புள்ளியை வைத்து, அந்தப் புள்ளி ஒவ்வொரு பக்கமாக மேலே நகரும் என்று சக நண்பர்களிடம் சொல்லி, படத்தில் காட்டியவாறு புத்தகத்தின் பக்கத்தை புரட்டுங்கள். புள்ளி சர்ர்... என்று மேலே நகர்ந்து செல்லும். அதைப் பார்த்து நண்பர்கள் மகிழ்வார்கள்!


மேஜிக் சீக்ரெட்!
ஒரு பாட புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தில் ஒரு ஓரமாக படம் 1ல் காட்டியவாறு, கீழ் இருந்து மேலாக ஒவ்வொரு பக்கமாய் புள்ளி வைத்துக்கொண்டு வரவும்.
அல்லது மேல் இருந்து கீழாகவும் ஒவ்வொரு பக்கத்திலும் புள்ளி வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது புத்தகத்தை மறுபக்கம் திருப்பி கீழ் பக்கம் மட்டும் ஒரே ஒரு புள்ளி வைத்துகொள்வும்.
ஒரு ஒரு புள்ளி வைத்த பக்கத்தை மட்டும் காட்டி விட்டு, அந்த புள்ளி மேலே செல்லுவதாக சொல்லி, புத்தகத்தை திருப்பி கடைசி படத்தில் இருப்பது போல காட்டினால் புள்ளி கீழ் இருந்து மேலே நகருமாதிரி தெரியும்!

 மந்திரச் சீப்பு!

தேவையானப் பொருட்கள்:
சீப்பு, சிறிது சிறிதாக கிழித்த காகித துண்டுகள், சிறிதாக உடைத்த குச்சிகள்
செய்முறை:
பார்வையாளர்கள் முன்பு சீப்பைக்காட்டி விட்டு, தலை முடியை மெல்ல சீவுங்கள். பின்னர் சீப்பை உள்ளங்கையில் ஒரு சில விநாடிகள் வைத்து விட்டு, டேபிளில் இருக்கும் காகித துண்டுகள் அருகே கொண்டு போங்கள். இப்போது சீப்பில் அந்த காகித துண்டுகள் ஒட்டாது. பின்னர், பார்வையாளர்களிடம் இப்போ சில மந்திரம் சொல்வேன். இதே சீப்பு இங்கே உள்ள காகித துண்டுகளை இழுக்கும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு,
மறுபடியும் சீப்பால் தøமுடியை சீவுங்கள். சீவிய சீப்பை ஓரமாக பிடித்துக்கொண்டு, உடனே காகிதத்தின் அருகே கொண்டு போங்கள். காகிதத் துண்டுகளை சீப்பு கவர்ந்து இழுக்கும். பார்வையாளர்கள் இதைப்பார்த்து அசந்துபோவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:
ஒரு பொருளுக்கு உராய்வு காரணமாக வெப்பம் ஏற்படுகிறது. வெப்பம் காரணமாக ஒவ்வொரு பொருளும் மின்சக்தி தன்மையை பெறுகின்றன.
சீப்பை பலமுறை தலைமுடியில் ஒரே திசையில் தேய்க்கும் போது சீப்பிலுள்ள அணுக்களில் இருக்கும் எதிர் மின் அணுக்கள் வெளியேறவோ அல்லது தேய்க்கப்படும் பொருளில் உள்ள மின் அணுக்களை ஏற்கும்.
இந்நிலையில் சீப்பினை துண்டுகாகிதங்கள் அருகே கொண்டு சென்றால் அப்பொருளின் நுனியிலுள்ள மின் அணுக்களை ஈர்க்கும் அல்லது தன்னிடமுள்ள மின் அணுக்களை அவற்றிற்கு கொடுக்கும். இதன் காரணமாகதான் சீப்பில் காகிதங்கள் ஒட்டுகின்றன.
இதில் மேஜிக் என்னவெனில் முதலில் சீவும் சீப்பில் ஏறிய வெப்பத்தை உள்ளங்கையில் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனால் சீப்பில் காகிதத்துண்டுகள் ஒட்டது. இரண்டாவது முறை சீவும் போது சீப்பை ஓரமாய் பிடித்துக்கொண்டு சட்டென்று சீப்பில் ஏறி வெப்பத்தை காகித்ததுக்கு அருகே கொண்டு சென்றால் போதும். உங்கள் மேஜிக் வெற்றிதான்!

 தண்ணீர் மறைய வைக்கும் மேஜிக்!

தேவையானப்பொருட்கள்:

1 மெழுகுவர்த்தி
2 தீப்பெட்டி
3 ஒரு ரூபாய் நாணயம்
4 சமமான தட்டு
5 காலி கண்ணாடி டம்பளர்
6 சிறிதளவு தண்ணீர்
செய்முறை:
ஒரு தட்டை எடுத்துக்கொள்ளவும். அதன் மையப்பகுதியில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும். தண்ணீரில் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். தண்ணீரில் மூழ்கும்படி ஒரு ரூபாய் காசைப் போடவும்.
இப்போது பார்வையாளர்களிடம் தட்டையும், அதில் இருக்கும் தண்ணீரையும் காட்டுங்கள்! பின்னர், இப்போது தட்டில் இருக்கும் தண்ணீரை மாயமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி, காலி கண்ணாடி டம்ளரை மெழுகுவர்த்தி மீது கவிழ்த்து வையுங்கள்! கொஞ்ச நேரத்தில் தட்டில் உள்ள தண்ணீர் எல்லாம் கவிழ்த்து வைத்து கண்ணாடி டம்ளரில் சேர்ந்து விடும்.
மேஜிக் சீக்ரெட்:
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது காலி கண்ணாடி டம்ளரை கவிழ்க்கும் போது காற்று இல்லாமல் மெழுகுவர்த்தி அணைந்து விடும். கண்ணாடி டம்ளரில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உறிஞ்சப்படும் போது தட்டில் உள்ள தண்ணீர் டம்ளரில் சேர்ந்து விடும். தண்ணீர் மாயம் ஆனதைக் கண்டு பிடிக்க காசு தண்ணீரில் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டவும்.

அறுந்த விழாத காசு!

தேவையானப் பொருட்கள்:
மெழுகு வர்த்தி, தீப்பெட்டி , நுõல், பழைய அலுமினிய காசு(10 காசு)

செய்முறை:

கெட்டியான நுõலில் பழைய 10 காசை இறுக கட்டிக் கொள்ளவும். பின்னர் நுõலை செங்குத்தாக நிற்குமாறு பிடித்துக்கொள்ளவும். பிறகு, ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி கொள்ளவும். பார்வையாளர்களிடம்""இப்போது இந்த மெழுகுவர்த்தியால் இந்தக் காசை சூடேற்றுவேன். ஆனால், காசு மேல் சுற்றி இருக்கும் நுõல் எரியாமல் இருக்கும். அது மட்டுமல்ல நுõலில் இருந்து காசு அறுந்து விழாமலும் இருக்கும்'' என்று சொல்லி விட்டு மெழுகு சுடரை காசின் மேல் காட்டுங்கள். சில நிமிடங்கள் கழித்தும் நுõல் எரியாமல் இருக்கும். காசும் நுõலில் இருந்து அறுந்து விழாமல் இருக்கும். இதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மெழுகு வர்த்தியின் சுடரை காசுக்கு பக்கவாட்டில் காட்ட வேண்டும். அப்போது சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் காசை முழுவதுமாக தாக்காது. அடுத்ததாக, பத்துகாசு அலுமினியத்தால் ஆனதால் அதன் வெபட்ப ஏற்புதிறன் மிகவும் அதிகம். எனவே சூடேற்றும் போது, கொடுக்கப்படும் வெப்பத்தை காசு முழுவதுமாக பெற்றுக்கொள்வதால், நுõல் அந்த வெபட்பத்தை சிறிதளவே ஏற்பதால், நுõல் வெப்பத்தால் கரிபடிந்து கருப்பாகி இறுகிவிடும். அதன் மேல் தீச்சுடர்பட்டும் நுõல் எரியாமல் இருக்கும். எனவே நுõலில் இருந்து காசு அறுவாமல் இருக்கும்.

பேப்பர் மேஜிக்!

தேவையானப் பொருட்கள்: அரை அங்குலம் நீளமுள்ள இரண்டு பேப்பர் துண்டுகள், கம்

செய்முறை: இரண்டு துண்டு பேப்பரைக் கொண்டு அதில் ஒன்றில் மட்டும் படத்தில் காட்டியதுப் போல கம் கொண்டு ஒன்றின் மீது ஒன்றாக சரியாக ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு, படம் நான்கில் உள்ளதைப் போல் மடிக்கவும், படம் 5 ல் இருப்பது போல் நமது கை கட்டை விரலில் அடங்கும் அளவிற்கு மடித்துக் கொள்ளவும்.
பிறகு, பார்வையாளர்களிடம் பேப்பரை திருப்பிக் காட்டவும். மடித்த பகுதி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது.
இப்பொழுது பார்வையாளர்களின் முன் பேப்பரை இரண்டு துண்டுகளாக கிழித்து, முன்பு மடித்ததைப்போல் பேப்பரை மடித்து கையின் முன் ஏதோ மந்திரம் செய்வதைப் போல் செய்து, படம் 10 ல் இருப்பதைப் போல் திருப்பிக்கொள்ளவும்.
பின்னர், பார்வையாளர்களின் முன் கிழிந்த பேப்பரை பிரித்துக்காட்டவும்.
மேஜிக் சீக்ரெட்:
இது ஒருவகை தந்திர மேஜிக். மேஜிக் செய்யும் முன்பாக அந்த பேப்பரில் இன்னொரு பேப்பரை பிறருக்கு தெரியாதவாறு ஒட்டிக் கொள்ளவும். ஒட்டியப் பேப்பர் வெளியே தெரியாதவாறு மடித்துக்கொள்ள வேண்டும். கிழிக்கும் போது மேலே உள்ள பேப்பரைக் கிழிக்க வேண்டும். மேஜிக் செய்து முடித்தப்பிறகு, அடியில் உள்ள பேப்பரை பிரித்துக் காட்டவும்.


 தொட்ட கல்லை தொட்டுக் காட்டுவது

இது ஒரு தந்திரமான மேஜிக் விளையாட்டு. இந்த மேஜிக்கை செய்ய வேண்டுமானால், உங்களுக்கு நம்பகமான ஒரு நண்பர் தேவைப்படும். இந்த மேஜிக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

செய்முறை:

பள்ளியில் நண்பர்கள் மத்தியில் இந்த மேஜிக்கை செய்யுங்கள். மேஜிக் செய்வதற்கு முன்பு, படத்தில் இருப்பதைப் போல ஸ்டார் படம் வரைந்து கொள்ள வேண்டும். அந்த ஸ்டாரில் இரு கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில் வெவ்வேறு வண்ண கற்களை வைக்க வேண்டும். மேஜிக் விளையாட்டு விளையாட வரும் நண்பரை அழைத்து, உங்கள் கண்களை துணியால் இறுக கட்டச் சொல்லுங்கள். பின்னர், அந்தப்படத்தில் ஏதேனும் ஒரு வண்ணக் கல்லைத் தொடச் சொல்லுங்கள்.(உதாரணமாக அவர் சிவப்பு கல்லைத் தொட்டிருக்கிறார்) பின்னர், தொட்ட விரலை எடுத்து விட்டு தள்ளிச் செல்ல சொல்லுங்கள்.
நண்பரிடம் எனக்கு இப்போது கண் தெரியாது. இருந்தாலும் நீ எந்த கல்லைத் தொட்டாய் என்று துள்ளியமாக சொல்கிறேன். என்று கூறி,
உங்கள் கண்கட்டை அந்த நண்பரையே அவிழ்க்கச் சொல்லவும்.கண் கட்டு அகற்றியதும், ஸ்டார் படத்தின் முன் குனிந்து, கையை விரித்து அப்படியே மூன்று முறை படத்தை சுற்றவும். "ஜூம்ஜூம் ஜூம் ஜஹா! தொட்டக் கல்லே கண் முன் வா' என்று பில்டப் கொடுத்துவிட்டு,உங்கள் நண்பர் தொட்டக் கல் சிவப்பு என்று சொல்லுங்கள். நண்பர் அசந்து போய்விடுவார்.
மேஜிக் சீக்ரெட்:
உங்களின் நண்பகமான நண்பர் மேஜிக் விளையாடியவர் சிவப்பு கல்லைத் தொட்டால் கட்டை விரலையும், பச்சைக் கல்லைத் தொட்டால் சுண்டு விரலையும், கருப்பு கல்லைத் தொட்டால் ஆள்காட்டி விரலையும் காட்ட வேண்டும் என்று சொல்லி வையுங்கள். உங்கள் கண் கட்டு அவிழ்ந்ததும், நண்பர் எந்த விரலைக் காட்டுகிறார் என்பதை தெரிந்து அதை சொல்லவும்.

தொடரும்