சுட சுட செய்திகள்

Monday, November 5, 2012

சட்டத்தின் படி(16) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்  

பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி

அதென்ன சிக்கல்?


என்னடா சிக்கல்  என ஆத்திரத்துடன் கேட்டார் முத்து.

அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ன இத்தனை நாளும் இங்கிலிஸ் படிச்சதுக்கே அனி தமிழிலே தான் எல்லாம் பேசனும் இங்கிலிஸ் பேச வாய்ப்பில்லையே அதுதான் சிக்கல்

அடச்சீ அங்கேயும் இங்கிலீஸ் சொல்லி தராங்க. டேய் நீ பொறந்த உடனே அம்மா அன்னுதான் அழுத. மம்மி மம்மி அம்மி அம்மி ன்னடா அழுத?

என்னயிருந்தாம் இங்கிலீஸ் பள்ளிக்கூடம் மாதிரி வருமா?

ஆமாண்டா வராது வரவே வராது எல் கே ஜி க்கே 20 ஆயிரம் உக்காந்தா காசு எந்திருச்சா காசு ஓட்டவண்டிக்கு காசு.

டேய் இந்தியாவுல வேண்டாம் தமிழ்நாட்டுல எடுத்துக்கோ தமிழ்லே படிச்சு எத்தனை கலெக்டர், போலீஸ் அதிகாரி, விஞ்ஞானியாக எல்லாம் இருக்காங்க. அவங்களுக் கல்லாம் என்ன இங்கிலீஸ் தெரியாதா, அடேய் இவனே திருக்குறளை இன்னைக்கு உலக மொத்த மொழியிலும் எழுதிதாண்டா. ஜப்பான் காரானுக்கும் சைனாக்காரனுக்கும் இங்கிலீஸ் தெரியாது ஆனா அது வல்லரசு நாடுடா வெறும் பகட்டு கவுரவம் பார்த்து பாலாய் போனது போதும் எங்கொழந்தைகள் தமிழ்ல படிகத்கட்டும் எடுத்த காலி பண்ணு என்ன ராசாத்தி நான் சொல்றது?

ரொம்ப சரியாத்தான் சொன்னீங்க..ஆமா இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படித் தெரியுமண்ணே?

அப்ப அப்போ தமிழ் மன்றமும் தமிழ் ஆர்வம் உள்ளவங்க கூட்டத்தில் பேசறத கேட்பேன். என்னயிருந்தாலும் ஒடம்பிலே ஓடுறது தமிழ் ரத்தம் தானே?
முத்துவும் ராசாத்தியுமு; பரிப+ரண திருப்தியாக தன் குழந்தைகளை அரசாங்;க பள்ளியில்  சேர்த்தனர்.

தனியார் பள்ளிக்கு இணையாக தம் பள்ளியை ஆமம்படுத்தும் முயறிசியில் தலைமையாசிரியர் முதல் கழட நிலை ஊழியர் வரை கடுமையாக உழைத்ததின் பலன் படிப்பு விளையாட்டு கனனி அறிவியல் என்ற முறையில் தமிழ் நாட்டல் அரசு பள்ளி முதன்மை இடம் பெற்றது. அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த முத்துவின் மகன் தியாகு விளையாட்டுத் துறையில் மாவட்ட அளவில் முதலானவனாக வந்தான். படிப்பிலும் சோடை போகவில்;லை.

ராசாத்தியின் மகள் தமயந்தி தமிழில் மிகவும் ஆர்வமுள்ளவளாக கட்டுரை கவிதை ஓவியம் என பல துறைகளில் பிரகாசித்தாள். ஆங்கிலமும் கணிதம் கடின என்ற வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்..

ஆக தியாகு தமயந்தியின் மேல் ஆசிரியர்கள் தனி கவணம் செலுத்தினார்கள்.
இவ்விருவரின் வளர்ச்சியின் ;ராசாத்திக்கு பெரும் பங்குண்டு.சும்மா படி படி என நச்சரிகக்காமல் விளையாட்டு என விளையாட்டையும் அனுமதிதத்தாள்.

குழந்தை பருவம் முதலே கண்டிப்பு கலந்த பாசத்துடன் வறுமை என்றால் என்ன என்று உணரும் படியும் சில சமயம் புரியும் படியும் செய்வாள்.

ஆடம்பரமான பொருளை அறவே ஒதுக்கி தள்ளினாள். மீறி கேட்டாள் வியர்வை வந்தவுடன் அத்தனையுமு; அழிந்துப்போகும். உள்ள அழபு கோதுமு; சுத்தாமாக யிருந்ததாலே தனியழகுதான் என்பாள் குழந்தை பிஞ்சு மனதிலர் பதிந்த  உண்மை  காலத்தால் மாற்ற முடியவில்லை.

பல ஆண்டுகாலம் தனிமையில்; இருந்த முத்து கால சூழ்நிலையில் கூடா நட்பு மது மாது என்று தன்னை மறந்து செய்யக் கூடாத சமூக தவறுகளை செய்தான் இதன் மூலம் கிழடக்கக் கூடிய அதிக வருமானம் தவறுகளை மேலும் செய்யத் தூண்டியது.

ஆனாலும் அவன் மனதில மற்றவர் துன்பபடுவதை கார்த்தால் உதவக் கூடிய நல்ல மனதுமிருந்ததது பசி யென்று கையேந்துபவர்களிடனம் தன் பசியை இடக்கிக் கொண்டு மற்;றவர் பசியை போக்கியது முண்டு.

பானுமதியை சந்தித்து குடும்பம் நடத்திய நாள் முதல் பானுமதி இறக்கும் வரை மாதுவை விட்டொழித்தானே தவிர மதுவை விட முடியவில்லை. பானுமதி இறந்த பின்கும் ஒரு சில மாதங்கள் தன் பழைய தொழிலையே செய்து கொண்டிருந்தான்

ஆனால் ராசாத்தியை தன் உடன் பிறந்த தங்கையாக வந்ததின் மாற்றம் பழைய தொழிலை விட்டொழித்து கிழடக்கின்ற கூலி Nவுலை செய்ய ஆரம்பித்தான். கொற்ப வருமானம் காரணமாக குடியை அறவே ஒழித்து தன்னை தானே மாற்றிக் கொண்டான். அதிக வருமானம் உள்ள போதும் குறைந்த வருமானம் உள்ள கோதுமு; இதுவரை ராசாத்தி முத்துவிடனம் என்ன வேலை என்று ஒரு வார்த்டதை கேட்டது கூட இல்லை.

அடிக்கடி அவன் கடவுளிடம் வேண்டுவது என்னை பழைய நிலைமைக்கே பழைய தொழிலுக்கு திருப்பி விட கூடாது என கண்ணீருடன்  veவண்டிக் கொள்வான்.

வேலுவின் மகனுக்கு பாஸ்போர்ட் எல்லாம் தடங்களின்றி கிடைத்தது. திவாகரனிடமிருந்து விசா கிடைத்ததுஃ வேலுவிற்கு மகனை பிரிவதில் ஒரு புறம் மன கஸ்டம் இருந்தாலும் இங்கேயிருந்தால் அவன் கெட்டு கோப நிறைய வழியண்டு என எண்ணியது மட்டுமில்லை

 முதலாளி திவாகரன் சொல்லுக்கு கட்டுபடுவதுதான் தர்மமும் கூட என்று எண்ணினான் வேலு.

அரவிந்த் என்னுடைய பெயரை காப்பாற்ற வேண்டாம் நம்ம முதலாளி திவாகர் பெயரை காப்பாற்று நல்லா படி. அடிக்கடி எனக்கு போன் பேசு

என்றபடி எனக்கு இங்கே நெறைய வேலையிருக்கு ஏர்போர்ட்க்கு கூட வரமுடியாது போ Nபுhய் கார்ல ஏறு என்று மகனை வழியனுப்பி வைத்தான் வேலு.

அரவிந்த் காரில் சென்னை வந்து செர்ந்தவுடன் டிலைவர் அண்ணே நாளை காலைல தான் பிளைட் ராத்திரிக்கு நல்ல ஓட்டல்ல தங்கிடறேன். நீங்க..?
நான் கார்லயே தங்கிடறேன் தம்பி.

சே…வேண்டாம்ன்னே…பக்கத்திலே வேறு லாட்ஜ்ல தங்கிழுங்க என்று கூறியபடி டிரைவர் மறுக்க மறுக்க 2 ஆயிரம் ரூபாயை டிரைவர் பாக்கெட்டில் சொறுகினான் அரவிந்த்.

முத்து சொன்னாக் கேளு லம்பா சுளையா பத்தாயிரம் உன் கமிசன் மட்டும் இல்லைன்னே நான் அந்த தொழிலை விட்டு தொம்ப வருசமாச்சு

அட கமிசன் பத்தரையின்னா இன்னும் 5 ஆயிரம் சேர்த்து வாங்கித்ததர்ரேன்.
கொஞ்க வருமானத்தான்…கூலி வேலைத்தான்..ஆனா நிம்மதியா வாழ்க்கை ஓடிட்டு இருக்குது. அதைக் கெடுத்துடாதே…

முத்து பெரிய இடம் மனசை மட்டும் மாத்து இந்த அமட்டராசுல உனக்கு தெரியாத முகமே..இல்லை. உன் பேச்சு திறமையினால் படியாததைக் கூட படிய வைச்சுரவ..இன்னும் என்ன யோசனை இந்தா அட்வான்ஸ். என்று சில 500 ரூபாய் நோட்டுகளை முத்துக் கையில் திணித்தார்.

முத்து கடும் கோபத்துடன் கண் சிவக்க ரூபாய் நோட்டுகளை முகத்தில் வீசியெறிந்து போய்யா போ..என்று கோபப்பட்டு கத்தினான் முத்து.

சப்தம் கேட்டு அடுக்களையிலிருந்த ராசாத்தி வேகமாக ஓடி வந்தாள்.

ராசாத்தியை பார்த்தவன் ஓஓ இதுதான் சங்கதியா, இதுவவும் பானுமதி மாதிரியா? பரவாயில்லை என்று வந்தவன் சொன்ன மறு நிமிடம் இவன் கன்னத்தில் கண் பொறி தட்;ட பளார் என்று அறைந்தான்.

கன்னத்ததை நீவியபடி பணத்ததை பொறுக்கிக் கொண்டு வருவய்ய முத்து வருவ..அப்போ..பாத்துக்கறேன் என்றபடி சென்றான் அந்த ஆள்.

பதறி போன ராசாத்தி அண்ணா யாருண்ணா அது? ஏன் அந்தாளு அப்படி சொல்லிட்டு போறான்? …

அடுத்த வாரம் பார்ப்போம்.

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

TNPSC group2 re exam Answer keys 04.11.2012

TNPSC group2 re exam Answer keys


GK

GT


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, October 17, 2012

சட்டத்தின் படி(15) ....-சுவாரஷ்யமான தொடர்கதை



சென்ற வாரம்  

ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.
முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....
என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


காலில் முள் குத்தியதா? காலில் கல் பட்டதா என்பதனைக் கூட அறிய முடியாத நிலையில் உள்ள ஓட்டம.

நெஞ்சினிலே பதற்றமும் பதைபதைப்பும் நிறைந்துயிருந்தும் கடவுளை வினாடிக்கு வினாடி முருகன் முத்தாய்யம்மன் வரை என் குழந்தைகளுக்கு எதுவும் நேரக்கூடாது என் குழந்தைகளை காப்பாற்று என வேண்டியபடி பள்ளிpக்கூடத்தை நெருங்கினாள். 

அம்மா அம்மா என்ற குரல் கேட்டு எங்கடி தியாகு ? என்று மகள் தயமந்தியைப்பார்த்து கேட்டாள் ராசாத்தி. 

கூட வந்த முத்து தமயந்தியைக் கட்டித் தழுவி சாமி கண்ணு உனக்கொன்னும் ஆகலயே?

அண்ணா வான்னா, அவதான் நல்லாயிருக்கா இல்லே..தியாகுக்கு என்ன ஆச்சோ கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது என்று சற்று சப்தமாக சொல்லியபடி கூட்டத்தை நெருங்கினாள்.

அத்தை அத்தை என்று கூப்பிட்டபடி தியாககு ஓடி வந்து ராசாத்தியை கட்டடி பிடித்து கொண்டாள்.

தியாகுவை உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்தமிட்டபடி என் ராசா உனக்கு ஒண்ணுமாகாது நான் கும்பிட்ட கடவுள் நமக்குத் துணையிருக்கு என்று சந்தோசத்தில் தன்னையும் ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

பின்னாலே மூச்சு வாங்கி கொண்டு வந்த பாட்டி சற்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி டேய் முத்து பார்த்தாயாடா தான் பெத்த புள்ளையைக் கூட மறந்துட்டு உன் பையன் மேலே எவ்வளவு பாசமாயிருக்கா..

முத்து தமயந்தியை தோளில் தூக்கி வைத்து தலையை வருடிக் கொண்டிருப்பதைப்பதை பார்த்த ராசாத்தி பாட்டி அண்ணனுக்கு தமயந்தியின்னா உயிரு. என்று பேச்சை மாற்றினாள் ராசாத்தி.

உடனே பாட்டி “சரி சரி எந்த கொள்ளிக் கண்ணாவது உங்க மேலே பட்டுற போகுது.”

பாட்டியின் கோபம் உடனே பள்ளியின் பஸ் ஓட்டிய டிரைவர் மீது பாய்ந்தது. கோபம்  தீம்பிளம்பாய் வெடித்தது.

யோவ் உங்கொழந்தை இப்படி செத்திருந்தா துடிச்சு போவாயா இல்லை உம் பொண்டாட்டிக்கு அலுவாயும் மல்லிகைப் pooவையும் வாங்கிக் கொடுத்து கொஞ்சி விளையாடுவியா? ஒன்;னா ரெண்டா அடுக்கடுக்கா எத்தனைப் பிஞ்சுகள்? ஓட்ட வண்டி காத்து கணக்கா வேகம் ஒரே வண்டியில 300 குழந்தைகளை 9 மணிக்குள் சேத்தியாகனும் என்ன கொடுமை முதல்ல இப்படிப்பட்ட பள்ளிக் கூடத்தை மூடணும்.

அப்புறம் இவன் மாதிரி டிரைவருடைய பரம்பரைக்கே லைசன்ஸ் தரக்கூடாது. காலமெல்லாம் களி திங்க வைக்கணும்.இதெல்லாம் இந்த அரசாங்கம் எப்போ செய்யப் போகுதோ?

பாட்டியின் ஆவேசமான பேச்சு கூட்டம் மொத்தமும் பாராட்டியது. 

அத்தை…

என்னப்பா தியாகு?

எனக்கு இந்த இங்கிலீஸ் பள்ளிக்கூடம் வேண்டாம்…

ஏன்?

அம்மா நாங்க அரசாங்கப் பள்ளிக் கூடத்திலே படிக்கிறோம் என்றாள் மகள் தமயந்தி.

ஆமா அத்தை நீங்களோ அப்பாவோ காலையிலும் மாலையிலும் கூட்டி கோக வந்துடுவீங்க. எங்களுக்கும் பயமில்லை உங்களக்கும் பயமில்லை இல்லயா?
என்னம்மா ராசாத்தி குழந்தைகள் சொல்றது எனக்கு சரியின்னு படுது உனக்கு?
இல்லையிண்ணா…இங்கிpலிஸ் பள்ளிக்கூடத்திலே படிச்சு நாளைக்கு பெரிய படிப்புக் கெல்லாம் வசதியாயிருக்கும் 

அய்யோ அத்தை அங்கேயும் இங்கிலிஸ் எல்லாம் சொல்லி தராங்க. மத்தியானம் சாப்பாடு கூட தராங்க. புத்தகம் துணிமணி எல்லாம் சும்மா தராங்க.


ஆமாம்மா. நாங்க ரெண்டு பேரும் வாத்தியார் நடத்துறதே கேட்டு நல்லபடியா படிச்சுக்கிறோம். கவலைப் படாதேயம்மா என்றாள் தமயந்தி.

கார் ராசாத்தி தமயந்தி எவ்வளவு தெளிவா சொல்லறா இது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான்.

ஆமாண்ணே தியாகுவும் இதைத்தான் சொல்றான். குழந்தைகள் விருப்பப்படி யே செய்திடலாம். ஏ தியாகு அங்க எத்தனை வகுப்பு வரையிருக்கு? 12 வரை யிருக்கும்மா?

ஆமா அத்தை 12 வகுப்பு வரை யிருக்கு. சரி ராசாத்தி டி சி யை வாங்கி ரெண்டு பேரையும் சேர்த்திடலாம் என்றான் முத்து.

அப்போ 6 வருசம் இந்த கவர்ன்மென்ட் பள்ளியில படிக்கலாம்ல்ல? சந்தேகமே வேண்டாம் என்று முடிப்பதற்குள்

பக்கத்து வீட்டு பாண்டிவந்தபடி நீங்க பேசினதையெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். ஆனா அதிலொரு சிக்கல் என்ற நால்வரையும் குழப்ப வைத்தான் பாண்டி

அதென்ன சிக்கல்?

அடுத்த வாரம் பார்ப்போம்.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, October 14, 2012

பொன்னான வாய்ப்பு.



நம்ம ஏகாம்பரத்திற்கு அவர் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு…
வாய்யா..ஏய்யா நல்ல வாய்ப்பு வரும் போது மிஸ் பண்ற? இங்க பாரு வாய்ப்பு எப்பவாவது தான் வரும். இன்னிக்கு மீட்டிங் வந்து பாரு…சுலபமா சம்பாதிக்கிற வழியை தெரிஞ்சுக்கோ…

ஒரே நேரத்தில் 1000 பேர் உட்காரக்கூடிய விசாலமான ஹால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வி ஐ பி சேர் மேடையின்  கீழ் 200 அபேருக்கு குறைந்தது இல்லை.

மேடையிpல் கோட் சூட்டில் 2 பேர் டயட் வாசிங் பவுடர் வெள்ளை வேட்டி சட்டையில் மூன்று பேர்.

வுhழ்க்கையில் மூன்னேறத்துடிக்கும் உங்களை வரவேற்கிறேன்(அதுதான் வந்துட்டீங்கள்ள? அப்புறம் என்ன வரவேற்பு?)

நீங்களே அல்லது உங்களை சார்ந்தவர்களே(நாங்களே தான்) அதிக வட்டிக்கே ஒரு ரூபாய் கட்டினா 10 ரூபாய் தருவோம் என்றதை நம்பி மோசம் போயிருப்பீர்கள்.

இங்கே அப்படி நடக்காது…(அதுதான் ஓடிப்போய்டுவீங்களே?) ஏன்னா உங்களுக்கும் நம்ம கம்பெனி உள்ள ஒப்பந்தம் தலைசிறந்த வழக்கறிஞர் (என்ன சுப்ரீம் கோர்ட் வக்கீலா?) கொண்டு ஒப்பந்தம் செய்யப்படும்.

அடுத்து அண்ணன் பனிகோதன்(என்னய்யா இப்படியும் பேரா) ஸ்கீம் பற்றி விளக்கமாக கூறுவார்.


இக்…ம்ம்ம..ஹ்ஹே…(கணைக்கிறாரா இருமுறாரா?_ அன்பான உறுப்பினர்களே (எப்பய்யா நாங்க சேந்தோம்?)

வாழக்கையில்; எவ்வளவு கஸ்டப்பட்டாலும் முன்னுக்கு வர முடியாத நிலையை நம்ம ஸ்கீம் அடியோடு மாத்திடும்.(அடப்பாவிகளா அவுத்துடறதுக்கு ஒரு அளவில்லையா,?)

இந்த ஸ்கீமில ஒரு ஸ்பெசல் என்னன்னா சந்நதாரர் ஒவ்வொருவருக்கும் வாங்கும் ய+னிட்டை பொறுத்து கால் , அரை, முக்கால் என்ற அடிப்படையில் நிலம் பக்கா பட்டா நிலம் தந்துருவோம்.

சந்தாராருக்கு எங்க இல்ல…நம்ம கம்பெனி செலவுலே பக்காவ பட்டா செய்து தந்து சந்தோசப்படுத்துவோம், 

அடுத்ததாக மேலைநாட்டில் சுற்றுப்புற சுகாதார மேற்படிப்பு படித்த திரு பணி காதகன் விளக்கமாகக் கூறுவார்.(அடடே என்னப்பா சொல்லப் போற எமக்காதகா…!)

கடல் அலை என வந்திருக்கும் சந்தாதாரர்களே! (அரசியல் வாடையில்ல அடிக்குது..உசாரு)

நம் வாழ்க்கைக்கு சுகாதாரம் மிக அவசியம்(ஆகா புதிய  மேலைநாட்டு கண்டுபிடிப்பு)

வீட்டு டாய்;லெட் கட்டியிருந்தால் அது கொசு உற்பத்தி ஆலையாகிறது அங்கிருந்து சுதந்திரமாக வரும் கொசு மனிதனை கடித்து டெங்கு மலேரியா போன்ற கொடிய நோயை உண்டாக்கி சாக வேண்டிய துர்பாக்கியம் உண்;டாகிறது.(கேட்டுக்கோங்க மகாஜனங்களே..யாருக்கும் தெரியாத புது சங்கதி)

அதனால்  இந்த ஸ்கீம் வழங்கப்பட்ட நிலத்தில் இயற்கையை ரசித்தபடி அவசரப்படாமல் ஆர அமர நிதானமாக காலை மாலை கடன்களை முடிக்கலாம் தண்ணீரக்கு பக்கத்து மாநிலத்திடம் ஒப்பந்த முறையில் 1 டி எம் சி தண்ணீர் பெற முயற்சி எடுத்துள்ளோம் அது வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது.

அடுத்து பனி அறுப்பன் நமது ஸ்கீம் பற்றி விளக்கமாக கூறுவார்…

இந்த ஸ்கீமின்; அடிப்படை கொள்கை கஸ்டப்படாமல் சுயமாக சிறிதளவு வியர்வை சிந்தி குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆவதுதான்.

நம்பர் 1.

1யூ னிட் 4 பெருக்கல் 1 – தொகை 180000
2 யூ னிட் 8 பெருக்கல் 2 – தொகை 260000
3 யூ னிட் 12 பெருக்கல் 3 – தொகை 320000

தொகை செலுத்தியவுடன் நிலம் பட்டா செய்து தரப்பட்டு தொகைகேற்ப ய+னிட் பொருள் …அதுதாங்க சஸ்பென்ஸ். தந்து உணவு  தானியம் இலவசம் மாதம் காத்தல் தொகை ய+னிட்டுக்கு 50 ஆயிரம் பென்சன் 3 வருட கடைசியில் முhலுடன் வட்டி சோத்து ந மடங்கு பெறலாம்.

என்ன மலைச்சு போயிட்டீங்களா? அந்த சஸ்பென்ஸ் என்னன்னு நான் சொல்லிறவா?


1 யூ னிட் 3 பொட்டை பன்னி.1 ஆண் பன்னி
2 யூ னிட் 6 பொட்டை பன்னி.2 ஆண் பன்னி
3 யூ னிட் 12 பொட்டை பன்னி.3 ஆண் பன்னி

மேய்க்க நிலமும் உணவும் அங்கேயே உண்டு ஓட்டலில் எச்சிலை மட்டுதம் பொறுக்கி(இது காலை மதியம் கட்டாயம் செய்ய வேண்டும் ஆட்டோ இலவசம்)

ஒரு உத்திரவாதம் நம்ம பன்னிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் நோய்வராது.

பனிகோதன் பனி அறுப்பன் இடம் கைபேசியை கொடுத்தார்…

ஹலோ….ண…ஆ…பே….பை…
(என்னடா இது என்ன புது மொழியில பேசறான்…!)

மவனே பேசு நம்மளுக்கு விளங்காது. நாமதான் முக்காபலே பாட்டுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சு அதை ஏத்துக்கிட்டவங்களாச்சே…!

அருமை சந்தாதாரர்களே.,! ஆப்பிரிக்கா கண்டத்தில் டைனோசர் வளர்ப்பு பற்றிய திட்டம் பற்;றி அதிபரிடம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது..அநேகமாக நமது அடுத்த ஸ்கீம் அதுதான்…..

என்று பேச்சை முடித்தார்….பனி அறுப்பன்…

மயக்கம் போட்டு விழுந்தார்…நம்ம் ஏகாம்பரம்.

நீங்கள் நமது ஸ்கீமில் சேர வேண்டுமா...உடனே அழையுங்கள் 

சுந்தர கனகு 9952827529


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, September 20, 2012

சட்டத்தின் படி(14) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


வேலு மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு பைலாக பார்த்துக்கொண்டிருந்தார். தன் மகன் அரவிந்த் காலில் விழுந்துக கொண்டிருப்பதைகூட அவர் கவனிக்கவில்லை.

சுற்று பொறுமையிழந்த அரவிந்த் “ அப்பா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா… நான் மாநிலத்தில் 2 வதுமாணவனாக பாஸாயிட்டேன்.” ஏன்று மகி;ழ்ச்சி பொங்க சொன்னான்.


ஏவ்வித சலனமுமின்றி சந்தோசத்தை காட்டாமல் எந்திரிப்பா என்றார் வேலு.

“என்னப்பா மாநிலத்தில் 2 வது மாணவனாக பாஸ் பண்ணியிருக்கேன….; கொஞ்சம் கூட சந்தோசமா இல்லையே..?”

“இல்லைப்பா நான் உன்னை படிக்க வைச்சிருந்தேனா… பாஸ் பண்ணியிருப்ப.. ஆனால் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்ட, உன்னை  ஆசிர்வாதம் பண்ணறதுக்கோ சந்தோசப்படறதுக்கோ எனக்கு உரிமையில்லப்பா.”.

“என்னப்பா சொல்லறீங்க? நீங்க என்ன பெத்த அப்பா”…

“இல்லைன்னு சொல்லலையே? உங்க அம்மாவை தொலைச்சிட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு வந்த எனக்கு இந்த பேக்டரியில் எல்லா உரிமையும் கொடுத்து கணக்கு வழக்குகளையும் பார்க்க, பேச சொல்லிக் கொடுத்து இன்னைக்கு இந்த பேக்டரியின் ஒர்க்கிங் பார்ட்டனரா உயர்ந்த நிலைமைக்கு…..”

“அது உங்களோடு கடினமான உழைப்பின் பிரதி பலன் தானப்பா”

அரவிந்தனுடைய கன்னத்தில் பளார் என்று அறைந்து “என்னடா உழைப்பு? பெரிய உழைப்பு? இந்த பேக்டரியில் 20 வருசம் 30 வருசமா வேலை செஞ்சவனுங்க உழைக்காததை விடவா நான் கடுமையா உழைச்சுட்டேன்.? முதலாளிக்கு நாமென்ன ஒட்டா? உறவா? நம்மள இத்தனை ஒசரத்திலே வைச்சுயிருக்காரு. இவருயில்லைன்னா நீ படிச்சே யிருக்கமாட்ட…நானும் குடிச்சுட்டு தெரு தெருவா அலைஞ்சுட்டுத்தாயிருந்திருப்பேன். என்னை பற்றி டிரைவர் முழுக்கதையையும் சொல்லியும் அவரா இதுவரைக்கும் என்கிட்ட கேட்டதில்லை நானும் சொன்னதில்லை. இப்ப சொல்லு…நீ மொதல்ல யார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கணும்.?

அரவிந்த் தலைகுனிந்தபடி “சரி இப்பவே போறேன்பா…”

“நான் தான் உன்னை ஆசிர்வாதம் பண்ண வந்துட்டேனே… என்ன மாநிலத்தில் முதலாவதா வருவன்னு எதிர்பார்த்தேன், பரவாயில்லை 12 வகுப்பில் கண்டிப்பா வருவ…காலில் விழுந்த அரவிந்தை தொட்டு ஆசிர்வதித்தபடி வேலு புது பேக்டரிக்கு பூமி  பூஜை போடணும்ன்னு சொன்னேன்ல்ல…போலாமா?”


ஐயா…..
ஐயா …ஜோசியரை பார்த்துவிட்டு வந்தேன்…

என்ன வேலு…என்ன நாள் நட்சத்திரம் கிரகம் இதிலே எதாவது?

ஆமாங்கய்யா……….

“வேலு எந்த ஜோசியர்கிட்ட ஜோசியம் பார்த்து நல்ல நேரம் பார்த்து எங்கிட்ட வேலை கேட்டியா இல்லை நாதான் உனக்கு நல்ல நேரம் பார்த்து வேலைக்கு சேர்;த்தேனா?.  நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து அத்தனை பேரின் ஆசிர்வாதம் பெற்ற புது மாப்பிள்ளை புது பெண்ணுமே சில நாட்களில் கோயிலுக்கு சாமி கும்பிட போற வழியில கார் ஆக்சிடன்ட்ல செத்ததை எத்தனை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கோம்? சரி சரி உன் விருப்பபடியே செய்ப்பா..”


“இல்லை..முதலாளி இப்பவே பூமி  பூஜை  போடலாம்”

“வேலு இன்னொரு முக்கியமான விசயம் இவன் ப்ளஸ் 2 முடிப்பதற்கு முன்னமே பேக்டரி வேலையெல்லாம் முடிச்சிடனும்…டேய் அரவிந்த்….”

ஐயா….

ம்ம்…இந்ந ஸ்கூலியே படிக்கிறயா இல்லை…வேற ஸ்கூல சேர்ந்துப் படிக்கிறயா?

ஐயா எப்படி சொன்னாலும் சம்மதம் தாய்யா…

“ஏண்டா நானா படிக்கப் போறேன்…? இந்த நன்றி கின்றி நெனச்சு உன் படிப்பை பாழாக்கிடாதே..உனக்கு என்ன விருப்பமோ அதை செய் என்னடா முழிக்கிற?
வேலு வா போய் பூமி  பூஜை போடலாம்.  டேய் நல்லா யோசித்து சொல்”  என்றபடி முதலாளி திவாகரனும்  வேலுவும் பூமி  பூஜை  போட சென்றார்கள்.



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, September 10, 2012

ஈசனும் சித்தனும்


ஈசனும் சித்தனும்.

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று நமது முப்பாட்டன் கடவுளுக்கு இணையாகச் சொல்லியிருக்கிறான். இங்கே திருவள்ளுவர் கடவுள் என்று சொல்லியிருப்பது அந்த கதிரவனைத்தான் என்பது தான் வியப்பு.

இந்த உலகம் தோன்றியதும் சூர்pயனால். இருப்பதும் இந்த சூரியனால் என்று அந்த கதிரவனே எல்லாவற்றிக்கும் காரணகர்த்தாவாக இருப்பதால்தான் வள்ளுவர் கதிரவனை கடவுள் என்று சுட்டிக்காட்டுகிறார்.

காலையில் எழுந்தவுடன் சூரியனைப்பார்த்து வணங்கிவிட்டு அந்த நாளைத் தொடங்கும் வழக்கம் இன்றைக்கும் நமது நாட்டில் இருக்கிறது.

புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் ஈசானி மூலையில் ப+ஜைப் போடுகிறோம்.

கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி வாசலை அமைக்கிறோம் இப்படி எல்லா வகையிலும் அந்த கதிpரவனை நாம் முதன்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறறோம்.

நாம் கொண்டாடும் பொங்கள் தினப் பண்டிகைக்கூட சூரியக் கடவுளை வணங்கிடத்தான்.

அப்படிப்பட்ட சூரியனுக்குத்தான் எத்தனைஎத்தனை பெயர்கள்.

கதிரவன், ஞாயிறு, வல்லாள், பரிதி, ஆதவன், இதுமட்டுமில்லை இன்னொரு முக்கியமான யாரும் அதிகம் கேள்விப்பட்டிராத பெயர் ஒன்று உண்டு.
அது ஈசன் என்பதாகும்.

என்னது ஈசனா? அது அந்த சிவனின் இன்னொரு பெயராச்சே! என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.

ஆனால் அதுதான் உண்மை. ஈசன் என்பது கதிரவனின் இன்னொரு பெயர்.அப்படியென்றால் சிவன்தான் கடவுள். இந்த உலகை உருவாக்கிய இயற்கை என்பது உண்மையாகிறது அல்லவா?

ஆங்கிலேயர்கள் சூரியனை சன் என்கிறார்கள். அது இந்த ஈசனிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.





இப்படி எல்லாவகையிலும் கடவுளாக இருப்பதற்கு எல்;லாதகுதியும் உடைய ஈசனை வணங்கித்தான் நம் நாட்டில் மட்டுமே வாழ்ந்த மாய புருசர்கள் பலவிதமான ஆச்சிரியங்களோடு கூடிய மருத்துவத்தை, மூலிகைகளை, சித்துக்களை, மாயங்களை எல்லாம் செய்துக் காட்டினார்கள் என்பது வியப்படைய வைக்கக் கூடிய ஒன்று.

அந்த வகையில் சித்தபுருசர்களான 18 மாய மனிதர்களைப் பற்றி தனித்தனியாக இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

வணங்குதற்குரிய அந்த ஈசனின் தொண்டர்களைப்பற்றியும், அவர்கள் சொல்லும் மந்திர, தந்திர, மருத்துவங்கள் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
சுந்தரர் என்பவர் ஈசன் மீது அதிகத் தேடலைக் கொண்ட ஒரு திருத்தொண்டர் இருந்தார்.

பல நாட்களாக தவமிருந்து காடுகளிலும் மலைகளிலும் சுற்றித்திரிந்து இந்த உலகத்தின் ஆசாபாசங்களை துறந்து சித்தர் என்கிற நிலையையடைந்தார்.
சித்துக்களை முறையாக கற்ற சுந்தரர் இன்பத்துன்பங்களை பகுத்தறியத் தெரியாத சித்தராய் இந்த நாட்டில் வலம் வந்தார்.

கூடுவிட்டு கூடுபாயும் அற்புத சித்து ஒன்றை தனக்கென அடையாளமாய் வைத்திருந்த சுந்தரர், ஒரு மன்னர் இறந்தவுடன் அந்த நாட்டின் நலம் கருதி தன் உடலைவிட்டுவிட்டு அவர் உடலின் குடியேறினார்.

மன்னரின் மனைவி அவருடன் நெருக்கமாக இருந்தபோது, இது மன்னன் உடல் இல்லையே ! அவனுக்கு துரோகம் செய்யலாமா என்கிற கவலையோடு மீண்டும் தன் உடலுக்குள் புகுந்தார்.

அங்கு மூலன் என்று ஒருவன் வாழ்ந்து வந்தார். அவனும் ஈசனின் மேல் அதிகப் பற்றுக் கொண்டவர். அவனுக்கு இந்த சுந்தரரைப்பற்றி நன்குத் தெரியும். இந்த நாட்டையும், நாட்டு மக்களின் பிணியகற்;றும் மருத்துவங்கள் பற்றியறிந்திருக்கிற சுந்தரரை தன் உடம்பிற்குள் வைத்து பிறகு தன் மூலம் அவர் வாழ்ந்து சேவையாற்ற வேண்டும் என விரும்பினார்.

அதன் படியே சுந்தரரிடம் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தன் உடலில் குடியேறி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனவும், வேலை முடிந்தவுடன் மீண்டும் தன்னைவிட்டு விலகிச் செல்லலாம் எனவும் அனுமதிவாங்கி அதன்படி அவர் உயிர் இவனுக்குள்ளும், இவன் உயிர் அவர் உடம்பிலும் சென்றது.

நாட்கள் கடந்தன. வந்த வேலை முடிந்தவுடன் சுந்தரர் தன் உடம்பைத் தேடி(மூலனை) தேடியலைந்தார். அதற்குள் மூலன் இறந்து போன் செய்திமட்டும்தான் கிடைத்தது.

இதனால் அந்த மூலனது உடம்பிலேயே வாழ வேண்டிய நிர்பந்தம் சுந்தரருக்கு ஏற்பட்டது. அதன்பிறகே சுந்தரது பெயர் திருமூலர் என ஆகியது.

திருமூலர் வருடத்திற்கு ஒருமுறைதான் பாட்டெழுதுவார். அப்படி அவர் 3000 பாடல்களை எழுதியுள்ளார். இதன்மூலம் திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுரவாசல் எனத் தொடங்கும் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, September 6, 2012

கொங்கு மண்

மலையின் உச்சியில் உள்ள தேயிலை தொழிற்சாலை சீரான முறையில் பராமரிக்கப்பட்ட தேயிலை தோட்டம் ;

இங்கு கொலக்கொம்வை எஸ்டேட் என்றும் கொலக்கொம்பை பஜார் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த எஸ்டேட் முன்பு கோத்தாரின் என்பவருக்கு சொந்தமாக இருந்தது.

 கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக படுக்கையுடன் கூடிய மருத்துவமனை, அஞ்சலகம் , காவல் நிலையம், நூலகம், இங்கே தனிச்சிறப்பு.

இந்துக் கோயில் மாகாளியம்மன் சர்ச் மசூதி என்று சமய சின்னங்கள் தனி வரலாற்றை உடையது.

சாதி மதத்திற்கு இங்கே எப்பபோதும்  தடா தான்.

பல்வேறு வகுப்பினரும் தாத்தா, பாட்டி, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, மாமா, மைத்துனர் என்ற முறையில் இந்துக்கள் முஸ்லீம்கள் கிருத்துவர்கள் வாழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஒரு நாகரீகமான ஊர் இந்த கொலக்கொம்பை.

இங்கு மளிகைக்கடை முதல் அனைத்து பொருட்களும் சரளமாக கிடைக்கும் சந்தை வரை மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது.

பக்கத்து கிராமங்களான தைமலை,ஆறுகுச்சி,அதிகரட்டி,டெரேமியா, தூதுர்மட்டம்,கிரேக் மோர்,அலசனா, கிளன்கர்ன், உட்லாண்ஸ்(மன வேதனை இந்த பெயர் இன்றைக்கு செருப்பிலும் வந்துவிட்டது)சுல்தானா, பால்மறா, ஓலாண்டு, மேலூர் என்று குட்டி குட்டி எஸ்டேட்டுகள் நெருக்கமாக அமைந்துள்ளது.இவையனைத்தும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இங்கு நடக்கும் சந்தையில் பொருட்களை விற்க, வாங்க வரும் காட்சி திருவிழா போன்று யிருக்கும்.

இந்த பகுதியில் பழங்குடி மக்களும் உள்ளடக்கம்.

இப்படிப்பட்ட சிறப்பு மிகு ஊரில் இருமுறை தொடர்ந்து மேலூர் ஊராட்சியின் தலைவராகவும், தேயிலை தோட்ட அதிபராகவும் , குன்னூர் டூ கொலக்கொம்பை என்ற போர்டை தாங்கியபடி ஓடும் முதல் பேருந்தை அறிமுகப்படுத்தியும்(லஷ்மி டிரான்ஸ்போர்ட்), லாரி, அந்த காலத்திலேயே 12 பேர் வேலை செய்யக் கூடிய மினி டிபார்ட்மென்ட் ஸ்டோர், காய்கறி மண்டி என்று பல துறைகளில் வெற்றிநடை போட்டு வலம் வந்த வணக்கத்திற்குறிய கே . சின்னசாமி அவர்களுடைய முயற்சியால் இந்த ஊர் நீலகிரி மாவட்டத்திலேயே பேரும் புகழும் பெற்று விளங்கியது என்றால் மிகையாகாது.

இவருடைய முயற்சியால்தான் மேலே சொல்லப்பட்ட மருத்துவமனை, காவல்நிலையம், அஞ்சலகம் என்று பல அரசு சார்ந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

இவருடைய கம்பீரத்தையும், வார்த்தை ஜாலத்தையும் அன்றைக்கு இருந்த நீலகிரி கலெக்டர் (வெள்ளைக்கார துரை) ஆச்சரியப்பட்டு போனதாகவும், அதனால் இவர் கேட்ட அனைத்து திட்டங்களை மறு ஆய்வு கூட செய்யாமல் உடனே அமல்படுத்தினார் என்றும் சொல்வார்கள்.

கே.சின்னசாமி அவர்கள் காங்கிரஸில் மிக முக்கிய தலைவராக இருந்தார். சுதந்திர போராட்ட தியாகியாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.பிறகு கட்சியில் தன்னை முழவதுமாக இணைத்துக் கொண்டார்.காந்தியின் மீது மிகவும் பாசம் கொண்ட தொண்டராகவும் விளங்கியவர்.கொலக்கம்பை பஜார் மத்தியில் இவர் நிறுவியுள்ள காந்தி சிலை எங்கும் பார்க்கமுடியாத வகையில் மிகவும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது.

அந்த சிலையை செய்வதற்காக சிற்பியோடு தானும் அமர்ந்து அணுஅணுவாக ரசித்து ரசித்து செதுக்கினார் என்று சொல்லுவார்கள்.





அன்றைக்கு இருந்த காங்கிரஸ் பெருந்தலைவர் காமராஜரால் இந்த சிலையை செய்தமைக்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
யாரையும் புகழாத காமராஜர், புகழுக்காக வாழாத காமராஜர் பாராட்டிய ஒரு மனிதர் உண்டென்றால் அவர்கள் தலைவர் சின்னசாமி அவர்கள்தான்.

இங்கு பாகுபாடின்றி காந்தி சதுக்கத்தில் அனைத்துக் கட்சி கூட்டங்களும், பல கலைநிகழ்ச்சிகளும், சண்டை சச்சரவின்றி அமைதியாக நடக்கும். காமராஜ், கருத்திருமன், கக்கன், கலைஞர், நாஞ்சில் மனோகரன், சம்பத் என்று பல தலைவர்களும், இசைஞானி இளையராஜா,சேக் சின்னமவுலானா போன்ற முன்னணி கலைஞர்களும், பல சினிமா நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளனர்.

மேலூர் பஞ்சாயத்துட்பட்ட கொலக்கம்பையும் தன் தலைமையின் கீழுள்ள சுற்றுவட்டார கிராமங்களின் மீது தனி கவனம் செலுத்தி கல்விக்கு முதலிடம் தந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த இளம் தலைமுறைக்கு கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

 இதன் காரணமாக பல இளைஞர்கள் டாக்டர்களாவும்,பொறியாளர்களாகவும், இந்திய காவல் பணி என்றும், பல துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர்.

இவருடைய துணைவியார் திருமதி பாப்பம்மாளிள் ஓரே  புதல்வர்தான் நம் கொங்கு மண்ணின் பெயரை தன் பெயரில் தாங்கியபடி, 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த மண்ணை நேசித்த முதல் கொங்குத் தமிழன். அவரது முழு பெயர் திரு கொங்கு சி மனோகரன்.

ஆனால் அவர் தந்தை மற்றவர்கள் நலனில் மிகுந்த அக்கறையின் காரணமாக தன் உடமைகளை சொத்துக்களை பாதுகாக்க தவறியதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை இழக்க நேரிட்டது.

கொங்கு.சி.மனோகரன் தந்தை வழி தொடர்ந்து தோட்ட தொழிலாளர் நலனுக்காக கடைசி மூச்சு உள்ளவரை மற்றவர்களுக்காக பாடுபடுவதையே தன் தொழிலாகக் கொண்டார்.

தி;.மு.க வின் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தலைவராக தன் வாழ்வை அந்த ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தார்.
இன்று கோத்தாரியின் ஆளமையைவிட்டு தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு இந்த சீரும் சிறப்புமாக, அமைந்திருந்த கொலக்கம்பை பொலிவிழந்து, ஊர் இருந்ததற்கான சுவடுகளே இல்லாதது போல் இன்றைக்கு காட்சியளிக்கிறது. தனியார் வசம் எஸ்டேட் சென்ற பிறகு அவர்களின் கெடுபிடிகளின் காரணமாக அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஊரைவிட்டு வெளியேறி விட்டார்கள்.
அழகான மனிதர்கள், மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், சாதி மதம் பாராமல் வாழ்ந்து வந்த ஒப்பற்ற மக்கள் என்று தன் இயற்கை எழில் சூழ்ந்த கொலக்கம்பை இன்றைக்கு கரையான் அரித்த மரமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது.




நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, September 4, 2012

சட்டத்தின் படி(13) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……





“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”


“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”


“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;


“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”


 
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”


“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான


“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”


“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”


“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.


“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”


“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”


“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”


ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.



முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”


“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”



“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”



“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”


“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”


பின்னே?


“தெய்வம் ஆத்தா தெய்வம்.”


ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”


“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”


கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..


“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”


“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து


“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!


புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”


“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க

“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,


ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”


“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”


ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.


முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....


என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


அடுத்த வாரம் பார்ப்போமா?

திரு சுந்தரகனகு




தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.

99528 27529

 
 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தின் படி(13) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சென்ற வாரம்
அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.


பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……





“அக்கா எப்படியிருக்க?”


“வாடி சின்னதாயி அஞ்சு வருசம் கழிச்சு வந்துட்டு எப்படியிருக்கேன்னா கேக்குற?”


“என்னக்கா செய்யறது அந்த மனுசன் போனதுக்கப்புறம் பின்னாலே எல்லாவும் என் தலையிலேதான்”


“ஆமாடி ஆம்பிள்ளைங்க உசுரோட இருக்கிறவரைக்கும் அவங்க அருமை தெரியாது போனதுக்கப்புறம்தான் அருமை பெருமை எல்லாம் தெரியும். சரி பையனுக்கு புள்ளைக்கு கல்யாணம் காட்சியெல்லாம் எப்போ?”


“அது எல்லாம் கடனஒடன வாங்கி முடிச்சுவைச்சுட்டேன்.ஆனால...”;


“என்ன சின்னதாயி ஆனகூனா விசயத்தை சொல்லு”


 
“பொண்ணும் பையனும் மருமகனும் தனிகுடித்தனம் போயிட்டாங்க.”


“இப்போ நான் நீ செஞ்சத அவங்களும் செஞ்சுரக்காங்க...நாளை அது புள்ளைகளும் அப்படிதான் செய்யும் இது வாழையடி வாழையா வருவதுதான


“அதுவும் சரிதான் ஆமா அந்த ராசாத்தி... ம...; அஞ்சு வருசத்திற்கு முன்னாடி நீ சொன்னது பச்சமரத்திலே ஆணி அடிச்சமாதிரி அப்படியே நெனப்பிலே இருக்கு. ஆமா அவ என்ன முடிவெடுத்தா?”


“ஏண்டி தெரியாமத்தான் கேக்குறேன..; அஞ்சு வருசம் எத்தனை சங்கதி, உங்க குடும்பத்திலும் உன் சொந்தக்கார குடும்பத்திலும் நடந்திருக்கும?; அதையெல்லாம் மறந்திட்டு அடுத்தவ சங்கதியை மடடும் எப்படிடீ மறக்காம அதை தெரிஞ்சுக்க பேயா பறக்கிறீங்க?”


“அய்யோ அக்கா அதுக்கில்லை. பெத்த குழந்தையும் பெறாத குழந்தையையும் முத்துக்கிட்டயே கொடுத்துட்டு போயிட்டாளோ என்னவோமுன்னு நெனச்சேன்”!.


“நெனப்படி நெனப்ப.. இந்த அஞ்சு வருசம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் கேட்டுக்கோ. தன் மடியிலே ரெண்டுக் குழந்தைகளையும் படுக்க வைச்சு தன்னோடு குழந்தைக்கு தன் பாலையும் முத்துக் குழந்தைக்:கு பால்புட்டியை தன் மார்பிலே வைச்சு கொடுத்தாடி, தன்னோட குழந்தையைவிட ஒருபடி முத்து குழந்தையை நல்லவிதமா பாத்துக்கிட்டா”


“அப்படி எத்தனை வருசமா கொடுத்தா அக்கா?”


“யேய் இவளே சுகம் விசாரிக்க வந்தீயா ..இல்ல...ஏன் வாயிலே நல்ல வார்த்தை வந்துடும் போடீ..”


ஹிக்கும்...கன்னத்தில் இடித்தபடி சென்றாள் நலம் விசாரிக்க வந்த சின்னதாயி.



முத்து வந்துக்கொண்டே “என்ன ஆத்தா... எப்போதும் வராத சின்னதாயி இப்போ வந்திருக்கு”


“அஞ்சு வருசம் கழிச்சு வந்ததற்கே உன்னையும் உன் தங்கச்சியையும் பிரிக்கிற வழியைத் தேடுறா.! வருசாவருசம் வந்தாள்னா இந்த ஊரே ரெண்டுபட்டுபோக வைச்சுரவாடா இந்த சின்னதாயி.”



“அட உடுங்க ஆத்தா..அது பொம்பளைகளின் பொறந்த குணம் தானே...”



“அடி செருப்பால டேய் நானும் பொம்பளைதாண்டா...”


“அய்யோ ஆத்தா நீ பொம்பளையில்ல தெய்வம்...”


பின்னே?


“தெய்வம் ஆத்தா தெய்வம்.”


ராசாத்தி வந்துக் கொண்டே “அண்ணே யாரைன்னே தெய்வம் ன்னு சொல்றீங்க?”


“வேறு யாரை, எல்லாம் நம்ம ஆத்தாளைத்தான்.”



“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆத்தா மற்றவங்களுக்கு எப்படியோ என்க்கு அம்மாளுக்கு அம்மா சாமிக்கு சாமி.”


கண்ணீரும் கம்பளையுமாக அந்த ஆத்தா..


“ஆமா ராசா நீ எப்போ வந்தியோ அன்னையிலிருந்து செத்துப் போன என் மகள் மருஜென்மம் எடுத்து வந்த மாதிரித்தான்”


“ஆத்தா நீங்க எங்க இதுவரைக்கும..?; என்று கேட்க நினைத்த ராசாத்தியை மேலும் பேச வேண்டாம் என்றபடி சைகைக் காட்டினான் முத்து


“ஏண்டா அவள அடக்குற? கட்டி வைச்ச கட்டுச் சோறும், முத்திப்போன கத்திரிக்காயும் முழகாத முட்டச்சிகதையும் என்னைக்காவது வெளியில வந்துதானடா ஆகனும்.”!


புருசன் வேறொருத்தியைக் கட்டிக்கிட்டு ஓடிப்போனதுக்கப்புறம், அவன்கூட இருந்தா புள்ளை கெட்டுப்போயிருவான்னு, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ரொம்ப செல்லமா வளர்த்த புள்ளையை அவன்கிட்டயிருந்து பிரிச்சு, தனியாள நின்னு பொத்தி பொத்தி வளர்த்தேன்.”


“என் கஷ்டம் அறிஞ்சு நல்லாப் படிப்பான்ன்னு நினைச்சு கஷ்டப்பட்டு காலேஜ்ல சேத்தேன்.அங்கத்தான் விதி விளையாடிடுச்சு டுர் போன இடத்திலே...என்று ஆத்தா சொல்ல ஆரம்பிப்பதற்குள் முத்து வசிக்கும் தெருவை சேர்ந்;தவர் ஓட்டமாக வந்து மூச்சிறைக்க

“முத்துண்ணே பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வரும் போது வேற ஒரு பள்ளிக்கூட பஸ் இடிச்சு ரெண்டு குழந்தைகள் மேல ஏறிடுச்சாம”;,


ராசாத்தி பதறியபடி “அண்ணே எந்த பள்ளிக்கூடம்மின்னு கேட்டீங்களா?”


“அதுதாம்மா உங்க குழந்தைகள் படிக்கிற பள்ளிக் கூடம்தான்.”


ராசாத்தி நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடினாள்.


முத்துவும் ராசாத்தியை தொடர்ந்து ஓடினாள். ஆத்தாவும் அழுதபடி வா
ய்க்கு வந்த வார்த்தைகளில் அந்த பஸ் காரனை சாபமிட்டபடி ஒடினாள்.....


என்ன நடந்தது? இவர்களது பிள்ளைகளுக்கு...விபத்தில் இறந்து விட்டார்களா?


அடுத்த வாரம் பார்ப்போமா?

திரு சுந்தரகனகு




தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.

99528 27529
   
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 29, 2012

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர்

கொங்கு மண் - மறைக்கப்பட்ட உண்மைகள்.- புதிய தொடர் 



வடக்கேயிருந்து எள்ளி நகையாடி எகத்தாளமாக நம் தாய்மொழித் தமிழை கேவலமாக பேசியதன் விளைவு, சிலிர்த்த சிங்கமென வடக்கே சென்று கனகவிசயனை வென்று அவன் தலையில் கல்லை சுமக்க வைத்தவன் நமது சேர மன்னன் .  (சேரன் ஆண்ட காரணத்தால் சேர நாடு)

நம்மொழி தமிழ்க்கு மட்டும் கடவுளுண்டு. அது முருக பெருமான்.

தன் தாய் தந்தையிடம் சண்டையிட்டு எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று மக்கள் எனக்கென ஓர் மொழி என்று இருந்தவன் முருகன்.

அவன் அமர்ந்த இடம் கொங்கு மண். இந்த மண் குமரனால் ஆசிர்வதிக்கப்பட்டது.

சோழ வள நாட்டின் வளமைக்கு காவேரியை பரிவோடு வழி அனுபபி வைக்கும் நம் ஈரோடு.

பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஊர்.

மங்களகரமான மஞ்சள் சந்தை,  ஏழை பாழைகளுக்கு மலிவுவிலையில் துணி வகை. அணை மின்சார உற்பத்தி இப்படி பல சிறப்புகளோடு அமர்க்களப்படுத்தும் நமது ஈரோடு

பகுத்தறிவை பாமரனின் நெஞ்சினில் பதிக்க வைத்த வெண்தாடி வேந்தன் பிறந்த இடம்  இந்த ஈரோடு .

மேற்கு தொடர்ச்சி மலையில் பழநி, நீலகிரி கோடைவாசஸ்தலமாகிறது.

அங்கு பயிரிடப்படும் தேயிலை ரப்பர் காபி ஏலக்காய் குருமிளகு வாசனை திரவியம் முதலியவை அந்நிய நாட்டுப் பணத்தை அள்ளித்தருகிறது.

வந்தவர்க்கெல்லாம் வேலை காலியில்லை என்று சொல்வதற்கே வழியில்லாமல் கோயமுத்தூர் விளங்குகிறது.

ஜின்னிங் பேக்டரி மிக்சி கிரைண்டர் மோட்டார் பம்பு செட் என அனைத்து துறையிலும் வீறு நடை போடுகிறது நம் கோவை.

உலகிலேயே சிறந்த வேளாண்மை பல்கலைக்கழகம இங்குத்தான்.

கொஞ்சம் பயணம் செய்தால் அட நம்ம திருப்பூர் . எங்குப் பார்த்தாலும் துரும்பிலும், தூணிலும் ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஆங்காங்கே தொங்குகிறது.

பனியன் ஏற்றுமதியில் திருப்பூ ர் தான் முதலிடம்

தலைசிறந்த முறையில் நெய்யப்பட்ட போர்வைகள் தயாரிக்குமிடம் கரூர். போர்வைகள் இங்கு மிகவும் பிரசித்தம்.


இக்கொங்கு மண்ணை பற்றி இன்னும் இதுவரை வெளிவராத  தகவல்கள் ஏராளம் ஏராளம். அதை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். 

புதிய புதிய செய்திகள், ஆச்சர்யபடுத்தும் பல உண்மை நிகழ்வுகள் கொங்கு மக்களை மட்டுமல்லாமல், அத்தனை தமிழர்களையும் வியக்க வைக்கப் போகிறது.

இந்த மண்ணை தன் உயிராக நேசித்த தமிழர்கள் இருந்தார்கள். கொங்கு மண் வளம் பெற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்த உத்தமர்கள் இருந்தார்கள். 

இன்றைக்கு கொங்கு என்ற பெயரைத்தாங்கி தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் கட்சி கூட, இன்றைக்குத்தான் கொங்கு என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் போன நூற்றாண்டிலேயே தன் பெயருக்கு முன்னால் கொங்கு என்று பெருமையுடன் சூட்டிக்கொண்ட ஒரு உயர்ந்த தமிழரைப் பற்றி உங்களுக்குத தெரியுமா?

காத்திருங்கள். அடுத்த வாரம் காண்போம்.

இந்த வார காமெடி 

மலையாளி: ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

தமிழன்: ஈரோட்டுக்கு

அதில்லா ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

ஈரோட்டுக்குஎ ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

ஆ…அதில்லா சேட்டா நா சோதிச்சது ஈரோடு எவ்விடக்கா போகுன்னு?

யோவ….என்னைய்யா நீ…ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு ஈரோட்டுக்கு

(தலைதெறிக்க ஓடினான் தமிழன்)


நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 28, 2012

சட்டத்தின் படி(12) ....-சுவாரஷ்யமான தொடர்கதை

சட்டத்தின் படி 12

 சென்ற வாரம் 
“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி. 

“சார் சொல்லுங்க சார்”

“பக்கத்துலே வேலுயிருந்தா செல்லக்குடுப்பா”

வேலு முதலாளி என்றபடி வேலுவிடம் வெல்லை கொடுத்தார் மனேசர்

“ஐயா வணக்கம்”

“வேலு உன் பையன்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ அவனுடைய காலில் தீக்காயம் இருந்ததைப் பார்த்தேன். உடனே  உன்னிடம் சொல்லாமல் ஆஸ்ப்பிட்டல் கூட்டி வந்துவிட்டேன்”

“ஐயா …நீங்க…. என் பையன் மேல..”

“ரொம்ப அக்கரையின்னு கேக்குற?”

“யோவ் வேலு.. உன் பையன் ரொம்ப புத்திசாலி. நான் வாய்விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு. அவன் சொன்ன ஜோக்குலே நான் என்னயே மறந்து சிரிச்சிட்டேன்யா.. என்னன்னு சொல்லறேன் கேளு. பழமொழி ஒரு வரி தான் சொன்னேன். அடுத்தவரி அவன் சொன்னது என்னத் தெரியுமா?

தம்பியுடையார்…அண்ணன் செட்டியர்

நல்ல மாட்டுக்கு 2கிலோ புண்ணாக்கு

தோல் கொடுப்பான் கறிக்கடை பாய்”

என்று சிரித்தபடி சொன்னார் முதலாளி திவாகரன்.

சிறிது நேர மவுனத்திற்கு “கவலைப்படாதே பையனை பங்களாவுக்கு கூட்டிட்டு போறேன். காலையிலே பேக்கரிக்கு வந்துடு.”

அடுத்தநாள் காலையில் தன் குழந்தை முதலாளி திவாகரனுடன் காரில் புது துணியணிந்தபடி முதலாளியின் கையை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்தான்.

இக்காட்சியை கண்ட வேலு மற்றும் ஊழியர்கள் திகைப்புடனும், அதிர்ச்சியுடனும்  பார்த்தார்கள்.

வேலுவை ஆபிஜ்க்கு வரும்படி ஜாடையில் அழைத்தவாறு முதலாளி சென்றார்

“பையனுக்கு என்ன வயசாச்சு”

“ஐயா 5 முடிஞ்சு 6 வயசாச்சு”.

‘இனி நீ பழைய வீட்டை காலி செஞ்சுட்டு பேக்டரி வீட்டிலே தங்கிடு. ஸ்கூல்லே சேர்த்திடலாம். பையனை படிக்க வைக்கிறது என் செலவு”.

எப்படி இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. கடவுளே உனக்கு நன்றி.சொல்வதா முதலாளிக்கு நன்றி சொல்வதா இல்லை இங்கு என்னை வேலைக்கு சேர்த்தாரே டிரைவருக்கு நன்றி சொல்வதா என்று நினைத்து மலைபோல் சிலையாக நின்ற வேலுவைப்பார்த்து

“என்னப்பா நான் பாட்டுக்கு சொல்லிட்டேயிருக்கேன். நீ பேசாமயிருக்க?”

'முதலாளி"

“உன் குடும்பத்தை பற்றி. எல்லாம் டிரைவரிடமும் உன் பையனிடமும் கேட்டு தெரிஞ்குக்கிட்டேன். ஆனால் உன்னிடம் நிறை இருப்பதை மனேசர் மூலமாகவும் நேரிடையாகவும் தெரிந்தது. உனக்கு பனியன் கம்பெனியில் என்ன என்ன வேலைத் தெரியுமோ அத்தனையையும் செய்ய உனக்கு முழு உரிமை தருகிறேன் ஆனால் தப்பு தண்டா நடந்தால் நடக்கிறதே வேற”. என்று கடும் எச்சரிக்கை  யோடு சொன்னார்.

பத்தாண்டு கால இரவு பகல் என்று பாரமல் நேரத்தை அலட்சியப்படுத்தாமல் தன்னை அரவணைத்த பனியன் பேக்டரி முதலாளியின் நம்பிக்கையும் பெற்றார் வேலு. உழைப்புடன் சேர்ந்து நாணயமும் இருந்தததால் இன்று வேலு முதலாளி திவாகரின் வலது கை மட்டுமல்லாமல் ஒர்கிங் பார்ட்னர் என்ற நிலை வரை உயர்ந்தான்.

எல்லா தொழிலும் தெரிந்தால் மட்டும் போhதாது உண்மை வேண்டும் கடமைக்காக உழைப்பது வயிரை கழுவ மட்டுமே உதவும். அதையே தன்னுடைய தொழிலாக நினைத்தால் உயர்வு தானக தேடி வரும் என்பதற்கு வேலு ஒரு உதாரணம்.

குடிகாரனாக, ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்தவனாக. மனைவியைப் பிரிந்து இனி வாழ்க்கையே இல்லை என்ற அளவு இருந்த வேலுவுக்கு இந்த உயர் நிலைக்கு வரக் காரணம் நேர்மையான உழைப்பு.

வேலுவின் செல் மணியடித்தது.

சொல்லுங்க முதலாளி…..
….
ஆடிட்டர் ஆபிஸ்லதான் இருக்கேன்…
….
அமௌண்ட் போட்டாச்சு…
;;;;;;……….
லண்டன் ஜெர்மனிக்கு அவர்கள் கேட்ட ஆர்டர் முழுவதும் பையர் மூலமா அனுப்பிட்டேன்.அமெரிக்க பையர்க்காக வெயிட்டிங் பண்ணிட்டு இருக்கோம்.
………
நோ ப்ராப்ளம்…யூ னியன் லீடர்க்கிட்ட பேசி எல்லா பிரச்சனையையும் சால்வ் பண்ணிட்டேன்.

;;;;;……………

இன்சினியர்கிட்டப் பிளானைப்பற்றி முழுமையா சொல்லிட்டேன் இலர் ஒரு வருசத்தில் கட்டிடத்தை முடித்து தர்ரேன்னு சொல்லிட்டாரு.
……….

பாரின்லேயிருந்து நாலு கம்பெனியிடமிருந்து மெசினரி கொட்டீடசன் வந்திருக்கு நீங்க சொன்னா டிக் பண்றேன்.
……….

சரிங்க டிக் பண்ணி அ|னுப்பிச்சறேன். நாளைக்கு புது பேக்டரி கட்டறதுக்கு 
பூ மி பூ சை போடனும் நீங்க அவசியம் வரணும்.
……….

அரவிந்த்க்கு இன்னைக்கு தான் 10 வது ரிசல்ட் வருதாம். அவன் கம்ப்யூ ட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கான்.

பெரிசா தெரியலைங்க…பார்ப்போம்…என்ன நடக்க போகுதுன்னு…..

என்று செல்லை பேசி முடித்துவிட்டு ஆப் செய்தான் வேலு……


யார் அந்த அரவிந்த்…..அவனது ரிசல்ட் என்ன ஆக போகுது…….

அடுத்த வராம் வரை காத்திருங்களேன் …

திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 24, 2012

சட்டத்தின் படி ....11


சென்ற வாரம் 

 RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

(11)
அரைமணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார் அவரின் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் இருந்தது.

டாக்டர்…..என்றழைத்தபடி முத்துவும,; ராசாத்தியும் அவரை நெருங்கினார்கள.;
கருப்பை ரொம்ப பலவீனமா இருந்ததாலே வலி தாங்க முடியாம ரத்தப் போக்கு அதிகமாகிப் போச்சு. ரத்த அழுத்தமும் கம்மியாயிட்டே இருக்கு. என்னால் முடிந்த அளவுக்கு சிகிச்சையளித்துவிட்டேன். இனி கடவுளின் கையில்தான,;; உள்ளேபோய் பாருங்கள் என்று விரக்தியுடன் கூறியபடி சென்றார்.

அய்யோ என்று அலறியபடி, இருவரும் மிகுந்த சோகத்துடன் கண்களில் கவலை ததும்பும் கண்ணீரை துடைத்தபடி லேபர் வார்டுக்குள் சென்றார்கள்;.

அங்கே…அருகில் குழந்தையுடன் படுத்துக் கிடந்த பானு,  தன் உயிர் போனாலும் உன்னை உயிரோடு பெற்|றுவிட்டேன், உன்னை பிரியப் போகிறேனே என்று கண்கலங்க அரை மயக்கத்தில் வலியோடு அந்த சின்னக் குழந்தையைப் பார்த்தபடி கிடந்தாள்.

உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். அழக்கூட முடியாமல் தயங்கி தயங்கி, அருகில் வந்த ராசாத்தியிடம் சன்னமான குரலில்,

“அண்ணி இனி நான் …..”

“இல்லை அண்ணி உங்களுக்கு ஒன்றும் ஆகாது.” வந்த துக்கத்தை நெஞ்சிலே அடக்கியபடி ஆறுதல் சொன்னாள் ராசாத்தி.

முத்து, தன் தோளிலிருந்த துண்டை வாயில் வைத்தபடி….“பானு பயப்படாதே என்னை விட்டு போகவிடமாட்டேன்” பானுமதி கரத்தைப் பற்றியவாறு முத்து கதறினான். அவனையறியாமல் ஆண்மையையும் மீறி, கண்களிலிருந்து  கண்ணீர் வந்தது. 

இதுதான் தாம்பத்யத்தின்; உண்மையான உறவோ?

பானு…குழந்தையை கையில் எடுக்கும் படி கண் ஜாடையில் கூற, ராசாத்தி குழந்தையை எடுத்து பானுமதியின் கழுத்தருகே காண்பித்தாள்.

பலமுறை அந்த பிஞ்சுவை முத்தமிட்டபடி, “அண்ணி இனி நான் பிழைக்க மாட்டேன. இந்த குழந்தைக்கு இனி நீங்கள்தான் தாயும் , அத்தையும்.கடவுளா பார்த்துத்தான் உங்களை எங்களுக்கு கொடுத்துள்ளார்.’ என்று கண்கலங்க அழுதாள் பானு.

என்ன செய்வது என்றே தெரியாமல் நின்ற முத்துவைப் பார்த்து, “என்னங்க எந்த காலத்திலும் உங்க தங்கையை கைவிட்டுடாதீங்க” என்று தன் கணவரை  பார்த்து கூறியபடி விக்கித்து சொன்ன பானுவின்  கண்ணுக்கு தெரியாத உயிர் பிரிந்தது.

 ராசாத்தி கையிலுள்ள குழந்தையை அணைத்தப்படி கதறினாள்..

தலைதலையாக அடித்துக் கொண்டு முத்து அழுது புரண்டான்.

என்ன செய்வது? ஆண்டாண்டு காலமாய் அழுது புரண்டாலும், மாண்டார் வருவதில்லை.

வந்த உயிரை பானுமதி தந்த உயிரை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுவதில் ராசாத்தி மிகவும் அக்கறை செலுத்தினாள்.

காலத்தின் சக்கரம் எவ்வளவு வலிமை வாய்ந்தது தெரியுமா?  ஒரு நிமிடம் என்பது                      எவ்வளவு  உயர்நதது  என்பது  சோம்பேறிக்கும்  உழைக்கத் தெரியாதவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லை

ஊன் உறக்கமில்லாமல் உழைத்தவர்களின் கணடுபிடிப்பால் இன்றைக்கு இரவினில் இருளில்லை. விஞ்ஞான வளர்ச்சியின் பரிமாணமே நேரத்தை நேசித்ததன் விளைவுதான். அதன் பயனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டுயிருக்கிறோம்.

மாதங்கள் கடந்தன.

நிறைமாத கர்ப்பிணி ராசாத்தி, நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிற பொழுது பிரசவலி எடுததது.

பல்லைக் கடித்துக் கொண்டு, குழந்தையை தொட்டிலில் விட்டு விட்டு, அவளையும் அறியாமல் அம்மா என்று கத்தினாள்

அந்த சப்தம் எட்டு வீடு தாண்டியும் கேட்டது. 

இதே சப்தம் பணக்காரர் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் கேட்டிருந்தால் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர மாட்டடார்கள.

ஆனால் அந்த பகுதி ஏழைகள் வாழும்;  என்பதால், போட்டது போட்டபடி பெண்களும் ஆண்களும் முத்துவின் வீட்டிற்கு ஓடி வந்தார்கள்.

நிலமையுணர்ந்த பெண்கள், ஆண்களை வெளியேபோக சொல்லிவிட்டு, ஆறுதலாக “கொஞ்சம் பொறுத்துக்கம்மா” என்று படி, வயதில் முதிர்ந்த தாய்மார்கள்.. பிரசவ ஏற்பாட்டினைச் செய்தனர்  மணிகணக்கில் இல்லை... சில நிமிடத்ததில் குழந்தையின் அழுகை சப்தம்…. அழகான பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள்.

எங்கேயோ சென்றுவிட்டு வந்த முத்துவிடம் “இந்தாட முத்து…. உன் தங்கைக்கு  பெண்குழந்தை பொறந்திருக்கு, போய் பேறுகால செலவு வாங்கிட்டு வா” (பேறுகால செலவு  என்றால் குழந்தை பெற்றவளுக்கு கொடுக்க கூடியவை துவையளாகசும் கசாயமாகசும் கொடுப்பார்கள் இன்று மருத்துவமனையில் நடப்பது வேறு.)

முகமெல்லாம் பூ ரிப்பான முத்து “இதோ ஒரு நிமிடம்” என்று கடைக்கு ஓடினான்.

செலவுடன் வந்த முத்து, குழந்தையை எடுத்து மகிழ்ந்தாள். சில நாட்கள் பக்கத்து வீட்டுத்தாய்மார்கள் முத்துவினுடைய குழந்தையையும் பச்ச ஒடம்புக்காரியான ராசாத்தியைகவனித்துக் கொண்டார்கள்.

உடல் தேறிய ராசாத்தி, தன் குழந்தைக்கு தன்னுடைய தாய் பாலையையும,; முத்துவினுடைய குழந்தைக்கு புட்டிபாலையையும் தன் மடியில் படுக்க வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது முத்துவின் குழந்தையினுடைய பிஞ்சு விரல், ராசாத்தியின் மார்பை வருடியது.

திகைத்துப் போன ராசாத்தி பக்க வீட்டு பாட்டியிடம், முத்துவினுடைய குழந்தையைப் பார்க்க சொல்லிவிட்டு, பூ க்கடைக்கு சென்றாள்.

பூ க் கடையில் மலராத மல்லிகையும், காய்கறிக்கடைக்கு சென்று ஒரு கோஸ்(காய்) வாங்கி வந்து மார்பு மீது மல்லிகை பூ வை வைத்து, அதன் மீது கோஸ் இலையை வைத்துக் கட்டினாள்.

முத்துவின் குழந்தையை எடுத்து வந்த பாட்டி, ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு

“உனக்கொன்ன பைத்தயமா? அப்படி செய்யாதே பால் வற்றி போகும்.”

“இல்லைம்மா குழந்தைக்கு ஏம்மார்பு பால் குடிக்கனும் ஆசை”.

“கொடுக்க வேண்டியதுதானே ?”

“அம்மா இதென்ன கொடுமை இவன் என் மருமகன்” அதான் பார்க்கிறேன்…”

“இந்த குழந்தையும் பாவம் இல்லையா? தாய்ப்பால் இல்லாமல் குழந்தை நொடுஞ்சிப் போகாதா? மனசாட்சியோட யோசிச்சு பாரு. உறவைப்பத்தி அப்புறம் யோசி. ஆமா…இந்தா இதுக்கு முடிவெடுக்க வேண்டியது நீதான்.” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசரஅவசரமாக சென்றாள் பக்கத்துவீட்டு பாட்டி.

என்ன முடிவு என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா?
 
திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529




 நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, August 21, 2012

குருப் 2 -12.08.2012 விடைகள்

சென்ற 12.08.2012 அன்று நடந்த tnpsc குருப் 2 வினாத்தாளின் சரியான விடைகள்.


அந்த தேர்வு  ரத்து செய்யப்பட்டு இருந்தாலும்...நீங்கள் சரியான விடையை அளித்திர்களா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ இணைப்பு...


குருப் 2 -12.08.2012 விடைகள்  

கணித வினாக்களின் விளக்கம்  





நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, August 17, 2012

நீதி தேவதையே



நீதி தேவதையே உன் கண்கள் கருப்புத் துணிக் கொண்டு ஏன் கட்டப்பட்டு இருக்கிறது தெரியுமா?

இங்கே நடக்கின்ற அவலங்களை காணமலிருக்கத்தான்.

பட்டபகலில் பத்துப்பேருக்கு முன்னால் இளம்பெண் ரவுடிகளால் காரில் கடத்தப்படுகிறாள் பொது மக்களிடம் பிடிப்பட்ட ரௌடி அரசியல் தலைவனின் கட்டளைக்கு பயந்து FIR கூட போடாமல் வெளியுலக நாயகனாக நகர்வலம் வருகிறான் அதையும் மீறி மனித உரிமை மகளிர் போராட்டத் போன்றவற்றால் கைதாகி சரியான சாட்சி யில்லையென்று விடுதலையாகிறான்.

பகலிலே நடமாட முடியாத பெண் இரவில் எப்படி நடமாட முடியும்.  இது காந்தி கனவில் மண்.

லட்சோப லட்சம் இளைஞர்கள் வேலை வேண்டும் என்பதற்காக வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு படித்துக் கொண்டு தேர்வுக்கு செல்லும் போது நம்பிக்கையெல்லாம் பாழாகும் விதமாக சில கருப்பு ஆடுகள் முந்தைய நாளே கேள்விகளை மோப்பம் பிடித்து விடுகின்றன…என்ன செய்யப் போகிறாய்…தேவதையே அந்த சமூக முட்களை….

இதோ இந்த குடிசைகுள்ளிருந்து வரும் பேச்சை கேள் தண்டனை வழங்குவது பற்றி பின்னர் யோசி.

ஏப்பா மணி 12 ஆகுது. போய் தூங்குப்பா

இல்லைய்யா நாளைக்கு TNPSC பரிட்சைம்மா இன்னும் கொஞச நேரம் படிச்சுட்டு அப்புறமா துங்குறேன். இன்னைக்கு தாம்மா என் நண்பன் நம்ம நிலமையறிந்து இந்த கைடு தந்தான் நீ  போய் தூங்கும்மா.

எனனமோபப்பா கடவுள் புண்ணியத்துல இந்த வேலையாவது கிடைச்சால் உன் தங்கச்சயை ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திரலாம் அந்த மனுசன் உயிரோடு இருந்தா உன்னை இதுமேல படிக்க வைச்சிருப்பாரு. பாலா போன பஸ்…..இவரு மேலே ஏறி……ம்மம்… பஸ்சுக்கு சொந்தக்காரர் ஆடுயு வெறும் 10 ஆயிரம், கொடுத்து வாயை அடைச்சுட்டான்…..

ஏம்மா அப்பவே நீ போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்கலியா?

புகார் கொடுக்க சின்ன சிறிசான உன்னையும் தங்கச்சியும் தூக்கிட்டு போனப்பா அந்த SI

“இந்தாம்மா இவரு MLA இவரு சொன்ன சட்டமே கேக்கும். பேசாம அவரு பெரிய மனசு வைச்சு கொடுக்கிற பணத்தை வாங்கிக்கோ” ன்னார்.
உடனே பணத்தை வாங்கி யிட்டயாம்மா?

இல்லைப்பா எம்புருசன் உயிருக்கு வெறும் பத்தாயிரம் தானா… நான் முடியாதுன்னேன்

அந்த இன்ஸ்பெக்டர் “இந்தாம்மா நான் தான் கேஸ் எழுதறவன் குஐசு அதை வைச்சு தான் கோர்ட் தீர்மானிக்கும் உன்புருசன் நிதானமில்லாம சாராயம் குடிச்சுட்டு ஓடர பஸ்லல யிருந்து கீழே குதிச்சிட்டான். என்று எழுதி விடுவேன் என்று பயமுறித்தி அப்போ ஒரு போலிஸ்காரர் தனியாக அழைத்து ஏம்மா அவனுகிட்ட உங்களால மோத முடியாது கேஸ் சீஸன்னு அலைய முடியாது பேசாமே கொடுக்கிறத வாங்கிக்கோ என்றார்

எனக்கும் சரின்னு பட்டுச்சு வாங்கிட்டேன..; என்னமோப்பா  கூலி வேலைச் செஞ்சு உங்க ரெண்டு பேரயும் என்னால முடிஞ்ச வரைக்கும் படிக்க வைச்சுட்டேன்.

அடுத்தநாள்…..

எப்படிப்பா எழுதியிருக்கிற?

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறேன்மா கட்டாயம் எனக்கு வேலை கிடைச்சிடும் நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்து விடும் கவலைப்படாதேம்மா.

வேலை கெடச்சுடுச்சுன்னா யார் கிட்டேயும் லஞ்சம் வாங்காதப்பா நம்ம போல ஏழை பாளைங்க என்ன கஷ்டம் படராங்க.

இதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல…என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் வரும்போது…

மணியின் தங்கை “அதுதான் லஞ்சம் கொடுத்து வாங்கிட்டுhனுங்களே”

தாயும் மகனும் ஒன்று சேர “என்னடி சொல்ற?”

“என்ன சொல்ல நியூ சை நீயே பாரு’

மணி கண்கலங்கி “ போச்சும்மா எல்லாம் போச்சு .. லட்சம் கொடுத்து கேள்விதாளை வாங்கி அதிக விலைக்கு வித்துயிருக்கானுங்கம்மா”

“அடபாவிகளா சோறு தண்ணி யில்லாம ராவும் பகலும் லைப்ரரி அங்கே யிங்கேயின்னு படிச்சவனுக்கு இந்த கதியா” எனறு தலைதலையாய் அடித்துக் கொண்டாள் அவன் தாய்.

கேட்டாயா நீதி தேவதையே அங்கே பார் அந்த அவலநிலையை,

பாரதத்தில் ஒரு தாய் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறாள்.  

என்ன செய்யப் போகிறாய்? இந்த சணடாளக் கூட்டத்தை. 

உன் கையிலுள்ள வாள் வெண்ணை வெட்டவா? சொல் தேவதையே சொல். இல்லை நீதியை காக்க சுழற்று உன் கத்தியை.

திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529

 
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 15, 2012

சட்டத்தின் படி

 சட்டத்தின் படி (10)

சென்ற வாரம்  
முத்துவும் ராசாத்தியும் கையில் குழந்தையோடு இதைப் பார்த்து, எதற்காக இப்படி வேகமாக போகிறார்கள் என்றபடி பயந்து போய் இருவரும் மூச்சடைத்து நின்றார்கள்.

என்ன நடந்தது பானுவிற்கு?....அடுத்த வாரம் காத்திருங்களேன்.

திவாகரன் வருவதற்கு பவ்யமாக கதவைத் திறந்து விட்டு ஏசியை ஆன்  செய்தான் ஆபீஸ் பியூ ன்.

கோட்டை கழட்டிவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், இன்டர்காமில் மேனேசரை அழைத்து பேக்டரி விசயங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்ட பின் மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளையும் மற்றும் புதிதாக கிடைத்து இருக்கிற ஆடர்களை பற்றியும் இருவரும் விவாதித்தார்கள்.

நிட்டிங் சூப்பர்வைசர் வந்தாரா?

இல்லைங்க சார்…வேலைக்கு இனிமேல் வரமாட்டார் என்றார் மேனேசர்.

திவாகரன் கண்களாலேயே ஏன் என்றார்

நமக்கு வர வேண்டிய நூல் பண்டல்களை வேறு கம்பெனிக்கு அவர் அனுப்பி வைத்து கமிசன் பெற்ற அந்த விவகாரம் நிருபணமாகி விட்டது. அதை நான் தட்டிக் கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டு போய் விட்டார். என்று தயக்கத்துடன் சொன்னார் அந்த மேனேசர்.

வெரி குட். கேள்விப்பட்டேன். நானும் அதைப்பத்தி கேட்கலாமுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நான் என்ன செய்யனுமுன்னு நினைச்சேனோ அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க. உடனே அவருடைய ரூமை காலி பண்ணிடுங்க.

நிட்டிங், கட்டிங,; ஓவர்லாக், பேட்லாக், பிரிண்டிங், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து செக்சன் சூப்பர் வைசர்களுடன் சென்று ஆய்வு நடத்திவிட்டு மறுபடியும் ஆபிஸ்க்குள் நுழைந்தார்.

டேபிளின் மீது இருந்த பைல்களை எடுத்துப் பார்த்து கையெழுத்து போட்டுவிட்டு, இண்டர்காமில் மேனேசரிடம் ஏதோ பேசிவிட்டு டையிங் பேக்டரிக்கு செல்ல காரில் புறப்பட்டு சென்றார்.

அவர் போன சிறிது நேரத்தில் ஆபிஸ்க்கு வெளியே பவ்யமாக “என்ன நினைத்தாரோ முதலாளி” என்ற குழப்பத்துடன் தன் மகனுடன் நின்றுக் கொண்டிருந்த வேலுவை அழைத்தார் அந்த மேனேஜர்.

இந்தாப்பா பையனும் நீயும் அந்த கேண்டினுக்கு சென்று சாப்பிட்டு இங்கே வாங்க… கேண்டீனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் போங்க என்றார்.

வேலு மகனுடன் கேண்டீனில் திருப்தியாக சாப்பிட்டு விட்டு மேனேசர் ரூம் அருகே வந்து நின்றான்.

டையிங் பேக்டரியிலிருந்து திவாகரன் "என்ன ரெண்டு ஜெனரேட்டர்களும் ரிப்பேரா? இன்சார்ஜ் எங்கே போனார்?" என்றபடி படு கோபமாக அங்கிருந்த ஒருவரை திட்டிக் கொண்டிருந்தார்.

சார் இன்சார்ஜ் எங்கயோ வெளியில போறதா சொல்லிட்டு போனாரு…

உடனே மேனேஜருக்கு போன் செய்தார் திவாகரன்.

என்னய்யா வேலைப் பாக்குறீங்க? காலையில சேம்பல் கொடுத்தாகனும் என்ன செய்வீங்களோ ஏது செயிவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துக்குள் ஜெனரேட்டர் ஓடியாகனும் என்று மிரட்டியபடி போனைக் கட் செய்தார்.

டையிங் இன்சார்ஜ்க்கும் மெக்கானிக்குக்கும் எத்தனை தடவைசொன்னாலும் மண்டையில ஏறாது இப்போ என் தலையிலதான் கட்டிட்டு போயிட்டாரு முதலாளி. அவனுங்க வரட்டும் நாளைக்கு பார்த்துக்கிறேன்  என்றபடி அந்த மேனேசர் புலம்பிக்கொண்டிருந்தார்.

“அங்கு நின்றுக் கொண்டிருந்த வேலு மிகவும் பணிவாக அய்;யா எனக்கு ஜெனரேட்டரெல்லாம் ரிப்பேர் பாக்கத் தெரியுமுங்க..மெக்கானிக்கிடம் 5 வருசம் ஹெல்பரா வேலை பாத்திருக்கேன்”;.

வேலுவை ஏற இறங்க பார்த்த மேனேசர் “உனக்கு மெக்கானிக் வொர்க் தெரியுமா? ஓட வைச்சுருவியா?”

“ஐயா ஜெனரேட்டரை பார்த்தபின்தான் என்ன போயிருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதை பார்த்து பின் கண்டிப்பாக ஓட வைத்து விட முடியும”; என்றான் வேலு.

உடனே திவாகரனுக்கு போனில் தகவல் சொன்னார் மேனேசர்.

உடனே வேலுவையும் அவர் மகனையும் கூட்டிக்கொண்டு மேனேசர் காரில் டையிங் பேக்டரியை அடைந்தார்.

ஜெனரேட்டர் அருகில் நின்றிருந்த திவாகரனை வேலு கும்பிட்டபடி “ஐயா” என்றான்

“போப்பா போய் என்னென்னு பாரு”

ஜெனரேட்டரை ஆன் செய்தான் வேலு. கர் கர் என்ற சப்தம் மட்டும் வந்தது



உடனே ஏதோ யோசித்தவனாய் அருகிலுள்ள டூல் பாக்ஸிலிருந்து ஸ்பேனரை எடுத்து டீசல் டியூபை கழற்றி விட்டான். பிறகு உள்ளிருந்த பில்டரை அனைத்தையும் கழட்டினான். அவன் நினைத்தபடியே டீசல் அடைத்துக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் சுத்தம் செய்துக் கொண்டிருக்கையில்…

அங்குள்ள பணியாட்கள் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்.

திவாகரன் “நிறுத்துங்க..உங்களைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும். ஒரு பானை சோத்துக்கு”… என்று திவாகரன் முடிப்பதற்குள்

வேலுவின் மகன் “ஒரு குண்டா சாம்பார் ”; என்றான்.

திவாகரன் உட்பட அனைவரும் கொல் என்று சிரித்தனர்.

அவனுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தான் வேலு.

எல்லாவற்றையும் சரியாக பொருத்தியபின் ஜெனரேட்டரை ஸ்ட்டார்ட் செய்தான் வேலு. ஜெனரேட்டர் ஓடத் துவங்கியது. அனைவரின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது.

“இந்தாப்பா ம்ம் வேலு நீ இங்கேயேயிருந்து ஜெனரேட்டரை பார்த்துக்கோ.! என்றபடி மானேசரிடம் பையனை தன்னுடைய ஆபிஸ் ரூமில் தங்க வைக்கும் படி சொல்லிவிட்டு பேக்டரிக்கு காரில் சென்றார்

ஒரு மணி நேரத்திற்குபின் தன்  மகனை காண வேலு MD ரூம்மிற்கு சென்றார். 

மகனை காணவில்லை  

ஒவ்வொரு இடமாக தேடினான் எங்கும் பையனில்லை. 

RO plant (ஆழமான தொட்டி) அங்கேயும் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி பார்த்தான். பையனை காணவில்லை என்று செய்தி பரவ தொழிலாளிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடி பார்த்தனர் வேலு தன்னையும் அறியாமல் மகனே மகனே என்று சப்தமாக அழுதான். அப்போது மேனேசரின் செல் அலறியது.

எங்காவது தொலைந்து போய் விட்டானா வேலுவின் மகன்?

அடுத்தவாரம் பார்ப்போமா?


திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 99528 27529



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.