சுட சுட செய்திகள்

Friday, October 14, 2011

பேனா…….ஒரு சிறு குறிப்பு…..


பேனா…….ஒரு சிறு குறிப்பு…..
பின்குறிப்பு : இது கவிதையல்ல…
அன்புடன் - ஒட்டக்கூத்தன்…


சில பேரின் கைகளில்
சில்லரைகளுக்காக தலைகுனிகிறது…
என்றைக்குமே அவர்கள் பேனா
நிமிர்ந்து பார்த்ததே கிடையாது…
அந்த பேனாக்கள் தங்கள்
முக மூடிகளை கழற்றிய உடனே
தன் வாயிலிருந்து எச்சிலை
உமிழ்கின்றன…
பெண்ணுடல்இ காம ரசம்இ
 இவைகளை துப்பி துப்பியே
இந்த சமுதாயத்தை அழுக்காக்கியிருக்கின்றன…
கவிஞன் எல்லாவற்றிலும்
அழகியலை புகுத்துகின்றான்
உண்மைதான்…
இந்த அழகியலும்
சில நேரங்களில்
அழுக்கியலாக மாறியிருக்கிறது….
பல புரட்சிகளைஇ உருவாக்கிய பேனா…
பல சமுதாய சீர்கேடுகளை
புரட்டி போட்ட பேனா…
கலை வளர்த்து
களிப்பேற்றிய பேனா…
மனதை சமமாக்கி
மனித நேய விதையை
விதைத்த ஆன்மீக பேனா….
அநீதியை தட்டி கேட்க
தோள் தட்டி புறப்பட்டு சென்ற
துப்பாக்கி பேனா…
துக்கத்தால் துவண்டு
வழுக்கி விழுந்தவர்களை
விலா நோக சிரிக்க வைத்த
நகைச்சுவை பேனா….
அந்த பேனாக்கள்….
சிந்திய தேன் துளிகளில்
பல துளிகள்…
கற்பனை வாட்டத்தில்
காய்ந்து விட்டன….
காய்ந்துவிட்ட காரணத்தால்
அந்த அற்புத பேனாக்களும்
மாய்ந்து விட்டன…
ஆயிரம் துப்பாக்கி முனைகளின்
துந்துபி முழக்கத்தை விட
ஒரு பேனா முனை
மிகவும் வலிமையானது என்பது
எவ்வளவு பெரிய உண்மை…?
நமது வரலாறுகளை
புரட்டி பார்க்கின்ற போது…
பாரதியின் பேனா…
ஆயிரம் பீரங்கிகளுக்கு
சமமானது…
அவன் எழுத்து…
பல பிரபஞ்சங்கள் புதிதாக முளைத்து
வீழ்ந்து…மீண்டும் வந்தாலும்
அடிமைத்தனத்தை
மீண்டும் அண்ட விடாது..
தன் நாக்கு
முதன் முதலில்
அன்னத்தை தொடும் போது
ஒலித்த தாய் மொழியை தவிர
வேறு எம்மொழியையும்
பாரதிதாசனின் வேல் வீசும் வார்த்தைகள்…
அனுமதிக்காது.
சாதியத்தை..
மனித மனத்தை
காயப்படுத்திய பிரிவினைகளை…
என்றைக்குமே
பெரியாரின் வைரவரிகள்
சுட்டெரித்து விடும்…
பாரப்பட்டு.
வேதனைகளைத் தாங்கி…
மகிழ்சிசிக்காய்
ஏங்கித் தவிக்கும் பல
நெஞ்சங்களைத் தன் வார்த்தைகளால்
மருந்திட்டுஇ தோகையால் வருடிவிட்ட
கண்ணதாசனின் சாமர விசிறி
போன்ற வார்த்தைகள்
காலாகாலத்திற்கும்
நம்மை ஆறுதல் படுத்தும்…
அந்த பேனாக்களின்
மையில் மெய்மட்டும்தான்
நிர்ப்பப்பட்டு இருந்தது…
உண்மை குடியிருந்த காரணத்தால்…
அதிலிருந்து தெரித்த வார்த்தைகள்
சமூக அவலங்களை தீயாய்
சுட்டெரித்தது.
அந்த எழுத்துக்கள்
புழுத்துப்போன பொய்களை எல்லாம்…
வெளுத்துக்காட்டிஇசாயம் போக வைத்தது..
இன்றைக்கும் எழுதுகிறார்கள்..
ஒற்றை முனைக் கொண்ட அந்த பேனர்
கூசக் கூச எழுதுகிறார்கள்.
.சமூகம் அவர்களைத்தான்
கவிஞன் என கொண்டாடுகிறது..
ஆம்…
திரைப்படத்திற்கு
பாடல் எழுதினால் மட்டும் தான்…
அவன் அரசவை கவிஞனாகிறான்.
அதிகார வர்க்கத்திற்கு
தலைகுனிந்து தலைகுனிந்தே
இங்கே சில கவிஞர்களுக்கு
கிரீடம் முளைத்திருக்கிறது….
காக்காவை
மட்டும் தான் அவர்கள்
தங்கள் தேசிய பறவையாய்
அங்கீகரித்திருக்கிறார்கள்..
அவர்களுக்கு வாய்த்த தமிழை
அதிகாரத்திற்கு அபிசேகம்
செய்வதற்கே பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் பேனா
உதிர்க்கும் சொல் மலர்கள்
பாவம்…
கல்லரைகளுக்கு
மட்டுமே தூவப்படுகின்றன..
மக்களுக்கு
அறிவூட்டி
ஐந்தாம் தூணாய் இருந்த பேனா…
ஊனப்பட்டு கிடக்கிறது…
அதிகாரத்தை
மயக்குவதற்கு…காலம் பார்த்து பார்த்து….
பென்னியா…-இது லத்தீன்…
“பறவையின் இறகு”
என்பது பொருள்….
பேனா…- இது நாம் சொல்வது….
லத்தினிலிருந்து வந்த வார்த்தை பேனா….
உண்மைதான்….
அதிகார சூரைக்காற்றில்
நிலைக் கொள்ளாமல்
பறந்தபடி திரிகிறது….
இந்த..
“பறவையின் இறகு”…!!!


No comments: