சுட சுட செய்திகள்

Tuesday, April 24, 2012

நீங்க சிரிச்சா மட்டும் போதுங்க ...


சிரிப்பது மட்டுமே மனிதனுக்கு இறைவன் கொடுத்த அற்புதம் .

நகைச்சுவை உணர்வுடன் வாழ்பவனுக்கு  வாழ்வில் பிரச்சனைகளே இருக்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. அது பொருட்டு நான் ரசித்த நல்ல நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். புடித்து மகிழுங்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துங்கள்.

ஸ்டான்ட் அப்   காமெடி க்கு உதவும் 



நீங்க சிரிச்சா மட்டும் போதுங்க ...


சிரிப்பது மட்டுமே மனிதனுக்கு இறைவன் கொடுத்த அற்புதம் .

நகைச்சுவை உணர்வுடன் வாழ்பவனுக்கு  வாழ்வில் பிரச்சனைகளே இருக்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. அது பொருட்டு நான் ரசித்த நல்ல நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். புடித்து மகிழுங்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்துங்கள்.

ஸ்டான்ட் அப்   காமெடி க்கு உதவும் 



Monday, April 23, 2012

தன்னம்பிக்கையுடன் நகைச்சுவை கலந்த பேச்சுப் பதிவின் தொகுப்பு.

தன்னம்பிக்கையுடன் நகைச்சுவை கலந்த பேச்சுப் பதிவின் தொகுப்பு.

திருப்பி அடிப்பேன் - சீமான் & கோபிநாத்தின் 'நீயும் நானும்'

திருப்பி அடிப்பேன் - சீமான் & கோபிநாத்தின் 'நீயும் நானும்'

Friday, April 20, 2012

மேஜிக் சீக்ரெட்:

வாயில் குடித்த பால் காதில் வழி வரும் மேஜிக்


தேவையான பொருட்கள்

பீடிங் பாட்டில் ( பால்புட்டி), பால். வொயிட் பெயிண்ட்

செய்முறை:
ஒரு பீடிங் பாட்டிலை எடுத்து நண்பர்களிடம் காட்டுங்கள். பிறகு, பீடிங்பாட்டிலில் பாதியளவு பாலை நிரப்புங்கள். அதை நண்பர்களிடம் காட்டிவிட்டு, பாட்டிலில் இருக்கும் பாலை உதட்டில் வைத்து உறிஞ்சு குடியுங்கள். பாட்டிலில் பால் தீர்ந்து போனதும், பாட்டிலை காதுபுறம் கொண்டுச் சென்று கொஞ்சம் தலையை சாயத்துக்கொண்டு,"" நண்பர்களே! இந்தப் பாட்டிலில் இருந்து குடித்த பாலை எல்லாம் இப்போது காது வழியாக கொண்டு வருகிறேன்... "வாயில் சென்ற பாலே காது வழி வந்துடு... வந்துடு... வந்துடு!' என்று சொல்லிக்கொண்டே பாட்டிலைத் திருப்புங்கள் குடித்த பால் எல்லாம் காது வழியே வந்து பாட்டில் வந்து இருக்கும். இதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் ஒரு தந்திரமானது. மேஜிக் செய்யும் முன் பாட்டிலில் ஒரு பக்கம் பாதியளவு வெள்ளை பெயிண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் மேஜிக் செய்யும் போது பாட்டில் இருக்கும் பாலை கொஞ்சம் குடிக்க வேண்டும். அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் மீதி பால் பீடிங் ரப்பரில் நிரம்பிவிடும். அப்படியே செங்குத்து வசத்தில் பாட்டிலை காது புறம் கொண்டு சென்று நிமிர்த்தினால் பாட்டிலில் ரப்பரில் நிரம்பிய பால் பாட்டிலில் அடித்தளத்திற்கு வரும். உடனே பாட்டிலை காதில் இருந்து எடுத்து நண்பர்களிடம் காட்டும் போது, வெள்ளை பெயிண்டிங் அடித்தப் பக்கத்தைக்காட்டுங்கள். பால் பாட்டில் முன்பு இருந்தளவே காட்டும். இதில் சீக்ரெட் பெயிண்டிங் பகுதிதான். பாலும் வெள்ளை, பெயிண்டும் வெள்ளை என்பதால் பார்வையாளர்களுக்கு பாட்டிலில் பால் பாதியளவு இருப்பதுபோலவே தெரியும்!

 சீட்டு கட்டில் சீக்ரெட் விளையாட்டு!


தேவையானப்பொருள்: புதிய சீட்டு கட்டு ( பிளேயிங் கார்டு)


செய்முறை: உங்கள் நண்பர்கள் முன்பு ஒரு புதிய சீட்டு கட்டை நன்றாக களைத்து, குலுக்குங்கள். பின்னர், அந்த சீட்டுக்கட்டை நண்பரிடம் கொடுத்து இதில் ஒரு சீட்டினை நினைத்துக்கொள். நீ நினைத்த சீட்டை சரியாக நான் சொல்கிறேன் என்று சொல்லுங்கள். உங்கள் நண்பர் சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அது என்ன வென்று பார்த்து திருப்பி அந்த சீட்டை கட்டில் மூடிவைத்துவிடுவார்.
நண்பரிடமிருந்து வாங்கிய சீட்டு கட்டை அவர் முன்பாகவே நன்றாக களைத்து குலுக்குங்கள். பின்னர், ஒவ்வொரு சீட்டாக கீழே வைத்து கொண்டே வாருங்கள். அப்படி வைத்துக்கொண்டே வரும் போது சட்டென்று ஒரு சீட்டை கீழே வையுங்கள். இது தான் நீங்கள் நினைத்த சீட்டு என்று கூறுங்கள். உங்கள் நண்பர் அந்த சீட்டை புரட்டிப் பார்த்து, தான் நினைத்த சீட்டு இதுதான் என்று ஆச்சரியப்பட்டுபோவார்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் விளையாட்டில் புத்திசாலிதனம், தந்திரம்தான் முக்கியம். புதிய சீட்டுகட்டு என்பதால் சீட்டின் மேற்பரப்பு பளீச்சென்று இருக்கும். நண்பர் நினைத்து கொண்டு கொடுத்த சீட்டில் சீட்டின் ஓரத்தில் உங்கள் நகத்தால் அழுத்தமாக சிறுகுறி வைத்து விடுங்கள். அது யாருக்கும் சட்டென்று தெரியாது. பிறகு, சீட்டை குலுக்கி ஒவ்வொன்றாக கீழே வைத்துகொண்டே வரும் போது, அந்த நகக்குறி அடையாளத்தைக் கொண்டு அந்த சீட்டை இது தான் என்று காட்டுங்கள்!
இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த மேஜிக் செய்யும் போது சீட்டு வைக்கும் இடத்தில் கண்ணாடி கிளாஸ், கண்ணாடி பொருட்கள் எதாவது வைத்திருந்தால், நண்பர் சீட்டை திருப்பி பார்க்கும் போது அதன் பிம்பம் கண்ணாடி பொருள்களில் பிரதிபலிக்கும் அதை உற்று கவனித்தும் இந்த மேஜிக் செய்யலாம்!

 நீரைத்தாங்கும் தாள்!


தேவையானப்பொருட்கள்:

கண்ணாடி டம்ளர், நீர், தாள் அல்லது அட்டை

செய்முறை:
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு, அதன் வாயை காகிதத்தால் மூடிவிடவும், மூடிய காகிதத்தை மெதுவாக தாங்கிப் பிடித்து, டம்ளரை தலைக்கீழாகக் கவிழ்க்கவும். பின்னர் காகிதத்தைத் தாங்கிய கையை சட்டென்றுஎடுத்து விடவும். டம்ளரில் உள்ள நீர் கீழே கொட்டிவிடும்.
பார்வையாளர்களைப் பார்த்து, இப்போது இதே டம்ளரில் நீர் நிரப்பி, தலைக்கீழாக கவிழ்க்கப் போகிறேன். ஆனால், நீர் கொட்டாது. பாருங்கள் என்று கூறிவிட்டு,
அதே டம்ளரில் நீரை விட்டு, அதன் வாய் பகுதியில் காகிதத்தை வைத்து நன்றாக அழுத்தி மூடவும். பின்னர் மெதுவாக அழுத்திய காகிதத்தின் பகுதியில் அணைத்தப்படியே தாங்கிப் பிடித்துக்கொண்டு, டம்ளரை தலைக்கீழாக கவிழ்க்கவும். பின்னர் அணைத்துக்கொண்டிருந்த காகிதத்திலிருந்து கையை ஒரே சீராக மெல்ல எடுக்கவும். இப்போது டம்ளரில் இருந்து நீர் கொட்டாமல் இருக்கும். நீரை காகிதம் தாங்கிக்கொண்டு இருக்கும். இதைப் பார்த்து, பார்வையாளர்கள் அசந்து போவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
காற்றின் மேல் நோக்கி அழுத்தும் விசையின் காரணமாக டம்ளரில் உள்ள நீர் சொட்டுவதில்லை. காகிதமும் கீழே விழுவதில்லை! இது தான் மேஜிக்கின் அடிப்படை வித்தை! ஆனால், இதை செய்யும் போது முதலில் வேகமாகவும், அடுத்த முறை செய்யும் போது கவனமாக, மெல்ல செய்ய வேண்டும். இவ்வளவுதான் மேஜிக் ரூல்!


 டான்ஸ் ஆடும் உருண்டை!


தேவையானப்பொருட்கள்:
1.ஆப்ப சோடா 2.ரசக்கற்பூரம்(பாச்சை உருண்டை)3. வினிகர் (எலுமிச்சை சாறு)4. கண்ணாடி டம்ளர்
செய்முறை:
ஒருகண்ணாடி டம்ளரில் சிறிதளவு ஆப்ப சோடவை போடவும், பின் அதில் பாச்சை உருண்டைகளைப் போடவும். பின்னர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறுகொஞ்சம் டம்ளரில் விடவும். பார்வையாளர்களைப்பார்த்து, "ச்சூ... ஜக்கா ஜூம்' என்று கூறி கண்ணாடி டம்ளர் மீது உள்ளங்கையை மேலும் கீழும் காட்டிவிட்டு, "இப்போ டம்ளரைப் பாருங்கள் அதிலிருக்கும் உருண்டைகள் மேலும் கீழும் வந்து, போய் டான்ஸ் ஆடுவதை' என்று கூறுங்கள். டம்ளரில் உள்ள உருண்டைகள் மேலே வருவதும் கீழே போவதுமாக இருக்கும்.
மேஜிக் சீக்ரெட்:
ஆப்ப சோடா என்பது சோடியம் பை கார்பைனேட். இதனுடன் வினிகர் எனும் அசிட்டிக் அமிலம் வினைபுரியும் போது, சோடியம் பை கார்பைனேட்டில் உள்ள கார்ப்பன்டை ஆக்சைடு விடுவிக்கப்படும். இந்த கார்ப்பன்டை ஆக்சைடு பாச்சை உருண்டை மீது குமிழ் குமிழாக படிந்து அதன் கன அளவை அதிகரிக்கும். இதனால் நீரின் எடையை விட உருண்டை எடையிழப்பதால் மேலே வரும். மேலே வந்ததும் அந்தக் குழிழ்கள் வெளிக்காற்றுப்பட்டு வெடித்து விடுவதால், மீண்டும் எடைகூடி தண்ணீரில் மூழ்கும். மீண்டும் கார்ப்பன்டை ஆக்சைடு சேர, லேசாகி மேலே வரும். குழிழ்கள் உடைய மீண்டும் கீழே செல்லும். இந்த அறிவியல் நுணுக்கம் பார்வையாளர்களுக்குத் தெரியாததால் நீங்கள் இதை மேஜிக் என்று செய்து அவர்களை அசத்தலாம்!

நீரில் மிதக்கும் ஊசி!


தேவையானப் பொருட்கள்:
ஒருகண்ணாடி டம்ளர், ஒரு டிஸ்யூ பேப்பர், ஒரு ஊசி

செய்முறை:
ஒரு கண்ணாடி டம்ளரில், முக்கால் பாகம் நீரை நிரப்பவும். அதில் மேல்பரப்பில் டிஸ்யூ பேப்பரை படத்தில் காட்டியவாறு மிதக்கவிடவும். அதன் மீது ஊசியை வைக்கவும். பிறகு, பார்வையாளர்களைப்பார்த்து," எல்லாரும் பாருங்க. இந்த டம்ளரில் மிதக்கும் இந்த பேப்பர் துண்டு தண்ணீரில் மூழ்கும். ஆனால், ஊசி மட்டும் தண்ணீர் மேல் பரப்பில் மிதக்கும். நல்லா பாருங்க' என்று சொல்லிவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு கை நெஞ்சில் வைத்து விட்டு "ச்சூ' கையை கண்ணாடி டம்ளர் மீது மூன்று முறை சுற்றி விட்டு, கையை மேலே துõக்குங்கள். டம்ளரில் காகிதம் மூழ்கும், ஊசி மட்டும் மிதக்கும். இதை பார்த்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
நீரில் மிதக்கும் டிஸ்யூ பேப்பர் நீரில் நனைவதால் அடர்த்தி அதிகமாகி அதன் காரணமாக நீருக்குள் மூழ்கிவிடும். ஆனால், அதன் மீது வைக்கப்பட்ட ஊசி நீரின் பரப்பு இழுப்பு விசையின் காரணமாக நீரில் மூழ்காமல் மிதக்கும். இந்த அறிவியல் உண்மை பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது தான் மேஜிக் தந்திரம்!

மேஜிக் ஓவியம்!


தேவையானப் பொருட்கள்:
1 சார்ட் அல்லது வெள்ளை தாள்
2 பிளிச்சிங் பவுடர்
3 பிரஸ்
4 இங்க்
5 ஒரு கிண்ணம்

செய்முறை:

ஒரு வெள்ளை சார்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பார்வையாளர்களிடம் காட்டி, அவர்கள் முன்பாக அதில் ஒருபடம் வரையுங்கள். வரைந்த படத்தைக்காட்டுங்கள். பின்னர் வரைந்த படத்தின் மீது கருப்பு மை கொண்டு முழுவதுமாக அழித்து விடுங்கள். இப்போது ஒரே கருப்பாக இருக்கும் சார்ட்டைக் காட்டி "ச்சூ... ஜங்..ஜிங்... ஜாங்... வந்துடு, வந்துடு மறைந்த படமே வந்துடு' என்று சொல்லிவிட்டு சார்ட்டை டேபிளில் வைக்கவும். 5நிமிடம் கழித்தப்பின் சார்ட்டை எடுத்துக்காட்டுங்கள். அந்த சார்ட்டில் கருப்பு பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த போன படம் தெரிய ஆரம்பிக்கும்! அதை பார்த்து பார்வையாளர்கள் அசந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
மேஜிக் செய்வதற்கு முன்பாக, இரு சார்ட்கள் எடுத்துக்கொண்டு, முதல் சார்ட்டில் முழுவதுமாக கருப்பு மையை தடவிக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பிளிச்சீங் பவுடர் போட்டு கலக்கிக் கொள்ளவும். அந்த கலவை நீர் தெளிந்ததும் அந்த தண்ணீரைக் கொண்டு பிரஸினால் ஒரு ஓவியம் வரைந்து கொள்ளவும். தண்ணீரால் வரைந்ததால் அந்தப் படம் பார்வைக்குத் தெரியாது. இதே போல பார்வையாளர்கள் முன்பும் வரையும் போதும் இதே படத்தை வரைந்து காட்டவும்.
பின்னர் பார்வையாளர்களுக்கு காட்டும் போது பிளிச்சிங்கில்படம் வரையப்பட்ட சார்ட்டை காட்டவும். ஈரம் காய, காய படம் பளீச் சென்று வெள்ளை நிறத்தில் தோன்றும்.

பறக்கும் பறவை!


தேவையானப் பொருட்கள்:
1. சார்ட் அல்லது பேப்பர்
2. பெஜ்சில்
3. ஸ்கெட்ச் பென்
4. கலர்ஸ்
செய்முறை:
சார்ட் அட்டையில் நீள வாக்கில் படத்தில் உள்ளது போல தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும்.
அவ்வாறு கட் செய்த அந்த அட்டையை படத்தில் காட்டியவாறு சரிசமமாக மடித்து கொள்ளவும்.
சார்ட்டின் முதல் அட்டைமேல் பக்கத்தில் பறவை இறக்கையை மடித்து இருப்பது போல வரைந்து கொள்ளவும். உதவிக்குப் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். பிறகு, சார்ட்டின் பின் அட்டை உட் பகுதியில் பறவை இறக்கை விரிப்பதுபோல வரைந்து கொள்ளவும்.
இவ்வாறு சரியாக செய்து கொண்டு, உங்கள் நண்பர்களிடம் இந்த சார்ட் அட்டையைக்காட்டி," இதையே உற்று பாருங்கள். இப்போது இந்தப் பறவை சிறகடித்து பறக்கும்' என்று சொல்லி மூடி,திறந்து, திறந்து, மூடிக்காட்டுங்கள். பறவை சிறகடித்து பறப்பதைப் பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்!
சார்ட்டில் ஒரே அளவு, ஒரு மாதிரி தோற்றம் தருமாறு பறவையை உள்ளும், வெளியும் வரைந்து கொண்டு, அதில் ஒரு பறவை சிறகு மடிப்பது போலவும், இன்னொரு பறவை சிறகு விரிப்பது போலவும் வரைந்து கொள்ளவும். இதை மின்னல் வேகத்தில் மடக்கி, பிரித்துக் காட்டவேண்டும். இவ்வாறு அதி வேகத்தில் திறந்து மூடி காட்டும் போது அந்தப் பறவை அசைவது போல ஒரு மாய தோற்றத்தை பார்ப்பவர் கண்ணுக்கு தெரியும்!



எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா


எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’ என்று தமிழகத்தில் இன்றைக்கு பலபேரும் சொல்லும் ஒரு மந்திரம் வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க...(சும்மா கற்பனை தான்)

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம ஏகாம்பரம் .
உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.
முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”
2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.
நம்ம ஏகாம்பரதிற்கும்   ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!
“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.
அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”
இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.
ஏகாம்பரம் - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”
இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.
சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.
”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், ஏகாம்பரம்.
ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.
இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.
அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம ஏகாம்பரம்.
ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.
டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...
“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் ஏகாம்பரம்.
”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”
ஏகாம்பரம் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!
ஏகாம்பரம் ஆரம்பித்தார்.
மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.
கோயம்புத்தூர் பக்கம். நீங்க?”என்னங்க சிரிச்சு முடிச்சிட்டிங்களா?
இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது . நீங்கள் கவனித்தீர்களா?
எந்த சூழ்நிலையிலும் நம் தன்னம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்பது மட்டுமல்ல. மனம் தளராமல் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான். நம்ம ஏகாம்பரத்திற்கு எதுவுமே தெரியாது என்றாலும் அவர் என்னதான் நடக்குதுன்னு பாப்போமே என்று தீர்கமான மனதுடன் இருந்தாரே அது தான் இந்த கதையின் ஹை லய்ட்.

சரி. இப்போது விசயத்திற்கு வருவோம்.
இந்த உலகத்தில் எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற துணிவு இல்லாத மனிதர்கள் , நிச்சயமாக சாதித்ததாக வரலாறு இல்லை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று தான் கொண்ட குறிகோளுக்காக துணிவுடன் போராடும் மனம் படைத்த மனிதர்கள் தான், சாதனையாளர்கள் பட்டியலில் அமர்ந்து இருக்கிறார்கள்.
இன்றைக்கும் பல மாணவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக பல நிறுவனங்களை அணுகும் போது நெஞ்சம் படபடக்கத்தான், நேர்முக தேர்வை எதிர்கொள்ளுகிறார்கள்.
என்ன கேட்பார்களோ? ஆங்கிலத்தில் தான் கேட்பார்களோ? எப்படி சொல்வது என்று இன்னும் பல பேர் வாசற்படி வரை சென்று , குனிந்த தோளோடு கவலை தோய்ந்த முகத்தோடு திரும்பி வந்து விடுகிறார்கள்.
தெரிகிறதோ இல்லையோ எதையும் எதிர்கொள்வோம் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருக்கும் பல பேர்,  பணி வாய்ப்பு பெற்று நல்ல பதவியில் இருப்பதை இன்றைக்கும் நான் பார்கிறேன். யாருமே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வாழ்வதில்லை. அத்தனை விசயங்களையும் ஒரு தனி மனிதன் தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. இதை நேர்முக தேர்வுகளை நடத்தும் அவர்களுக்கும் நன்றாக தெரியும். என்றாலும் போட்டியாளரின் தன்னம்பிக்கை, பேச்சு திறமை, சாதூர்யம் இவற்றை தான் அவர்கள் எதிர் பார்கிறார்கள். போட்டியாளரின் அறிவு திறமையை அல்ல.
ஆனால் நாம் பல பேர் , இந்த ஒற்றை விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் நம்மால் பதில் சொல்ல முடியாதே என்கின்ற ஒரு தாழ்வு மனப்பான்மையில் , போட்டியில் பங்கு பெறுவது கூட கிடையாது. முதலில் கதவுகளை தட்டுங்கள். கண்டிப்பாக கதவுகள் திறக்கும்.  எது வேண்டும்  என்று முதலில் வாய் திறந்து
கேளுங்கள். அது  கண்டிப்பாக கிடைக்கும். இது தான் இயற்கையின் நியதி.
புதிதான இடத்திற்கு பயணம் போகிறிர்களா? பயப்படாமல் செல்லுங்கள். அங்கு போய் உங்கள் திறமைகளை, மற்றவர்களை பார்த்து வளர்த்துக் கொள்ள முடியும்.
மொழி பிரச்னை ஒரு கவலையா? ஒரு மனிதனால் ஒரு மாதத்தில் பிற மொழிகளை கற்று கொள்ள இயலும்.
இந்த உலகத்தின் கதவுகள் சாத்தப்படிருக்கலாம் .ஆனால் அடைக்கபடுவதில்லை. வேண்டும் வேண்டும் என்கின்ற ஆசையை மட்டும் விட்டு விடாதிர்கள். அதுதான் உங்களை உற்சாகப்படுத்தும் மந்திர தீ. அது மனதில் கொழுந்து விட்டு எரிந்தால் எந்த சூழ்நிலையும் நமக்கு சாதகமாக மாறிவிடும். பயம், எதிர்மறை எண்ணம் யாவும் தூள் தூளாகும். அப்புறமென்ன..?   இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்.துணிந்த உள்ளம் துணிந்து விட்டால் ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும் என்று  நொடி பொழுதும் உற்சாகமாக பாடி கொண்டே இருப்பிர்கள்.
எக்காரணத்தை கொண்டும் நமக்கு இதெல்லாம் சரி பட்டு வராது என்று முடிவு கட்டி விடாதிர்கள். அது எதிர்மறை எண்ணத்தின் வெளிப்பாடு. துணித்து இறங்குங்கள்.
சாதனைக்கு  துணிந்து விட்டால் எந்த  ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். நீங்கள்  நிச்சயம் வெற்றி அடைவீர்கள்  அந்த ஏகாம்பரம் போல.
துணிவினை விழியில் சுமந்து – துயரத்தின்

தூரத்தை நீ கடக்க வேண்டும்
முன்னேறத் துணிந்து விட்டால்
துணைக்கு வர
சூரியன் மறுக்குமா?
வா வா வசந்தம் உன்னை அழைக்கிறது
வானவில்லில் மேகம் – உனக்காய்
பாதை விரிக்கிறது.

நம் மதியே நிம்மதி



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனகோர் இடம் வேண்டும்..அங்கே.....இந்த
பாடலை பாடாத அல்லது கேட்காத   தமிழர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு இந்த பாடல் ரொம்ப பிரசித்தம். காரணம் என்ன? எல்லோருக்கும்
பிரச்சனை ..ஒளிந்து கொள்ள ஒரு இடம் வேண்டும் ..அதனால் தான்.

 உண்மையில் நிம்மதி எங்கே கிடைக்கும்? அமைதியான மண்டபத்தில்? ஆள் அரவமற்ற
காட்டில்? இந்த பிரபஞ்சத்தில்? எங்காவது ஒரு இடத்தில் இருக்குமா? கொஞ்சம்
சிரமந்தான். இல்லையா?

பிரச்சனைகளும், கவலையும் நிம்மதியை துண்டாடிவிடுகிறது.
வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.
ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவனே இல்லை.

மகாபாரதத்தில், பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்;  ராமாயணத்தில்
ராமனும் வனவாசம் சென்றான்.தேவர்களும் ஒளிந்து வாழ வேண்டியிருந்தது.
கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.
யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு
உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு.
ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை.
பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத
குடும்பங்களில் பிரச்சனை.
அப்படிஎன்றால் யாருக்குமே அமைதியான , சந்தோசமான வாழ்க்கை இருந்ததாக தெரியவில்லை.

நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது.
பணக்காரனாலும் சரி , ஏழையானாலும் சரி  வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு
காலத்தில் கண்டிப்பாக நாய் படும் பாட்டை பட்டே ஆக வேண்டும் என்பது
எல்லோருக்குமான விதி. ஆனால் ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது
தெரியாதவனுக்கு கடுகு மலையளவு என்பது போல் அதை சமாளிக்கும் சூத்திரத்தை
அறிந்தவன் தான் சாதனையாளனாகிறான்.

ஒரு சின்ன கதை ..
முருகனுக்கு பெரும் பணம் இருந் தது. அவனு டைய அப்பா சொத்து,
சுகத்தைல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை.
ஆனால், என்ன செய்வது? அவனுக்கு வாய்த்தவள் சரியில்லை.  இதனால்,
முருகனுக்கு நிம்மதி போய்விட்டது. ஒருநாள், அவனைப் பார்க்க அவனது
தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான்.
எனக்கு நிம்மதியே இல்லை, என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக
தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார்
பெரியவர். "முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்!
அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால்,
உனக்கு எந்தத்துன்பமும் இல்லை", என்றார். முருகனுக்கு ஏக மகிழ்ச்சி!
உடனடியாக அவருடன் கிளம்பி விட்டான். அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு
அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், இங்கு ஏன் என்னை
அழைத்து வந்தீர்கள்? என்றான். நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில்
மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்கு உள்ள கல்லறைகளுக்குள்
தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக்
கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து
நிற்பவனை நிம்மதி தேடி வரும். இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து
நிம்மதியைத் தேடப் போகிறாயா... இல்லை, இங்கே தோண்டப்பட்டு உள்ள
குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா? என்றார். முருகனுக்கு புத்தி
வந்தது. உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என
நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள்.
பிரச்னைகளை கண்டு ஓடக்கூடாது. நம்  மனைவிக்கும் புத்தி சொல்வோம்,
கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும், என
விட்டுவிட்டான். பிறகு அவன் நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்.

இந்த கதையில் ஒரு முக்கியமான கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்
புத்தி சொல்லும் முன்னும் அவனுக்கு பிரச்னை இருந்தது. அதற்கு பிறகும்
அவனுக்கு பிரச்னை இருக்கத்தான் போகிறது. அப்படியானால் நிம்மதி எப்படி
அவனுக்கு கிடைத்தது? மனம் பிரச்சனையை வேறு விதமாக ஏற்றுக்கொண்டதின்
விளைவுதான் அதற்கு காரணம்.

நம் மனம் தான் எல்லா பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல மன நிம்மதிக்கும் காரணம்.
 மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது.
அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது.
மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளிக்கிறது.இப்படி பல
நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது.

மாறுதல் மனதின் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி
கிடைக்கிறது. இல்லையானால் மன உளைச்சல் தான்.

`இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது’ என்று சில சமயங்களில்
சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம்.
காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே
பொருள். உலகத்தில் எது தவிர்க்க முடியாதது? பிறந்த வயிற்றையும் உடன்
பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும்
மாற்றத்திற்குரியதே.  ஜனனத்தையும், மரணத்தையும் தவிர அனைத்துமே
மறுபரிசீலனைக்குரியவை.  மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம். நண்பர்களை
மாற்றலாம், தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம். மாறுதலுக்குரிய
உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

மனது நம்முடையது  நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். நமக்கு
முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் முழுவதும் அமைதியாக
இருந்து செத்தவர்களல்ல. இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு
உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.

எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனத்தை எளிமையாக
வைத்திருங்கள். கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள். நம்பிக்கை! அதுவே
மனிதனின் அஸ்திவாரம்!! எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுங்கள்!  ஆனால்
எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனைகளில் உங்கள் நிம்மதியை நீங்களே
குறைத்திட வேண்டாம். நம்பிக்கையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் வாழப்பழகுங்கள்
நிம்மதி உங்களைத்தேடி வரும்!!!
எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?’ என்று தேடினால்
நீங்கள் காணமாட்டீர்கள். அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஒளி மயமாக
நிற்கிறது.  ஆமாம்.  நிம்மதி அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது!
நாம்  இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே நமக்காக நம் தாயின்
இரு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நாம்  பிறந்த
பின்னும்நமக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து
வைத்திருக்கக்கூடும்.

புத்தகம் தரவிறக்கம்.

Wednesday, April 18, 2012

இசை இளையராஜாவின் அற்புதமான பேட்டியும், சிந்திக்கவைக்கும் சிறந்த ஜென் கதைகளும்.

முதியோர்களுக்கான ஆரோக்கியமான உணவு முறைகள் – வழிகாட்டி

இணையத்தேடலில் கிடைத்த அரிய புத்தமான இதனை நான் படித்துப் பயனடைவதோடு மட்டுமின்றி தாங்களும்  படித்து ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட என் வாழ்த்துக்கள்




சர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம்

சர்ப்ப நாதம் என்ற பக்தி பாடல்கள் அடங்கிய அற்புதமான ஆல்பம் .
பாடலாசிரியர் : ஒட்டக்கூத்தன்
இசை : ஆனந்து .

இந்த பாடல்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சகோம்பை யில் அமைந்துள்ள நாகராஜா என்கின்ற பாம்பு சாமியை பற்றியது. 

https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/enokoru.wma?attredirects=0&d=1 

https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/kathatikuthu.wma?attredirects=0&d=௧


https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/manjak2.wma?attredirects=0&d=1
 

https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/nilamalai.wma?attredirects=0&d=௧

https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/ninaivenga.wma?attredirects=0&d=1 

https://sites.google.com/site/sarpanathamblogspotcom/sarpanatham-songs/sagangalai2.wma?attredirects=0&d=1

மௌனமே...பார்வையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்...


சில அறிவிலிகள் சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கலாமலும்,அழ வேணடிய
நேரத்தில் அழுகாமலும் இருக்கிறார்கள்.
ஆதனால்தான் அவர்கள் மனிதப்பிறப்பையே சில நேரம் வெறுக்கிறார்கள்.மன
அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அழுத்தம் என்பதே,ஏதாவது ஒன்றை தேக்கி வைக்கும்போது,உண்டாகும் அதிகப்படியான விசை.
இந்த விசைகளை ஒரு போதும் மனதிற்குள் தேக்கி வைக்காதீர்கள்.மன நிம்மதி
உங்களை ஒருபோதும் எட்டிப்பார்க்காது.
எதையோ இழந்தது போலவே மனது அடித்துக் கொள்ளும்.வெறுமை என்பது உடலில் புகுந்தது போல் கண்களில் வந்து தன் அடையாளம் காட்டும்.
அந்த வெறுமையைக் கூட நேசிக்கத் தெரிந்தவிட்டால்,தன் மனம் முழு பலம் பெறும் என்பதில் கொஞ்சம் கூட ஐயமில்லை.
வெறுமை என்பது என்ன?
ஏதுமில்லாததா? ஆமாம். எதுவுமில்லாத வெற்றிடம்தான் வெறுமை.
ஆனால் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் எதுவுமே வெறுமையாக படைக்கப்படவில்லை.
நீரில்லாத குடம் கூட காற்றால் அடைக்கப்படடு இருக்கிறது.
மௌனம் கூட வெறுமை அல்ல. அங்கேதான் எல்லா மொழிகளும் அடங்கியிருக்கிறது. மௌனம் எல்லோரும் பேசும் ஒரே மொழி;
இந்த உலகத்தில் தோன்றிய முதல் மொழி;
மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் அல்லது துக்கத்தின் உச்சக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பேசக்கூடிய மொழி இந்த மௌனம்.
சில பேர் பேசி பேசியே குழப்புவார்கள். சில பேர் மௌனமாக இருந்தே பல விஷயங்களை புரிய வைப்பார்கள்.
இங்கே பாருங்களேன்…மௌனம் எப்படி பேசுகிறது என்று..
இன்பமான நேரத்தில் மௌனமாக இருப்பது என்பது சம்மததிற்கு அறிகுறி..
நண்பர்களை பிரியும்போது மௌனமாக இருப்பது என்பது துன்பத்திற்கு அறிகுறி. .
காதலில் மௌனமாக இருப்பது என்பது - சித்திரவதைக்கு அறிகுறி..
தோல்வியில் மௌனமாக இருப்பது என்பது - சாதனைப்படிக்கு அறிகுறி..
வெற்றியில் மௌனமாக இருப்பது என்பது -அடக்கத்திற்கு அறிகுறி..
இறுதியில் மௌனமாக இருப்பது என்பது – மரணத்திற்கு அறிகுறி.

பூமிதான இயக்கத்தை நடத்தி வந்த வினோபாவா அவர்களை பற்றி உங்களுக்குத் தெரியும்.அதிகார பலம் படைத்த நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை வாங்கி அதை ஏழை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தவர்.அவருக்கு பல மொழிகள் தெரியும். அவரிடம் ஒருமுறை நிருபர்கள் சென்று பேட்டி எடுக்கச் சென்றபோது கேட்டார்கள்.
“ஐயா நாங்கள் எந்த மொழியில் உங்களை பேட்டி எடுக்கட்டும்” என்று கேட்டபோது அவர் சொன்னார், “எனக்கு பிடித்த மௌன மொழியில் கேளுங்கள்”;.

கெட்டிக்காரன் பேசுகிறான்
முட்டாள் விவாதம் மட்டுமே செய்கிறான்
அறிஞன் அமைதியாயிருக்கிறான்.
ஆகவே பேசாமல் இருப்பதால் மௌனம் என்பது வெறுமை அல்ல.வெற்றிடம் அல்ல. சில நேரங்களில் வெறுமைதான் சிலருக்கு சாதிக்கும் வெறியைக் கிளப்பியிருக்கிறது. அந்த காலியிடம்தான் சில நேரங்களில் பயன் தருகிறது.
பானையின் காலியிடம்தான் நீர் நிரப்பப் பயன்படுகிறது. அதேபோல் நம் மனதின் காலியிடத்தை, புது உத்வேகத்தை,உற்சாகத்தை நிரப்பிக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

ஓன்றை புரிந்துக் கொள்ளுங்கள்.
எங்கே காலியாக இருக்கிறதோ,அங்கே தான் பல விசயங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.
அனைத்தையும் நிரம்ப பெற்றிருக்கிற நூலகம் கூட அமைதியாகத்தான் இருக்கிறது.
காலிப்பானை என்பதிலே கூட அதன் காலியான அந்த வெற்றிடம்தான் அதனுடைய உபயோகம்.
ஓரு அறையின் உபயோகம் கூட அதன் நான்கு சுவர்களுக்குள் அகப்பட்டுள்ள அந்த காலியான வெற்றிடம் தான்.

ஆகவே காலியான இடம் என்று இந்த உலகத்தில் எதுவுமே காலியாக வைக்கப்பட விலலை.எல்லாமே நிரப்பபட்டு இருக்கிறது.
மௌனமாக இருப்பது என்பது தனித்து இருப்பது.பிரச்சனைகளிலிருந்து விடுபட நினைப்பது.மௌனமாக இருக்கின்ற போது மனம் அமைதியாகிறது.
ஆதனால்தான் தியானத்தின் போது மனதை வெறுமையாக்குகிறோம்.
தியானம் என்பது வெறுமை.
எண்ணங்களை காலி செய்கின்ற போது மனம் மௌனமாகும்.
மனம் மௌனமாகிற போது நம் மூளையின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.
மனம் மௌனமாகிற போது நம் மூளையிலுள்ள செல்களின் அதிர்வு 14 லிருந்து 10 ஆக குறைகிறது.அப்போது 50000 சிந்தனைகளாக சிந்திக்கின்ற நமது மூளை மனதின் மௌனத்தால் ஒருமுகப்பட்டு ஒரே சிந்தனையாக கட்டுப்படுகிறது. இந்த ஒருமுக சிந்தனை சாதிக்க விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

மாவீரன் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழரசம் பரிமாறப்பட்டது. குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதையும் துளைத்து திடுக்கிட வைத்தது.
நெப்போலியனைத் தவிர மற்ற அனைவரும் பதறி பழரசத்தை கொட்டிவிட்டார்கள். நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக பழரசத்தை ருசித்துக் கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, “பழரசத்தை அருந்த துவங்கி செயலில் இறங்கிவிட்டால் அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியமும் கை நழுவாது, முழுமையான ருசியும் கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார்.
ஆகவே ஒரே சிந்தனையை சிந்திப்பது என்பது சாதிக்க துடிப்பவர்களின் ஒரு ஆயுதம்.

சரி... நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி? ஒவ்வொரு நிமிடமும் விழிப்பு உணர்வோடு இருப்பது எப்படி?

சுகபோதானந்தா சொல்கிறார்…
தியானத்தில் ஆழ்ந்திருப்பவர்கள் சின்முத்திரை காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள்.
சின்முத்திரைக்கான விளக்கம் என்ன? அடுத்தவர் மீது குற்றம் சுமத்த நாம் நீட்டும்
சுட்டுவிரல், இலக் கில்லாமல் பறக்கும் நம் சிந்தனையின் குறியீடு. அதை ஆத்மாவின்
குறியீடாக விளங்கும் கட்டைவிரலை நோக்கி மண்டியிட வைத்தால் பூஜ்யத்தின் வடிவம்
கிடைக்கிறது. பூஜ்யம் என்பது வெற்றிடத்தின் அடையாளம்.

இந்த விநாடி யின் அருமையை நாம் உணர வேண் டும் என்றால் முதல் கட்டமாக சிந்தனைகள் அற்ற வெற்றிடம் நம் மனதில் உருவாக வேண்டும். சின்முத்திரையின் தத்துவம் இதுதான்!

சரி, சிந்தனைகள் அற்ற வெற்றிடம் நம் மனதில் எப்படிச் சாத்தியமாகும்?
வெளியே இருந்து வரும் ஓசைகள் நம் காதுகளில் விழுந்துகொண்டே இருக்கிறது.
அவற்றைக் கேட்காமல் புறக்கணிக்க வேண்டும். நாம் ஆழமாக உள்வாங்கி வெளியே விடும் மூச்சுக்காற்றில் மட்டுமே நம் கவனம் ஆழமாகப் பதிந்திருக்க
வேண்டும். இப்படி சிந்தனை, பேச்சு, எண்ணம், ஒலி எதுவுமே இல்லாத அந்த
வெற்றிடம் அதிக சக்தி படைத்தது.
சிதம்பர ரகசியம் என்று சொல்லி வெற்றிடத்துக்கு நாம் பூஜை செய்வதும் இந்தக் கருத்தை வலியுறுத்தத்தான்.
இந்தப் பயிற்சிக்குதான் தியானம் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். தியானத்தின் சக்தி அளப்பரியது. அதிகம் வேண்டாம், தினமும் ஒரு பத்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்து பாருங்கள். நீங்கள் உங்கள் மனதின் எஜமானன் ஆவீர்கள்!

எங்கே கிளம்பிவிட்டீர்கள்? மனதை வெறுமையாக்கவா?

உங்கள் குழந்தை எப்படி?



காலை 10 மணி வாக்கில், என் செல்போன் ஒலித்தது…
“உன்னால் முடியும் தம்பி தம்பி..” டக் ..
“ஹலோ…”
“சார் வணக்கம்..ஒட்டக்கூத்தன் சாருங்களா?”
“ஆமாம்மா….நீங்க?”
சார்..நான்  வாசகி..சேலத்திலே இருந்து பேசறேன்..”
 எனக்குள்ளே ஒரு பூரிப்பு ..சந்தோசத்துடன்..
“சொல்லுங்கம்மா…என்ன விசயம்..ஃ”
“சார்,போன மாசம், உங்கள் குழந்தை எப்படி? ன்னு ஒரு கட்டுரை எழுதியிருந்தீங்களே! அதுல வர்ற பொண்ணு மாதிரியே என் பையனும் செய்யறான் சார்..” கொஞ்சம் கவலை தோய்ந்த குரலோடுதான் பேசினார்.
“அடடா..அது நல்லதில்லையேம்மா..!.ம்..”
“என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்கறான், கோபம் வந்தா,கனன் பின்னான்னு கத்தறான், போன வாரம் சும்மா உட்கார்ந்திருந்த என்  வீட்டுக்காரருடைய specs  (மூக்கு கண்ணாடி)யை புடுங்கி,தூக்கி எறிஞ்சு உடைச்சே போட்டுட்டான் சார்..ஒருவேளை இவனுக்கு நீங்க சொன்ன
மாதிரி Hyper activity யா இருக்குமோ..? ”
“என்னம்மா வயசாச்சு,உங்க பையனுக்கு..? ”
“12 வது படிக்கிறான் சார்..”
தூக்கி வாரி போட்டது…
“Hyper activity ங்கிறது, ஒரு வித மூளை நரம்புக் கோளாறினால் ஏற்படும் அதிகப்படியான சுறுசுறுப்பு. (Abnormal activity). இது குழந்தையின் 2 வயதில் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் படிப்படியாக ஒரு 15 வயதுக்குள் குறைந்து, அந்த குழந்தை, சராசரி குழந்தையாக மாறிவிடும்.
உங்க பையனுக்கு, கிட்டத்தட்ட 18 வயது. அவனுக்கு Hyper activity எல்லாம் இருக்காது. Emotional activity யா இருக்கும். அவன் வெளிநடத்தைகளை கண்காணியுங்கள்.தவறு ஏதாவது தெரிந்தால், அன்பாகவும், அதே சமயம் கண்டித்தும் ஆலோசனைகளை கொடுங்கள். எல்லாம் சரி ஆயிடும்.” என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.
இவர் மட்டுமல்ல..இவர் போன்ற பல வாசக நண்பர்கள், இந்த Hyper activity யைப் பற்றி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளார்கள்.

இதை மருத்துவ மொழியில் ADHD – Attention deficit Hyper activity disorder என்று சொல்லுவார்கள்.
இதை நோய் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் மூளை நரம்புகளில் ஏற்படும் ஒருவித மாறுபாடான அமைப்பினால் ஏற்படும் disorder.
இன்றைக்கு 9% குழந்தைகளுக்கு ADHD இருக்கிறது. அதாவது 100 குழந்தைகளில் 9 குழந்தைகளுக்கு ADHD உள்ளது. இது பெரும்பாலும் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கே அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
இந்த குழந்தைகள் மிகவும் புத்திகூர்மையுடையவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். உதாரணமாக, சராசரி குழந்தை, பென்சிலை எடுதது எழுதும். ADHD குழந்தை, எழுதி முடித்து, பேப்பரை கிழித்து விட்டு, மீண்டும் எழுதும்.
சராசரி குழந்தை, ஒரே இடத்தில் அமர்ந்து, உணவை தட்டிலிருந்து எடுத்து சாப்பிடும்.
ஆனால் ADHD குழந்தை, தட்டை இங்கிருந்து, அங்கே நகர்த்தி ஒரு வாய் சாப்பிட்டு, அங்கிருந்து இங்கே நகர்த்தி ஒரு வாய் என்று ஓரிடத்தில் உட்காராமல்   நகர்ந்துக் கொண்டே இருக்கும்.
வகுப்பறைக்குள் இவர்களது ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும.; கொஞ்ச நேரம் கூட ஓரிடத்தில் அமைதியாக உட்கார முடியாது. யாராவது பேசிக் கொண்டிருந்தால் இடையில் புகுந்து பேசுவது, தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாமல், மற்றவருக்கு முன்பாகவே முந்திக்
கொள்வது (Frequently has difficulty waiting for his or her turn), எப்போது பார்த்தாலும் அமைதியற்று திரிவது, பகல் நேரத்தில் மட்டும் அதிகப்படியாக தூங்குவது, போன்ற மற்றவர்கள் கவலைப்படும் படியான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு, எந்த செயல் செய்து கொண்டிருந்தாலும் அதை எதற்காக செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாது என்பதுதான் மிக முக்கிய பாதிப்பே. They act on Impulse.
இது நோயின் பாதிப்பு என்று தெரியாத வரைக்கும், அந்த குழந்தையை மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள்    சரியாக வளர்க்காமல் விட்டு விட்டார்களோ என்று எண்ணக்கூடும். நான் இப்படிப்பட்ட பல குழந்தைகளின் பெற்றோர்களை
நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் அழாத குறையாக இப்படி சொல்வார்கள்.
“என் பையன் பக்கத்துவீட்டுக்கு, அந்த வீட்டு குழந்தையோடு விளையாட போனால், உடனே அந்த வீட்டு பெரியவர்கள் அவனை கையோடு திரும்பி கொண்டுவந்து விட்டுட்டு போகிற அளவுக்கு தாங்க முடியாத குறும்பனாக இருக்கிறான். மற்றவர்கள் வீடு என்றுகூட நினைக்காமல், அவர்கள் வீட்டு பொருட்களையெல்லாம் தூக்கி வீசி விளையாடுவதும், உடைப்பதுமாக இருக்கிறான். பலரும் என்னிடம் வந்து என் குழந்தையைப் பற்றி குறையாக பேசுவது எனக்கு மிகவும் மனவருத்தத்தை உண்டாக்குகிறது. எப்படித்தான் இவனை திருத்துவது என்றே எனக்கு தெரியவில்லை..!”

உண்மைத்தான்..
நமக்குத்தான் அவர்கள் செல்லக்குழந்தைகள். மற்றவர்களுக்கு அலல் என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.நம் குழந்தையைப் பற்றி தவறாக நினைக்கும் அவர்களிடம் நம் குழந்தைக்கு இப்படிப்பட்ட Disorder இருக்கிறது என்று சொல்லவும் முடியாது. அப்படியானால்
என்ன செய்வது..?
மற்றவர்களும் நம் குழந்தையை விரும்ப வேண்டுமென்றால், Smart kids என்று சொல்வோமே,!
அப்படிப் பட்ட குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டும். எந்த குழந்தைகளையும், சரியான வளர்ப்பின் மூலமாக உறுதியாக உருமாற்றிட முடியும்.
சத்ரபதி சிவாஜியைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். முகலாய சாம்ராஜ்யத்தை தன் திடமான தைரியத்தால், பின்னோக்கி ஓட வைத்த ஒர் மகாவீரன். அவனை ஒரு வீரனாக உருவெடுக்க வைத்தது அவன் தாயின் நல்ல வளர்ப்புத்தான்.
இந்தHyper activity க்கு மருத்துவம் இருந்தாலும், பெற்றோர்களும், ஆசியர்களும் தான் அதை குணப்படுத்த, மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.
அந்த குழந்தைகளுக்கு, இன்னும் அதிக செல்லங்களை கொடுப்பதை நிறுத்தி வைத்து, நல்ல கதைகளை, பழக்கவழக்கங்களை, சொல்லித்தரலாம். மனதை அமைதிப்படுத்தும் இசையைக் கேட்க செய்யலாம்.இதையேத்தான் மருத்துவ நிபுணர்களும் சிபாரிசு செய்கிறார்கள்.
நம் குழந்தை பாராட்டும் படியான செயல்களை செய்தால் கொஞ்சுவது போல், அவன் இப்படி தொல்லை கொடுக்கும்படியான குறும்புகளை செய்தால் கண்டிப்பாக கண்டிக்கவும் வேண்டும்.
ஆனால் நாம் அப்படி இல்லை. குழந்தைகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை கொடுத்து கெடுத்து விடுகிறோம். அவன் என்ன கேட்டாலும் சரி..வாங்கி கொடுத்து விடுகிறோம்.அந்த பொருள் எவ்வளவு விலையானாலும் சரி..நம்ம செல்லக் குழந்தைக்கு நாம தான சார் எல்லாமே..அவன் சந்தோசம் தான் எங்க சந்தோசம் என்பது போல் கையில் பணமில்லை என்றாலகூட கடன் வாங்கியாவது வாங்கி கொடுத்து விடுகிறோம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சிறுவன். அவன் அடம்பிடித்தால்  ,  யானைக்கு மதம் பிடித்தது போல் இருக்கும். அவன் அம்மாவின் முடியைப் பிடித்து இழுத்து, அப்பாவின்  மூக்கிலே குத்தி, தாத்தாவை கடித்து, ஊரே காதில் பஞ்சு வைத்துக் கொள்ள வேணடும் என்பது போல் தொழிற்சாலை சங்கு மாதிரி அழுகை (இல்லை ஊளை) இப்படி அங்கே ஒரு ரணகளமே நடக்கும். உடனே அந்த சிறுவன் எதற்காக அடம் பிடிக்கிறானோ அது உடனே கிடைத்துவிடும்.
அப்படியானால் அவன் அப்படி செய்வதை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்  என்றுதானே அர்த்தம்.?
ஒருநாள் அவன் என்னையையும் விடவில்லை. என் வீட்டிற்கு வந்து, என் செல்போனை எடுத்து, கண்ணில் பட்ட நம்பர்களுக்கெல்லாம் டயல் செய்து, “என்ன நல்லா இருக்கியா..? என்ன பண்ற? சரி போன வைய்யி” என்று பேசி (தொந்திரவு செய்து), மற்றவர்களையும் என்னையும் படுத்தி எடுத்துவிட்டான். இதில் உச்சக்கட்ட விசயம் என்னவென்றால ; நான் வேலைபார்க்கும் கல்லூரி முதல்வருக்கும் (போனில் சேவ் செய்யப்பட்டிருந்தது) போனைப்  போட்டு அவரை கலாய்த்திருக்கிறான். அவர் என்னை கூப்பிட்டு, “என்னங்க ஒட்டக்கூத்தன் இப்படியா குழந்தையை விட்டு என்னை பாடாய் படுத்துவது?” என்று என்னை கடிந்து கொண்டது (கன்னாபின்னாவென்று திட்டியது) வேறு விசயம். நான் மனம் பொறுக்காமல் அந்த சிறுவனின் தந்தையிடம் சொன்னேன்.
“இப்படி பண்ணிட்டான் சார்..கொஞ்சம் கண்டிச்சு வளர்த்துங்க சார்..” என்றுதுதான் தாமதம் …
உடனே அவரும், கூடவே அவர் மனைவியும சோந்துக் கொண்டு; … “என்னது..? நீங்கதான் சார் போனை பத்திரமா வைச்சுக்கணும். நீங்க பத்திரமா வச்சிருந்தா  பையன் எடுப்பானா ? சும்மா எம்பையனையே குத்தம் சொல்றீங்க..? அவன் குழந்தை சார்…” என்று அவர் பாட்டுக்கு கத்த ஆரம்பித்து விட்டார். (ம்..க்கூம் அவருக்கு எங்கே தெரியும்..என் முதல்வரிடம் நான் வாங்கிய திட்டு..?)
இப்போது உங்களுக்கு ஒரு விசயம் புரிந்து இருக்கும்.
சரியான வளர்ப்பு முறை இல்லையென்றால் Hyper activity என்ற Disorder எல்லா குழந்தைகளுக்கும், மூளை நரம்புக் கோளாறுகள் இல்லாமலேயே வந்து விடும். கூட்டுச் சமுதாயத்தில் வாழும் நாம், அனைவரிடத்திலும் பழகுவதற்கு ஏற்ற நல்ல பழக்கவழக்கங்களை நம் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அது Hyper activity யுள்ள குழந்தையானாலும் சரி…சராசரி குழந்தையானாலும் சரி.

நான் மேற்குறிப்பிட்ட சில அறிகுறிகள் தெரிந்தால், குழந்தையை நரம்பியல் அல்லது உளவியல் நிபுரணிடம் அழைத்துச் செல்வது நல்லது. அங்கே மருத்துவர்கள் 3 முறைகளில் சிகிச்சை அளிப்பார்கள்.
1. மருந்துகள் மூலமாக,
2. அமைதிப்படுத்துதல் மூலமாக (Relaxation therapy)
3. நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தருவதன் மூலமாக (Behavioral therapy)
ஆகவே நண்பர்களே உங்கள் குடும்பத்திலோ, அல்லது நீங்கள் பார்க்கும் வேறு யாராவது குடும்பத்திலோ இதைப் போன்ற HYPER Activity  உள்ள  குழந்தை யாராவது இருந்தால் உடனே அந்த குழந்தைக்கான சிகிச்சையை மேற்கொள்ள அழைத்துச் செல்லவும்.ஏனென்றால் நல்ல குழந்தை, நமது இலட்சியம்.

வித்தியாசமான படங்கள்








தமிழ்தான் இல்லை

தமிழ் நாட்டின் தெருக்களிலே தமிழ்தான் இல்லை என்று பாவேந்தர் மனம்நொந்து பாடினார்.
ஆம் தமிழின் நிலை அம்மட்டே ....ஊருக்குள் சென்று தெருவுக்குள் நுழைந்து வீட்டுக்குள் செல்ல காலடி எடுத்து வைப்போம் வாருங்கள் ...
இல்லங்களின் பெயர்களோ வாசினி வாஸ்,வசந்தவிலாஸ் ,ஊருணி வாஸ் ...போதுமா ...எங்கேயாவது யாராவது தமிழ்குடில் ,தமிழர்இல்லம் ,தமிழ் அகம் என்று பெயர்வைத்தால் அவர்களை அரைவேக்காட்டு பைத்தியங்கள் என்று பெயர் வைத்து விடுகிறார்கள் ...
இல்லம் என்ற சொல்லிலே இல் வருகிறதாம் ...இல் என்றால் இல்லை என்று பொருளாம் ...அந்த வீட்டில் வறுமைவந்து தாண்டவமாடுமாம் ....தொண்டு செய்து பழுத்தபழம் தந்தை பெரியார் பிறந்த நாட்டிலே வாஸ்து சாஸ்திரமும்  ஜோதிடமும் சேர்ந்து செய்கின்ற மாய மாயங்கள் இவை .....போனால் போகட்டும் என்றே உள்ளே நுழைய முயன்றால் கிரீல் கேட்கள் நம்மை தடுத்து நிறுத்தும் ...இரும்புபடல்கள் என்று சொல்லிவிடாதீர்கள் 10000 ரூபாய் கொடுத்து விலைகொடுத்து வாங்கியது பீற்றிக்கொள்ள வழி இல்லாமல் போய் விடும் ...ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள் நாய்கள் ஜாக்கரதை அதற்கு மேலே வீட்டு உரிமையாளரின் பெயரும் படித்த படிப்பும் வகிக்கின்ற பதவியும் கொட்ட எழுத்துக்களில் ஆங்கிலத்தில் இருக்கும் ...ஒருவேளை நாம் இருப்பது இங்கிலாந்திலேயோ என்று எண்ணி விடாதீர்கள் சத்தியமாக தமிழ்நாட்டில்தான் இருக்கின்றோம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் வளர்ந்தே இல்லங்களில் உள்ள பெயர் பலகையில் கூட இன்றைக்கு நாம் தமிழை எழுதுவதில்லை .....
சரி அனுமதி கேளுங்கள் காலிங் பெல்லிடம் மன்னிக்கவும் அழைப்பு மணியிடம் ...வந்து கதவு திறக்கையில் ...
கதவிடுக்கில் கிரீச் கிரீச் என்று சத்தம் வரும் ...வந்து கதவை திறந்தவர் பெயரை கேட்டால் ரமேஷ் சுரேஷ் என்று பெயரும் வரும் ...ஆம் இல்லங்களில் உள்ளவர்களின் பெயர்களில் கூட இன்றைக்கு தமிழ் இல்லை 
இல்லங்களின் வாசல்களிலே வெல்கம் என்று மிதியடி போட்டிருப்பார்கள் ....
நாம் மிதித்து செல்ல வசதிக்காக போட்டிருக்கின்றார்கள் ....
வீடு மூன்றடுக்கு மாளிகையா கிரௌண்ட் ப்ளோர்ரா ,செகண்ட் ப்ளோரா என்பார்கள் தவறிக்கூட தரைத்தளவீடு,முதல்தள வீடு ,இரண்டாம் தள வீடு என்று சொல்ல மாட்டார்கள் ...
வீட்டுக்குள் சென்றால் ஒபென்ஹால் பாத்ரூம் பெட்ரூம் கிச்சின் என்றெல்லாம் உண்டு கடன் வாங்கி கட்டிய வீடல்லவா ....அதனால்தான் மொழியையும் கடன்வாங்கி பேசுகிறார்கள் ...
இவர்கள் தாயை மட்டுமல்ல தாய்மொழியையும் அனாதை இல்லத்தில் விட்ட பாவிகள் ...
கதவு டோர் ஆனது சாளரம் யன்னல் ஆனது மரபேழை இழை பேழை எல்லாம் இப்பொழுது பீரோ ஆனது ..பூட்டிற்கு சாவி எங்கே?...எல்லாம் அரபு சொற்கள் இங்கே ......
உணவுப்பொருட்களில் கலப்படம் என்றால் கோபம் வருகின்றதே ...உங்கள் தாய் மொழியில் கலப்படம் என்றால் கோபம்வரவில்லையே ஏன்?
வேட்டிக்கட்டுவதால் வேட்டி வேஷ்டி ஆனது ..உயர்ந்திருப்பதால் மிசை...மேசையாய் இருந்து மேதையானது.....
இல்லங்களில் உள்ள பெயர்களில் கூட இற்றைக்கு தமிழ் இல்லை...பாதருக்கு டாடியாம் மதருக்கு மம்மியாம் ...அப்பா ..அம்மா..என்ற சொற்களை எல்லாம் தமிழர்களே இன்றைக்கு அம்மியில் வைத்து நசுக்கி விட்டீர்களே ...
அதுவும் மம்மி என்று அழைக்கும்போதே அந்த தாய் அடைகின்ற பூரிப்பு மகிழ்ச்சி எவ்வளவு தெரியுமா ?....ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகன் மம்மி என்று அழைக்கக்கேட்ட தாய் என்று புது குறளே படைக்கலாம்...
வள்ளுவரே என்னை மன்னித்துவிடுங்கள் ....
இவர் எல்டர் பிரதராம்... இவர் யங்கர் பிரதராம் ....அண்ணன் தம்பிகளென்றே அண்ணாவும் தம்பியும் சரித்திரம் படைத்து விட்ட நாட்டில்தான் இந்த கொடுமை ........
அதைவிட தமையன் தம்பி என்று தீந்தமிழில் அழகான சொற்களுண்டு ...எல்டர் பிரதர் யங்கர் பிரதர் வேண்டுமென்பவர்கள் இவர்கள் கனி இருக்க காய் கவரும் தமிழ் மக்கள் அல்ல தமிழ் மாக்கள் ..
ஐந்தறிவு விலங்கிற்கு தெரிந்த தமிழ் ...பகுத்தறிவு தமிழனுக்கு தெரியாமல் போனதே ஏனோ ?...
ஆம் இன்றைக்கு நாம் உண்ணுகின்ற உணவில் கூட தமிழ் இல்லை 
பசி எடுத்தல் தமிழா ரைஸ் கேட்கின்றாய் சாதம் கேட்கின்றாய் எங்காவது சோறு கேட்கின்றாயா ?
சோறு என்றால் அரிசி உணவு என்று பொருள் இறைவனுடைய திருவடி நிழல் என்றும் பொருள் ...வெந்த அரிசிக்கும் வேகாத அரிசிக்கும் வேறுபாடு அறியாத ஆங்கிலத்திலே கேட்கின்றாயே ?..
கருவேற்பிலை கார்ப்பிலையானதே சந்தணம் சாண்டல் ஆனது இல்லங்களில் உள்ள உணவுப்பொருட்களிலும்  பயன்பாட்டுபொருட்களிலுமே இன்றைக்கு தமிழ் இல்லை ...
மோர்னிங் பெட்டில  இருந்து எழுந்திரிச்சு டிய குடிச்சுட்டு டிபன் பண்ணிட்டு ஆபீஸ்இக்கு கிளம்பி இந்த ட்ராபிக்இல போனா மத்தியானம் ஆபீசிலேயே லஞ்ச முடிச்சிட்டன் இப்ப வீட்டுக்கு வந்திருக்கன் டயட்டா இருக்கு ஒரு டி போட்டுட்டு வா ....என்று நாகரீக தமிழில் பேசும் தமிழர்களே ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் நீங்கள் நாகரீக தமிழை பேசவில்லை தமிழன் என்ற அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றீர்கள் 
என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள் 
செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ ?....என்ற பாவேந்தருடைய பாடல்வரி என்னுள் கனலாய் இருக்கின்றது ...
தமிழன் பண்பாடே உறவுமுறை பழக்கவழக்கம் உணவுமுறை எல்லாவற்றையும் அழித்து அனாதை ஆக்க ஆசைப்படுகின்றான் ...
ருச்சிய நாட்டு அறிஞன் ஒருவன் சொன்னான் "என் மொழி நாளைக்கு சாகுமென்றால் அதற்கு முன்னரே இன்றைக்கே நான் சாக விரும்புகிறேன் என்று ..
இக்கருத்துக்கு குடைபிடிக்கும் உலக தமிழர்களே எழுந்துவருங்கள் ....நம் தமிழை உயர்த்தி பிடிப்போம் ...இல்லத்திலே மெல்ல தமிழ் இனி சாகுமா வளருமா என்று தீர்மானியுங்கள்

Friday, April 13, 2012

நான் கொன்று , வாழ்வோமா ...?



இந்த உலகத்தில் அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது
கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் . ஏனெனில்
கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு
நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, என்றாலும்,
அகந்தையோடு இருக்கும் சில மனிதர்களை பார்க்கும் போது, பரிதாபமாகத்தான்
இருக்கிறது. இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் வாழும் குட்டி மனிதன் நானே
பெரியவன். நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக்
கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

தன்னம்பிக்கை என்பது வேறு;அகம்பாவம் என்பது வேறு. என்னால்தான் எல்லாமே
முடியும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில்
தோல்வியையே தரும்.இதை எல்லாம் நாம் இன்றைக்கு கண்கூடாக பார்த்துக்
கொண்டிருக்கிறோம்.

எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும். கி.வா.ஜ.
அவர்கள் சொல்வார்கள்  ’குழம்பு குழம்பியிருக்கிறது, ரசம் தெளிவாக
இருக்கிறது."  காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது; ரசத்தில் அதுஇல்லை
என்று. (பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்றுதான்
சொல்வார்கள்) அகந்தையின் விளைவு குழப்பம்; அதன் விளவு அவசரம்;
செயல்திறன்குறைபாடு; தோல்வி! இன்னும்...இன்னும்.

நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான
காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு எல்லாம் நானே என்று
வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.

இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது.
அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல், அதில், இறுமாப்பு, ஆணவம்,
அகங்காரம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய
முட்டாள் தனம்.

நாளைக்கே நாம் இறந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். செத்த பின்பு
நடப்பதெல்லாம் நமக்கே தெரிகிறது என்றும் வைத்துக் கொள்வோம். என்ன
நடக்கும்?  நம்மை நேசிப்பவர்கள் அழுது கொண்டிருப்பார்கள், வேண்டாதவர்கள்
செத்த பின்பும் அவதூறு பேசி திரிவார்கள், அதுவும் எல்லாம் ஒன்றிரண்டு
மாதங்கள்தான்.

பின்னர் பார்த்தால்,  அனைவரும் தத்தம் அவரவர், வேலையை செய்து
கொண்டிருப்பார்கள், அப்படிஎன்றால் ,  நாம் இல்லையென்றாலும் எல்லாம்
நடந்து கொண்டுதானே இருக்கிறது. நம்மால் செய்ய முடியாத காரியங்களையும்
ஜனங்கள் அற்புதமாக செய்து கொண்டிருக்கிறார்களே! உலகம் அழகாக இயங்கிக்
கொண்டிருக்கிறதே, நாமில்லை யென்றாலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதானே
இருக்கிறது.

ஆம்! நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை நாம்தான்
எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை, எல்லோரும் கேள்வி பட்டது தான்.

மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபந்யாசம்
செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன்
 காரிலும், வண்டிகளிலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர். ஒரு ஆடு
மேய்ப்பவனுக்கு புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன்,
சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான்.
தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது. கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர்
சபையில்  இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே !
உங்களில்  யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?” என்று கேட்டார்.
ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும்,
நான் போனால்  போவேன் என்று கூறினான். சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர்
விளக்கம்  அளிக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்“ என்ற
அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு
எதுவுமில்லை, இருக்கும் காலம் வரை நன்மையை செய்து மற்றவர்களை
சந்தோஷப்படுத்தி, எப்போதும் இயந்திரத்தனமாக வாழாமல், வாழ்வின் நிஜமான
ருசிகளை அனுபவித்து, நண்பர்கள், சுற்றார்கள், உற்றார் உறவினர்கள் என்று
அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ்க்கையின் உண்மை நிலையினை அனுபவிக்கும்
மனிதனே வாழ்க்கையை நன்றாக வாழ்பவனாவான்.