சுட சுட செய்திகள்

Friday, December 23, 2011

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (5) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (5)

தன்வந்திரியின் ஆச்சிரமத்தின் வடக்கே வந்தால் கிழக்கிலிருந்து ஒரு பாதை வந்து சேரும்,அந்த பாதையின் தெற்கே வேறொரு பாதை இருக்கும் அதில் நடக்க வடக்கு புறமாய் ஒரு கானலை காணலாம். இதற்கு எமபுர கானல் என்று பெயர். இந்த கானலுக்கு தென்புறமாய் கிழக்கில் போகும் பாதை ஒன்று வரும். அதில் கூப்பிடு தூரம் நடக்க வாத மேடும் அதில் வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் இருக்குமென்கிறார். இங்கிருந்து அம்புவிடும் தூரம் வரை சதும்புத் தரை இருக்கிறது. அதற்கு தெற்கே வந்தால் குரு ராஜரிஷியின் வனமும் அதனுள் அவரது ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

ராஜ ரிஷியின் ஆச்சிரமத்தின் நேர் வடக்கில் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதை ஒன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஒரு மண்மேடு எதிர்ப்படும் அதனருகில் அழகிய செடிகள் சூழ்ந்த வனமிருக்கும். அந்த வனத்தின் நடுவே கொங்கணவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார். ஆச்சிரமத்தின் கிழக்கே போனால் எல்லைக்கல் குட்டம் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே மூன்று நாளிகை நடக்க தபோவனம் எனப்படும் மாவூற்று வரும், அதன் வடக்கே சென்றால் உதயகிரி எல்லை வருமாம். அங்கே உதயகிரி சித்தர் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

இங்கிருந்து கீழ்பக்கமாய் இறங்கும் பாதைவழியே வர அரை நாளிகை பயணத்தில் மீண்டும் எல்லை குட்டத்திற்கு வந்து சேருமாம். இதன் வடக்கே பிருஞ்சக முனிவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.ஆச்சிரமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கும் சதம்புத் தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். சஞ்சீவி மூலிகை சதம்புத் தரையில் மட்டுமே வளரும் இயல்புடையதெனெ தெரிகிறது.

இந்த சதம்புத் தரைக்கு மேல்ப்பக்கம் போகும் வழியில் அம்பு விடும் தூரம் சென்றால், ஒரு யானை படுத்திருப்பதை போல் பெரிய பாறை ஒன்று இருக்கும். அந்தக் தென்புறமாக அம்பு விடும் தூரம் நடந்தால் சரளைத்தரை இருக்கிறது.அதற்க்கு நேர் மேற்கில் கூப்பிடு தூரத்தில் மலையோடை இருக்கிறது,அந்த ஓடையினை கடந்து அம்புவிடும் தூரத்தில் யானைக் குட்டியைப் போல வெள்ளை பிள்ளையார் இருக்கிறார்.அருகில் போய் பார்த்தால் பாறை போலவும், தொலைவில் இருந்து பார்க்க பிள்ளையாராகவும் தெரிவார் என்கிறார் கோரக்கர்.

இங்கிருந்து மேற்கே ஒரு நாளிகை நடக்க வாதமேடு வரும்.இந்த வாத மேட்டில் தான் பதினெண்சித்தர்களும் சேர்ந்து ரசவாதம் செய்து பார்த்னர் என்கிறார். அதன் பொருட்டே இந்த இடம் வாதமேடு என அழைக்கப் படுகிறதாம்.

வாதமேட்டின் மேற்கே அம்புவிடும் தூரத்தில் தத்துவ ஞானசித்தர் குகை இருக்கிறதாம்.அதன் வடக்கே அரை நாளிகை நடந்தால் சிறிய குட்டம் வரும், அதன் மேற்கே செல்லும் பாதையில் சென்றால் கன்னிமார் கோவில் வரும், அதன் மேற்கே கூப்பிடு தூரத்தில் மகாலிங்கர் சந்நிதி வருமென்கிறார். சந்நிதியின் நேர் வடக்கே போகும் பாதையில் ஒரு ஆறு இருக்கிறது, ஆற்றின் தென் புறமாய் இரண்டு பாதை பிரிந்து செல்லும், அதில் மேற்கே போனால் நாம் கிளம்பிய இடமான தாணிப்பாறைக்கு செல்லும். வடக்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை நடக்க குளிப்பட்டி பொய்கை இருக்கிறது.இதன் தெற்கே எல்லைக் குட்டம் இருக்கிறது.இதன் அருகில் பால் பட்டை மரமிருக்கிறதாம்.

பால் பட்டை மரத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் சென்றால் அம்பு விடும் தூரத்தில் திருக்கைப் பாறை இருக்கிறது.அதன் மேற்கே யாகோபுச்சித்தர் ஆச்சிரமம் இருக்கிற்து. ஆச்சிரமத்தின் மேற்க்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் கடுவெளிச்சித்தர் குகை இருக்கின்றது. இதனை தாண்டி நடந்தால் கருங்கானல் ஒன்று வரும் அதில் நுழையாது மேலே எற அரை நாளிகை பயணத்தில் கசிவுத் தரை இருக்கிறதாம்.

இந்தக் கசிவுத்தரைக்கு வடப்பக்கம் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் தேடிக் கானல் இருக்கிறது. அந்தக் கானலுக்கு கீழ்ப்பக்கம் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் அழுகண்ணிச் சித்தரின் குகை இருக்கிறது. இதன் தெற்கே கூப்பிடு தூரத்தில் சிவவாக்கியரின் குகை இருக்கிறது. இரண்டு சித்தர்களின் குகைகள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான் என்கிறார். இங்கிருந்து மேற்கே போனால் பிரமகிரி எல்கை என்று சதுரகிரிப் பயணத்தை நிறைவு செய்கிறார் கோரக்கர்.

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (4) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (4)

குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.

அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.

இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

சஞ்சீவி மூலிகையின் மேற்காக மஞ்சளூற்று இருக்கிறது. அந்த ஊற்றுக்கு வடபக்கம் அம்பு விடும் தூரத்தில் சதம்புத்தரை இருக்கிறதாம், அதன் கீழ்ப்புறம் கசிவுத்தரையில் அழகானந்தர் ஆச்சிரமம் இருக்கிறதாம். அங்கிருந்து நேர் கிழக்காய் வந்தால் மீண்டும் மகாலிங்கர் சந்நிதியில் வந்து சேரும் என்கிறார் கோரக்கர். இங்கிருந்து தெற்கே சென்றால் சன்னாசிவனம் வரும், அதன் தெற்கே போகும் பாதையில் ஒரு நாளிகை நடக்க ஒரு ஓடையும், சங்கிலிப் பாறையும் வருமாம்.

அதனை கடந்து கூப்பிடு தூரம் போனால் அநேக மரங்கள் சூழ பிரம்ம முனியின் ஆச்சிரமம் அமைந்திருக்கும் என்கிறார். ஆச்சிரமத்தின் தெற்குபக்கம் போகிற பாதையில் ஒரு நாளிகை மலை ஏற அதன் சரிவில் காளங்கிநாதரின் குகை எதிர்படும் என்கிறார். அந்த குகையின் சரிவில் அம்புவிடும் தூரத்தில் என்றும் வற்றாத தசவேதி உதகசுனை இருக்கிறதாம்.

காளங்கி நாதர் குகையிலிருந்து தெற்க்கு பக்கமாய் கூப்பிடு தூரத்தில் தபசு குகை வரும். அந்த குகையிலிருந்து வடக்குப் பக்கம் போகும் பாதையில் சென்றால் மீண்டும் மகாலிங்கர் சன்னிதிக்கே வரும், அதனால் அதை விடுத்து கிழக்குப் பக்கம் சென்றால் அரை நாளிகை தூரம் நடந்தால் கன்னிமார் கோவிலும், பளிங்கர் குடிசையும் வருமாம். அங்கிருந்து தெற்கே அரை நாளிகை தூரம் வந்தால் நந்தீசர் வனமும், அதனுள் அவர் ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

ஆசிரமத்தின் வடக்கு பக்கமாய் போகும் பாதையில் செல்ல கிழக்கே இருந்து ஒரு பாதை வந்து சேருமாம், அந்த பாதை வழியே அரை நாளிகை நடக்க பளிங்கர் பாறையும் அதன் தெற்கே செல்ல அநேக மரம் செடிகொடிகள் சூழ தன்வந்திரியின் ஆச்சிரமம் இருக்கிறதென்கிறார்.

புசுண்டர்,உரோமரிஷி, யூகிமுனிவர், சுந்தரானந்தர், அழகானந்தர், காளங்கிநாதர், நந்தீசர், தன்வந்திரி ஆகியோரின் ஆச்சிரமங்களுக்கு செல்லும் வழியினை கோரக்கர் வாயிலாக தெரிந்து கொண்டோம். இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு கூட இந்த இடங்களை தேடிட முடியுமென கருதுகிறேன்.

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (3) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (3)

தாணிப் பாறையிலிருந்து கிளம்பி அத்திரி மகரிஷி மற்றும் மச்சமுனிவரின் ஆசிரமங்களின் வழியே தனது ஆசிரமம் வரை நம்மை அழைத்து வந்த கோரக்கர், சதுரகிரி மலையில் வாசம் செய்கிற மற்ற பிற சித்தர்களின் ஆசிரமங்களுக்கு செல்லும் வழியை தெளிவாக கூறியிருக்கிறார்.

கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய் அம்புவிடும் தூரத்தில் “மஞ்சள் பூத்தவளை” என்னும் மூலிகை இருக்கிறதாம்,அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அம்புவிடும் தூரத்தில் கசிவுத்தரை இருக்கிறது. இங்கிருந்து வடக்குப் பக்கம் போனால் மேடு ஒன்றும் அதனையொட்டி ஒரு ஓடையும் வரும் என்கிறார். இந்த ஓடைக்கு வடக்கே சமதளமான மண்தரையும் பக்கத்தில் பாறையும் இருக்குமாம்.

இந்த பாறையின் வடக்கே இருக்கும் ஓடையின் வடக்குப் பக்கத்தில் அம்புவிடும் தூரத்தில் அரிய மூலிகையான “அமுதவல்லிச் செடி” இருக்கும். இந்த செடிக்கு நேர்வடக்காய் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதையில் நடந்தால் எதிர் வரும் மேட்டில் இரட்டை லிங்கம் இருக்கும் என்கிறார். இந்த லிங்கத்துக்கு தென்கிழக்கு மூலையில் ஆற்றையொட்டி யாக்கோபு சித்தர் என அறியப்படும் இராமதேவரின் ஆசிரமம் இருக்கிறது. இங்கே “ரோம விருட்சமும்” அதன் பக்கத்தில் நாகபடக் கற்றாழையும் இருக்கிறது என்கிறார்.


இராம தேவரின் ஆசிரமத்தில் இருந்து வடக்கே நடந்தால் வரும் சமதளத்தின் கிழக்கே போனால் பசுக்கிடை வரும், அதைத் தாண்டினால் எக்காலத்திலும் வற்றாத நவ்வலூற்று சுனையும் அதனையொட்டி பாறையும் இருக்கிறது. அதில் பாம்புக் கேணி இருப்பதாக குறிப்பிடுகிறார். அதனைத் தாண்டி கிழக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் வழுக்கைப் பாறையையும் அதற்கப்பால் இருக்கும் பச்சரிசி மேட்டையும் கடந்தால் தெக்கம் பண்ணைமலை வழி வருமாம்.

இந்த வழியே கிழக்குப் பக்கமாக அரை நாளிகை நடந்தால் சின்ன பசுக்கிடையும், ஒப்பில்லா சாயையும் இருக்கிறதாம். இதனைத் தாண்டி கிழக்கே செல்ல பலா மரமும், கருப்பண்ண சுவாமி கோவிலும் இருக்கும் என்கிறார்.  இந்த கோவிலுக்கு பின்புறம்தான் தைலக் கிணறு இருக்கிறது. இரசவாதம் செய்ய பயன்படுத்திம் தைலம் இந்த கிணற்றில் நிரப்பப் பட்டிருப்பதாக கருதப் படுகிறது. கருப்பண்ண சுவாமியின் அருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த கிணற்றை அணுக முடியுமென்கின்றனர்

சக்தி வாய்ந்த இந்த கோவிலை கடந்து போனால் ஆறு ஒன்று வரும், இந்த ஆற்றுக்குள்தான் பேச்சிப்பாறை இருக்கின்றதாம். இதன் வடக்குப் பக்கமிருக்கும் மேடேறினால் அங்கே துர்வாச ரிஷியின் ஆசிரமத்தை காணலாம் என்கிறார். இந்த ஆசிரமத்தின் கிழக்கே அம்புவிடும் தூரத்தில் வெள்ளைப் பாறையும், சந்தன மகாலிங்க சுவாமி கோவில் ஓடையும் இருக்கும். அதைக் கடந்து கிழக்கே பயணிக்க முச்சந்தியான பாதை ஒன்று வருமாம். இதில் தெற்கே போகும் பாதையில் சென்று மேடேறினால் சுந்தரர் கோவில் இருக்கிறது என்றும் அதை வணங்கி தெற்கே ஆற்றங்கரையோரமாய் கூப்பிடு தூரத்தில் மகாலிங்க கோவில் இருக்கிறது.

இதன் வடக்குப் பக்கம் கூப்பிடு தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அரை நாளிகை நடந்தால் பெரிய சுரங்கவழி ஒன்று இருக்கும் என்கிறார். இதில் நுழைந்து அரை நாளிகை நடக்க சந்தன மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது என்கிறார். இந்த கோவிலின் வடக்குப் பக்கத்தில் காளிகானலில் இருந்து நீரோடை வந்து விழுந்து கொண்டிருக்குமாம். அதில் நீராடிய பின்னரே சந்தன மகாலிங்க சுவாமியை வணங்க வேண்டும் என்கிரார்.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் மானிடர்கள் பூசை இல்லை என்றும் தேவரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் பூசைதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் என்ற தகவலையும் கோரக்கர் குறிப்பிடுகிறார். இந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் சட்டை முனியின் குகை இருக்கிறது. அந்த குகையின் தெற்கே கூப்பிடு தூரத்தில் வெண்நாவல் மரமும் அதன் இடது புறமிருக்கும் மண்மலையின் தெற்கே சமதளத்தில் வனபிரமி என்ற அரிய வகை மூலிகையும் வளர்ந்திருக்கும் என்கிறார்.

சட்டை முனி குகைக்கு நேர் கிழக்காக வரும் பாதையில் ஒரு நாளிகை தூரம் சென்றால், வடக்கே செல்லும் பாதையில் போய் சேரும் அதில் ஒரு நாளிகை நடக்க கும்ப மலை வரும் என்கிறார். இந்த கும்ப மலை அருகே இருக்கும் ஒரு பெரிய குகையில்தான் அகத்தியர் வாசம் செய்கிறார் என அகத்தியரின் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கிறார் கோரக்கர்.

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (2) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (2)

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் துவங்கும் மலைப் பயணம், மலையின் மேல் கோவில் கொண்டிருக்கும் சுந்தரமகாலிங்கர் சந்நிதியையும் தாண்டி மலையின் நீள அகலங்களில் பயணிக்கிறது.உடலில் வலுவும், உள்ளத்தில் உறுதியும் இருக்கும் எவரும் இன்று மலையில் எளிதாக சென்று வரலாம்.அதற்கான வசதி, வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் மனித சஞ்சாரமே இல்லாத அடர்த்தியான காடுகளைக் கொண்ட இந்த மலையில்,பழக்கமில்லாதவர்கள் வழி தவறி தொலைந்து போய்விடும் அபாயம் இருந்திருக்கும். அதனைத் தவிர்க்கவே இம்மாதிரியான வழிக் குறிப்புகள் அருளப் பட்டிருக்க வேண்டும்.கோரக்கர் தனது சீடர்களுக்காகவும் அவர் வழி வந்தவர்களை மனதிற் கொண்டு இவற்றை அருளியிருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

அத்தரி மகரிஷி ஆசிரம் வந்துவிட்ட நாம்  கோரக்கரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மேலேறுவோம்.ஆசிரமத்திலிருந்து கிழக்காக இருக்கும் பாதையில் மேலேறி அரை நாளிகை நடந்தால் கோணவாசல் பாதை வரும், அதைத் தாண்டி மேடேறிப் போனால் பசுமிதிப் பாறையும், அந்தப் பாறைக்குக் கிழக்கே கணபதியின் உருவத்தை ஒத்த ஒரு பாறை இருக்குமாம்.அதை வணங்கி அதன் கிழக்குப் பக்கம் செல்லும் பாதையில் அரை நாளிகை நடந்தால் பாதையின் தெற்குப் பக்கத்தில் அம்பு விழும் தூரத்தில் அருட்சித்தர் மச்சமுனியின் ஆசிரமம் இருக்கிறது என்கிறார்.

மச்ச முனிவரின் ஆசிரமத்தின் தெற்குப் பக்கமாய் நடந்தால் கூப்பிடு தூரத்தில் வெள்ளை புனல் முருங்கை மரம் எதிர்படுமாம்,அதன் இடதுபக்கம் அம்புவிடும் தூரத்தில் சமதளமான பாறையை காணலாம்.அந்த பாறையின் தெற்குப் பக்கம் இருக்கும் ஓடையை தாண்டினால் அம்புவிடும் தூரத்தில் காவி தெரியும்,அதற்கு கீழ்பக்கம் பேய்ச்சுரை கொடி படந்திருக்கும் என்கிறார். இந்த கொடிக்கு தெற்குப் பக்கம் இருக்கும் பாதையில் நடந்தால் குருவரி கற்றாழை எதிர்படுமாம்,அதற்கு நேர் வடக்காய் சென்றால் கூப்பிடு தூரத்தில் கிழக்கே ஒரு பாதை தென்படும்,அதிலிருக்கும் மேட்டில் ஏறினால் சமதளமாக இருக்கும் என்கிறார்.அதில் அரை நாளிகை தூரம் நடந்து வநது தெற்குப் பக்கமாய் பார்த்தால் தனது ஆசிரமம் தெரியும் என்கிறார் கோரக்கர்.

கோரக்கர் தனது ஆசிரமத்தில் வசித்திருக்கவில்லை என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். ஆசிரமத்தின் நேர் வடக்கில் இருக்கும் ஆற்றில் இறங்கி தெற்குப் பக்கம் பார்த்தால் மலைச் சரிவில் தனது குகையை பார்க்கலாம் என்கிறார்.அதன் கிழக்கே ஆற்றின் நடுவில் கஞ்சா கடைந்த குண்டா இருக்கும் என்றும்,அதன் கிழக்கே வற்றாத பொய்கை ஒன்று இருக்குமாம்.எத்தனை ஆச்சர்யமான வழிகாட்டல்!!

இதுவரையிலான பயணத்தில் நமக்கு தெரிவது, அத்திரி மகரிஷி, மச்சமுனி,கோரக்கர் போன்ற பல சித்த பெருமக்கள் தங்களுக்கென தனித்தனியான அமைப்புகளை கொண்டிருந்திருக்கின்றனர்.இந்த ஆசிரமங்களில் அவர்களுடன் சீடர்கள் உடனிருந்திருக்க வேண்டும்.இவர்கள் அனைவரும் சமகாலத்தவர்களா அல்லது அவர்களின் வழி வந்தவர்கள் அந்தந்த ஆசிரமங்களை நிருவகித்து வந்தனரா என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது.

கூப்பிடு தூரம், அம்புவிழும் தூரம், நாளிகை நடைபயணம் என்பதான தூர அளவைகள், திசைகள், ஆங்காங்கே இருக்கும் பாறைகள்,சுனைகள்,ஆறுகள்,ஓடைகள் என்பதான அடையாளங்களை வைத்துக் கொண்டு நகரும் இந்த பயணத்தில் மேலும் சில சுவாரசியங்கள் காத்திருக்கின்றது.

சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (1) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (1)
சதுரகிரின் மகத்துவம் உங்களுக்கு தெரியாததல்ல.இணையத்தில்  சதுரகிரி என்று நீங்கள் டைப் செய்தால் பல கோடி தகவல்கள் அங்கே கொட்டி கிடக்கும்.
என்றாலும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்பவர் சதுரகிரி பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கிருக்கும்  அரிய மூலிகைகளை கண்டு கொள்வது எப்படி என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தன ஏடுகளில் அழுத்தி இருக்கிறார்.

நமது வலைப்பூவை வாசிக்கும் பக்தர்கள், மற்ற  எல்லோரும் பயணம் மேற்கொள்ளும் சாதாரண வழியை மேற்கொள்ளாமல், கோரக்கர் சொல்லிய வழியில் பயணம் மேற்கொண்டால் பல அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும் அங்கே அமையும் என்பது எனது நம்பிக்கை. அந்த பேரொளியில் கலந்த சித்தர்களையும் காண முடியும் என்பதே இந்த வழியின் மகத்துவமே.

அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது , கோரக்கர் சொல்லிய வழியில் சென்று நாம் முயற்சித்து பார்க்கலாமே.
ஆதாரம் : தோழி யின் வளைபூவிலிருந்து

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.
காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.
கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும், தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப் பட்ட தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகி இருக்கிறது.
இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...
தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் “குதிரை குத்தி பாறை”யும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் “படிவெட்டி பாறை” என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும் என்கிறார்.
இந்த ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.
சித்தர்கள் கூறிய இந்த வழியினை ஆவணப் படுத்துவதன் மூலம் பல அரிய மூலிகைகளின் இருப்பிடத்தை கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.கோரக்கர் அருளிய இந்த பாதையில் மலையேறியவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து விவரங்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.
ஒரு புதிரை மெல்ல கட்டவிழ்ப்பதைப் போல எத்தனை துல்லியமான விவரனைகள், இன்றைக்கும் இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மலையேற முடியுமென்றே தோன்றுகிறது.
அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த கோரக்கர் அடுத்து நம்மை மச்சமுனியின் ஆசிரமத்திற்கு வழி கூறி அழைத்துச் செல்கிறார்,


சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (1) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்

பகுதி (1)
சதுரகிரின் மகத்துவம் உங்களுக்கு தெரியாததல்ல.இணையத்தில்  சதுரகிரி என்று நீங்கள் டைப் செய்தால் பல கோடி தகவல்கள் அங்கே கொட்டி கிடக்கும்.
என்றாலும் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்பவர் சதுரகிரி பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும், அங்கிருக்கும்  அரிய மூலிகைகளை கண்டு கொள்வது எப்படி என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தன ஏடுகளில் அழுத்தி இருக்கிறார்.

நமது வலைப்பூவை வாசிக்கும் பக்தர்கள், மற்ற  எல்லோரும் பயணம் மேற்கொள்ளும் சாதாரண வழியை மேற்கொள்ளாமல், கோரக்கர் சொல்லிய வழியில் பயணம் மேற்கொண்டால் பல அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும் அங்கே அமையும் என்பது எனது நம்பிக்கை. அந்த பேரொளியில் கலந்த சித்தர்களையும் காண முடியும் என்பதே இந்த வழியின் மகத்துவமே.

அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது , கோரக்கர் சொல்லிய வழியில் சென்று நாம் முயற்சித்து பார்க்கலாமே.
ஆதாரம் : தோழி யின் வளைபூவிலிருந்து

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.
காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.
கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும், தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப் பட்ட தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகி இருக்கிறது.
இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...
தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் “குதிரை குத்தி பாறை”யும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் “படிவெட்டி பாறை” என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும் என்கிறார்.
இந்த ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.
சித்தர்கள் கூறிய இந்த வழியினை ஆவணப் படுத்துவதன் மூலம் பல அரிய மூலிகைகளின் இருப்பிடத்தை கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.கோரக்கர் அருளிய இந்த பாதையில் மலையேறியவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து விவரங்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.
ஒரு புதிரை மெல்ல கட்டவிழ்ப்பதைப் போல எத்தனை துல்லியமான விவரனைகள், இன்றைக்கும் இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மலையேற முடியுமென்றே தோன்றுகிறது.
அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த கோரக்கர் அடுத்து நம்மை மச்சமுனியின் ஆசிரமத்திற்கு வழி கூறி அழைத்துச் செல்கிறார்,


Thursday, December 1, 2011

சித்தர்கள் அருளிய சித்துக்கள் - மின் புத்தகமாக

சித்தர்கள் அருளிய சித்துக்கள்...ஜோதிடம், இன்னும் மற்ற தேடினாலும் கிடைக்காத அறிய தகவல்கள்..இதோ இன்றைய பதிவில் ....இவற்றை
மின் புத்தகமாக....தரவிறக்கி கொள்ளுங்கள்...
ஆழ்ந்த இறை பக்தியினாலும், நம்பிக்கை கொண்டும் இந்த புத்தகத்தில் கூறியபடி செய்து பார்த்தால் கண்டிப்பாக நிறைவேறும் என்பது என் எண்ணம்...
முயன்று தான் பார்ப்போமே...

நன்றி : siththarkal.blogspot.com

இதோ லிங்க்...

சித்துக்கள் 

ஜோதிடம் 

பாய்ச்சிகை ஜோதிடம் 

போகரின் சித்த மருத்துவம் 


Tuesday, November 29, 2011

தியானம்

தியானம்

தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம். தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.
தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது. நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு, அறிவாற்றலிலிருந்து நமக்குள். பின்பு அதையும் தாண்டி.
Meditation
"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற எல்லா செயல்களையும்.

"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மற்றும் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.
நீங்களும் தியானத்தை செய்து தான் பாருங்களேன்.  

Friday, November 18, 2011

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ?


பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.
முற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நட க்கிறது என்று சொன்னால் நம்புவோமா? அதுவும் இந்த கம்ப்யூ ட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொ ண்டு செல்கிறேன் என் று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல் லைனு கேட்கத்தோணும் இல்லையா?. ஆனால் முடியும் என்று சவால் விடுகிறார் ஒரு உளவி யல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவி-யில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக் குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதி த்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்.
பெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நட த்திவரும் சென்னையை சேர்ந்த இவர் ,பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ் டேண்டம்-ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகா சத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகி றார்.
பெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் பயிற்சி மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப் பார் க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெய ச்சந்தர். உடல்முழுவதும் இனம் காண முடி யாத வலி என்கிறார் அவர்.
”எப்போதில் இருந்து”
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”
”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..?”
வந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.
“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ?” ஆச்சர்ய முடன் கேட்கிறார் டாக்டர்.
“ வலி இன்னும் இருக்கிறது…குறை யவில்லை…!” வந்தவர் கண்க ளில் வேதனை தெரிகிறது.
”சரி நாம முயற்சி பண்ணி பார்க்க லாம்..” என்ற டாக்டர் அவரை வசதி யாகப் படுக்கச் சொல்கிறார். கண்க ளை மூடிக்கொண்டே மூச்சை மட் டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொ டுத்துக் கொ ண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண் டு செல்கிறார்.
இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவ னைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடின மான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
அந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.
காலம் அவரால் சொல்லமுடியவில்லை.
இடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.
அவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கி றீர்கள்” என்று கே ட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டி ருக்கிறேன்” என்கிறார்.
மனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல் மொழி ஒரு போர்வீரன் மும் முரமாக சண்டையிடும் அசைவுக ளைத் தருகிறது.அவரிடன் பேச்சு க்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளை யிடுகிறார் டாக்டர்.
மேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில்  
காண்பித்தவராக “ஆ……….!” என்ற அலறுலுடன் கைகக ளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போ ல பாவனை செய்கிறார்.
அவரின் முகத்தில் மரண வே தனை தெரிகிறது. கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் “என்ன நடக்கிறது..!” என்று கேட்கிறார்.
“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.
“நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.
”எப்படி இறக்கிறீர்கள்…!”
 
“ஈட்டியால் குத்தப்பட்டு..”
” இப்போது எங்கு இருக்கிறீர் கள் ”
“கீழே என் உடல் இருக் கிறது….நான் உடலின் மேல் மிதந்துக் கொண்டிருக்கிறே ன்…”
“உடல் எப்படி இருக்கிறது”
“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயி ரற்று கிடக்கிறது”
இதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிக ழ்வுதான் இன்றைய இப்போதைய  உடல்வலியாக தொடர்கிறது. இந் த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.
பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில  ஆழ் மனக்கட்டளைக ளை பிறப்பிக்கிறார், பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனை கள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறா ர். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.
சிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர். இப் போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.
சிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்த தை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழு வதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.
நமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.இது ஏதேனும் கண்  
கட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண் டும் பேசுகிறார்.
” என்ன சார்..இன்னும் நம்பிக் கை இல்லையா..? நீங்கள் விரு ம்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டு செல் கிறேன்…!” எ ன்கிறார்.
கொஞ்சம் யோசனைக்குப் பிற கு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..!” என்று தோன்ற தயாரானேன்.
அதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களை மூடிக் கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.
உள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம்  
உஷாராகவே எண்களைச் சொல்லி  வந்தேன்.
கொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.
உள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரி த்தேன்.
நிபுணர் என்ன நினைத்தாரோ தெரி யவில்லை. மீண்டும் முதலில் இரு ந்து எண்ணுமாறு கூறுகிறார்.
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்.
நூறு….
தொண்ணுற்றி ஒன்பது….
தொண்ணுற்றி எட்டு….
 

தொண்ணுற்றி ஏழு…..
“…………………………………………….”
“…………………………………………….”
“எண்பத்தி ஒன்று….”
“………………………………………………”
“ எ…ழு…ப….த்……”
“அ…று….”
எப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.
சுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…
ஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.
உளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.
” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”
“…………………………………………………………”
“என்னுடன் பேசுங்கள்…பயப்படவேண்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”
“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”
 
கிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊ டுருவ என்னை சுற்றிலும் பார்த் தேன்.
நான் ஒரு விமானத்தில் அமர்ந்து இரு ந்தேன்.
விமானம் பறந்துகொண்டிருந்து.
பார்பி பொம்மை போன்ற அழகு பணி ப்பெண்கள்,முன்னும் பின் னும் நடந்துசென்று பயணிகளுக்கு சே வையாற்றிக் கொண்டிருந் தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனி களின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.
எனக்கும்தான்….!
”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.
“ஹும்….!…….எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் ?
”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.
கண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத் திருந்த அந்த வினாடி நேரம்…..
“ டமார்…….”
என்  உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமா னம் சிதறி…ஒரு பெரும் ஜுவா லையாக கீழே போய்க் கொண் டிருக்க….
நாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..
கடவுளே….! எங்கள் உடல் எங்கே….?
கீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்று கொண்டிருந்தது.
கடவுளே என் உடல்…..எங்கே?
அந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.
எனக்கு புரிந்து.
 
நான் இறந்துவிட்டேன். என் விமா னம் வெடித்து சிதறிவிட்டது.
என்னைப்போல உடலைத் தொலை த்த நேகா தேவதையும், இன்னும் பிற தேவதைகளும் இதோ உட லைத்தொலைத்து என்னைப் போல.. என்னைப்போல…. மிதந்து கொ ண்டு…..
எந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்
அழிந்து…வெறும் என்னைப்போல்…..
என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
மேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு வாக் மூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.
“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.
”1978..”
“எந்த இடம் ? “
அனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இரு க்கவேண்டும்…”
சில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல் கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.
நம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..? இல்லை வெறு ம்….கற்பனையா..?
“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில்  

தேடி,ஒரு தகவலைக்காட்டுகிறார்,
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
மும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,
”நான் பிறந்த ஆண்டு 1978”
”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…?” டாக்டர் கேட்க
“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”
“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ் வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்….. உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..?
“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினை த்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.
டாக்டர் சிரித்தார்.
”என்ன சார் இன்னும் நம்பலையா ?….உங்களுக்கு உளவியலில் ஆர் வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்…..இதை உங்க ளுக்கும் சொல்லித்தருகிறேன்…..”
இரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.
நம்பிக்கை வந்தது..
புனர்ஜென்மம்…முற்பிறவி என்பது உண்மையே.
இப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வ ஜென் மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதை களை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறு கிறார்கள்.
உண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடு வார்கள்.
ஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவுமறைவு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவர்களுக்கு கற்று த்தருகிறேன் என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு. ஜெயச்சந்தர்.

செக்ஸ் பற்றி - நடிகர் சிவ குமார்



  
பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார்.
அது பற்றிய கேள்வியும் பதிலும்;
கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா?
ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம்.
குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோமென்று கருதமுடியாது.
ஆணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.
எத்தனை நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப் போட்டாலும் வேள்வி நெருப்பு அணை யாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய செக்ஸ் உணர்வு.
சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடு க்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன் ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க முடியாது.
மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடி வெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.
ராமாயணத்தில் கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவே ந்திரன் மாறுவேடத்தில் வந்து கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில நொடிகளில் இது வேறு ஆடவன் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் போகட்டும் என்று அனுமதித் துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.
டாக்டர் மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும் முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு ஏற்றுக் கொள் கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம் உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை என்கிறார்.
மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப் பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று பிள்ளைகளிடம் சொல்லித்தராதீர்கள் என்கி றான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர் நாற்றம் வீசாமல் இருக்க வேண்டு மென் றால் ஆசனவாய் சுத்தமாக இருக்க வேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட் டால் துர்நாற்றம் மேலே கிளம்பி சிறுகுடல், இரைப் பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகு ந்து வெளி யேறும்.
ஆசனவாய் சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ள குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறு மியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால் சொறியவே செய் யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந் தைகளை அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.
சிறுநீர் மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப் பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்ப தால் தன் உடம்பில் உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்ட த்தகாதது என்று அந்தச் சிறுவன் அல்லது சிறுமி மனதிலே எண்ணம் படிய, அவர்கள் வளர்ந்து திரு மணம் செய்து முதலிரவில் சந்தி க்கும்போது ஏதோ கெட்ட காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய் கிறோம் என்று பயந்தே கூடுகி றார்கள். அதனால் பிறக்கும் குழந் தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.
ஒரு வயதுக்குப் பிள்ளைகள் வளர் ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்கிறான் ஓஷோ.
‘மனிதனுக்கு இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’ என்கிறார் கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழ க்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?
ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறு மையாக இருக்கும்?
இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?
ராமகிருஷ்ண பரமஹம்சர் வணக்கத்திற் குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண் டியே திருமணம் செய்துகொண்டார். சார தா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிர ண்டு வயது வித்தியாசம். தன் மனை வியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர் பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மை யாரும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத் தம்பதிகள்.
இன்று ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன ஆகும் ? யோசியுங்கள்!
பூப்படைந்து ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை நீ ‘அம்பாள் வடிவம் நெருங் காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.
திருமணமாகி சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.
‘அதே சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும் உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.
முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒருமித்து திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர் கள், ஆண்மை இழந்தவர்கள் கூட, ஒரு பெண்ணுக்கு மனத ளவில் செக்ஸ் இன்பம் அனு பவித்த திருப்தியைக் கொடுக் கமுடியும்.
விடுமுறை நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ் ஸில் அழைத்துப் போங்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில் பற்கள் தட தடக் கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டு விடுங்கள்.
அதிகாலை ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச் செரியும் குளிரில், தொட்டபெட்டா சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக் கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’ ஐஸ்கிரீம் சாப் பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.
அடுத்த பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல் விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கத கதக்கும் ஹோட்டல் அறையில், நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள் அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.
ஆணைப்பொறுத்தவரை செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக் காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே, தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடா க இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்று வான்.
பெண்களை நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர் களை ஆட்டத்திற்குத் தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத விளைவுகளை ஏற்படுத் திவிடும்.
இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.
அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.
50 ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளும் நிலையில், உச் சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை அனுபவித் திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.
ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!
உடல் பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக் கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.
பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.
உலகை மறந்த அற்புதக் கணம்!
அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக் கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை. பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில் வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.
டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கி வந்து வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணி யவான்களும் உண்டு.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்று தான் பெண்கள் திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.
தலையில் குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம் பெல்லாம் பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிக மாக உணர்ச்சி வசப்பட்டு சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால் மறுநாள் உடல் அசதி கூடுத லாக இருக்கும்.
குடித்துவிட்டு உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது, ‘உடல் இன்ப வேட்கையை அதிகப் படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’ என்பதை அவர் கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க் கின்றனர். காலையில் எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்று ண்டி தயாரித்து, பிள்ளைகளைக் குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனி ஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு, கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-
உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?
ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந் தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில் இருக்க வாய்ப் பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி அலுவலக த்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷ னாகவே இருக்கிறோம்.
கணவன் மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில் சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்க ளுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது. பாம்புப் பண்ணை, மிரு கக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயி ல். இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.
கணவன் மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களை விட, உடல் ரீதியான உறவில் ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தி யே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து வாழவேண்டும்
போகப்பொருளாக- துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண் களை நினைப்பதை நாம் மறந்து, அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு, ஆசாபாசம் அவளு க்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக் கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள் பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில் பாசத்தைப் பொழிபவள் பெண்….என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

Saturday, October 15, 2011

‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது?’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.

“ இனவிருத்தி செய்வதோடு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடமை முடிந்துவிடுகிறது. ஆடு மாடு போன்றவை கொஞ்ச நாட்கள்தாம் குட்டிக்கு-கன்றுக்கு பால் கொடுக்கும். பறவைகள் இரை தேடி எடுத்துவந்து குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும்வரை ஊட்டிவிடும். அதன் பிறகு அதது தன் வாழ்வை வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த மனிதன் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு ஓடிவிட முடியாது. உடல் இன்பத்தின் நீட்சியாக குழந்தைப் பிறந்தது என்ற மனோபாவத்திலிருந்து உயர்ந்து நம் வம்சத்தை விருத்தி செய்ய, தன் பாரம்பரியப் பெருமைகளைத் தூக்கி நிறுத்த, தான் பெறாத சுகத்தை, தான் கற்க முடியாத கல்வியை, தான் அடைய முடியாத புகழை-செல்வத்தைத் தன் வாரிசுகள் பெற்று, பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகளாக அவை வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.

நூற்றுக்குப் பத்துப்பேர்கூட அப்படிப்பட்ட சிந்தனையுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே!

கல்யாணம் நடந்தது, முதல் இரவு முடிந்தது, உடல் சேர்க்கை நிகழ்ந்தது-அதன் விளைவாக ஒரு ஜீவன் பிறந்துவிட்டது. என்ன செய்வது, பெற்றுத் தொலைத்துவிட்டோம். பிறகு வளர்த்துத்தானே ஆகவேண்டும் என்ற அலுப்பு, சலிப்பு பெற்றோர்களுக்கு-குறிப்பாகப் பெற்றவளுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பிள்ளை பிறவியிலேயே சபிக்கப்பட்ட பிள்ளைதான்.

ஆறு மாதம்கூட முழுசாகத் தாய்ப்பால் தராமல், தனக்குத் தூக்கம் கெடுகிறது; அழகு குலைகிறது; உடல் சோர்ந்து விடுகிறது; பிரமோஷன் தாமதப்படுகிறது என்பதற்காக அந்தப் பச்சைக்குழந்தையை அள்ளி எடுத்துப்போய் ‘க்ரீச்’ என்ற குழந்தைக் காப்பகத்தில் ஆயாக்களிடம் ஒப்படைத்து, ‘செரிலாக்’ என்கிற பால்பவுடர், அல்லது புட்டிப்பால் தந்துவிட்டு அலுவலகம் ஓடுகின்ற பெருமைக்குரிய தாய்மார்கள் நிறையப்பேரைப் பார்க்கிறோம்.

அடுத்த ஆறுமாதத்தில் ஆயாக்கள் புஷ்டியாக உடம்பு தேறி வர, குழந்தைகள் சோமாலியா நாட்டு ஊட்டச்சத்தற்ற, எலும்பின்மீது தோல் போர்த்தப்பட்ட குழந்தைகளாக இளைத்துப்போகும் கொடுமைகள் நடக்கின்றது.

ஓராண்டுகூட அந்தப் பச்சைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி பாலூட்டி வளர்க்க முடியாதவர்கள் அந்தக் குழந்தையின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களாகிறார்கள்.

குழந்தை பசிக்கு அழுகிறதா, தொடையில் எறும்பு கடித்ததால் அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, காது வலி எடுத்து அழுகிறதா, மூக்கடைப்பால் அழுகிறதா, எதற்கு அழுகிறது என்பது பெற்ற தாய்க்கும்-அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்குத்தான் எளிதாகப் புரியுமே தவிர, நாற்பது குழந்தைகளுக்கு நடுவில் நாதியற்று, வெயிலில் காய்ந்து, வாய் வறண்டு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ‘டயாஃபர்’ என்ற கோவணம் போன்ற உள்ளாடையில் போய், அது வறண்டு சீந்துவாரற்றுக் கிடக்கும் சூழலில் அக்குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுக்குப் புரியாது.

தாயின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடது கை முழங்கை மடிப்பில் தலை வைத்து இடது மார்பில் குழந்தைக்குப் பாலூட்டும்போது உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் கொஞ்சும்போது- உலகில் அதற்கிணையான பரவசத்தை, பாதுகாப்பு உணர்வை, குழந்தை எங்கும் எப்போதும் பெறமுடியாது.

தேவதை ஒருத்தி பூமிக்குவந்து குழந்தையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சினாலும், தாய் கைப்பட்ட அடுத்த விநாடிதான் குழந்தையின் அழுகை நிற்கும். ஒருமாத குழந்தைக்கூட தாயின் கரங்களில் உள்ள உஷ்ணத்தை இனம் கண்டு பாதுகாப்பை உணர்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் குழந்தையின் உடம்பு மட்டுமல்ல மூளையும், அறிவும், அறிதலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தவறான நிகழ்வுகளோ கண்டிப்பான வார்த்தைகளோ எதுவாயினும் மனத்திரையில் எளிதாகப் பதிவாகிவிடும்.

கணவன் மனைவி தங்களின் குழந்தை முன்பு வாக்குவாதம் செய்வது, வேலைக்காரர்களை குழந்தை முன்பு கடுஞ்சொல்லால் திட்டுவது-எல்லாம் அழிக்கமுடியாத பதிவுகளாகிவிடும்.
குடும்பத்தலைவன் நான், நான் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் ஆனால் குழந்தைகள் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று வறட்டுவாதம் பிடிக்கக் கூடாது. திருமணத்திற்கு முன்பு எல்லைதாண்டி பல தவறுகள் செய்திருந்தாலும் குழந்தைகள் வளரும்போது பெற்றோர் அவர்களுக்கு ‘ரோல்மாடல்களாக’ இருக்கவேண்டும்.
அப்பாவுடைய குணமும் ஆற்றலும், அம்மாவுடைய பொறுமையும் கனிவும், குழந்தைகளை ரொம்பவே கவரும்.

அப்பா தவறு செய்திருந்தாலும், அம்மா தவறுசெய்திருந்தாலும் குழந்தைகளிடம் ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள், தவறு செய்தால் மறைக்கவேண்டிய அவசியமில்லை-அதை உணர்ந்து மன்னிப்புக்கேட்பது நல்லது என்று புரிந்துகொள்ளும்.

குழந்தகள் ரொம்பவும் ‘பொஸஸிவ்’ ஆக, அனைத்தும் தனக்கே சொந்தமானதாக இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள்.

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படத்தில் என் மகளாக மீனா நடிப்பார். உடல்நலமின்றி தாய் மருத்துவமனையில் இருக்க அந்தக் குழந்தைக்கு டைனிங்டேபிளின் அடியில் அமர்ந்து நான் சோறு ஊட்டிவிடுவேன். முதுகில் சுமந்தவாறு மாடிக்குத் தூக்கிச் செல்வேன். மார்புமேல் படுக்கவைத்து தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.

என் மகள் பிருந்தாவுக்கு அப்போது மூன்றுவயது. படத்தைப் பார்த்த குழந்தை வீட்டுக்குவந்ததும் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா, நீங்க என்அப்பாவா? மீனாவோட அப்பாவா? அவளுக்கு மட்டும் சோறு ஊட்டிவிட்டீங்க. உப்புமூட்டைச் சுமந்தீங்க, நெஞ்சுமேலே படுக்கவச்சு தூங்கவச்சீங்க, நான்தானே உங்கபொண்ணு..அதெல்லாம் இப்ப எனக்கும் பண்ணுங்க” என்றாள்.

வாயே திறக்காமல் டைனிங்டேபிள் அடியில் நுழைந்து அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டேன். மாடியிலுள்ள படுக்கை அறைக்கு முதுகில் தூக்கிப்போனேன். படுக்கையில் மல்லாந்து படுத்து மார்மீது அவளைப் படுக்கவைத்துக்கொண்டேன். போதாததற்கு, ஜெயச்சந்திரன் அப்படத்தில் எனக்காகப் பாடிய பாடலை என் கட்டைக்குரலில் பாடி தூங்கவைத்தேன்.

ஆங்கிலேயர் கலாச்சாரம் வேறு; தமிழ் மக்களின் கலாச்சாரம் வேறு. அவர்கள் குழந்தைப்பெற்றவுடனேயே ஆயாக்களிடம் கொடுத்து பக்கத்து அறையில் பச்சைக்குழந்தையைத் தூங்கப் பழக்கிவிடுவார்கள். பசியில், நடுநிசியில் குழந்தை அழுதாலும் பால்தர தாய் போகமாட்டாள்.

மருத்துவரிடம் கேட்டால் அந்த மேதை, “அதை அப்படியே விட்டுவிடுங்கள். பசியில் அழுது ஓய்ந்து பழகிக்கொள்ளும். நீங்கள் போய்ப் பால்கொடுத்தால் இரண்டு மணிக்கு ஒருதரம் அது எழுந்து அழும். இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு மூன்றுமுறை போய் பால்தர வேண்டும். வேண்டாம். விட்டுவிடுங்கள். பசியில் அழுது சோர்ந்து தூங்கிவிடும். ஒன்றும் ஆகாது” என்று கூறுவார்.

இங்கு நம் மண்ணில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரையிலாவது குழந்தை இரவில் பசியால் அழும்போது தாய் எழுந்து பால்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான பழக்கம்.

தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் குழந்தை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போர்டிங் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.

குழந்தைகளுக்குத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் ஹாஸ்டல் வாழ்க்கை-அந்தக் கான்வெண்ட் பள்ளிவாழ்க்கை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான். அதற்கு நீங்கள் குறைந்தது குழந்தைக்கு பத்துவயது தாண்டியதும்தான் அனுப்பவேண்டும்.

மூன்றுவயது, நான்குவயது சிறுவர்களை-சிறுமிகளை, பிளேட்டில் போட்ட சாதத்தைக் கையால் எடுத்துச் சாப்பிடத் தெரியாத வயதில், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய்விட்டுக் கழுவத்தெரியாத வயதில், தன் டிராயர் பட்டனைத் தானே போடத்தெரியாத- கழுத்துவழி சட்டை மாட்டிக்கொள்ளத் தெரியாத வயதில், போர்டிங் ஸ்கூலில் போடும் கொடுமையைச் செய்யாதீர்கள்.

நடுங்கி உடல் விறைக்கும் 5 டிகிரி குளிரில் ரத்த ஓட்டமே குறைந்துவிடும். மட்டன் சிக்கன் 2 மணிநேரம் அடுப்பில் வைத்தாலும் வேகாது. அடிப்பக்கம் உஷ்ணம், மேல்பகுதியில் கடும்குளிர் படுவதால் குழம்பு சீக்கிரம் கொதிக்காது.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு சப்பாத்தி-குருமா குழந்தைகளுக்கு பரிமாறப்படும். ஆயிரம் குழந்தைகளுக்கு சப்பாத்தி தயாரிக்க பிற்பகல் 2 மணிக்கே சமையல் அறை பரபரப்பாகிவிடும். 4000 சப்பாத்திகள் சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பிளேட்டிலே அவை விழும்போது விறைத்து குளிர்ந்து நாய்த்தோலைவிட கெட்டியாக இருக்கும். விவரம் தெரிந்த குழந்தைகள் குருமாவில் சப்பாத்தியை ஊறப்போட்டு பிய்த்துச் சாப்பிடும். அப்பாவிக் குழந்தைகள் அந்தச் சப்பாத்தியைப் பிய்க்க நாய் படாத பாடுபடும்.

ஒருவழியாக சாப்பிட்டு பிளேட் அலம்பிவைத்து 50, 100 பேர் படுக்கும் நீண்ட ஹாலில் கருங்கம்பளிக்குள் நுழைந்து சுருண்டு படுத்துக்கொள்ளும்.
இரவு 9.30மணிக்கு குழந்தைக்குப் பசி எடுக்கும். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஒரு வகுப்பில் 25, 30 குழந்தைகள் படிக்கும்போது பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தைத் தீர்க்கவே ஆசிரியருக்கு நேரம் போதாது. இந்த அழகில் இரவு பசி எடுத்ததையோ, வயிற்றுவலி வந்ததையோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையோ ஆசிரியரிடம் சொல்ல குழந்தை அஞ்சும், அவமானப்படும். இரவும் பகலும் ஊமை அழுகையாக அழுது ஆறுமாதப் படிப்பு முடியும்.

அம்மா வந்து ஆறுவயது மகனை அள்ளி எடுத்து வீட்டுக்கு அழைத்துப்போவாள். அந்த ஒரு மாத விடுமுறையில் அக்குழந்தைக்கு ராஜ உபசாரம். வடை பாயாசமென்ன, புத்தாடைகள் என்ன, கார் ரெயில் பொம்மைகள் என்ன, பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் ரயில் சவாரி, துப்பாக்கிச் சுடுதல், குதிரை சவாரி- என்று பூலோக சொர்க்கத்தைக் காட்டுவாள் அம்மா.

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிசென்று அந்த சிறைக்கம்பிகளுக்கு ஒப்பான இரும்புக்கதவைத் திறந்து உள்ளே மகனை அல்லது மகளை அனுப்பி அம்மா ‘டாட்டா’ சொல்லும்போது நெஞ்சமெல்லாம் குமுறி கோபத்தின் உச்சத்தில் ‘உன்னைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த ஆறு வயதுச் சிறுவன்/சிறுமி செல்வான்.....என்ன வலி இருக்கவேண்டும்-எப்படிப்பட்ட வேதனை அக்குழந்தைக்கு இருந்தால் அந்த வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்வான்..........! இந்தப் பாவத்தை 10 வயதாகும்வரை குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.

எங்கள் வீட்டில் உறவுக்காரக்குழந்தைகள், வீட்டுக்குழந்தைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அல்லோலகல்லோலப்படும். ஒரு நாள் பிள்ளைகளின் அறையில் ஒரு பீரோ டிராயரை துணைவி திறந்து பார்த்தபோது பிளேபாய் பத்திரிகையில் வெளியாகும் அழகிய பெண்களின் நிர்வாணப்படங்கள் சில கிடந்தன. பதறிப்போனவர் என்னிடம் வந்து ‘இது யார் வேலை தெரியவில்லை’ என்றார்.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். “அவர்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருக்கிறார்கள். நான் பதினாறு வயதிலேயே வாத்சாயனம் கொக்கோக சாஸ்திரம் எல்லாம் படித்திருக்கிறேன். இதை நான் பார்த்துக்கொள்கிறேன் போ” என்றேன்.

ஐந்தாறு பிள்ளைகள். எல்லோருக்கும் 14 வயது முதல் 18-க்குள் இருக்கும். என் மகனிடம் “ஓவிய அலமாரிக்குச் சென்று இரண்டு ஸ்கெட்ச் நோட்டுக்கள் எடுத்து வா” என்றேன். குறிப்பிட்ட அந்த நோட்டில் ஓவியக் கல்லூரியில் பெண்களை- பெண்களின் உடலமைப்புகளை- பல கோணங்களில் நிர்வாணமாக வரைந்த ஸ்கெட்ச்கள் தீட்டப்பட்டு இருந்தன.
பிள்ளைகளை அழைத்து ஒவ்வொரு உறுப்பாகக் குறிப்பிட்டுக்காட்டி “இது மார்பகம் குழந்தைகள் பிறந்ததும் பால்சுரக்கும் பகுதி. இதில்தான் நீங்கள் பால் ஊட்டப்பட்டீர்கள். வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே சுருக்கங்கள் தெரிகிறதா? இது குழந்தைகள் அம்மா வயிற்றுக்குள் வளரும்போது வயிறு பெரிதாவதால் ஏற்படுபவை.

குழந்தை பிறந்துவிட்டபின் ஊதிய வயிறு சுருங்கும்போது- காற்றடைத்த பலூனிலிருந்து காற்று வெளியேறிவிட்டால் பலூன் எப்படிச் சுருங்கிவிடுகிறதோ அப்படி வயிறு சுருங்கியுள்ளது.

அதற்குக் கீழே உள்ளது பிறப்புறுப்பு. இதன் வழியாகத்தான் நீங்கள் பிறந்தீர்கள். காக்கா கொண்டாந்து போட்டுட்டுப்போச்சு, தவிட்டுக்கு உன்னை வாங்கிட்டு வந்தேன்-என்று அம்மாக்கள் சிறுவயதில் சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்று தெளிவுபடுத்தினேன்.
மறுநாள் அந்த டிராயருக்குள் இருந்த பிளேபாய் படங்கள் காணாமல் போய்விட்டன.
பிள்ளைகளுக்கு சிலிர்ப்பூட்டுகிற, கிரக்கத்தை ஏற்படுத்துகிற, மர்மமாகத்தோன்றுகிற, விடைகாண முடியாமல் தவிக்கிற டீன்ஏஜ் பிரச்சினைகளை வெளிப்படையாக நீங்கள் பேசி சந்தேகத்தைத் தீர்த்துவிட வேண்டும்.

தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை உன் தோழன்தான். எதையும் மறைக்காமல், மறுக்காமல் பிள்ளைகளோடு விவாதியுங்கள்.

தனித்தனியே என் பிள்ளைகளுக்கு அறைகள் இருந்தபோதிலும் கல்லூரி செல்லும் வரையில்கூட ஒரே படுக்கை அறையில்தான் குழந்தைகள் எங்களோடு தூங்கினார்கள்.
கணவன் மனைவிக்கு ‘பிரைவஸி’ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பெரிதாகக் கருதாமல் குழந்தைகளின் விருப்பப்படியே உடன் தூங்கினோம்.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபின் தனி அறையில் தூங்கவிடாதீர்கள். பாட்டியுடனோ ஆயாவுடனோ அம்மாவுடனோ குழந்தை தூங்குவது வேண்டாத சிந்தனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

பள்ளிக்கூடத்தில் பல் இளித்தவன், பஸ் ஸ்டேண்டில் டாட்டா சொன்னவன், ஆண்டு விழா மேடைகளில் ஆடிப்பாடியவன் இப்படி எவனாவது ஒருவன் பட்டாம்பூச்சியாய் அந்தப் பெண் மனதில் சிறகடித்து தூக்கத்தைக் கெடுப்பான். இப்போது எஸ்எம்எஸ் என்று ஒரு எமன். இப்படி ரகசியமாக அந்தரங்கமாக பட்டாம்பூச்சி பையனை நினைத்து கனவு காண்பதைத் தடுக்க ஒரே வழி அம்மாவுடனோ பாட்டியுடனோ குழந்தை தூங்குவதுதான்.
திருமணத்துக்கு ஆறுமாதம்வரை எங்கள் மகள் எங்களோடுதான் தூங்கினாள்.
இணைய தளம் என்கிற இன்டர்நெட் வலைத்தளம் இன்னொரு போதையான சமாச்சாரம். நல்லது கெட்டது எல்லாம் வெட்டவெளிச்சமாக, மூஞ்சியில் அடித்தாற்போல மனதைப் பாதிக்கின்றன.

கம்ப்யூட்டரை வீட்டு நடு ஹாலில் வைத்துவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. தவறான எண்ணத்துடன் தப்பான காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து எந்தப் பிள்ளையும் பார்க்கமுடியாது.
‘நான்தான் டாக்டருக்குப் படிக்கலே. நீயாவது படி. நம்ம வீட்ல எஞ்சினியர் இருக்கார்,வக்கீல் இருக்கார். எப்படியும் நீ டாக்டராக வேண்டும்’ என்று உங்கள் விருப்பங்களை- அபிலாஷைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் படிக்க அனுமதியுங்கள்.

சூலூர் பள்ளியில் ஐந்தாவது ஆறாவது ரேங்க் படிப்பில் வாங்கிய நான் சென்னைக்கு ஓவியக்கலை படிக்க புறப்பட்டபோது படிப்பறிவில்லாத என் தாய் ‘உன் விருப்பம் எதுவோ அதைச் செய். என்னால் முடிஞ்சவரைக்கும் பாடுபட்டு பணம் அனுப்புகிறேன்’ என்று தைரியமூட்டி அனுப்பினார்
இன்று நான் வரைந்த காந்திஜி, நேரில் சென்று எட்டுமணி நேரம் வரைந்த தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோபுரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற எண்ணற்ற ஓவியங்களை ‘அந்தளவுக்கு உயர்தரத்தில் இருபத்து நான்கு வயதில் வரைந்தவர்கள் இந்திய அளவில் இருபது பேர் கூட இருக்கமாட்டார்கள்’ என்றார் என் ஓவிய ஆசிரியர்.

லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மூன்று பாடங்களில் அரியர்ஸ் வைத்து தடுமாறி பின்னர் தேர்ச்சி பெற்ற சூர்யா, திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது.

பிள்ளைகளின் தனித்திறமை பார்த்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள்.
பணம் சம்பாதிக்கும் மெஷினாக உங்கள் பிள்ளையை உருவாக்கி பெருமைப் படாதீர்கள். அதிகாலைச் சூரியன், தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், குழந்தைகளின் மழலைகள், கோபுரங்களின் அழகு, நதியின் பிரவாகம், நண்பர்களின் அரட்டை, பெற்றோரின் பாசம், இசையின் அருமை, ஏழைக்கு உதவுதல், உள்ளிட்ட வாழ்க்கையின் உன்னதங்களை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்.

பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் பெறும் வெற்றி- இவைதாம் பெற்றோரை கடைசி மூச்சுவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.

உங்கள் குழந்தை எப்படி...?

தன்னம்பிக்கைமுந்தா நேற்று சேலத்தில் மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். அது ஒரு பெண் குழந்தை; ஆறு அல்லது ஏழு  வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண்.
           என் மகள் தியானவை பார்த்த‌தும், ஆசையாக கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள். நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "அங்கிள் , உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."
          சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ அங்கிள்  கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.
          ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "அங்கிள்  நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு அங்கிள்  ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ஏழு  வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி? புரியவில்லை. நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?
            பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.
அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை அங்கிள் " என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் பயந்து தியனாவே பயந்து போயிருந்தாள்.!
         அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது,டாக்டரும் கூடவே வெளியில் வந்தார். டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.
உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.
பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். எங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?  உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.
அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?
இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம்.
ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று.
அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) அம்மாவுடன் சேர்ந்து கொண்டு சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.
உண்மை தான். சில குழந்தைகளின் பிடிவாத குணங்கள் , ஓவர் ஆக்டிங் இவையெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு எரிச்சலை உண்டு பண்ணி விடும். இனி அந்த குழந்தைகளை பார்க்க கூட கூடாது என முடிவே கட்டி விடுவார்கள். அந்த குழந்தைகளை ஒரு சாத்து சாதி விடலாமா என்று கூட தோன்றும்.
என்ன சார் குழந்தை தான...அப்படித்தான் இருக்கும் , அதுக்காக கோபப்படலாமா..? என்று உங்கள் மனதில் இப்போது கேள்வி ஒன்று எழும். உண்மையை சொல்லுங்கள் .. உங்கள் குழந்தையை மற்றவர்கள் விரும்பும் வகையில் உருவாக ஆசையா? இல்லை குழந்தையை கண்டாலே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி மற்றவர்கள்  ஓடக்கூடிய சூழ்நிலையை உருவாக ஆசையா?
உங்கள் குழந்தை யின் குறும்பு  உங்களை ரசிக்க வைக்கும்...ஆனால் மற்றவர்களை..? யோசித்து பாருங்கள்.
அந்த குழந்தைகள் அப்படி வளர்வதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறார்கள். சில வீடுகளில் மிகுந்த  செல்லம் கொடுத்து கொடுத்தே தன குழந்தைகளை தாமே கெடுத்து வைத்திருப்பதை நீங்களும் பார்த்திருக்கலாம்.
எனவே..அதற்கான நல்ல விசயங்களை குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். பெரியவர்களிடம் எப்படி பேசுவது. ? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வது? மரியாதை என்றால் என்ன? மற்றவர்களை புண் படுத்தாமல் இருப்பது எப்படி, ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது. போன்ற அடிப்படை விசயங்களை இப்போது கத்துக் கொடுக்காமல் எப்போது சொல்லி கொடுக்க போகிறிர்கள்? அதே சமயம்  சில நேரங்களில்   அந்த மாதிரியான குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவிட்டி என்ற நோயும் இருக்கலாம்.  அந்த குழந்தைகள் மிகவும்  பிடிவாத  குணத்தோடு இருப்பார்கள். யார் எதை சொன்னாலும் கேக்க மாட்டார்கள். எப்பொழுதும் எதையாவதை போட்டு உடைத்து கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் ஒரு குறும்பு உலகமாகவே இருப்பார்கள். அது  நல்ல விசயமில்லை. அதற்கு கண்டிப்பாக மருத்துவத்தை நாட வேண்டும்.அதனால் குழந்தைகளின் அல்லது குழந்தை சார்ந்த பெரியவர்களின் மன நிலை யில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இது மிகவும் அவசியம்.

Friday, October 14, 2011

பேனா…….ஒரு சிறு குறிப்பு…..


பேனா…….ஒரு சிறு குறிப்பு…..
பின்குறிப்பு : இது கவிதையல்ல…
அன்புடன் - ஒட்டக்கூத்தன்…


சில பேரின் கைகளில்
சில்லரைகளுக்காக தலைகுனிகிறது…
என்றைக்குமே அவர்கள் பேனா
நிமிர்ந்து பார்த்ததே கிடையாது…
அந்த பேனாக்கள் தங்கள்
முக மூடிகளை கழற்றிய உடனே
தன் வாயிலிருந்து எச்சிலை
உமிழ்கின்றன…
பெண்ணுடல்இ காம ரசம்இ
 இவைகளை துப்பி துப்பியே
இந்த சமுதாயத்தை அழுக்காக்கியிருக்கின்றன…
கவிஞன் எல்லாவற்றிலும்
அழகியலை புகுத்துகின்றான்
உண்மைதான்…
இந்த அழகியலும்
சில நேரங்களில்
அழுக்கியலாக மாறியிருக்கிறது….
பல புரட்சிகளைஇ உருவாக்கிய பேனா…
பல சமுதாய சீர்கேடுகளை
புரட்டி போட்ட பேனா…
கலை வளர்த்து
களிப்பேற்றிய பேனா…
மனதை சமமாக்கி
மனித நேய விதையை
விதைத்த ஆன்மீக பேனா….
அநீதியை தட்டி கேட்க
தோள் தட்டி புறப்பட்டு சென்ற
துப்பாக்கி பேனா…
துக்கத்தால் துவண்டு
வழுக்கி விழுந்தவர்களை
விலா நோக சிரிக்க வைத்த
நகைச்சுவை பேனா….
அந்த பேனாக்கள்….
சிந்திய தேன் துளிகளில்
பல துளிகள்…
கற்பனை வாட்டத்தில்
காய்ந்து விட்டன….
காய்ந்துவிட்ட காரணத்தால்
அந்த அற்புத பேனாக்களும்
மாய்ந்து விட்டன…
ஆயிரம் துப்பாக்கி முனைகளின்
துந்துபி முழக்கத்தை விட
ஒரு பேனா முனை
மிகவும் வலிமையானது என்பது
எவ்வளவு பெரிய உண்மை…?
நமது வரலாறுகளை
புரட்டி பார்க்கின்ற போது…
பாரதியின் பேனா…
ஆயிரம் பீரங்கிகளுக்கு
சமமானது…
அவன் எழுத்து…
பல பிரபஞ்சங்கள் புதிதாக முளைத்து
வீழ்ந்து…மீண்டும் வந்தாலும்
அடிமைத்தனத்தை
மீண்டும் அண்ட விடாது..
தன் நாக்கு
முதன் முதலில்
அன்னத்தை தொடும் போது
ஒலித்த தாய் மொழியை தவிர
வேறு எம்மொழியையும்
பாரதிதாசனின் வேல் வீசும் வார்த்தைகள்…
அனுமதிக்காது.
சாதியத்தை..
மனித மனத்தை
காயப்படுத்திய பிரிவினைகளை…
என்றைக்குமே
பெரியாரின் வைரவரிகள்
சுட்டெரித்து விடும்…
பாரப்பட்டு.
வேதனைகளைத் தாங்கி…
மகிழ்சிசிக்காய்
ஏங்கித் தவிக்கும் பல
நெஞ்சங்களைத் தன் வார்த்தைகளால்
மருந்திட்டுஇ தோகையால் வருடிவிட்ட
கண்ணதாசனின் சாமர விசிறி
போன்ற வார்த்தைகள்
காலாகாலத்திற்கும்
நம்மை ஆறுதல் படுத்தும்…
அந்த பேனாக்களின்
மையில் மெய்மட்டும்தான்
நிர்ப்பப்பட்டு இருந்தது…
உண்மை குடியிருந்த காரணத்தால்…
அதிலிருந்து தெரித்த வார்த்தைகள்
சமூக அவலங்களை தீயாய்
சுட்டெரித்தது.
அந்த எழுத்துக்கள்
புழுத்துப்போன பொய்களை எல்லாம்…
வெளுத்துக்காட்டிஇசாயம் போக வைத்தது..
இன்றைக்கும் எழுதுகிறார்கள்..
ஒற்றை முனைக் கொண்ட அந்த பேனர்
கூசக் கூச எழுதுகிறார்கள்.
.சமூகம் அவர்களைத்தான்
கவிஞன் என கொண்டாடுகிறது..
ஆம்…
திரைப்படத்திற்கு
பாடல் எழுதினால் மட்டும் தான்…
அவன் அரசவை கவிஞனாகிறான்.
அதிகார வர்க்கத்திற்கு
தலைகுனிந்து தலைகுனிந்தே
இங்கே சில கவிஞர்களுக்கு
கிரீடம் முளைத்திருக்கிறது….
காக்காவை
மட்டும் தான் அவர்கள்
தங்கள் தேசிய பறவையாய்
அங்கீகரித்திருக்கிறார்கள்..
அவர்களுக்கு வாய்த்த தமிழை
அதிகாரத்திற்கு அபிசேகம்
செய்வதற்கே பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் பேனா
உதிர்க்கும் சொல் மலர்கள்
பாவம்…
கல்லரைகளுக்கு
மட்டுமே தூவப்படுகின்றன..
மக்களுக்கு
அறிவூட்டி
ஐந்தாம் தூணாய் இருந்த பேனா…
ஊனப்பட்டு கிடக்கிறது…
அதிகாரத்தை
மயக்குவதற்கு…காலம் பார்த்து பார்த்து….
பென்னியா…-இது லத்தீன்…
“பறவையின் இறகு”
என்பது பொருள்….
பேனா…- இது நாம் சொல்வது….
லத்தினிலிருந்து வந்த வார்த்தை பேனா….
உண்மைதான்….
அதிகார சூரைக்காற்றில்
நிலைக் கொள்ளாமல்
பறந்தபடி திரிகிறது….
இந்த..
“பறவையின் இறகு”…!!!