சுட சுட செய்திகள்

Tuesday, September 4, 2012

சட்டத்தின் படி(13) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……





“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”


“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”


“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;


“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”


 
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”


“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான


“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”


“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”


“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.


“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”


“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”


“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”


ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.



முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”


“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”



“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”



“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”


“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”


பின்னே?


“தெய்வம் ஆத்தா தெய்வம்.”


ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”


“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”


கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..


“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”


“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து


“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!


புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”


“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க

“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,


ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”


“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”


ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.


முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....


என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


அடுத்த வாரம் பார்ப்போமா?

திரு சுந்தரகனகு




தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.

99528 27529
   
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments: