சுட சுட செய்திகள்

Thursday, May 21, 2009

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

(தோழர் வினவின் இதயம் குத்தும் நியாய கணைகள்)

கண் திறந்து பார் தமிழகமே!
ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசுஅறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!
இலங்கை அரசின் வெற்றிக்களிப்புசிங்கள வெறியின் கோரநடனம்!
முல்லைத்தீவின் கடறகரையெங்கும்இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!
முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறதுமுகம் சிதைந்த ஈழத்தமிழினம்!
படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் - டில்லியில்பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!
பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்குபத்தாதாம் மந்திரிப் பதவி!
படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோபாரதத்தின் நாளைய பிரதமராம்!
“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோபடுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!
எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?
உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,நீ வழங்கிய அதிகாரம்..
நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?
அமைதி காப்பது அவமானம்அலட்சியம் காட்டுவது அநீதிஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!

Monday, May 18, 2009

பிரபாகரன் மறைய வில்லை...

பிரபாகரன் மறைய வில்லை...
தமிழின சொந்தங்களே....பொறுமையோடிருங்கள். ஈழ மண்ணில் வீர மரணம் அடைந்த மற்ற தோழர்களது உடலை வைத்து தான் .....பிரபாகரனாக இருக்கலாம்..என்று வதந்தியை கிளப்புகிறார்கள். பயபடாதிர்கள் !
தனி தமிழீழத்தை அமைத்து கொடுக்காமல் அந்த வீர தலைவனின் உயிர் போகாது.

Saturday, May 2, 2009

கண்ணீர் புகைப்படம் இது...


இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்
கரையான் புற்றெடுக்க பாம்பு வந்து உள்ளே புகுந்து பேயாட்சி நடத்துவதை எந்த மனசாட்சி உள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம். இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை. புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது??