சுட சுட செய்திகள்

Thursday, April 18, 2013

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை


பாஸ்…

இந்த ARTICLE ல, நான் சொல்ற பல விசயங்கள், உங்களுக்கும் நடந்திருக்கும். தயவுசெஞ்சு இதை நான் எழுதுனதா நினைக்காதீங்க. நீங்கதான் இப்படி ஒரு ARTICLE ல எழுதி, படிச்சுட்டு இருக்கீங்க…! என்ன சரிதானே..!

இத நான் ஏன் சொல்றேனா..நாம அன்றாடம் பார்த்த காட்சிகளை, (என்ன பெரிசா பார்த்துரப்போறோம்..? பஸ்ல, ட்ரெயின்ல, அப்புறம் இன்னும் எக்ஸட்ரா எக்ஸ்ட்ரா பயணம் செய்யும் போது, பேங்க்ல, ரேசன் கடையில இப்படி பல இடங்களில..ம் அப்புறம் முக்கியமா நம்ம டாஸ்மாக்குல.. ) பார்த்த மனிதர்களை எனது கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

 இதுல ஒரு அதிசயம் இருக்கு பாஸ். அதாகப்பட்டது…என்னவென்றால்..அடடா நாம நினைச்ச மாதிரியே இவனுமில்ல சிந்திச்சிருக்கான் பயபள்ள…(ம்க்கும்…சிந்திச்சிட்டாலும்..) அட்லீஸ்ட் மனசுல தோணும் பாஸ். நீங்களும் சில இடங்களிலெல்லாம், யாரையாவது பார்த்து ஏதாவது ஒரு கேள்வி கேக்கணும்ன்னு நினைச்சிருப்பீங்க இல்ல…? நானும் தான் …

அந்த கேள்வியும், அதற்க்கான காரணமும் தான் இந்த ARTICLE ல, சாராம்சம் பாஸ்.


அடுத்ததா ஒரு முக்கியமான விசயம்….
அதாகப்பட்டது, இந்த விசயங்களெல்லாம் என் வாழ்வில் இருந்து நான் கற்றுக்கொண்டது. அதனால் நான் (நான் என்பதை ஒழின்னு சொல்லி எத்தனை ஞானிகள் சொல்லியும் கேக்கலயே) மற்றும் என்னை சார்ந்தவர்கள் பற்றிய ஒரு நீரோட்டம் கூடவே வரும். யாரும் என் சுயசரிதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று தப்பாக எண்ணிவிட வேண்டாம்.(ஒரு தன்னடக்கம் தான்பா) என்ன ரெடியா பாஸ்…போலாமா….?


(1)சின்ன வயசுல ஒரு செய்தித்தாள் 

எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து, சும்மா ஒரு 26 வருசமா NEWS பேப்பர் வாங்குற பழக்கம், எங்க வீட்ல உண்டு. ஆனா என்னமோ பாருங்க..இந்த NEWS வாசிக்கனும்னு எனக்கு தோணுனதே இல்லை. நீ NEWS வாசிக்கலைனா என்ன உலகம் மாறிகிட்டு சுத்துதான்னு என்னை நக்கல் பண்ணி என் மனசை நோகடிச்சுராதிங்க பாஸ். அது ஏனோ தேவையில்லாத விசயம் என்று தான் எனக்கு தோணுச்சு. ஆனா பாருங்க..எங்க அப்பா இருக்காரே..அவர் ஒரு அரசியல் பைத்தியம்.இந்த பேப்பரை படிச்சுட்டு அவர் கொடுக்கிற அளப்பரைக்கு ஒரு அளவே இருக்காது. 

பேப்பர் படிக்கும் போது எவனாவது சிக்குனா பாவம் அவன் செத்தான்...இந்த இந்திராகாந்தியை ஏன் தெரியுமா சுட்டாங்க?..பஞ்சாப் காரன் யார் தெரியுமா? அவன் என்ன செஞ்சான் தெரியுமா ன்னு பல கேள்வியைக் கேட்டு சும்மா சுத்த உட்ருவாரு எங்கப்பா. கன்னித்தீவுன்னு ஒரு சித்திரகதை ஒன்னு வருமே நீங்க பாத்திருப்பீங்க..அடுத்தநாள் என்னவா இருக்கும் அப்படிங்கறதை அப்படியே முதல்நாளே சொல்லிருவாரு. (அட..விடுங்க பாஸ்…சின்ன பையனா இருந்த எனக்கு அது பெரிய விசயம் தானே). சொன்னா நம்பமாட்டீங்க…அரசியல் கூட்டணி இந்த மாசம் மாறிடும் அப்படீம்பாரு. அப்படியே நடக்கும். அவருடைய அந்த அசாத்திய அறிவைக் கண்டு பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கெல்லாம் உச்சி குளிர்ந்து அப்படியே மெய்சிலிர்த்து போய்டுவேன். அடடா எனக்குன்னு ஆண்டவன் அறிவான அப்பாவை அனுப்பி வைச்சிருக்கானே என்று பிள்ளையாரை நாலு சுத்து எக்ஸ்ட்ராவாக்கூட சுத்திருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி இப்ப விசயத்துக்கு வர்ரேன்.

இந்த NEWS பேப்பர்தான் அந்த அரசியல் அறிவுக்கு காரணமான்னு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் நான் கண்டுபிடித்தேன். முதல் பக்கத்திலிருந்து அடுத்த எட்டு பக்கமும் படித்து முடித்து விட்டால் ஜென்ரல் நாலேட்ஜ் வந்துரும்ன்னு நான் முடிவு கட்டிட்டேன். (நல்லா படிச்சிருந்தேனா IAS பாஸ் பண்ணியிருக்கவும் வாய்ப்பிருந்திச்சு..அட நம்புங்க பாஸ்.)
அங்க ஆரம்பிச்சு பாஸ்;….நான் NEWS பேப்பர் படிக்க ஆரம்பிச்சது.

காலையில சூடா காபியோட(பல் தேய்க்காமல் தான்…என்னது..? சும்மா இருங்க நீங்க மட்டும் எப்படி..?) இந்த NEWS பேப்பரும் என் கைக்கு வந்துரனும்..இல்லைன்னா.. அந்த நாள் என் வீட்டுக்கு சனிய நாள். காலையிலேயே என் ரணகளம் ஆரம்பிச்சுரும்.

மடிப்பு கலையாமல் இருக்கும் NEWS பேப்பரை அப்படியே கையில் எடுத்து, அப்படியே ஒரு முகர்ந்;து பார்த்து அந்த பேப்பர் வாசனையை ரசித்து விட்டு, முதல் பக்கத்தை அப்படியே விரித்து, ம்….என்ன இன்னிக்கு விசேசம்..? என்று NEWS பேப்பரை மேய்கிற அனுபவமே தனிதான் பாஸ்.

சும்மா சொல்லக்கூடாது..நான் NEWS பேப்பர்களை இப்படி மனம் குளிர்ந்து பாராட்டுறேனா..அதுல படிக்கும் படியான நல்ல நல்ல செய்திகள் இருந்துச்சு. இன்னிக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது.தேசத்தலைவர்களின் வரலாறுகளும், நல்ல கட்டுரைகளும் அதிகமாக அச்சாகியிருக்கும்.கவர்ச்சி படங்கள் ஏதோ கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா…கொஞ்சம் நல்ல விசயங்களை, பொது அறிவை கற்றுக் கொடுத்தது அந்த செய்தி தாள்கள். 

எண்ணிபார்த்தால் ஒரு அஞ்சாறு விதமான பேப்பர்தான் அன்றைக்கு இருக்கும் ன்னு நினைக்கிறேன். அன்னிக்கு எங்கங்க இருந்திச்சு இந்த டிவியும், மற்ற விசயமும்?. எல்லாமே பேப்பர்தான். 

ம்...அப்புறம் ரேடியோன்னு ஒண்ணு இருந்துச்சில்ல? அந்த காமெடியை நான் அடுத்ததா சொல்லவா?


(2) செய்திகள் வாசிப்பது....ரேடியோவும்.... டி வி யும் 

ஆமாம் பாஸ் ரேடியோ ன்னு ஒண்ணு ரொம்ப முக்கியமான சாதனம்...ம்....ரேடியோன்னு ஒண்ணு இருந்திச்சு. அவன் கொடுக்கிற அலைவரிசையில, முள்ளை நகர்த்...தி கொண்டு போய் சேர்க்கறக்குள்ள மனசபுள்ள நரம்பு அந்துரும், டொய்ங்ன்னு ஒரு சத்தம் மட்டும் கேட்குமே தவிர சரியா பாட்டு கேக்காது. அப்படியே கேட்டாலும், பாட்டு ஒரு பக்கம், MUSIC ஒரு பக்கம்னு இழுத்துக்கிட்டு கிடக்கும். சரி செய்தியாவது கேப்போம்ன்னு ஸ்டேசன் பக்கமா முள்ளை நகர்த்தி, டொய்ங் சத்தமில்லாமல், இரைச்சல் இல்லாம்ல் சரியான இடத்தில் வைத்துப் பார்த்தால், இத்துடன் செய்திகள் முடிவடைகின்றன. மீண்டும் ஆல் இந்திய வானொலியின் தமிழ் ஒலிபரப்பிற்கு மாலை சந்திப்போம் ன்னு சத்தம் வரும். என்ன கொடுமை சார் இது.


டிவியின்னு ஒண்ணை நான் என் 16 வயசுலேதான் பார்த்தேன். அதுவும் என் பிரெண்ட் ரெனால்டு வீட்டுல.அவன் வீடு என் வீட்டிலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். சும்மா ஒரு பிளாக் அண்டு ஒயிட் டிவிதான். இன்னைக்கு அரசாங்கம் நமக்கு கொடுத்திருக்கிற கலர் டிவியெல்லாம் அன்னைக்கு இருந்திருந்தா அது ரொம்ப பெரிசு, சொகுசு.

சிலுவை மாதிரி ஒரு கம்பத்தை ஊணி, அதுல இருந்து ஒயரை டிவிக்கு கனெக்சன் கொடுத்திருந்தார்கள். அது என்னடா ன்னு கேட்டேன். அதுல இருந்துதான்டா மடையா படம் வரும் ன்னான் என் பிரெண்ட். சரியா போச்சு போ..எல்லா மேட்டரும் இதுலதான் இருக்குதா..ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு நாள் அதுல நான் தெரியாம சாஞ்சு நின்னதுக்கு என்னை என்ன பேச்சு பேசுனான் தெரியுமா பாஸ்… ஐய்யய்யோ..என்னமோ அது திரும்பி நின்னா படம் தெரியாதாம்..சத்தம் வராதாம். ஏதோ ஃபீரிகன்சியாம் என்னனோவோ சொல்லி என்னை அவமானப்படுத்திட்டான் பாஸ’

அதுல நான் தமிழ் படமோ, பாடலோ பார்த்த வரலாறே இல்லை.

அய்யய்யோ அந்த கொடுமையை நான் நாளைக்கு சொல்றேன்....



நண்பர்கள தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்க்கும் comments பொத்தானை அழுத்தி தங்கள் கருத்தை பதிவு செய்யும் படி நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

நம்ம GK கொஞ்சம் கம்மிதான் பாஸ்.. எங்க வீட்ல ஒரு வருசமாத்தான் Newspaper வாங்குறோம்.