சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.
பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..
என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……
வேலு மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பைலாக பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் அரவிந்த் காலில் விழுந்துக கொண்டிருப்பதைகூட அவர் கவனிக்கவில்லை.
சுற்று பொறுமையிழந்த அரவிந்த் “ அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா… நான் மாநிலத்தில் 2 வதுமாணவனாக பாஸாயிட்டேன்.” ஏன்று மகி;ழ்ச்சி பொங்க சொன்னான்.
ஏவ்வித சலனமுமின்றி சந்தோசத்தை காட்டாமல் எந்திரிப்பா என்றார் வேலு.
“என்னப்பா மாநிலத்தில் 2 வது மாணவனாக பாஸ் பண்ணியிருக்கேன….; கொஞ்சம் கூட சந்தோசமா இல்லையே..?”
“இல்லைப்பா நான் உன்னை படிக்க வைச்சிருந்தேனா… பாஸ் பண்ணியிருப்ப.. ஆனால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்ட, உன்னை ஆசிர்வாதம் பண்ணறதுக்கோ சந்தோசப்படறதுக்கோ எனக்கு உரிமையில்லப்பா.”.
“என்னப்பா சொல்லறீங்க? நீங்க என்ன பெத்த அப்பா”…
“இல்லைன்னு சொல்லலையே? உங்க அம்மாவை தொலைச்சிட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு வந்த எனக்கு இந்த பேக்டரியில் எல்லா உரிமையும் கொடுத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க, பேச சொல்லிக் கொடுத்து இன்னைக்கு இந்த பேக்டரியின் ஒர்க்கிங் பார்ட்டனரா உயர்ந்த நிலைமைக்கு…..”
“அது உங்களோடு கடினமான உழைப்பின் பிரதி பலன் தானப்பா”
அரவிந்தனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து “என்னடா உழைப்பு? பெரிய உழைப்பு? இந்த பேக்டரியில் 20 வருசம் 30 வருசமா வேலை செஞ்சவனுங்க உழைக்காததை விடவா நான் கடுமையா உழைச்சுட்டேன்.? முதலாளிக்கு நாமென்ன ஒட்டா? உறவா? நம்மள இத்தனை ஒசரத்திலே வைச்சுயிருக்காரு. இவருயில்லைன்னா நீ படிச்சே யிருக்கமாட்ட…நானும் குடிச்சுட்டு தெரு தெருவா அலைஞ்சுட்டுத்தாயிருந்திருப்பேன். என்னை பற்றி டிரைவர் முழுக்கதையையும் சொல்லியும் அவரா இதுவரைக்கும் என்கிட்ட கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. இப்ப சொல்லு…நீ மொதல்ல யார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கணும்.?
அரவிந்த் தலைகுனிந்தபடி “சரி இப்பவே போறேன்பா…”
“நான் தான் உன்னை ஆசிர்வாதம் பண்ண வந்துட்டேனே… என்ன மாநிலத்தில் முதலாவதா வருவன்னு எதிர்பார்த்தேன், பரவாயில்லை 12 வகுப்பில் கண்டிப்பா வருவ…காலில் விழுந்த அரவிந்தை தொட்டு ஆசிர்வதித்தபடி வேலு புது பேக்டரிக்கு பூமி பூஜை போடணும்ன்னு சொன்னேன்ல்ல…போலாமா?”
ஐயா…..
ஐயா …ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன்…
என்ன வேலு…என்ன நாள் நட்சத்திரம் கிரகம் இதிலே எதாவது?
ஆமாங்கய்யா……….
“வேலு எந்த ஜோசியர்கிட்ட ஜோசியம் பார்த்து நல்ல நேரம் பார்த்து எங்கிட்ட வேலை கேட்டியா இல்லை நாதான் உனக்கு நல்ல நேரம் பார்த்து வேலைக்கு சேர்;த்தேனா?. நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து அத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற புது மாப்பிள்ளை புது பெண்ணுமே சில நாட்களில் கோயிலுக்கு சாமி கும்பிட போற வழியில கார் ஆக்சிடன்ட்ல செத்ததை எத்தனை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கோம்? சரி சரி உன் விருப்பபடியே செய்ப்பா..”
“இல்லை..முதலாளி இப்பவே பூமி பூஜை போடலாம்”
“வேலு இன்னொரு முக்கியமான விசயம் இவன் ப்ளஸ் 2 முடிப்பதற்கு முன்னமே பேக்டரி வேலையெல்லாம் முடிச்சிடனும்…டேய் அரவிந்த்….”
ஐயா….
ம்ம்…இந்ந ஸ்கூலியே படிக்கிறயா இல்லை…வேற ஸ்கூல சேர்ந்துப் படிக்கிறயா?
ஐயா எப்படி சொன்னாலும் சம்மதம் தாய்யா…
“ஏண்டா நானா படிக்கப் போறேன்…? இந்த நன்றி கின்றி நெனச்சு உன் படிப்பை பாழாக்கிடாதே..உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்னடா முழிக்கிற?
வேலு வா போய் பூமி பூஜை போடலாம். டேய் நல்லா யோசித்து சொல்” என்றபடி முதலாளி திவாகரனும் வேலுவும் பூமி பூஜை போட சென்றார்கள்.
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.