சுட சுட செய்திகள்

Thursday, January 12, 2012

தேவாலா - சொர்க்க பூமி.

தேவாலா - சொர்க்க பூமி.


எனக்கு  ஒரு வயது இருக்கும் போதே நான் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலாவில் என் அம்மாவின் வேலை நிமித்தம் காரணமாக குடிபெயர்ந்தோம்.


இன்றைக்கும் அங்கு வாழ்ந்த நினைவுகளை நினைத்து பார்த்தால் , ஈரம் காயாமல் அப்படியே இருக்கிறது. சுற்றியும் அழகான மலைகள். எங்குமே காண கிடைக்காத அறிய மூலிகைகள். தமிழ்நாட்டு எல்லை என்பதால், பக்கத்து மாநிலமான கேரள மக்களோடு அன்பான உறவு. தமிழ் கலாச்சாரமும், கேரள கலாச்சாரமும் ஒன்று சேர்ந்து இருப்பதே நல்ல அழகாக இருக்கும்.

தேவர்கள் வாழ்ந்த மலை என்பதால் தேவாலா என்று பெயர் வந்ததாக சொல்லுவார்கள். ஆசியாவின் இரண்டாவது சிறபூஞ்சி என்றும் அழைப்பார்கள். அங்கே ஆறு முதல் எட்டு மாதங்கள் விடாமல் மழை வந்து கொண்டே இருக்கும். நல்ல குளிர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சின்ன ஊர் தான் என்றாலும் மனசு நிறைந்த அமைதியான வாழ்கை அங்கே வாழ முடிந்தது.

அங்கே வேட்டைகாரனப்பன் கோவில் மிகவும் பிரசித்தம. அது பல ஆயிரம் ஆண்டுகள்ளுக்கு முன்னால் இருந்தே வழிபாடுகள் நடந்து கொண்டே இருப்பதாக சொல்லுவார்கள். இந்த கோவிலின் புராண கதை மிகவும் சுவாரஸ்யமானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், (மகாபாரதம் நடந்து கொண்டிருந்த காலத்தில்.) அர்ஜுனன் தவம் செய்த இடம். அதற்க்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பாக்.

ஒருசமயம், அர்ஜுனன் சிவனை நினைத்து தவம் இருந்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என கேட்டார். என்னை யாரும் நெஞ்சுக்கு நேர் நின்று தாக்க கூடாது.அப்படி நடந்தால் அவன் உயிரோடு இருக்க கூடாது.  அப்படி ஓர் வரம் ஒன்றை கேட்டான் அர்ஜுனன்.

இப்போது இங்கே வருவோம்.

அந்த அர்ஜுனன், தேவர்கள் வாழ்ந்த இந்த இடத்திற்கு வந்து தியானத்தில்   ஈடுபடுகிறான். தினமும் வேட்டைக்கு வரும் வழியான அந்த இடத்திற்கு  வந்த சிவபெருமான், அர்ஜுனனை  அழைக்கிறார்   .ஆனால்  தியான   மும்முரத்தில்  இருந்த அர்ஜுனனுக்கு அது சரியாக கேட்கவில்லை. தன்னை அவமதிப்பதாக எண்ணிய சிவபெருமானுக்கு பயங்கரமான கோபம் வந்தது. தன்னிடம் அர்ஜுனன் வாங்கிய வரத்தை நினைவுக்கு கொண்டு வந்த சிவன், நேராக அவன் பின்னே சென்று, முதுகில் ஒரு மிதி மிதித்து அர்ஜுனனை குப்புற தள்ளியதாக வரலாறு ஒன்று இதற்க்கு சொல்லபடுகிறது.  

அந்த இடம் அடர்ந்த வனத்தில் , அமைந்திருக்கும். தனியாக சென்றால் இதய லப்டுப் ஓசை மட்டுமே, கேட்கும் அளவுக்கு அமைதியான , ஆள் அரவமே இல்லாத  ஒரு இடம். எனக்கு தெரிந்து அங்கு தனியாக போனதே இல்லை நான்.அந்த அளவிற்கு மிகவும் பழமையான , பயமூட்டுகிற கோவில் அது.


சுற்றியும் இருக்கும் சின்ன சின்ன மலை மேடுகள், குதுகூலபடுத்தி கொண்டே இருக்கும். சித்தர்கள் சொல்லும், அறிய வகை மூலிகைகளை , சாதாரணமாக சாலையோரத்தில் காண முடியும். காம வர்த்தினி என்று சொல்லக் கூடிய வசிய மூலிகை(தொட்டாசிணுங்கி) தேவால முழுக்க முளைத்திருக்கும். இந்த மூலிகைக் கொண்டு, யாரையும் நம் வழிக்கு கொண்டு வந்திட முடியும். ஆனால் சின்ன பையனாக இருந்த எனக்கு, அதனுடைய மகத்துவம் அப்போது தெரியவில்லை. அதை தொட்டால் சுருங்கி கொள்ளும். அப்போது ஒருவிதமான மின்சாரம் உடலுக்குள் பாயும். அது தியான சக்கரங்களை தட்டி எழுப்பி விடுவதாக சித்தர் பெருமக்கள் சொல்லுகிறார்கள்.

அடுத்து மிக முக்கியமான விஷயம் ஒன்று. அங்குதான், அதிக அளவிலான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. மிக ஆழமான சுரங்கங்களை அமைத்து, மண்ணை பிரித்து, தங்கம் எடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே சாதாரணமாக மக்கள் செய்து கொண்டிருப்பார்கள். இப்பவும் அப்படித்தான்.

இங்கு புலம் பெயர்ந்த ஈழ மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள் . அவர்கள் அங்கு அவர்களுக்கென அரசால்  அமைக்கப்பட்ட தேயிலை தோட்டங்களில் வேலை செய்து பிழைப்பை ஓட்டுகிறார்கள். அவர்கள் வாழ்வு முறை என்னை ஆச்சரியப் படுத்தியிருகிறது. தேனீர் நாம் அருந்தும் பொது, சர்க்கரையை போட்டுதானே குடிப்போம். ?
ஆனால் அவர்கள், சர்க்கரையை தேனிற்குள் போடாமல், தனியாக, இடது கையில் கொஞ்சம் கொட்டிக்கொண்டு, நக்கிதான் சாப்பிடுவார்கள் . இதெல்லாம் எனக்கு அப்போது வித்தியாசமாக தெரியவில்லை அப்போது.


அங்கு சாதரணமாகவே பகலில் கூட  யானைகள் உலாவி கொண்டு இருக்கும். அங்கு நான் பார்க்காத பாம்புகளே இல்லை. எல்லாவிதமான விசா பாம்புகளும்  அங்கே சர்வ சாதாரணம். ரத்தத்தை உருஞ்சும், அட்டைகள் உடம்பில் ஒட்டிக் கொள்ளாத நாளே கிடையாது என்பது போல், பார்க்கும் இடமெல்லாம் அட்டைகள் மயமாக தான் இருக்கும்.

ஆளுயர மரங்கள், பழமையான மரங்கள் என்று சுற்றியும் அடர்ந்த வனமாக இருந்த தேவாலாவை இப்போதும் நினைத்து ஏங்கி கொண்டுதானிருக்கிறேன்.


சித்தர்களின் மூலிகையை பற்றியெல்லாம், இப்போது தெரிந்து கொண்டிருபோது போல், அப்போது தெரிந்திருந்தால், அவற்றை நான் சுலபமாக பயன் படுத்தியிருப்பேன்.

மீண்டும், மூலிகைகளுக்காக அந்த தேவர்கள் வாழ்ந்த தேவாலவிர்ற்குசெல்வதற்கான நேரத்தை இபோது நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மூலிகையை தேடி கொண்டிருக்கும், சித்தர் தொண்டர்கள், இங்கு வந்தால் எல்லாமும் கிடைக்கும்.









1 comment:

ramyaprakash said...

marubadiyum dhevalalukku kootittu ponathukku thanks