சுட சுட செய்திகள்
Tuesday, January 31, 2012
Sunday, January 29, 2012
Friday, January 27, 2012
இளவம்பஞ்சு -சிறு கதை...
இளவம்பஞ்சு
மாலை நேரம், யாருமில்லாத கடற்கரையோரம். ஜந்தாறு பேர் மட்டும் கடற்கரையில் நின்று கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
ரவிக்கு மனபாரம் இன்னும் குறைந்த பாடில்லை.காதலித்த பெண்ணோடு சென்னை வந்தவன்,பதிமூன்று வருசமாச்சு.அம்மா,தங்கச்சியை பார்க்க இதுவரை ஊருக்கு போகவே இல்லை.
‘நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்..? காதலிச்சது குத்தமா..? ஏன் என்னை அம்மா ஒதுக்குனாங்க..? சரியா பேசவுமில்லை..ஏதோ மூனாவது மனுசன மாதிரி தானே நினைச்சாங்க..?ஒரு சந்தோசம் இல்லாத வீட்டில் இருக்கிறத விட,தனியா போறதுதான் சரின்னு இங்க வந்தேன்...இருந்தாலும்……” அலைகள் அவ்வப்போது வந்து கால்தடவி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றன…
“அப்பா இல்லாத வீட்டுல..நான் தானே எல்லாமே முன்னாடி நின்னு செய்யனும்..? பாவம்..அங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆச்சேர் என்னவோ..? அம்மாவுக்கு அந்த கழுத்துவலி எப்படி இருக்குதோ?
நினைக்கும் போதே முகத்தோல்கள் சுருங்கின.கண்களில் நீர்த்துறிகள் தேங்கின.தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டதால் லொக் கென்று இருமிக்கொண்டான்.
“இல்ல நான் செஞ்சதுதான் தப்பா..? பெத்த புள்ள கல்லுமாதிலி நான் இலக்க,அங்க அம்மா என்ன கஸ்டப்படறாங்களோ..?! அம்மா கோபத்துல ஏதேதோ திட்டினாலும்..கோழி மிதிச்சா குஞ்சு சாகும்..? ஊரு பொண்டாட்டி பேச்ச கேட்டு ஓடியாந்துட்டான்னுதானே பேசும்..?!”
மனசாட்சியோடு,மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தான் ரவி;. கடல் காற்றும்,அவன் நினைவுகளை ஈரப்படுத்திக் கொண்டே இருந்தன.
அலைகளும்,கரையை தொட பலமுறை முயன்றாலும்,கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.
“சே..! நேத்து வந்தவளுக்காக,பெத்தவள தூக்கி எறிஞ்சிட்டேனே! என்னை வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பா..? கல்லுடைச்சு,மரந்தூக்கி,கட்டிட வேலை செஞ்சு,காய்கறி வித்து…சே…! நான் ஒரு சுயநலவாதி.புத்திகெட்டுப் போச்சே…ஐயோ..”
தேங்கியிருந்த கண்ணீர்,பெருமழையாய் பெருக்கெடுத்தது.கண்கள் இருண்டு சிவந்து போயின.அக்கரையில் சூரியனும் கடலுக்குள் இறங்கத் தொடங்கினான்.நண்டுகள் தன் வளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.உப்புக் காற்றும்,வெதுவெதுப்பான மணலும் அவன் சோகங்களுக்கு ஒத்தடம் கொடுத்தன.
இரவு மெல்ல தன் கரங்களை விரிக்க தொடங்கியது.மெல்ல எழுந்தான்.கால்கள் இரண்டும் பின்னிக் கிடந்தன.தலைமுடி காற்றில் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.கன்னத்தின் மேடுகளில் கண்ணீர் தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது.எதையோ இழந்தது போலிருந்தது அவன் மனம்.உடைகளில் ஒட்;டிக் கிடந்த மணலை தட்டி விட்டான். சாலையோரத்தில் நின்றிருந்த தன் பைக்கில் ஏறி வீடு நோக்கி புறப்பட்டான் ரவி;.
“அம்மா…அப்பா வந்தாச்சு…” ரவியின் ஒரே மகள் ராணி.
“ஏன் இவ்வளவு நேரம்..?என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…உடம்புக்கு ஏதும் முடியலயா..?
மனைவி ரேகா பதறினாள்.
ரேகா…ரவிக்கு ஏற்ற சரியான ஜோடி.காதல் மனைவி.கல்யாணம் பண்ணியும் காதலர்களாயவே வாழும் கலியுக காதல் பறவைகள்.ரேகா…படித்தவள்.கல்லூரி காலத்தில் இருவரும் கண்கள் பரிமாறி,இதயங்களை இடமாற்றிக் கொண்டவர்கள்.ஜாதி வேற வேற என்றாலும்,ரவிக்கு ஒரு நல்ல பெண் சாதி.அவன் தளர்ந்துக் கிடக்கும் போதெல்லாம் தைரியமூட்டி முன்னேற வைத்தவள்ஃகொஞ்சம் முன்கோபி.ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்காத பதிவிரதை.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…நீ போய் காபி போட்டுட்டு வா…”
முகத்தை முழுதாக காட்டாமல் உத்திரவு போட்டான் ரவி.
“ராணி என்ன பண்ற..?”
“படிக்கிறேம்பா…”
“என்ன படிக்கிற..?”
“ம்ம்….தமிழ் பா..”
“எங்க குடு…பாப்போம்…என்ன பாடம்..?”
“உறவுகள் ..2ம் பாடம்..பா”
“ஓ..ஓ…எங்க சொல்லு பாப்போம்..
என் அப்பாவின் அம்மா… பாட்டி…
என் அப்பாவின் சகோதரி…அத்தை..
என் அப்பாவின் அப்பா..தாத்தா…”
“சரிம்மா…நீ போய் தூங்கு…சரியா..?”
அவன் மனசு எதற்காகவோ ஏங்கியது…அது அந்த உறவுகளாகக் கூட இருக்கலாம்.
சாப்பிட்ட பிறகு,படுக்கையில் கிடந்தான்.தூக்கம் மட்டும் வர மறுத்தது.தாயின் ஏக்கம் இமைகளை சாத்த மறுத்தது.தலையில் ஏதோ ஒன்று விழுந்தது போலிருந்தது.தட்டி விட்டான் …பல்லி ஒன்று குதித்தோடியது.
…..ரேகா….
….ம்…..
“காலையிலிருந்தே மனசு சரியில்ல…என்னவோ அம்மாவை பாக்கனும் போலவே இருக்கு…?
“என்னங்க…என்னைக்குமே இல்லாம திடீர்னு..?”ஆச்சர்யப்பட்டாள் ரேகா…
“என் அம்மாவோட முகமே மறந்துடும் போல இருக்கு…அம்மா இப்ப இருக்காங்களோ..என்னவோன்னு பயமா இருக்கு…”
முதன்முதலாக ரவி அழுவதை அப்போதுதான் ரேகா பார்க்கிறாள்.
“சே…என்ன குழந்தையாட்டம் அழுதுகிட்;டு…கண்டதையும் போட்டு நினைக்காதீங்க..அம்மா அங்N;க நல்லாதான் இருப்பாங்க.”
“இல்லையே…நான் அனாதையா விட்டுட்டு வந்துடடேனே…”! மடியிலே முகம் புதைத்து அழுதான்.
“நாளைக்கே புறப்பட்டு,அம்மாவையும்,தங்கச்சியையும் பாத்துட்டு…கூடவே கூட்டிட்டு வந்துருவோம்.நீங்க இப்ப கவலைப்படாம தூங்குங்க..”சமாதானப்படுத்தினாள்.
சாயங்காலம் ஆகியது அவர்கள்; நம்பிய+ர் வந்து சேர்வதற்கு.இன்னும் இங்கயிருந்து இன்னொரு பஸ் பிடிக்கணும் ரவியின் சொந்த ஊர் போவதற்கு.
“ஏங்க இளத்தூருக்கு எத்தனை மணிக்கு பஸ் வரும்?”
“சொல்ல முடியாதுங்க…மழைக்காலம் வேற…இப்பத்தான் ஒரு வண்டிப் போச்சு. அடுத்தாப்ல பத்து,பத்தே காலுக்குத்தான்..”
இந்த நம்பிய+ர் ஒரு கிராமம். கிராமத்தின் மண்வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.அப்பவெல்லாம் இந்த நம்பிய+ர்லதான் சந்தை.சின்ன வயசுல ரவியும்,அவன் அம்மாவும் சந்தைக்குப் போய்ட்டு வீடு வரும் போது மணி ஒம்பது,பத்தாயிரும். நம்பிய+ர்ல இருந்து இளத்தூருக்கு ஒரு குறுக்கு வழி இருந்தது.
அப்பவெல்லாம் அதுலதான வந்து போகணும். பஸ் வசதியெல்லாம் இப்பதானே வந்தது.!காய் கூடையை அம்மா சுமந்துக்குவாள்.ரவி அம்மா கையை புடிச்சிட்டு,பொரியை தின்னுகிட்டு கதை பேசிகிட்டே வருவான்.சுத்தியும் முள் காடு. பனமரம்,கத்தாழைச் செடின்னு ஒரே இருட்டா இருக்கும்.திருடனுங்க அந்த காட்டுலதான் வந்து திருட்டு பொருட்களை பாகம் பிரிப்பதா ஊர்ல சொல்லுவாங்க. ரவி ..கையில ஒரு கம்பு வச்சுக்குவான்.அவனுங்க வந்து மறிச்சுட்டா..? அதுக்குத்தான் ஒரு தற்காப்பு. ஜான்பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை தானே…! அவன் அம்மாவும் அவன் தைரியத்தை ஊர்;ல ஒரு பெருமையா சொல்லிட்டு திரிவாள்.
“ஏங்க..இங்க ஒரு குறுக்குவழி இருந்துச்சே…”
“அதெல்லாம் அந்த காலம் தம்பி. ஊர் நாட்டாமையும்,அவன் மச்சானும் இடத்தை வளைச்சுப்; போட்டு விவசாயம் பண்ணீட்டு இருக்காங்க…..இப்ப அங்க வழியே இல்ல..தம்பி.”
ஊர் நாட்;டாமை கொஞ்சம் மோசமானவன். ஜாதி வெறி புடிச்சவன்.ரவியோட அப்பா பஞ்சாயத்து தேர்தலுக்கு மனுதாக்கல் பண்ணுனாங்கிருக்காக ரோட்டுல ஓட ஓட வெட்டுனவன்.குடும்பத்தையே ஊர விட்டு ஓதுக்குனாங்க.அப்ப ரவி கைக்குழந்தை..
“ரேகா….பத்து மணிக்குத்தான் பஸ்ஸாம்..நாம ஏதாவது சாப்பிடுட்;டு வந்துரலாம் …வா..”
பனையோலையால் கட்டப்பட்ட ஓட்டல்.இரண்டு அழுக்கேறிப்போன டேபிள்.உள்ளே..முழுக்க அடுப்பு புகை ஆக்ரமித்திருந்தது. உட்காரும் பலகை மேலும் கீழும் சீஸா மாதிரி ஆடியது.
“என்ன சாப்பிடுறீங்க…?”கடைக்காரன் கேட்டான்.
“ஒரு அஞசு தோசை மட்டும் போடுங்க…”
கூட்டமில்லாத ஊர் என்பதால்,வந்தவர்களை நன்றாகவே கவனித்தான் அந்த ஓட்டல் கடைக்காரன்.சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
“ரேகா…டைம் ஆச்சு. பஸ் வந்துரும்…பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கலாம்.”
கையில இருந்த பையை சரிபார்த்துக் கொண்டான்.காலையில அம்மாவுக்கும்,தங்கச்சிக்கும் வாங்கிய புடவை. ஒரு வேளை தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிருந்தா…மச்சானுக்கு பேண்ட்,சட்டை. மருமகனிருந்தா..அவனுக்கு துணி.திண்பண்டம்…..எல்லாமே சரியாகத்தான் இருந்;தது.
பேருந்து நிலையம். ஒரே ஒரு கம்பு மட்டும் ஊன்றப்பட்டிருந்தது.உட்கார ரெண்டு வட்டக்கல் மட்டும் இருந்தது.இரண்டு பேரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
பக்கத்துல சாக்கடை. தாய் பன்றியை சுற்றி ஒரு பத்து,பன்னிரெண்டு குட்டிகள்.தாய் மீது ஏறிக்கொண்டு சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.
இளத்தூர் காரங்க…பெரும்பாலும் ஏழே கால் மணி வண்டியிலேயே,வேலையை முடிச்சுட்டு,போயிருவாங்க. அப்புறம் இந்த கழடசி வண்டியில் மீறிப்போனா…ஆறேழு பேர்தான் இருப்பாங்க.
லேசா…தூரலடித்துக் கொண்டிருந்தது ராணியை நெஞ்சோடு சேர்த்து,புடவையால் மூடிக்கொண்டாள் ரேகா.
யாரோ ஒரு ஆள்.அமைதியாய் வந்து பக்கத்தில் நின்றான். வயசு 32க்குள் தான் இருக்கும்.ஆள் உருவமே பார்த்தால் பரிதாபமாய் இருந்தது.ஒரு அழுக்கடைந்த பேண்ட்,சவரஞ் செய்யாத முகம்,உழைத்து உழைத்து களைத்துப்போன தேகம்.
அவன் முகம் ஏதோ ஒரு சோகத்தில் அவன் இருப்பதை உணர்த்தியது.
“என்னங்க…இளத்தூருக்கா?”ரவி மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
“ஆமாம்….”
“பஸ்ஸ{ பத்தேகாலுக்குனாங்க…ஒண்ணும் வரலயே…!”
அவன் ஏதும் பேசவில்லை.மற்றவரிடம் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
ராணிக்கு குளிர் காற்று ஒத்துக்கவில்லை.அவ்வப்போது இருமிக் கொண்டே இருந்தாள்.
“ஏங்க…உங்களுக்கு சொந்த ஊர் இளத்தூரா…? நான் உங்களை பார்த்ததே இல்லையே..?” ரவிதான் அவனிடம் கேட்டான்.
“இல்லைங்க…”
என்னடா இவன் ஒரே வரியில பதிலை சொல்லிட்டு இருக்கான்னு..ரவி சலிச்சுப்போய் இனிமேல் அவன் கூட பேச்சே கொடுக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துக்கொண்டான்.
தூரத்தில் ரெண்டு பல்பு மட்டும் தெரிந்த வெளிச்சத்தில் பஸ் வருவதை மூவரும் புரிந்துக் கொண்டார்கள்.கம்பத்திற்கருகே வண்டி நின்றது.மூவரும் ஏறினார்கள்.
பஸ்சுக்குள் மீறிப்போனா எட்டுபேர்தான் இருப்;பார்கள்.அதுல ஒருத்தன் நல்லா குடிச்சுட்டு பின்னாடி சீட்டுல மல்லாக்கா கிடந்தான்.வேட்டி அவிழ்ந்து படிக்கட்டுக்கருகே வெளியே போவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
‘2! இளத்தூர்”
“15 ரூபாய்”
டிக்கட்டை வாங்கிக் கொண்டான் ரவி.
“இந்தாப்பா டிக்கெட்…”
அந்த சோக ஆசாமி கேட்காமலேயே டிக்கட்டை கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர்.எப்பவும் இதே வண்டியில் வருவதால் கண்டக்டருக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.
“ஏம்பா…ஆத்தாளுக்கு இப்ப எப்படி இருக்கு…?” கண்டக்டர் அந்த ஆசாமியிடம் கேட்டார்.
“மோசமாயிட்டு தாங்கண்ணா யிருக்கு..தினமும் இந்த மருந்து தரலேன்னா…இளப்பு வந்து மூச்சு விட முடிய மாட்டீங்குது..” வாங்கய மருந்தைக் காட்டினான். கண்டக்டர் அவன் சோகத்தில் பங்;கெடுத்துக் கொள்வது போல் உச் கொட்டினார்.
கண்டக்டருக்கும் ஆத்தாளை நல்லாவே தெரியும்.வேளை முடிச்சுட்டு இந்த வண்டியிலதான் ஏறி போவா..ம்…அறுபது வயசுவரை அசராம கூலி வேலை செஞ்சவ அந்த ஆத்தா….
“இளத்தூர் இறங்குங்க…”
ரவியும்,ரேகாவும் மெல்ல இறங்கினார்கள்.ராணி தூங்கி போயிருந்தாள்.அந்த ஆசாமியும் இறங்கினான்.
எதிரே..கருப்பராயன் சாமி சிலை.கையிலே கத்தி,கண்ணிலே கோபமுடன் இருந்த சாமிpயை பார்த்து பயந்து போனான்.இவனுடைய குல தெய்வம் அது.
“வந்துட்டியா…வா..வா..”ன்னு சொல்லி மிரட்டுவதுபோல தெரிந்தது அவனுக்கு.
புதுசு புதுசா…சில வீடுகள் அங்கே முளைத்திருந்தன. இவன் வீடு கருவேல முள்செடி தாண்டி.,இருபது அடி நடக்கணும். நல்ல இருட்டு.
அந்த சோக ஆசாமி அவர்களுக்கு முன்னே ஒரு நாலடி தூரத்தில் சென்று கொண்;டிருந்தான்.
“ஓ…இவனும் நம்ம தெருதானா…யார் இவன்..? பார்த்ததே இல்லையே..! ரவிக்கு அப்பவும் குழப்பம் தான்.
ஊரே அடங்கி போயிருந்தது.நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.ள
வீடு வந்துவிட்டது. ஆனால் அந்த ஆசாமி உள்ளே உரிமையோடு கதவை திறந்து சென்றான்.இதை பார்த்து ரவிக்கு இது நம்ம வீடுதானா என்று சந்தேகமே வந்;து விட்டது.
ரவி வெளியே நின்று….
“என்னங்க….இது பொன்னம்மா வீடுதானே…?’
“ஆமா நீங்க…யாருன்னு….:?”
“நான் அவங்க மகன்…”
அந்த ஆசாமிக்கு என்னவோ போலாகியது.
“வாங்க..வாங்க…உள்ளே வாங்க…”
“நீங்க யாருன்னு…ஃ”ரவி கேட்டான்.
“நான் தான் அவங்க மருமகன்.உங்க தங்கச்சியைக் கட்டுனவன். அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“தங்கச்சி எங்கே?”
அவன் மச்சானால் பதில் சொல்ல முடியவில்லை.திடீரென்று சோகமானாhன்.
“அது வந்து…பிரசவத்துல பாவி என்னைய விட்டுட்டு போயிட்டா…இறந்து நாலு வருசமாகுது…” அழுதான்.
இவனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ரவியின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.சமாதான படுத்தினார்கள் இருவரும்.
“என் அம்மா எங்கே….?” என்று கதறினான் ரவி.
இவன் கைத்தாங்கலாக ரவியை உள்ளே கூட்டிச் சென்றான்.கயித்துக் கட்டிலில் மூட்டையாக்கப்பட்ட இழுக்குத்துணி போல் கிடந்தாள் அவன் தாய்.
“அம்மா….” வாயிலிருந்து அவனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை.13 வருடமாக பார்க்காத சூரியனை அப்போதுதான் பார்க்கிறான்……ஆனால்……………..
அம்மா…என்ற அவன் பாச கூப்பாட்டை அவளால் கேட்க முடியவில்லை.அவள் முகம் வெளிரி போயிருந்தது.கண்கள் சொருகி போயிருந்தது. நாடிகள் நின்றே போயிருந்தன.
ஆம்….அவள் இறந்து சிலமணி நேரம்தான் ஆகியிருக்கும்..
Thursday, January 12, 2012
தேவாலா - சொர்க்க பூமி.
தேவாலா - சொர்க்க பூமி.
எனக்கு ஒரு வயது இருக்கும் போதே நான் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலாவில் என் அம்மாவின் வேலை நிமித்தம் காரணமாக குடிபெயர்ந்தோம்.
இன்றைக்கும் அங்கு வாழ்ந்த நினைவுகளை நினைத்து பார்த்தால் , ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. சுற்றியும் அழகான மலைகள். எங்குமே காண கிடைக்காத அறிய மூலிகைகள். தமிழ்நாட்டு எல்லை என்பதால், பக்கத்து மாநிலமான கேரள மக்களோடு அன்பான உறவு. தமிழ் கலாச்சாரமும், கேரள கலாச்சாரமும் ஒன்று சேர்ந்து இருப்பதே நல்ல அழகாக இருக்கும்.
தேவர்கள் வாழ்ந்த மலை என்பதால் தேவாலா என்று பெயர் வந்ததாக சொல்லுவார்கள். ஆசியாவின் இரண்டாவது சிறபூஞ்சி என்றும் அழைப்பார்கள். அங்கே ஆறு முதல் எட்டு மாதங்கள் விடாமல் மழை வந்து கொண்டே இருக்கும். நல்ல குளிர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சின்ன ஊர் தான் என்றாலும் மனசு நிறைந்த அமைதியான வாழ்கை அங்கே வாழ முடிந்தது.
அங்கே வேட்டைகாரனப்பன் கோவில் மிகவும் பிரசித்தம. அது பல ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்னால் இருந்தே வழிபாடுகள் நடந்து கொண்டே இருப்பதாக சொல்லுவார்கள். இந்த கோவிலின் புராண கதை மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், (மகாபாரதம் நடந்து கொண்டிருந்த காலத்தில்.) அர்ஜுனன் தவம் செய்த இடம். அதற்க்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பாக்.
ஒருசமயம், அர்ஜுனன் சிவனை நினைத்து தவம் இருந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என கேட்டார். என்னை யாரும் நெஞ்சுக்கு நேர் நின்று தாக்க கூடாது.அப்படி நடந்தால் அவன் உயிரோடு இருக்க கூடாது. அப்படி ஓர் வரம் ஒன்றை கேட்டான் அர்ஜுனன்.
இப்போது இங்கே வருவோம்.
அந்த அர்ஜுனன், தேவர்கள் வாழ்ந்த இந்த இடத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபடுகிறான். தினமும் வேட்டைக்கு வரும் வழியான அந்த இடத்திற்கு வந்த சிவபெருமான், அர்ஜுனனை அழைக்கிறார் .ஆனால் தியான மும்முரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அது சரியாக கேட்கவில்லை. தன்னை அவமதிப்பதாக எண்ணிய சிவபெருமானுக்கு பயங்கரமான கோபம் வந்தது. தன்னிடம் அர்ஜுனன் வாங்கிய வரத்தை நினைவுக்கு கொண்டு வந்த சிவன், நேராக அவன் பின்னே சென்று, முதுகில் ஒரு மிதி மிதித்து அர்ஜுனனை குப்புற தள்ளியதாக வரலாறு ஒன்று இதற்க்கு சொல்லபடுகிறது.
அந்த இடம் அடர்ந்த வனத்தில் , அமைந்திருக்கும். தனியாக சென்றால் இதய லப்டுப் ஓசை மட்டுமே, கேட்கும் அளவுக்கு அமைதியான , ஆள் அரவமே இல்லாத ஒரு இடம். எனக்கு தெரிந்து அங்கு தனியாக போனதே இல்லை நான்.அந்த அளவிற்கு மிகவும் பழமையான , பயமூட்டுகிற கோவில் அது.
சுற்றியும் இருக்கும் சின்ன சின்ன மலை மேடுகள், குதுகூலபடுத்தி கொண்டே இருக்கும். சித்தர்கள் சொல்லும், அறிய வகை மூலிகைகளை , சாதாரணமாக சாலையோரத்தில் காண முடியும். காம வர்த்தினி என்று சொல்லக் கூடிய வசிய மூலிகை(தொட்டாசிணுங்கி) தேவால முழுக்க முளைத்திருக்கும். இந்த மூலிகைக் கொண்டு, யாரையும் நம் வழிக்கு கொண்டு வந்திட முடியும். ஆனால் சின்ன பையனாக இருந்த எனக்கு, அதனுடைய மகத்துவம் அப்போது தெரியவில்லை. அதை தொட்டால் சுருங்கி கொள்ளும். அப்போது ஒருவிதமான மின்சாரம் உடலுக்குள் பாயும். அது தியான சக்கரங்களை தட்டி எழுப்பி விடுவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.
அடுத்து மிக முக்கியமான விஷயம் ஒன்று. அங்குதான், அதிக அளவிலான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. மிக ஆழமான சுரங்கங்களை அமைத்து, மண்ணை பிரித்து, தங்கம் எடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே சாதாரணமாக மக்கள் செய்து கொண்டிருப்பார்கள். இப்பவும் அப்படித்தான்.
இங்கு புலம் பெயர்ந்த ஈழ மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள் . அவர்கள் அங்கு அவர்களுக்கென அரசால் அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். அவர்கள் வாழ்வு முறை என்னை ஆச்சரியப் படுத்தியிருகிறது. தேனீர் நாம் அருந்தும் பொது, சர்க்கரையை போட்டுதானே குடிப்போம். ?
ஆனால் அவர்கள், சர்க்கரையை தேனிற்குள் போடாமல், தனியாக, இடது கையில் கொஞ்சம் கொட்டிக்கொண்டு, நக்கிதான் சாப்பிடுவார்கள் . இதெல்லாம் எனக்கு அப்போது வித்தியாசமாக தெரியவில்லை அப்போது.
அங்கு சாதரணமாகவே பகலில் கூட யானைகள் உலாவி கொண்டு இருக்கும். அங்கு நான் பார்க்காத பாம்புகளே இல்லை. எல்லாவிதமான விசா பாம்புகளும் அங்கே சர்வ சாதாரணம். ரத்தத்தை உருஞ்சும், அட்டைகள் உடம்பில் ஒட்டிக் கொள்ளாத நாளே கிடையாது என்பது போல், பார்க்கும் இடமெல்லாம் அட்டைகள் மயமாக தான் இருக்கும்.
ஆளுயர மரங்கள், பழமையான மரங்கள் என்று சுற்றியும் அடர்ந்த வனமாக இருந்த தேவாலாவை இப்போதும் நினைத்து ஏங்கி கொண்டுதானிருக்கிறேன்.
சித்தர்களின் மூலிகையை பற்றியெல்லாம், இப்போது தெரிந்து கொண்டிருபோது போல், அப்போது தெரிந்திருந்தால், அவற்றை நான் சுலபமாக பயன் படுத்தியிருப்பேன்.
மீண்டும், மூலிகைகளுக்காக அந்த தேவர்கள் வாழ்ந்த தேவாலவிர்ற்குசெல்வதற்கான நேரத்தை இபோது நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மூலிகையை தேடி கொண்டிருக்கும், சித்தர் தொண்டர்கள், இங்கு வந்தால் எல்லாமும் கிடைக்கும்.

Friday, January 6, 2012
ஒரு கப் காப்பி சாப்பிடலாமா..?
ஒரு கப் காப்பி சாப்பிடலாமா..?
காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும்
ஓயாது உழைத்துக்கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும்
விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றாற் போல உழைக்கவும்
கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.இதன் காரணமாக இறுக்கமான சூழலில்
சுழன்று கொண்டிருக்கிறது உலகம்.
சக மனிதன் மீதான பரிவும். ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி, சுயநலச்
சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது , இத்தகைய இறுக்கமான சூழல்கள்
உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும்
ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து
கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம்,என எந்த ஒரு துறையை எடுத்
துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று
மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.
இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை
உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது
இந்த மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.
மனிதனின் மன நலத்தில் மட்டுமல்ல, உடல் நலத்திலும் ஏற்படும்
பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு அரம்ப புள்ளி இந்த மன உளைச்சல்தான்.
தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு,
நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலசிக்கல்....பெண்களாய்
இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்....புறவியல்
ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.
அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்
பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, மற்றும்
சிந்தனைகளினால் வருவது. நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல
விதமாகப் பார்க்கிறார்கள். உதாரணமாக அதிக நேரம் பயணிக்க
வேண்டியிருந்தால், அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய
அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருப்பது. .இப்படியில்லாமல் "இந்த வேலை
எனக்குப் பிடிக்கவேயில்லை..' அல்லது "என்னை யாருக்கும் பிடிக்கவில்லை'
இது போன்ற எதிர்மறை சிந்தனைகள் மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்கிறது.
சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …நம் நேர்மறை, எதிர்மறை
எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இதோடு அளவுக்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள்,
ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன
அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.
என்றோ படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி , இந்த இடத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து
தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.
சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று
வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக
மாறியது..வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர்
திரும்ப வரும்போது, ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான
கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி,
எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், நல்ல
வேலைப்பாடுகளுடனும், சிலவை சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன.
பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை
தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில்
காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே
கவனியுங்கள் "நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை
எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை
மதிப்பற்ற கோப்பைகள்.
உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவை பட்டிருக்கின்றன. .
அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும்
மன அழுத்தத்திற்கும் காரணம். என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் நம்
அனைவருக்கும் வேண்டியது காப்பி தானே தவிர , கோப்பையல்ல.
ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க
முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை
எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.இப்பொழுது, வாழ்க்கை
என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள
பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை
வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம்
வாழ்க்கையின் தரம் மாறாது.பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால்
காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.என்று அவர் மன
அழுத்தத்தின் காரணத்தை சொல்லி முடித்தார்.
“கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,தம் சிறகுகளை நம்பியே
அமர்கின்றன”ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …இன்னும் யார் யாரையோ நம்பியே
வாழ்கிறான் …தன்னைத்தவிர!. இந்த கோப்பையில் காப்பியை ஊற்றிக் கொண்டால்
காப்பி நல்ல இருக்கும் என்று கோப்பையின் மீது நம்பிக்கை கொண்டது மாதிரி.
ஆசை அவனை ஆட்டிவைக்கிறது. ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால்
இன்றைக்கு அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் பெரியவர்கள். மனிதன் எட்ட
வேண்டிய குறிக்கோளை தான் இவர்கள் ஆசை என்று சொல்லுகிறார்கள்.
குறிக்கோளுக்கும் ஆசைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. குறிக்கோள்
நேர்வழியில் நம்மை நெறிபடுத்தும். ஆசை, குறுக்கு வழியில் செல்ல வழி
காட்டும். மன அழுத்தத்திற்கு ஆசையும் ஒரு முக்கிய காரணம் தான்.
“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை” ஆனால்
மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத்
தொலைத்துவிடுகிறான்.எதிர்கால சொர்கத்தை நினைத்துக் கொண்டே , இன்றைய நாளை
நரகமாக உருவாக்கி கொள்கிறான் .
இன்றைய ஒவ்வொரு நாளையும், சுகமானதாக கருதி உழைத்தாலே போதும், எதிர்காலம்
கண்டிப்பாக சொர்கமாகத்தான் இருக்கும்.
மனம் அமைதி யாயிருக்கும் நேரத்தில் , எப்பேர்ப்பட்ட கடினமான
சூழ்நிலைகளிலும் சரியான முடிவினை எடுக்கும் தீர்க்கமான மன நிலை
சாத்தியமாகும்.
அழுத்தமில்லாத மனமே, சாதிக்கும் வன்மையை உடலுக்கு தருகிறது.
முடிவாக நான் சொல்ல வருவது இதைத்தான்... நீங்கள் இப்போது எந்த நிலையில்
இருந்தாலும் சரி..வாழ்வது சுகம் என்று எண்ணுங்கள். மனம் ஆரோக்கியமாக
இருக்கும். அதுவே உங்களை நல்வழி படுத்தும். இப்போது கையில் கோப்பையை
எடுங்கள். கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை
அனுபவியுங்கள்.
Subscribe to:
Posts (Atom)