சுட சுட செய்திகள்

Thursday, September 6, 2012

கொங்கு மண்

மலையின் உச்சியில் உள்ள தேயிலை தொழிற்சாலை சீரான முறையில் பராமரிக்கப்பட்ட தேயிலை தோட்டம் ;

இங்கு கொலக்கொம்வை எஸ்டேட் என்றும் கொலக்கொம்பை பஜார் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த எஸ்டேட் முன்பு கோத்தாரின் என்பவருக்கு சொந்தமாக இருந்தது.

 கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையுடன் கூடிய மருத்துவமனை, அஞ்சலகம் , காவல் நிலையம், நூலகம், இங்கே தனிச்சிறப்பு.

இந்துக் கோயில் மாகாளியம்மன் சர்ச் மசூதி என்று சமய சின்னங்கள் தனி வரலாற்றை உடையது.

சாதி மதத்திற்கு இங்கே எப்பபோதும்  தடா தான்.

பல்வேறு வகுப்பினரும் தாத்தா, பாட்டி, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமா, மைத்துனர் என்ற முறையில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிருத்துவர்கள் வாழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஒரு நாகரீகமான ஊர் இந்த கொலக்கொம்பை.

இங்கு மளிகைக்கடை முதல் அனைத்து பொருட்களும் சரளமாக கிடைக்கும் சந்தை வரை மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது.

பக்கத்து கிராமங்களான தைமலை,ஆறுகுச்சி,அதிகரட்டி,டெரேமியா, தூதுர்மட்டம்,கிரேக் மோர்,அலசனா, கிளன்கர்ன், உட்லாண்ஸ்(மன வேதனை இந்த பெயர் இன்றைக்கு செருப்பிலும் வந்துவிட்டது)சுல்தானா, பால்மறா, ஓலாண்டு, மேலூர் என்று குட்டி குட்டி எஸ்டேட்டுகள் நெருக்கமாக அமைந்துள்ளது.இவையனைத்தும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடக்கும் சந்தையில் பொருட்களை விற்க, வாங்க வரும் காட்சி திருவிழா போன்று யிருக்கும்.

இந்த பகுதியில் பழங்குடி மக்களும் உள்ளடக்கம்.

இப்படிப்பட்ட சிறப்பு மிகு ஊரில் இருமுறை தொடர்ந்து மேலூர் ஊராட்சியின் தலைவராகவும், தேயிலை தோட்ட அதிபராகவும் , குன்னூர் டூ கொலக்கொம்பை என்ற போர்டை தாங்கியபடி ஓடும் முதல் பேருந்தை அறிமுகப்படுத்தியும்(லஷ்மி டிரான்ஸ்போர்ட்), லாரி, அந்த காலத்திலேயே 12 பேர் வேலை செய்யக் கூடிய மினி டிபார்ட்மென்ட் ஸ்டோர், காய்கறி மண்டி என்று பல துறைகளில் வெற்றிநடை போட்டு வலம் வந்த வணக்கத்திற்குறிய கே . சின்னசாமி அவர்களுடைய முயற்சியால் இந்த ஊர் நீலகிரி மாவட்டத்திலேயே பேரும் புகழும் பெற்று விளங்கியது என்றால் மிகையாகாது.

இவருடைய முயற்சியால்தான் மேலே சொல்லப்பட்ட மருத்துவமனை, காவல்நிலையம், அஞ்சலகம் என்று பல அரசு சார்ந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

இவருடைய கம்பீரத்தையும், வார்த்தை ஜாலத்தையும் அன்றைக்கு இருந்த நீலகிரி கலெக்டர் (வெள்ளைக்கார துரை) ஆச்சரியப்பட்டு போனதாகவும், அதனால் இவர் கேட்ட அனைத்து திட்டங்களை மறு ஆய்வு கூட செய்யாமல் உடனே அமல்படுத்தினார் என்றும் சொல்வார்கள்.

கே.சின்னசாமி அவர்கள் காங்கிரஸில் மிக முக்கிய தலைவராக இருந்தார். சுதந்திர போராட்ட தியாகியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.பிறகு கட்சியில் தன்னை முழவதுமாக இணைத்துக் கொண்டார்.காந்தியின் மீது மிகவும் பாசம் கொண்ட தொண்டராகவும் விளங்கியவர்.கொலக்கம்பை பஜார் மத்தியில் இவர் நிறுவியுள்ள காந்தி சிலை எங்கும் பார்க்கமுடியாத வகையில் மிகவும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது.

அந்த சிலையை செய்வதற்காக சிற்பியோடு தானும் அமர்ந்து அணுஅணுவாக ரசித்து ரசித்து செதுக்கினார் என்று சொல்லுவார்கள்.





அன்றைக்கு இருந்த காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரால் இந்த சிலையை செய்தமைக்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
யாரையும் புகழாத காமராஜர், புகழுக்காக வாழாத காமராஜர் பாராட்டிய ஒரு மனிதர் உண்டென்றால் அவர்கள் தலைவர் சின்னசாமி அவர்கள்தான்.

இங்கு பாகுபாடின்றி காந்தி சதுக்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டங்களும், பல கலைநிகழ்ச்சிகளும், சண்டை சச்சரவின்றி அமைதியாக நடக்கும். காமராஜ், கருத்திருமன், கக்கன், கலைஞர், நாஞ்சில் மனோகரன், சம்பத் என்று பல தலைவர்களும், இசைஞானி இளையராஜா,சேக் சின்னமவுலானா போன்ற முன்னணி கலைஞர்களும், பல சினிமா நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளனர்.

மேலூர் பஞ்சாயத்துட்பட்ட கொலக்கம்பையும் தன் தலைமையின் கீழுள்ள சுற்றுவட்டார கிராமங்களின் மீது தனி கவனம் செலுத்தி கல்விக்கு முதலிடம் தந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த இளம் தலைமுறைக்கு கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

 இதன் காரணமாக பல இளைஞர்கள் டாக்டர்களாவும்,பொறியாளர்களாகவும், இந்திய காவல் பணி என்றும், பல துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர்.

இவருடைய துணைவியார் திருமதி பாப்பம்மாளிள் ஓரே  புதல்வர்தான் நம் கொங்கு மண்ணின் பெயரை தன் பெயரில் தாங்கியபடி, 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மண்ணை நேசித்த முதல் கொங்குத் தமிழன். அவரது முழு பெயர் திரு கொங்கு சி மனோகரன்.

ஆனால் அவர் தந்தை மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறையின் காரணமாக தன் உடமைகளை சொத்துக்களை பாதுகாக்க தவறியதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை இழக்க நேரிட்டது.

கொங்கு.சி.மனோகரன் தந்தை வழி தொடர்ந்து தோட்ட தொழிலாளர் நலனுக்காக கடைசி மூச்சு உள்ளவரை மற்றவர்களுக்காக பாடுபடுவதையே தன் தொழிலாகக் கொண்டார்.

தி;.மு.க வின் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தலைவராக தன் வாழ்வை அந்த ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இன்று கோத்தாரியின் ஆளமையைவிட்டு தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு இந்த சீரும் சிறப்புமாக, அமைந்திருந்த கொலக்கம்பை பொலிவிழந்து, ஊர் இருந்ததற்கான சுவடுகளே இல்லாதது போல் இன்றைக்கு காட்சியளிக்கிறது. தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு அவர்களின் கெடுபிடிகளின் காரணமாக அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்கள்.
அழகான மனிதர்கள், மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், சாதி மதம் பாராமல் வாழ்ந்து வந்த ஒப்பற்ற மக்கள் என்று தன் இயற்கை எழில் சூழ்ந்த கொலக்கம்பை இன்றைக்கு கரையான் அரித்த மரமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது.




நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

ramyaprakash said...

012/8/28 Ramya.P Ramya.P :
பிறந்த மண்ணின் பெருமையை விளக்கும் தொடர் அருமையாக
உள்ளது