சென்ற வாரம்
தன்னோட சொந்த கதையை டிரைவரிடம் புலம்பிய படி வந்தான் வேலு.
“இந்தாப்பா வேலு..உன்னோட கதை தலைவிதி எல்லாம்
கிடையாது. எல்லாம் உன திமிரு.முதல்ல நீ திருந்த பார். குடும்பத்தோடு வாழற
வழியைப்பாரு. குடிக்கு அடிமையானவன் எத்தனையோ பேர் திருந்தியிருக்காங்க.
அதிலே நீயும் ஒருத்தனாயிருக்கணும். இந்தா என் செல் நமபர்..ஏதாவது உதவி
வேணும்னா கேளு”.
தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டபடி மனைவி குழந்தையை தேட சென்றான் வேலு.
அருகில் நெருங்கிய ரயில்வே ஊழியர் கதவை பலமாகத்தட்டி “என்ன ஓசி பயணமா? டிக்கட் வாங்கலியா? திடுக்கிட்டு எழுந்த ராசாத்தி…
இல்லை டிக்கெட் இருக்கு என்று படபடப்புடன் கூறினாள் ராசாத்தி.
“தோடா..எறங்கு வண்டி கூட்ஸு க்கு போகுது..”
“பீச்சுக்கு எப்படி போகணும்?
இதோடா…இன்னா மெட்ராசுக்கு புச்சா கொயந்தைபையனை கூட்டிகினு.. தோம்மா மெட்ராஸ் நல்லவிங்களும் கெட்டவிங்களும் கலந்த ஊரு. பீச்சுல யார பாக்கணும்?
எங்க அண்ணன் பீச்சுல கடை வெச்சிருக்காரு என்றாள் ராசாத்தி.
“அட்ரஸ் இருக்கா?
“இல்ல..காந்தி சிலைக்கு பக்கத்திலே”…..என்று பயம் கலந்த நடுக்கத்தோடு சொன்னாள் ராசாத்தி.
தன் மகன் அரவிந்தையையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்டரல் ஸ்டேசனை விட்டு வெளியே வந்தாள்.
இனம் புரியா கலக்கத்தோடு கண்களில் கண்ணீரோடு மகன் அரவிந்தை பார்த்தாள்.
‘அம்மா வலிக்குது ம்மா..அப்பா போட்ட சூடு ரொம்ப வலிக்குதம்மா”…என்றான் குழந்தை அரவிந்த்.
ராசாத்தி அழுதபடி மகனை முத்தமிட்டு ரோட்டோர கடையில் பையனுக்கு 4 இட்லி வாங்கி கொடுத்தாள்.
“அம்மா..உனக்கு…”
“பசியில்லை ப்பா.. நீ சாப்பிடு”..
கடைக்காரனிடம் “ஐயா ஆஸ்பத்திரி எங்க இருக்குது?”
எதிர்புறமுள்ள அரசு மருத்துவமனையைக் காட்டினான் அந்த கடைக்காரன்.
சீட்டு பெற்றுக்கொண்டு, ஞானி MD DCH என்ற பெயர் தாங்கிய அறைக்குள் மகனை அழைத்தபடி சென்றாள்
டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்தபின் “என்னம்மா இப்படி சூடு வைச்சுருக்கீங்க? குழந்தையின்னா குறும்பு பண்ணத்தான் செய்யும்..அதுக்குப்போயி இப்படியா பண்றது? ஆமா எந்த ஊரு?”
“திருப்பூ ரு ங்க..”
“திருப்பூ ரா?” என்று கேட்டபடி டாக்டர் ராசாத்தியை நிமிர்ந்து பார்த்தார் .
“நானும் திருப்பூ ர்க்காரன் தான் ..திருப்பூ ரில் எந்த பக்கம்?”
“தென்னம்பாளையமுங்க…”
“இங்கே எதற்கு வந்தீங்க?..” என டாக்டர் முடிப்பதற்குள்,
“எங்க அண்ணன் பீச்சுல கடைவெச்சுருக்காரு….”
“ஓ அவர பாக்கவா? பையன் காலையிலே ஏதாவது சாப்பிட்டானா? ஊசி போடணும்..”
“களிம்பு மருந்து மாத்திரை எல்லாம் எழுதியிருக்கேன் போய் வாங்கிக்க..கவலைப்படாதே” என்று அவளை ஆறுதல் படுத்தினார்.
ஆஸபத்திரியிலிருந்து வெளியே வந்தாள் ராசாத்தி…
பலரிடம் அண்ணன் இருக்கும் இடத்தைப் பற்றிய விசாரிப்பிற்குப் பின், டவுன்பஸ் ஏறினாள்.
“பீச்செல்லாம் எறங்கு”…கண்டக்டர் விசிலடித்தார்.
“அம்மா காந்தி தாத்தாம்மா…”
ம..; என்றாள்.
வருடத்தில் 3 முறை மட்டுமே நமக்கு காந்தியை தெரியும்.
அதோ உழைப்பாளர் சிலை…உழைப்பாளர்களுக்காக குரல் கொடுத்த ஏழையின் சிகரம் ஜீ வா .
அங்கே இருவர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இந்த ஜீவானந்தம் இருக்காரே..ஒரே ஒரு வேட்டி சட்டையை துவைத்துப் போட்டு, அது காயும் வரை இடுப்பில் துண்டுடன் இருந்தவரைக் கண்ட கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ஜீவாவுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கிக் கொடுத்தார்.அந்த எளிமையான தலைவனின் கல்லறை அன்று சிதிலமடைந்து காலி மது பாட்டில் கழிபிடமாக மாறிக் கிடக்கிறது. கம்யூ னிஸட் காரர்கள் இதை கண்டுகொள்வது போல் இல்லை. மேடையில் உரக்க பேசினால் மட்டும் போதாது..வளர்த்;த தலைவனை தலைமுறைக்கு நினைவு படுத்த வேண்டாமா? என்று வேதனையுடன் சொல்லி;க் கொண்டிருந்தார்.”
ஒவ்வொரு கடையாக விசாரித்தாள் ராசாத்தி,
அனுதாபத்தில் பதில், அனுசரனையாக பதில், மேலும கீழும் பார்த்து பதில், நையாண்டி நக்கல் பதில்,
கடைசியில் வந்த பதில்…
‘தெரியாதே..அவர் இல்லை..”
இந்த பதிலுக்காக மாலை 6 மணிவரை கால் கடுக்க குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள்.
உழைப்பாளர் சிலை அடியே அமர்ந்து தேம்;பி தேம்பி அழுதாள்.
பித்துபிடித்தவள் போல் குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள்.
அப்பொழுது ராசாத்தி அருகே ஒரு சொகுசுக் கார் வந்து நின்றது.
“என்னம்மா ஏன் என்னாச்சு? ஏன் அழுவுற?” என்று மிடுக்காக இருந்த 50 வயது மதிக்கத்தகக ஒருவர் கேட்டார்.
தலைநிமிர்ந்த ராசாத்தி நிலைமையைச் சொன்னாள்.
“ஓ..அந்த ஆளா? அவன் என்கிட்டத்தான் வாட்ச் மேனா இருக்கான்.. காரில் ஏறு” என்று பின்கதவை திறந்து விட்டார்.
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நினைத்த ராசாத்தி..அவரை கையெடுத்துக் கும்பிட்டாள்.
பையனுடன் காரில் ஏறினாள்.
“டேய் தம்பி..முன் சீட்டுக்கு வா..அப்படியே மெட்ராசை வேடிக்கைப்பாரு..”
எதார்த்தமாக ராசாத்தி மகனை முன்சீட்டுக்கு அனுப்பினாள்.
அந்த ஆள் பையன் ஏறுவதற்கு வசதியாக முன் கதவைதிறந்துவிட்டு, அதே சமயம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தார்.
திடீரென்று கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட் கதவைத் திறக்கும் நேரத்தில், தவறி விழுந்தது.
“அடடே..பிஸ்கட் விழுந்திருச்சே…தம்பி.. கீழே குனிஞ்சு அதை எடு…”
குழந்தை பிஸ்கட் எடுக்க சென்ற போது, கார் கதவு மூடியபடி விர்ரென்று புறப்பட்டது…
“அய்யா என் குழந்தை..வண்டியை நிறுத்துங்க..என்ற கத்தினாள் ராசாத்தி….அவளால் அந்த கார் ஜன்னலையையும் திறக்க முடியவில்லை.”
“அய்யா….காலைப் பிடிச்சு கெஞ்சிக் கேக்கிறேன்….தயவுசெஞ்சு என்னை இறக்கி விடுங்கள் பெத்த வயிறு பற்றி எரியுது”…என்று வெறிப் பிடித்தவள் போல் கதறினாள் ராசாத்தி.
அந்த பாவி சாதாரணமாக சொன்னான்…
“உன் பையன் எங்கேயும் போக மாட்டான்…ஒரு பத்தே நிமிசம்…அதோ அங்கே…”
ஒரு இடத்தை காட்டியபடி காரை ஓட்டினான்.
குழந்தை அம்மா அம்மா என்று தடுமாறியபடி ஒடி வருவது மட்டும், ராசாத்திக்கு தெரிந்தது.
ராசாத்தி மற்றும் அந்த குழந்தைக்கு என்ன ஆனது?
காத்திருங்கள்.
கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு
தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
9952827529
நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.