சுட சுட செய்திகள்

Tuesday, June 26, 2012

முள்வேலி -சிறுகதை


                 தாய் தந்தை உற்றார் உறவினர் அத்தனைக்கும் சொந்தமான அன்பு இல்லத்தின் நிர்வாகி முகிலன். பல பட்டங்களை பெற்றவர்.

பெற்றவர் யார் என்று தெரியாதவர். அன்பு நிறைந்த சாலையோர இட்லிக்கடை அம்மாவால் வளர்க்கப்பட்டவர்.

பெரிய பதவியில் பல வருடம் இருந்தார். வளர்ப்பு தாய் இறப்புக்குப்பின் சேமித்த தொகையுடன், யாசித்த தொகையும் அது மட்டுமல்லரமல் எழுத்து மூலம் சேர்த்த தொகையும் சேர்ந்து, பத்து அனாதை குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அன்பு இல்லம் இன்று 50 குழந்தைகளுடன் படிப்பு, பண்பு, அன்பு, ஒழுக்கம் என முறையே வாழும் இல்லத்தை கவனித்துக்கொண்டு வருகிறார்.

“யோவ் தோட்டக்காரா…எங்கய்;யா உங்க முதலாளி.” அங்கு வந்தவர் தோட்ட வேலை செய்துக் கொண்டிருந்த முகிலனை பார்த்துக் கேட்டார்.

“ஐயா..நான்தாய்யா முகிலன்…இந்த இல்லத்தை நடத்திக் கொண்டிருப்பவன்.. தோட்டக்காரன் இன்னிக்கு லீவுங்கறதுனால நானே களத்துல இறங்கி வேலை செஞ்சுட்டு இருக்கேன். இந்த சின்ன சின்ன நெருஞ்சிமுள்ளெல்லாம், இந்த குழந்தைகள் விளையாடும் போது பாவம் குத்தி விடுது…அதான் எல்லாத்தையும் வெட்டிட்டு இருக்கேன்…சொல்லுங்கையா…என்ன வேணும்? உள்ளே வாங்க…”

“ஓ…நீ தானா அது…யோவ்..என்னை என்ன மடையன்னு நினைச்சியா…”

“ஐயா மன்னிக்கணும் இம்மண்ணில் பிறந்தவர் யாருமே மடையனோ, அறிவில்லாதவனோ இல்லை. வளர்ப்பு முறையில் தவறு நடக்காத பட்சத்தில்.அமைதியாக சொன்னார் முகிலன்.

“பேசுவய்யா பேசுவ.. ஏன்னா படிச்சவனாச்சே.. ஏய்யா இவ்வளவு பேசறயே என் நிலத்தின் வெளிப்பக்கம் ஒட்டி காம்பவுண்ட் சுவர் கட்டியிருக்கிறியே? எனக்கு அறையடி அகலம் 45 அடி நீளம் போச்சு, கணக்கு போட்டு பார் எனக்கு எவ்வளவு நஸ்டமுன்னு?” கோபத்துடன் கேட்டார் கோடீஸவரன்.

“ஐயா மன்னிக்கணும் இந்த பூமியை நீங்கள் வாங்குவதற்கு முன,; இந்த இடத்துக்காரர் இது பொது காம்பவுண்ட் சுவர்.. நீங்களே கல்லை ஒட்டி வெளிப்புறமா கட்டிக்குங்க.. எந்த வில்லங்கமும் வராதுன்னு எழுதிக் கொடுத்திருக்காங்க என்றார் முகிலன்.

யோவ்..இந்த அறையடிக்கு சேர்த்துதாய்யா பணம் கொடுத்திருக்கேன்;. இது 6 மாடி கட்டிடம். பெரிய பெரிய பணக்காரனெல்லாம் போட்டி போட்டுக்கிட்டு வீடு வாங்கறான். வீட்டு விலை என்ன தெரியுமா? 50 லட்சம். ச்சீ பக்கத்திலே வேற அனாதை இல்லம். யோவ் மேஸ்திரி ஆளை விட்டு சுவரை இடிச்சித் தள்ளு. அதோ அந்தாளுடைய ப+மியில் முள்வேலி போடு” என்றார் அந்த கோடீஸ்வரன்.

“ஐயா வேண்டாங்கய்யா..குழந்தைகள் முள் வேலிப்பக்கமா போனா கம்பிமுள் குத்தி ஏதாவது ஆயிடும் பாவம் குழந்தைகள”; என்று பணிவாக கேட்டார் முகிலன்.

“யோவ் அதை பத்தி எனக்கு கவலை யில்லை.. யோவ் மேஸ்திரி” என்றவுடன் ஆட்கள் கடப்பாறையுடன் வந்து நின்றனர்.செய்வதறியாது திகைத்து நின்றான் முகிலன்.

நகராட்சி ஜீப், மற்றும் போலிஸ் வண்டி கோடீஸ்வரன் முன் நின்றது. நகராட்சி ஊழியர், அவரிடம் கவர் ஒன்றைக் கொடுத்தார்.

பிரித்து படித்து பார்த்த கோடீஸ்வரன் வியர்க்க விறுவிறுக்க…
யாருக்கோ போன் செய்தார்…

“யோவ் வக்கில்…என்னய்யா இது? ஒண்ணு ஸ்டே வாங்கு ..இல்ல..அப்பீல் பண்ணு…”

மன்னிக்கணும் சார்…சுப்ரீம் கோர்ட்டே  போனாலும் ஒண்ணும் பண்ண முடியாது. முதலிலேயே சொன்னேன். 4 மாடி தான் அப்ரூவர் ஆயிருக்குன்னு. கண்டவனுக்கெல்லாம் காசை குடுத்து, அப்போ காரியத்தை சரி பண்ணுனீங்க.. இப்போ அரசே ஆளை அனுப்பியிருக்கு. பேசாம நீங்களே ரெண்டு மாடியை இடுச்சிடுங்க.. இல்லை நகராட்சி இடுச்சிடுச்சினா…அஸ்திவாரத்திற்கே ஆபத்தாய்டும்.
அந்த நேரத்தில் முகிலன் பக்கத்திலிருந்தவரின் செல்போன் ஒலித்தது….
“ ஆடி அடங்கும் வாழ்க்கையடா…ஆறடி நிலமே சொந்தமடா…” ரிங் டோனாக…..

கதை ஆசிரியர் திரு சுந்தரகனகு

தொடர்புக்கொண்டு உங்கள் விமர்சனத்தை சொல்லுங்கள்.
 9952827529

 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

HOTLINKSIN.COM திரட்டி said...

அருமையான சிறுகதை... கோடீஸ்வரனைப் போன்றுதான் இன்று பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள் இருக்கிறார்கள்...