சுட சுட செய்திகள்

Sunday, March 28, 2010

பகுத்தறிவினால் ஒரு புலனாய்வு






நண்பர்களே..
 
போன வாரம் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆம் மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் அந்த ஆன்மீக பயணம் எனக்கு கிடைத்தது. சரியாக மலை 5 மணிக்கு நானும் அந்து சகாக்களும் தோரண வாயிலை விட்டு உள்ளே நுழைகிறோம். அப்போது ஒரு ஆன்மிக நண்பர் 'வழி விடுங்கள்,வழி விடுங்கள் சாமி வருகிறார்" என்று எங்களை மிரட்டும் தொனியில் உள்ளே நிழைய விடாமல் தடுத்தார். நாங்களும் ஊரே கடவுளாக நினைத்து வழிபடும் ஒரு மனிதர் வருகிறாரே என்று அவரை பார்க்கும் வாய்ப்பினை நழுவ விட மனமில்லாமல் ஆவலோடு அவரை எதிர் நோக்கி காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற உயர்ந்த ரக கார் மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டு இருந்தது. வழி நெடுக பக்தர்கள் தங்கள் கைகளை விரித்தபடி அந்த மனிதரை மனம் விட்டு வணங்கி கொண்டு இருந்தார்கள். உள்ளே அந்த மனித சாமி வெள்ளை நிற வேட்டி சட்டை யோடு, பின் சீட்டில் அமர்ந்த படி கைகளை தூக்கியபடி சென்று கொண்டு இருந்தது. (ஆசி வழங்குகிறாராம்) . இந்த காட்சியை கண்டவுடன் என் மனதில் ஒரு நெருடல் உருவாகியதை உணர்ந்தேன்.
இருந்தாலும் சரி உள்ளே செல்லுவோம் என்றபடி பயபக்தியோடு சக்தியை பார்பதற்காக உள்ளே செல்ல தயாரானோம். உள்ளே மண்டபத்தின் சுவர்கள் எல்லாம் நிறைய போட்டோகள் . அவை அத்தனையும் சுய புராணம் பாடும் பங்காரு அடிகளாரின் விளம்பர கட் அவுட் போல இருந்தது. சோனியா முதல் ஜெயலலிதா வரை அத்துணை பேருக்கும் செவ்வாடை அணிவித்து ஆசி வழங்கியபடி அமர்ந்திருக்கிறார் சாமி. தன்னை தானே சுய விளம்பரம் செய்து உண்மையான கடவுளை இந்த மனித சாமி இருட்டடிப்பு செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் சென்றால் அவரின் வரலாறு கதை சொல்லும் படங்கள். வெப்ப மரத்தில் பால் வாடுவதில் இருந்து, தாகத்தில் இந்த சாமி இருக்கும் போது அந்த தெய்வம் சக்தியே நேரில் வந்து தண்ணீர் பாக்கெட் தந்தது என்பது வரை அங்கே வரையப்பட்டு இருந்தது.

இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் அவர் வேப்ப மர இலைகளை உருவி தங்க தாலி வரவழைத்தாராம். (இவர் கொஞ்சம் மனது வைத்தால் இந்தியாவின் பொருளாதார சுமைகளை தன சித்து விளையாட்டின் மூலம் தீர்க்கலாம் ) இதையெல்லாம் விட அவரின் பொன்மொழிகள் வேறு. அவருக்கு பாத பால் அபிசேகம் செய்தால் அந்த சக்தியே வந்து அனுபவிக்கிராராம். இன்னும் நிறய மனதிற்கு ஒவ்வாத நிறைய விசயங்கள் என்னை அங்கு பாதித்தன. உண்மையில் அன்றைக்கு மனம் குளிர செய்வதற்காக போனவன், கனத்த இதயதோடவே வெளியே வந்தேன்.


இப்போது எனக்கு சில விஷயங்கள் தோன்று கிறது... நீங்களே சொல்லுங்கள்...

சில மனிதர்கள் ஏன் தங்களை தானே கடவுள் என்று சொல்லி கொள்கிறார்கள்.?

மக்களும் பகுத்தறிவை கசக்கி எறிந்துவிட்டு எதை சொன்னாலும் ஏற்று கொள்ளுகிற முட்டாள் தனத்தில் இன்னும் ஏன் இன்னும் கிடக்கிறார்கள்?
விபரம் தெரிந்த மானமுள்ள மனிதர்கள் தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்....






நட்புடன்....



குழப்பத்தில் இருக்கும் ஒட்டக்கூத்தன்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in