சுட சுட செய்திகள்

Thursday, April 25, 2013

அரிய தமிழ் புத்தகங்கள் - தரவிறக்கம்

ரோமியோ ஜூலியட் கதை 

தமிழர்கள் இந்துக்களா? மின்நூலினைத் தரவிறக்க

போட்டோஷாப் மென்பொருளினை தமிழ் மொழியில் கற்க

நகைச்சுவைக் கதைகள்

மூன்றாம் உலக போர் -  வைரமுத்து 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, April 24, 2013

கோவையில் ஒரு சிரிப்பு மன்றம்…..ஜோக் சொல்லி அரங்கம் சிரித்தால் ரொக்க பணம்.

நண்பர்களுக்கு வணக்கம். இந்த நகைச்சுவை இருக்கே…அறுசுவையை விட ஆனந்தம் கொடுக்கிற சமாச்சாரம்.

ஆனா பாருங்க…நல்லா மத்தவங்கள சிரிக்க வைக்குற மனுசனுங்க நம்ம ஊருல ஏராளமா இருக்காங்க..அவங்கள எல்லாம் ஒண்ணா சந்திக்க வைச்சு, கோவை மக்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட நிகழ்ச்சி ஒண்ண ஏற்பாடு பண்ணனும் ன்னு நானும் என் நண்பர்களும், நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

இப்பத்தான் அதுக்கு நேரம் வந்திருக்கு.

விசயம் என்னன்னா?

பெரிய அரங்கத்தில், கோவையின் மக்கள் கூடியிருப்பாங்க.

மேடையின் முன்னால் மிக முக்கிய நகைச்சுவை நடுவர்கள் மூணு பேர் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்க.

நீங்க பண்ண வேண்டியது ஒண்ணுதான்.

நல்ல ஜோக்கை எடுத்து விடணும். அதைக் கேட்டு அரங்கமே சிரித்தால்…நடுவர்கள் பச்சை விளக்கை போடுவாங்க. அப்படி போட்டுட்டாங்கன்னா உங்க அக்கவுண்டுல 100 ரூபாய் போட்டாச்சுன்னு அர்த்தம்.

எவ்வளவுக் கெவ்வளவு பச்சை லைட் எரியுதோ அந்த அளவுக்கு உங்களுக்கு பணம் கிடைக்கும்.

ஒரு வேளை கொஞ்சமா சிரிப்பு வந்து, பரவாயில்லை…இன்னொரு வாய்ப்புக் கொடுத்து பார்ப்போம் ன்னு நடுவர்கள் நினைச்சாங்கன்னா..மஞ்சள் லைட்டை போடுவாங்க.

எல்லாம் இந்த ஆளு இதுக்கு சரிப்பட்டு வர மாட்டாருன்னு நினைச்சாங்கன்னா அதாவது மொக்கை போட்டுட்டு இருந்தாருன்னா உடனே சிவப்பு லைட்டை போட்டு கீழே அனுப்பிச்சுருவாங்க. பணம் கிடையாது.
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

என்னங்கண்ணா….ம்;…அதுவா…வர்ற ஜூன் மாசம் அந்த நிகழ்ச்சியை நாங்க ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

ம்…இன்னொரு விசயம்…இந்த நிகழ்ச்சி ஒரு லோக்கல் டிவியில லைவ்வா ஒளிபரப்பாகும்.

அப்புறம் என்ன யோசனை,?

மேற்படி தகவல்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் திரு.லஷ்மிகாந்தன் 9566644997  அவர்களையும், திரு.ஒட்டக்கூத்தன் அவர்களையும் 9842112666 இப்போதே தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவு செஞ்சுக் கோங்க.

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, April 18, 2013

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை

பாஸ்…

இந்த ARTICLE ல, நான் சொல்ற பல விசயங்கள், உங்களுக்கும் நடந்திருக்கும். தயவுசெஞ்சு இதை நான் எழுதுனதா நினைக்காதீங்க. நீங்கதான் இப்படி ஒரு ARTICLE ல எழுதி, படிச்சுட்டு இருக்கீங்க…! என்ன சரிதானே..!

இத நான் ஏன் சொல்றேனா..நாம அன்றாடம் பார்த்த காட்சிகளை, (என்ன பெரிசா பார்த்துரப்போறோம்..? பஸ்ல, ட்ரெயின்ல, அப்புறம் இன்னும் எக்ஸட்ரா எக்ஸ்ட்ரா பயணம் செய்யும் போது, பேங்க்ல, ரேசன் கடையில இப்படி பல இடங்களில..ம் அப்புறம் முக்கியமா நம்ம டாஸ்மாக்குல.. ) பார்த்த மனிதர்களை எனது கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

 இதுல ஒரு அதிசயம் இருக்கு பாஸ். அதாகப்பட்டது…என்னவென்றால்..அடடா நாம நினைச்ச மாதிரியே இவனுமில்ல சிந்திச்சிருக்கான் பயபள்ள…(ம்க்கும்…சிந்திச்சிட்டாலும்..) அட்லீஸ்ட் மனசுல தோணும் பாஸ். நீங்களும் சில இடங்களிலெல்லாம், யாரையாவது பார்த்து ஏதாவது ஒரு கேள்வி கேக்கணும்ன்னு நினைச்சிருப்பீங்க இல்ல…? நானும் தான் …

அந்த கேள்வியும், அதற்க்கான காரணமும் தான் இந்த ARTICLE ல, சாராம்சம் பாஸ்.

அடுத்ததா ஒரு முக்கியமான விசயம்….
அதாகப்பட்டது, இந்த விசயங்களெல்லாம் என் வாழ்வில் இருந்து நான் கற்றுக்கொண்டது. அதனால் நான் (நான் என்பதை ஒழின்னு சொல்லி எத்தனை ஞானிகள் சொல்லியும் கேக்கலயே) மற்றும் என்னை சார்ந்தவர்கள் பற்றிய ஒரு நீரோட்டம் கூடவே வரும். யாரும் என் சுயசரிதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று தப்பாக எண்ணிவிட வேண்டாம்.(ஒரு தன்னடக்கம் தான்பா) என்ன ரெடியா பாஸ்…போலாமா….?

(1)சின்ன வயசுல ஒரு செய்தித்தாள் 

எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து, சும்மா ஒரு 26 வருசமா NEWS பேப்பர் வாங்குற பழக்கம், எங்க வீட்ல உண்டு. ஆனா என்னமோ பாருங்க..இந்த NEWS வாசிக்கனும்னு எனக்கு தோணுனதே இல்லை. நீ NEWS வாசிக்கலைனா என்ன உலகம் மாறிகிட்டு சுத்துதான்னு என்னை நக்கல் பண்ணி என் மனசை நோகடிச்சுராதிங்க பாஸ். அது ஏனோ தேவையில்லாத விசயம் என்று தான் எனக்கு தோணுச்சு. ஆனா பாருங்க..எங்க அப்பா இருக்காரே..அவர் ஒரு அரசியல் பைத்தியம்.இந்த பேப்பரை படிச்சுட்டு அவர் கொடுக்கிற அளப்பரைக்கு ஒரு அளவே இருக்காது. 

பேப்பர் படிக்கும் போது எவனாவது சிக்குனா பாவம் அவன் செத்தான்...இந்த இந்திராகாந்தியை ஏன் தெரியுமா சுட்டாங்க?..பஞ்சாப் காரன் யார் தெரியுமா? அவன் என்ன செஞ்சான் தெரியுமா ன்னு பல கேள்வியைக் கேட்டு சும்மா சுத்த உட்ருவாரு எங்கப்பா. கன்னித்தீவுன்னு ஒரு சித்திரகதை ஒன்னு வருமே நீங்க பாத்திருப்பீங்க..அடுத்தநாள் என்னவா இருக்கும் அப்படிங்கறதை அப்படியே முதல்நாளே சொல்லிருவாரு. (அட..விடுங்க பாஸ்…சின்ன பையனா இருந்த எனக்கு அது பெரிய விசயம் தானே). சொன்னா நம்பமாட்டீங்க…அரசியல் கூட்டணி இந்த மாசம் மாறிடும் அப்படீம்பாரு. அப்படியே நடக்கும். அவருடைய அந்த அசாத்திய அறிவைக் கண்டு பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கெல்லாம் உச்சி குளிர்ந்து அப்படியே மெய்சிலிர்த்து போய்டுவேன். அடடா எனக்குன்னு ஆண்டவன் அறிவான அப்பாவை அனுப்பி வைச்சிருக்கானே என்று பிள்ளையாரை நாலு சுத்து எக்ஸ்ட்ராவாக்கூட சுத்திருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி இப்ப விசயத்துக்கு வர்ரேன்.

இந்த NEWS பேப்பர்தான் அந்த அரசியல் அறிவுக்கு காரணமான்னு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் நான் கண்டுபிடித்தேன். முதல் பக்கத்திலிருந்து அடுத்த எட்டு பக்கமும் படித்து முடித்து விட்டால் ஜென்ரல் நாலேட்ஜ் வந்துரும்ன்னு நான் முடிவு கட்டிட்டேன். (நல்லா படிச்சிருந்தேனா IAS பாஸ் பண்ணியிருக்கவும் வாய்ப்பிருந்திச்சு..அட நம்புங்க பாஸ்.)
அங்க ஆரம்பிச்சு பாஸ்;….நான் NEWS பேப்பர் படிக்க ஆரம்பிச்சது.

காலையில சூடா காபியோட(பல் தேய்க்காமல் தான்…என்னது..? சும்மா இருங்க நீங்க மட்டும் எப்படி..?) இந்த NEWS பேப்பரும் என் கைக்கு வந்துரனும்..இல்லைன்னா.. அந்த நாள் என் வீட்டுக்கு சனிய நாள். காலையிலேயே என் ரணகளம் ஆரம்பிச்சுரும்.

மடிப்பு கலையாமல் இருக்கும் NEWS பேப்பரை அப்படியே கையில் எடுத்து, அப்படியே ஒரு முகர்ந்;து பார்த்து அந்த பேப்பர் வாசனையை ரசித்து விட்டு, முதல் பக்கத்தை அப்படியே விரித்து, ம்….என்ன இன்னிக்கு விசேசம்..? என்று NEWS பேப்பரை மேய்கிற அனுபவமே தனிதான் பாஸ்.

சும்மா சொல்லக்கூடாது..நான் NEWS பேப்பர்களை இப்படி மனம் குளிர்ந்து பாராட்டுறேனா..அதுல படிக்கும் படியான நல்ல நல்ல செய்திகள் இருந்துச்சு. இன்னிக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது.தேசத்தலைவர்களின் வரலாறுகளும், நல்ல கட்டுரைகளும் அதிகமாக அச்சாகியிருக்கும்.கவர்ச்சி படங்கள் ஏதோ கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா…கொஞ்சம் நல்ல விசயங்களை, பொது அறிவை கற்றுக் கொடுத்தது அந்த செய்தி தாள்கள். 

எண்ணிபார்த்தால் ஒரு அஞ்சாறு விதமான பேப்பர்தான் அன்றைக்கு இருக்கும் ன்னு நினைக்கிறேன். அன்னிக்கு எங்கங்க இருந்திச்சு இந்த டிவியும், மற்ற விசயமும்?. எல்லாமே பேப்பர்தான். 

ம்...அப்புறம் ரேடியோன்னு ஒண்ணு இருந்துச்சில்ல? அந்த காமெடியை நான் அடுத்ததா சொல்லவா?

(2) செய்திகள் வாசிப்பது....ரேடியோவும்.... டி வி யும் 

ஆமாம் பாஸ் ரேடியோ ன்னு ஒண்ணு ரொம்ப முக்கியமான சாதனம்...ம்....ரேடியோன்னு ஒண்ணு இருந்திச்சு. அவன் கொடுக்கிற அலைவரிசையில, முள்ளை நகர்த்...தி கொண்டு போய் சேர்க்கறக்குள்ள மனசபுள்ள நரம்பு அந்துரும், டொய்ங்ன்னு ஒரு சத்தம் மட்டும் கேட்குமே தவிர சரியா பாட்டு கேக்காது. அப்படியே கேட்டாலும், பாட்டு ஒரு பக்கம், MUSIC ஒரு பக்கம்னு இழுத்துக்கிட்டு கிடக்கும். சரி செய்தியாவது கேப்போம்ன்னு ஸ்டேசன் பக்கமா முள்ளை நகர்த்தி, டொய்ங் சத்தமில்லாமல், இரைச்சல் இல்லாம்ல் சரியான இடத்தில் வைத்துப் பார்த்தால், இத்துடன் செய்திகள் முடிவடைகின்றன. மீண்டும் ஆல் இந்திய வானொலியின் தமிழ் ஒலிபரப்பிற்கு மாலை சந்திப்போம் ன்னு சத்தம் வரும். என்ன கொடுமை சார் இது.

டிவியின்னு ஒண்ணை நான் என் 16 வயசுலேதான் பார்த்தேன். அதுவும் என் பிரெண்ட் ரெனால்டு வீட்டுல.அவன் வீடு என் வீட்டிலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். சும்மா ஒரு பிளாக் அண்டு ஒயிட் டிவிதான். இன்னைக்கு அரசாங்கம் நமக்கு கொடுத்திருக்கிற கலர் டிவியெல்லாம் அன்னைக்கு இருந்திருந்தா அது ரொம்ப பெரிசு, சொகுசு.

சிலுவை மாதிரி ஒரு கம்பத்தை ஊணி, அதுல இருந்து ஒயரை டிவிக்கு கனெக்சன் கொடுத்திருந்தார்கள். அது என்னடா ன்னு கேட்டேன். அதுல இருந்துதான்டா மடையா படம் வரும் ன்னான் என் பிரெண்ட். சரியா போச்சு போ..எல்லா மேட்டரும் இதுலதான் இருக்குதா..ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு நாள் அதுல நான் தெரியாம சாஞ்சு நின்னதுக்கு என்னை என்ன பேச்சு பேசுனான் தெரியுமா பாஸ்… ஐய்யய்யோ..என்னமோ அது திரும்பி நின்னா படம் தெரியாதாம்..சத்தம் வராதாம். ஏதோ ஃபீரிகன்சியாம் என்னனோவோ சொல்லி என்னை அவமானப்படுத்திட்டான் பாஸ’

அதுல நான் தமிழ் படமோ, பாடலோ பார்த்த வரலாறே இல்லை.

அய்யய்யோ அந்த கொடுமையை நான் நாளைக்கு சொல்றேன்....

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, April 17, 2013

காதல்

காதல்

எந்த ஒரு மனிதனையுமே விட்டு வைக்காத ஒரு உணர்வு இது.

சராசரியாக 16 வயதினிலேயே பல மனக் கிளைகளில் இது வந்து அமர்ந்து விடுகிறது.

பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படுகின்ற ஒரு இனக் கலவரம் ஒரு ஈர்ப்புவிசை.

கனவுலகை காட்டுகின்ற அதிசய உணர்வு.

எல்லோருக்ககும் காதல் வருகிறது. ஆனால் அத்தனை பேரும் காதலிப்பதில்லை.

காதல் என்பது காட்டாற்று வெள்ளம். அதில் கரை சேர முடியாமல் குறைப்பட்டு போனவர்கள் ஏராளம்.

எகிப்து நாட்டின் இளவரசி கிளியோட்பாட்ராவை அழகையெல்லம் பிரம்மனால் அள்ளிக் கொடுக்கப்பட்ட அந்த அழகு தேவரைக்கும் காதல்; வந்தது. ஆண்டனி என்கிந்ற படைத்தளபதியிடம் தன்னை இழந்தாள். ஆண்டனியும்சதா அவள் நினைவுகளிலேயே கட்டுண்டு கிடந்தான்.

எதிரி படையுடன் போர் புரிந்தபோது தன் நினைவுகளையும், உணர்வுகளையும் இழந்ததன் காரணமாக தோற்றான். வெட்டுண்டான். இறந்து போனான்;. இதை கேள்விப்பட்ட கிளியோட்பாட்ரா அவனில்லாத இந்த உலகம் எனக்கு தேவையில்லை என்று விசம் மிக்க விரியன் பாம்பை தன் மார்பில் மீது படரவிட்டு மடிந்து போனாள்.

அம்பிகாபதி என்கின்ற கவிஞன், அமராவதி என்கின்ற இளவரசியை காதலித்தான். புல்லருவிகள் இடைமறித்ததன் விளைவால் சேர முடியவில்லை. காதல் சமாதியாக்கப்பட்டது.

ரோமியோ, ஜூலியட், லைலா-மஜ்னு,தேவதாஸ்-பார்வதி,இப்படி எந்த ஒரு காதல் ஜோடியும் இணைந்து வாழ்ந்த சரித்திரம் இல்லை.

ஏன் காதலுக்கு இந்த சோதனை.?

ஒன்று-இருவருக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு

இரண்டு- சமுதாய ஏற்றத்தாழ்வு.

சமுதாய பொருளாதார நிலையில் இருவருக்கும் சமமான இடமிருந்தால் இணைப்பு என்பது சாத்தியம்.

ஆனால் காதல் அப்படி உருவெடுப்பதில்லையே?

தாழ்த்தப்பட்ட மதுரைவீரனுக்கும்,உயர்ந்த சாதி பொம்மிக்கும் தானே காதல் வருகிறது.

வறுமையில் வாடிய கவிஞனுக்கும்,மாளிகையில் வசிக்கும் அமராவதிக்கும் தானே காதல் வருகிறது.

பிறகு எப்படி சாத்தியமாகும்.?

வரலாற்று சுவடுகளை திரும்பி பார்க்கும் போது,சில தேவைகளுக்காக காதல் பயன்பட்டடிருக்கிறது.

ஒன்று இலக்கியம் எழுதப்படுவதற்காக…

இன்னொன்று சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குவதற்காக…

முதல் ஒன்றை நாம் சாதித்து விட்டோம். இரண்டாவதுதான் சாத்தியமாக்க முடியவில்லை.

இலக்கியத்தில்  காதல் என்பது புனையப்பட்டதாக இருக்கலாம்.

ஏனென்றால் அது படிப்பவர்களின் உணர்ச்சியை கிளறிவிடுவதற்காக…

அது அதை எழுதும் ஆசிரியரின் சுயநலம்.

அந்த உணர்ச்சி கிளறல்களின் வாயிலாக நமது நெஞசத்தில் எங்கோ அடைந்து கிடக்கிந் காதலை நாம் அடையாளம் காணுகின்றோம்.. இன்பாம் கொள்ளுகிறோம்.

அதனால் காதல் இலக்கிய காவியங்களில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயமில்லை.

ஆனால் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குதல் என்பதில் தான் நாம் கண்ட தோல்வி;.

சுற்றத்தாரும், உற்றதாரும் காதலை ஏற்பதில்லை. யாரோ சில சுயநலமிகளால் பொய் யாக  புனையப்பட்ட சாதிய கட்டமைப்புகளிலிருந்து இறங்கி வர மறுக்கிறான்.

இதுதான் நாம் கண்ட தோல்விக்கு பி ள்ளையர் சுழி.

ஆனால் இ;னறைக்கு காதல் என்பது காமத்திற்குள் அடைப்பட்டு விட்டது.

காதலின் புனிதம், புரியாதவர்கள்தான் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். மீசை முளைக்காத பையனுக்கும், வயதுக்கே வராத பெண்ணுக்கும் இன்றைக்கு காதல் வருகிறது.

அது காதலா, இல்லை

உணர்வுகளை தேடிக் கொள்கிற உடலாசையை தனித்து கொள்கிற ஒரு கருவி.

பொருளாதாரமே இல்லாதவனுக்கு காதல் வந்து பயனில்டலை.
சொந்த காலில் நின்று தன்னையே காப்பாற்ற தெரியாவதவனுக்கு காதல் தேவையே இல்லை. அந்த எண்ணமே வரக்கூடாது.

ஆனால் இன்றைக்கு நாம் காணுகிற நிலமையே வேறு .

பள்ளிகளில் விடுமுறைச் சொல்லிவிட்டு கோயில் படிகடடுகளில் கட்டுண்டு கிடப்பவர்கள்.

கல்லூரி கல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு, காம கலவியை தேடும் வக்கிர சோடிகள்…

எழும்புத்துண்டை தேடும் நாயைப் போல உடலுக்கு தீனி போட, புதர்களையும் ,மர மறைவுகளையும் தேடும் வக்கிர காமுகர்கள்.

இப்படித்தான் இவர்கள் காதலிப்பதால் பயன் ஏதாவது உண்டா,?

உள்ளங்கள் இணையாமல் உடல் மட்டும் இணைவதால் வாழ்வுக்கு பொருளுண்டா,?

Sunday, April 14, 2013

நினைத்தது நிறைவேற மந்திரங்கள்

Saturday, April 6, 2013

தாய்

தாய் மரத்தை புறக்கணித்த எந்த விழுதுகளும் வாழ்ந்ததாய் சரித்திரமில்லை.

 குழந்தையில் தாயின் மார்பகத்தை மட்டுமே பார்த்த கண்கள்
இளைன்ஜெனாகிய பிறகு அவள் கண்களின் படிந்துள்ள சோகத்தை பார்க்க
மறுக்கிறது. ஒரு தாய் எழுதுகிறாள். தன மகன் தங்களை தவிக்கவிட்டு போனதை எண்ணி வருந்தி...

"மகனே நீ பிறந்த போது, வீட்டுக்கு ஒரு தென்னையும் நட்டோம்.
உனக்கு பாலூர்றினேன்
 தென்னைக்கு நீருற்றினேன் ,
 நீ இடம் மாறி எங்கேயோ 
கண் காணாத இடத்திற்கு சென்று விட்டாய். 
ஆனால் அது இன்று வரை என் கூடவே இருக்கிறது.
 நீ ஒருநாள் உல்லாசத்தில் இருக்கும்
 வேளையில் ஒரு கடிதம் வரும். 
உன் தாய் இறந்து விட்டால் என்ற செய்தியை அது தரும்.
 நீ ஒரு வேலை வர தாமதமானாலும்
 இதோ இந்த தென்னைதான் எனக்கு 
பாடையாக பாசத்தை காட்டும். "

இது கவிதை மட்டுமல்ல பல தாய் மார்களின் கண்ணீர் துயரம் சோகம் எல்லாமே.

ரத்தத்தை கேட்கின்ற பிள்ளைகள் உண்டு.
இன்றைக்கு அவர்கள் இதயத்தையே அறுத்து தா என்கிறார்கள்.
இருபது வயது வரை தாயோடு அவனிருந்த பாசவலை அதன் பிறகு அறுபட்டு போகிறது.

உணர்வுகளை வேட்டையாடும் ஓநாய்களாக இன்றைக்கு பிள்ளைகள் மாறி கொண்டிருகிறார்கள்.

வள்ளலாரும், ஆதி சங்கரரும் தாய் விட்டு பிரிந்த தனயர்கள் தான். என்றாலும் தாயின் உருவத்தை மனதிலே வரைந்து கொண்டவர்கள். அதனால் தான் தாயின் முடிவு காலம் தெரிந்து, முன்னமே தாயிடம் சென்றவர்கள். பற்று அற்ற துறவிகள் எந்த பாசத்தையும் உறவையும் துண்டித்து விட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், அவர்களால் தாயின் உறவை துண்டிக்க முடியவில்லை. ஆனால் நாம் தாம் இப்போது துறவிகளாகி கொண்டு இருக்கிறோம்.

தன குழந்தையுடன் தாய் உறங்கி கொண்டு இருக்கிறாள். கணவன் மனைவியை எழுப்ப அருகே வருகிறான். குழந்தை நல்ல தூக்கத்தில் இருக்கிறது. மனைவியை அதிர்ந்து கூப்பிட்டால் ஒருவேளை குழந்தையின் தூக்கம் களைந்து விடுமென்று எண்ணி, அவை மெல்லிய பூவை கொண்டு எழுப்ப முயற்சிக்கிறான். இரண்டு முறை பூ அவள் மீது எறியப்பட்ட போது அது தெரியாமல் தன்னிலை மறந்து அவள் தூங்கினால். அவளை எழுப்ப முடியவில்லை. மீண்டும் ஒரு பூவை எறிகிறான். ஆனால் அது குழந்தை மீது படுகிறது. உடனே தாயின் கரங்கள் தன குழந்தை மீது விழுந்த பூவை தன்னிலை மறந்து அகற்றுகிறாள். அது தான் தாய்க்கே உரித்தான பெருமை.

இன்னொரு கதை கூட உண்டு.

கட்டில் பூ ஒருத்தி தன கட்டுக்குள் இருந்தவனை
 எட்டி காயாக்கி போட்டதுடன் 
எனக்கொரு காணிக்கை தர வேண்டுமென்றால். 
என்ன வென்று கேட்டான். வெட்டி வந்து உன் தாயின்  இதயத்தை 
என் கையில் வைத்திடுக என்றாள். அவனும் சென்றான். 
பெட்டிக்குள் மணி போல வைத்து  மகனை காப்பாற்றும்  மாதாவை, 
குட்டி குடிலன் போல அம்மகனே கொன்றழிக்கும் காலமிது.
நெட்டி போல் நுரைபோல் தலை நரைத்த தாயின் இதயத்தை ரொட்டி போல் கொத்தியே கொண்டோடி வந்தான். 
எட்டி வைத்த  அடி சறுக்கி கிழே விழுந்தான். 
பட்ட அடி பலமோ மகனே? ஐயோ என்று வெட்டுண்ட தாயாரின் இதயம் வெட்டவெளியில் கிடந்து அலறியதாம் .

இப்படி ஒரு   கதை உண்டு.

அதுதானே தாயன்பு?

அதனால் தான் இலட்ச கணக்கில் யூதர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட , சாகும் நேரத்தில் தாயின் புகை படத்தை தன மார்பில் வைத்து பார்த்து கொண்டே தன நெற்றியில் துப்பாக்கி வைத்து  தற்கொலை செய்து கொண்டான். அந்த நிகழ்ச்சித்தான் அவனும் மனிதன் தான் என்பதை நமக்கு காட்டியது.

ஆயிரம் கிளைகளாக பல உறவுகள் தோன்றினாலும், அடி மூலம் என்னவோ அது தாயின் உறவு மட்டும் தான்.

தாயை மறந்த பல தனயர்களால்தான் பல முதியோர் இல்லங்கள் இந்த பாவப்பட்ட இந்தியாவில் முளைத்தன.

என்னை பாத்தித்த கவிதை ஒன்று உண்டு.

'ஒரு முதியோர்  இல்லத்தில் இப்படி எழுதபட்டிருந்ததாம்

"இது ஒரு மனித காட்சி சாலை...எப்போதாவது சில மிருகங்கள்  வந்து பார்த்துவிட்டு போகும்"

அன்பையும், பாசத்தையும் போதித்த இந்த இந்திய தேசத்தில் பாவம் பல தாய்மார்கள் முதியோர்  இல்லத்தில்.

இருக்கும் ஒரே ஒரு தாயின், புன்னகையை கூட நாம் பறித்து விடுகிறோமே ! இதை விட ஒரு பாவ செயல் வேறு எதுவும் இல்லை என்றே கருதுகிறேன்.

தாயால்  பல பேர் கோடி நாட்டி வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் உண்டே தவிர , வீழ்ந்ததாய்  வரலாறு இன்னும் எழுதப்படவில்லை.

கெட்ட மகன்கள் உண்டே தவிர கேட்ட தாய் என்று இதுவரை யாருமே இருந்ததில்லை.

ஒரு தாய் வாங்கிய சபதம் தான் ஒரு மகாத்மாவை உருவாகியது.

ஒரு தாய் ஊட்டிய வீரம் தான் ஒரு சிவாஜியை உருவாகியது,

ஒரு தாய் ஊட்டிய இசைதான் ஒரு இளையராஜாவை உருவாகியது. பல வரலாற்று நாயகர்கள் உருவாகியது இப்படித்தான்.

நேற்றைக்கு  வந்து, இன்றைக்கு  முடிவதில்லை தாய் பாசம். தொப்புள் கோடி அறுப்பட உடனேயே தாய்  வேறு, குழந்தை வேறு தான் ஆனாலும் பாசக்கொடி அறுபட்டு போவதில்லை.

எனக்கு மட்டும் தாயின் கருப்பைகுள்ளேயே  என் வாழ்நாள்  முழுவதும் இருக்க வரம் கிடைத்திருந்தால், ஒரு ஆயுள் கைதி போலவே அந்த கருப்பு சிறையில் சுதந்திரமாய் இருந்திருப்பேன்.

வெறும் துன்பங்களும் கனவுகளையும் மட்டும் சுமந்து வாழும் மனித பிறவிக்கு தாயன்பு மட்டுமே ஆறுதல் தரும்.

அதற்காக அவளுக்கு விருந்து வைத்து விழா எடுக்க வேண்டியதில்லை. அம்மா என்கின்ற வார்த்தையை கேட்டாலே அவள் பேரின்பத்தை அடைந்திடுவாள்.

அவள் தலையில் நரை விழும் போதாவது அன்பெனும் அஸ்திரத்தை அவளிடம் காட்டுங்கள். ஏனென்றால் அது அவள் அஸ்தியை  மோட்சமாக்கும் வலிமையை கொண்டிருக்கும்..

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, April 2, 2013

நடப்பு நிகழ்வுகள் தரவிறக்கம்

நடப்பு நிகழ்வுகள் 2011

நடப்பு நிகழ்வுகள் 2012 ஆங்கிலம் 

நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.